புதன், 24 அக்டோபர், 2018

புதன் 181024

                  
சென்ற வாரக் கேள்விக்கு, 11.6666667 என்று பதில் கூறியவர்கள் எல்லோரும் சாதாரண 10 digit calculator உபயோகப்படுத்தி, 35/3  கணக்குப் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

துல்லியமான விடை என்று பார்த்தால், அது இதுதான்: 








--------------------------------------------------------------------


அதிரா : 

1. கடவுள் ஒருநாள் உலகைக்காண[அந்த மன்சனுக்கு வேற வேலை இல்லைப்போல:))] தனியே வந்தாராம்.. கண்ணில் கண்ட “எங்கள்புளொக்” ஆசிரியர்களைப்பார்த்து நலமா என்றாராம்:).. இதுக்கு உங்கள் பதில்????  

ஓர் ஆசிரியர், 'இன்னொருவரைக் கேள்' என்றாராம்,
அவரோ 'இவரைக் கேள்' என்றாராம்,
இவரோ 'சுவரைக் கேள்' என்றாராம்!
படைத்தவனோ, உடனே ஓடிவிட்டான்!
ல ல ல ல ல் ல் லா!


நலம் மிக உண்டு எனினும் என் சார்ந்தோர்
தம்நலம் இல்லாமை பிணி.

2. ஸ்ரீராமும் நெல்லைத்தமிழனும் ஏன் படம் போட்டுக் காட்டீனம் இல்லை?:))
ஹா ஹா ஹா:)).. மருமக்களுக்கு[ஒரு ஃபுளோல வந்திட்டுது முறைக்காதீங்க:)] ஜாதகமா பதில் சொல்லப்படுவதற்கு இங்கு தடா போடப்பட்டிருக்கு:)).[ஜூப்பர் மாட்டி:) அதிரா இப்போதான் வாழ்க்கையில உருப்படியா ஒரு கிளாவி கேட்டிருக்கிறா:) ஹா ஹா ஹா] 

யார் சொன்னது, எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் ஸ்ரீராம் படம் வரவில்லை என்று? 2018, May 30 பதிவில் வந்திருக்குதே! 

நெல்லைத்தமிழன் என்று கூகிள் தேடல் (images)  விட்டுப்பாருங்கள். மொத்தம் நாலைந்து பேர், நெல்லைத்தமிழன் என்ற  பெயரில் உள்ளனர். நம்ம ஏரியா பதிவில், சுந்தரி சொன்ன அங்கிள்  எந்த நெ த என்றுதான் தெரியவில்லை. 

 3. மந்தையிலே இருந்து இரண்டு ஆடுகள்.. எங்கோ திசை மாறிச் சென்று விட்டன:) இரண்டும் சந்திச்சபோது.. 
பேச முடியவில்ல்ல்ல்ல்லையேஏஏஏஏஏ..  அது ஏன்?:)..

மந்தையிலிருந்து அந்த ஆடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டு, ஒருத்தர் பேச்சு ஒருத்தர் 'கா' என்று கா விட்டுவிட்டுப் பிரிந்தன. அதனால்தான் மீண்டும் சந்திச்சபோது பேசமுடியவில்லை. 

 திசைமாறிச் செல்லும் முன்பும் பேசியதில்லையே.

ஏஞ்சல் :

1,பிரவுன் கரும் பச்சை அப்புறம் கருப்பு நிறத்தில் பதில் அளித்தது யார் யார் ?  

உண்மையைச் சொல்லவேண்டிய கட்டம் வந்துவிட்டது. இப்போ பாருங்க ஒவ்வொருவரும் வந்து உண்மையை ஒப்புக்கொள்ளப் போகிறார்கள் :

பிரவுன் நிறத்தில் பதில் அளித்தது நான்தான்.

கரும்பச்சை நிறத்தில் பதில் அளித்தது நான்தான்.

கருப்பு நிறத்தில் பதில் அளித்தது நான்தான். 

சிவப்பு நிறத்தில் பதில் அளிப்பவர் நான்தான்.

நீல நிறத்தில் பதில் அளிப்பது நான்தான். 


2,அப்புறம் என்ற வார்த்தை எதிலிருந்து மருவி வந்திருக்கும் ?
பிறகு என்பதுதானே சரியான சொற்பதம் ?



புறம். தற்போதைக்கு வெளியே உள்ளது.
இது ஆனபின் அப்புறம் கைக்கொள்ளப் படும்.

ஒரு எல்லைக்கு அப்புறம் என்பது வெறும் அப்புறம் ஆகி இருக்கலாம். எல்லை நேரம் இடம் செய்கை  இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  

3,நவராத்திரி கொலுவில் பெண்களுக்கு மட்டும் ரவிக்கைத்துண்டு மற்றும் சில பொருட்கள் கொடுக்கிறார்கள் ஆண்களுக்கு என்ன தருவாங்க ? உங்களுக்கு என்ன கிடைத்தது ?

எனக்கு சில கேள்விகள் மட்டுமே கிடைத்தது.

 bill.

சுண்டல் மட்டும்தான். 

4,சிண்ட்ரெல்லா கதை நினைவிருக்கா அதில் சிண்ட்ரெல்லாவின் ஷூ கரெக்ட் சைஸா இருந்தா எப்படி ஓடும்போது கழண்டு விழும் ?
சாமி சத்தியமா இந்த டவுட் நானா கேக்கலை இவ்ளோ அறிவும் எனக்கில்லை ஒரு அரைடிக்கட் கேட்ட கேள்வி இது ..உங்கள் பதில் என்ன ?
கழன்று விழ வேண்டும் என்று விதிக்கப்பட்ட காலணிகள் கழன்று தான் விழும்.

வளைந்து கொடுக்காத பொருளில் செய்யப்பட்ட எந்தக் காலனியும் நழுவி விழ வாய்ப்புண்டு
ஷூ என்றதும் hush puppies, oxford, cambridge இப்படி நினைக்காமல் அந்தக்காலத்தில் வேறு மாதிரியாக இருக்கலாம். 


5,உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்/நடிகர்கள் யார் ? 5 பேரை வரிசைப்படுத்தனும் காரணத்துடன் ? 
வெர்றி இம்பார்ட்டண்ட் நடிகைகள் இல்லை ஒன்லி நடிகர் கர் கர்ர்ர் கள் :)  
எஸ் வி சுப்பையா,  கமல்ஹாசன், நாகேஷ், எஸ்எஸ் ராஜேந்திரன், மோகன்லால்
காரணம் இயல்பான நடிப்பு.

Rowan Atkinson (Comedy)
நாசர் (வில்லன்)
Pawan Singh. (Multiple talented)
Morgan Freeman
Rodrigo Santoro 

இந்த அஞ்சு பேர்ல, முதல் இரண்டு பேர்களைத் தவிர, மற்றப் பெயர்கள் எல்லாம் பந்தாவுக்காக திரட்டி எழுதினேன்! 

வாட்ஸ் அப் 

பானுமதி வெங்கடேஸ்வரன் :

கமல், ரஜினி, விஜய், யாருடைய காமெடி நடிப்பை அதிகம் ரசிப்பீர்கள்?

கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் எனக்குப் பிடித்த காமெடி நடிப்பில் வல்லவர் கமல்ஹாசன்தான்.

கமல் படங்களில், வசனங்கள்தான் காமெடி.

ரஜினியின் காமெடி நடிப்பு, வசனங்கள் இல்லாவிட்டாலும் சோபிக்கும்.

விஜய் காமெடி நடிப்பு எல்லாமே ஒரே மாதிரி. முன்னும் பின்னும் அசைந்து கையை ஆட்டி, ஒரே முகபாவத்துடன் அவர் செய்யும் காமெடி ... ஊஹூம். 

வில்லனாக நடித்தவர்களை கதாநாயகனாக, குணசித்திர நடிகர்களாக,ஏன் காமெடியன்களாக கூட ஏற்றுக்கொள்ளும் மக்கள், ஏன் காமெடியன்களை கதாநாயகர்களாக ஏற்றுக் கொள்வதில்லை?

ஏன் ஏற்றுக்கொள்வதில்லை? நாகேஷ் நடித்த நீர்க்குமிழி, எதிர்நீச்சல், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில், அவர்தானே கதாநாயகன். 

பெண்கள் தங்கள் பெற்றோர்களோடு தங்களுக்கு இருக்கும் உணர்வு பூர்வமான நெருக்கத்தை வெளிப்படையாக காண்பித்து கொள்வது போல ஆண்கள் செய்வதில்லையே? அதற்கு என்ன காரணம்?

 சிருஷ்டியில் ஆண்கள் பெண்கள் இருபாலருக்குமே தனித்தனியான குணாதிசயங்கள் உண்டு. அப்படி இல்லாதிருந்தால் வாழ்க்கையில் ஒரு சுவாரசியம் குறைபடுகிறது.

 இயற்கையின் நியதி என்று பார்த்தால்,  உணவைத்தேடிக் கொள்ளல், நாம் பிறருக்கு உணவாகாது இருத்தல்,  இனப்பெருக்கம் இவை மட்டுமே தான். பிற அனைத்தும் ஜீவராசிகள் தத்தம் முன்னேற்றத்திற்கு ஏற்ப தேடி கொண்டவை.

 பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் அல்லது ஆண்கள் ஏன் இப்படி இல்லை எனும் வினாவுக்கு ஆண்களும் பெண்களும் தமக்குத்தாமே விடை காண வேண்டியதுதான்.

அப்படியெல்லாம் இல்லாவிட்டால் ஆண் ஆணாக இல்லை, பெண் பெண்ணாக இல்லை என்றாகிவிடுமே.

======================================

இந்த வாரக் கேள்வி. 

ஒரு சமையல் குறிப்பை பதிவில் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 




1. அது ஏற்கெனவே உங்களுக்கு செய்யத் தெரிந்த உணவாக இருந்தால், 

a) இது நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்தானே, இதை ஏன் படிப்பது என்று கடந்து போவீர்களா?

b) இவர் என்னதான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று படித்துப் பார்ப்பீர்களா? 

c) படித்துப் பார்த்து, உங்கள் கருத்துகளை, திருத்தங்களை பதிவு செய்வீர்களா?

2) அதுவே உங்களுக்கு, தெரியாத ஒரு பண்டம் - செய்முறை என்றால்,

a) முழுவதுமாகப் படித்து, செய்முறையை நன்கு தெரிந்துகொள்வீர்களா

b) இதெல்லாம் எனக்குத் தேவை இல்லை என்று விட்டுவிடுவீர்களா?

c) சரி, செய்து பார்க்கலாம் என்று தோன்றினால், அதில் கூறப்பட்டுள்ள பொருட்களின் அளவுகளை அதில் கூறியுள்ளபடி, அப்படியே பின்பற்றி செய்வீர்களா ?

d) செய்முறையை மட்டும் தெரிந்துகொண்டு, அளவு, பொருட்கள், எடை எல்லாவற்றையும் உங்கள் சாய்ஸில் எடுத்துக்கொண்டு செய்வீர்களா?

 ================================



"இது சாப்பாட்டு வாரமா? கதை, கட்டுரை, கேள்வி எல்லாவற்றிலும் திங்கறதே வந்துருக்கு!"

====================================== 

49 கருத்துகள்:

  1. திரு.Kgg அவர்களுக்கு வணக்கம்..

    அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. சுவாரசியமான கேள்வி, பதில். ஆனால் இந்த வெள்ளி எடை மட்டும் இடிக்குது! இவ்வளவு துல்லியமாவா ஒரு ரூபாய் எடை இருந்திருக்கும்? அந்தக்காலத்து ஒரு ரூபாய்க் காசு இருக்கானு தேடிப் பார்க்கணும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா... ஒவ்வாமைப் பிரச்னை எல்லாம் தீர்ந்ததா? நலம்தானே?

      நீக்கு
  3. காமெடின்னா எஸ்.வி.ரங்காராவ் கலக்கறாப்போல் யாரும் கலக்க மாட்டாங்க! உல(க்)கை நாயகருக்கு வசனங்கள் தான் கை கொடுக்கும். ஆகவே கிரேஸியாருக்கே எங்கள் ஓட்டு! விஜய் நடிப்பதே காமெடி தான்! இதிலே தனியாக் காமெடி நடிப்பு வேறேயா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  4. முதல்கேள்விக்கு ஏ, பி, சி, எல்லாமும் சரி. அப்படித் தான் செய்வேன், பதிவுலகமே அறிந்த ஒன்றாச்சே. அடுத்த கேள்விக்கும் செய்முறையைத் தெரிந்து கொண்டு நம்ம பாணியில் திப்பிச வேலைகளோட செய்து பார்த்துடுவேன். இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பதிவுலகமே அறிந்த ஒன்றாச்சே. //

      எனக்கும் அதுதான் தோன்றியது..

      நானும் சொல்ல நினைத்தேன்...

      நீக்கு
    2. இல்லை கீசா மேடம். நீங்கள் "நமக்குத்தான் தெரியுமே" என்று கடந்துபோக மாட்டீர்கள். படித்து குறை, நிறை, மாற்றங்கள்லாம் எழுதுவீங்க.

      நீக்கு
  5. செய்முறை படிப்பேன். செய்வேனா தெரியாது. தெரிந்த பலகாரமாக இருந்தாலும் எழுத்து அழகுக்காகப் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. கேள்விக்கேற்ப ரசனையான பதில்கள்...

    சமையலுக்கான வலைப்பூக்களின் பதிவுகள் அனைத்தும், மனைவிற்கு செல்லுமாறு செய்து பல வருடங்கள் ஆகி விட்டது... பிடித்ததை செய்து விட்டு, அந்தப் பதிவுகளை "bookmark" செய்து கொள்வார்கள்...

    பதிலளிநீக்கு
  7. பதில்களில் செய்தியோடு நகைச்சுவையும்கூட.

    பதிலளிநீக்கு
  8. ஒரு சமையல் குறிப்பை பதிவில் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

    1. அது ஏற்கெனவே உங்களுக்கு செய்யத் தெரிந்த உணவாக இருந்தால்,

    a) இது நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்தானே, இதை ஏன் படிப்பது என்று கடந்து போவீர்களா?.
    அந்தக் குறிப்பில் தெரிந்த விஷயமாக இருந்தாலும் -

    b) இவர் என்னதான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று படித்துப் பார்ப்பீர்களா?..
    இவர் என்னதான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று படித்துப் பார்ப்பேன்...

    c) படித்துப் பார்த்து, உங்கள் கருத்துகளை, திருத்தங்களை பதிவு செய்வீர்களா?..
    அவரவர் கைப்பக்குவம் அவரவர்க்கு - என்று இருந்து விடுவேன்..(அதுதான் முதுகுக்கு நல்லது!?..)

    2) அதுவே உங்களுக்கு, தெரியாத ஒரு பண்டம் - செய்முறை என்றால்,

    a) முழுவதுமாகப் படித்து, செய்முறையை நன்கு தெரிந்து கொள்வீர்களா?..
    ஆழம் தெரியாமல் -

    b) இதெல்லாம் எனக்குத் தேவை இல்லை என்று விட்டுவிடுவீர்களா?
    ஆராய்ச்சி செய்வதில்லை.. இதுபோல புதிதாக ஒன்று செய்யப் போய் புஸ்வாணம் ஆகிவிட்டது..
    c) சரி, செய்து பார்க்கலாம் என்று தோன்றினால், அதில் கூறப்பட்டுள்ள பொருட்களின் அளவுகளை அதில் கூறியுள்ளபடி, அப்படியே பின்பற்றி செய்வீர்களா ?

    d) செய்முறையை மட்டும் தெரிந்துகொண்டு, அளவு, பொருட்கள், எடை எல்லாவற்றையும் உங்கள் சாய்ஸில் எடுத்துக்கொண்டு செய்வீர்களா?..

    எல்லாவற்றையும் என்னுடைய விருப்பத்தில் எடுத்துக்கொள்வதென்றால் -
    அந்தக் குறிப்பு வீண்தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப விவரமாத்தான் இருக்கீங்க துரை!

      நீக்கு
    2. ரொம்ப வெவரமான ஆளு..ன்னு..
      என்னையும் ஒத்துக்கிட்டதுக்கு நன்றீ..ங்கோ!..

      நீக்கு
    3. டுரை:) அண்ணன் ஓவரா துள்ளப்பிடா:).. அவர் சொன்ன “விவரம்” வேற ஆக்கும் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
  9. நலம் மிகவுண் டெனினுமென் சார்ந்தோர்
    தம்நல மில்லாமை பிணி

    இதுதான் குறள் எழுதும் முறைனு நினைக்கிறேன். பொருள் சரியில்லை. பொருட்குற்றம் உள்ளது.

    நலமேநா னெனினுமென் சார்ந்தோர்தம் நலமின்மை
    மலமறுமென் மனத்தை உருக்கும். - இது சரியா?

    பதிலளிநீக்கு
  10. கேள்விகள் பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ஓர் ஆசிரியர், 'இன்னொருவரைக் கேள்' என்றாராம்,
    அவரோ 'இவரைக் கேள்' என்றாராம்,
    இவரோ 'சுவரைக் கேள்' என்றாராம்!
    படைத்தவனோ, உடனே ஓடிவிட்டான்!
    ல ல ல ல ல் ல் லா!//

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. சமையல் குறிப்புகள் நமக்கு தெரிந்த நண்பர் பதிவு என்றால் படித்து பார்ப்பேன்.செய்து பர்க்க ஆசைபடும் சமையல் குறிப்பை மட்டும் செய்து பார்ப்பேன் மற்றவை படித்து கருத்து சொல்லி விடுவேன்.
    செய்து பார்க்க அவர்கள் குறிப்பிட்ட பொருட்கள் வீட்டில் இருந்தால், நேரமும் சரியாக இருந்தால் , மனமும் அதில் செய்ய வேண்டும் என்று இணைந்தால் ருசியான டிஷ் ரெடி.

    பதிலளிநீக்கு
  12. என்ன இண்டைக்குத் தலைப்பே போடவில்லையே?:) ஏதும் விரதமாக இருக்குமோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

    ஹா ஹா ஹா போனவாரம்.”பரிசு அறிவிக்கப்படாத கிளவிகளுக்கு:)” விழுந்து விழுந்து பதில் சொன்னோருக்குப் பரிசே இல்லையா ஹா ஹா ஹா.. இதனாலதான் அதிரா பதில் சொல்லேலையாக்கும் இல்லையெனில் சொல்லியிருப்பேன் பிக்கோஸ் நேக்கு மட்ஸ் லயும் டி தெரியுமோ??:).

    பதிலளிநீக்கு
  13. //படைத்தவனோ, உடனே ஓடிவிட்டான்!//

    ஸ்ஸ்ஸ் அவரை உப்பூடி ..ன் போட்டுப் பேசப்புடாதாக்கும்:)).

    //யார் சொன்னது, எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் ஸ்ரீராம் படம் வரவில்லை என்று? 2018, May 30 பதிவில் வந்திருக்குதே!///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுவரை எத்தனை பேர் ஓடிப்போய்த் திறந்து பார்த்து எங்கள் புளொக்கின் ரி ஆர் பி ரேட்டை ஏத்தி விட்டார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்:)) மீக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதால போய்ப் பார்க்கேல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா:)..

    //நெல்லைத்தமிழன் என்று கூகிள் தேடல் (images) விட்டுப்பாருங்கள். //

    ஹா ஹா ஹா அவரின் ஒட்டுமொத்த சமையல் டிஷ்ஷசும் வந்து கியூவரிசையில:) நிக்குது:))..

    பதில்கள் நகைச்சுவை.. அருமை.. இப்படித்தான் எதிர்பார்க்கிறேன்:)) நன்றி.. கீப் இற் மேலே:))

    பதிலளிநீக்கு
  14. //பிரவுன் நிறத்தில் பதில் அளித்தது நான்தான்.

    கரும்பச்சை நிறத்தில் பதில் அளித்தது நான்தான்.

    கருப்பு நிறத்தில் பதில் அளித்தது நான்தான்.

    சிவப்பு நிறத்தில் பதில் அளிப்பவர் நான்தான்.

    நீல நிறத்தில் பதில் அளிப்பது நான்தான். //

    ஹையோ உடனடியா என்னை வெள்ளை பஸ்ல ஏத்திப்போய் ரீட்மெண்ட் எடுக்கப் பண்ணுங்கோ:) பிளீஸ்ஸ்ஸ் இல்லை எனில் காதல் படக் கதாநாயகன் போலாகிடப்போகிறேன்ன்.. கையிலே எங்கள் புளொக் என எழுதியபடி:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  15. //இந்த வாரக் கேள்வி. //

    இதுக்கு இப்போ பதில் ஜொள்ள மாட்டேன்ன் பிக்கோஸ் அஞ்சு பார்த்து கொப்பிஅடிச்சிடுவா:)) ஹா ஹா ஹா அதனால அவ ஜொன்ன பின்பே மீ ஜொள்ளுவேன்ன்:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுங்கோ கெள அண்ணன்..

    இப்போ நேரம் போதவில்லை அதுதான், கொஞ்சம் லேட்டா வந்து சொல்கிறேன்ன்.. பரிசு உண்டுதானே?:))

    பதிலளிநீக்கு
  16. பதில்கள் வழக்கம் போல் சுவை!
    ஏஞ்சலின் முதல் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்'ஆஹாங்..!!'

    பதிலளிநீக்கு
  17. நகைச்சுவை நடிகர்கள் கதானாயகனாக நிலைக்க முடியவில்லையே என்று கேட்க நினைத்தேன். வில்லன் நடிகர்கள் கதாநாயகனாகவும், குணசித்திர நடிகர்களாகவும் ஒரு ரவுண்ட் வருகிறார்கள், ஆனால் நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக மாறியவுடன் அவர்கள் மார்கெட் விழுந்து விடுகிறது. நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன், வடிவேலு,சந்தானம் என்று லிஸ்ட் நீளுகிறதே.

    பதிலளிநீக்கு
  18. கமல், ரஜினி காமெடிக்கு முன் விஜலாம் தூசு. வலிந்து வரவைக்கப்படும் சிரிப்பு விஜய் அண்ணாவுது.

    பதிலளிநீக்கு
  19. நான் பெரும்பாலும் மகளிர் பத்திரிகைகளில் வரும் சமையல் குறிப்புகளை படிப்பதில்லை. ஒரு மகளிர் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் தோழி ஒரு முறை, "இதெல்லாம் நாங்க ஏதோ போடுகிறோம். துவையல் என்றால், தேங்காய் துவையல், கத்தரிக்காய் துவையல், பருப்பு துவையல் இவைதான், முள்ளங்கி துவையல் என்று எழுதுகிறார்கள், முள்ளங்கி பொரியலை அரைத்தால், அது துவையல்" என்றார். எனவே பத்திரிகைகளின் சமையல் குறிப்புகளின் லட்சணம் தெரிந்து விட்டது.
    எ.பியில் மட்டும் தவறாமல் படிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன்.
    எனக்கு தெரியாத ஒரு பண்டம் என்றால், ரெசிப்பியை முழுமையாக படிப்பேன். முதல் முறை முயற்சி செய்யும் பொழுது செய்முறையில் குறிப்பிட்டிருக்கும் அளவுகளை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே பின்பற்றுவேன். அடுத்த முறைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  20. சென்ற வார ஏஞ்சலின் கேட்டிருந்த சிண்ட்ரெல்லாவின் ஒரு கால் ஷூ மட்டும் நழுவி விழுவது பற்றிய கேள்விக்கு அப்போதே பதில் சொல்லலாம் என்று நினைத்தேன். தலை இருக்க வால் ஆடக்கூடாது என்பதற்காக காத்திருந்தேன்.
    இப்போது என் விடை: எல்லா மனிதர்களுக்கும் வலப்பக்க உறுப்புகளுக்கும், இடப்பக்க உறுப்புகளுக்கும் அளவில் கொஞ்ஜம் வித்தியாசம் இருக்கும். வளையல்கள் வாங்கும் பொழுது இது நன்றாக தெரியும். இடது கையில் பெரும்பாலும் இடது கையில் சுலபமாக நுழைந்து விடும். சிலருக்கு மாறியும் இருக்கும். எனக்கு சாண்டல்ஸ் வாங்கும் பொழுது, இடது வலது கால் அளவிற்கு வாங்கினால் வலது கால் ஷூ லூசகத்தான் இருக்கும். ப்லௌஸ் தைக்க கொடுக்கும் பொழுதும், இடது கை அளவை கொடுப்பேன். வலது கை அளவை கொடுத்தால் சட்டை மிகவும் டைட்டாக இருக்கும். சிண்ட்ரெல்லாவிற்கும் இந்த பிரச்சனை இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தானே பானுமதி அக்கா அர்த்தநாரீஸ்வரர் என்கிறோம்.. எப்பவும் வலது பக்கம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும்.. அது எதிர்ப்பாலார் பக்கமாமே ஹையோ ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    2. பானுக்கா சூப்பர்க்கா அட்டகாசமான பதில்

      நீக்கு
  21. 1. அது ஏற்கெனவே உங்களுக்கு செய்யத் தெரிந்த உணவாக இருந்தால்,

    a) இது நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம்தானே, இதை ஏன் படிப்பது என்று கடந்து போவீர்களா?///

    b) இவர் என்னதான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று படித்துப் பார்ப்பீர்களா? ///

    எனக்கு கில்லர்ஜி போல, துரை அண்ணன் போல சோட்டா எல்லாம் எழுத வராது:) அதனால கொஞ்சம் பொறுமை தேவை உங்களுக்கு:)..

    இதிலும் இரு வகை உண்டு, சமையல் குறிப்பு நம் நட்பு வட்டத்துள் எனில், கண்டால் நிட்சயம் படிப்பேன் கொமெண்ட்டும் போடுவேன், அதைத்தாண்டி வெளியே எனில் பெரும்பாலும் பார்க்க மாட்டேன், ஒரு வேளை தலைபைப் பார்த்ததும், அட நான் செய்யும் குறிப்பாச்சே இது என்ன முறை என மேலோட்டமாகப் பார்ப்பேன்.


    ///சி) படித்துப் பார்த்து, உங்கள் கருத்துகளை, திருத்தங்களை பதிவு செய்வீர்களா?////
    நட்பு வட்டம் இல்லை எனில் .. கொமெண்ட் ஏதும் போட மாட்டேன்ன்.. இதுவரை அப்படி எங்கும் போனதாகக்கூட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  22. 2) அதுவே உங்களுக்கு, தெரியாத ஒரு பண்டம் - செய்முறை என்றால்,

    a) முழுவதுமாகப் படித்து, செய்முறையை நன்கு தெரிந்துகொள்வீர்களா

    b) இதெல்லாம் எனக்குத் தேவை இல்லை என்று விட்டுவிடுவீர்களா?///

    இதுக்கும் அதே போலத்தான் பதில் நட்பு வட்டத்துள் எனில், முழுவதும் படிப்பேன் .. செய்யவும் யோசிப்பேன்.. எனக்காக இல்லை எனினும் அவர்களுக்காக...

    வெளியே எனில், தலைப்பு மனதைக் கவர்ந்ததுபோல இருப்பின், படித்து குறிப்பு மனதுக்குப் பிடித்ததுபோல இருந்தால் , செய்யவும் நினைப்பேன்... ஆனா பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்.

    //c) சரி, செய்து பார்க்கலாம் என்று தோன்றினால், அதில் கூறப்பட்டுள்ள பொருட்களின் அளவுகளை அதில் கூறியுள்ளபடி, அப்படியே பின்பற்றி செய்வீர்களா ?///

    d) செய்முறையை மட்டும் தெரிந்துகொண்டு, அளவு, பொருட்கள், எடை எல்லாவற்றையும் உங்கள் சாய்ஸில் எடுத்துக்கொண்டு செய்வீர்களா?///

    எப்பவுமே அப்படிச் செய்ததே கிடையாது, குறிப்பை மட்டும் பார்த்துவிட்டு மிகுதி என் அளவு, என் வசதி:)).

    அப்பாடா இம்முறை “விழாமல்” பதில் சொல்லிட்டேன்.. அதேபோல அறிவிக்காட்டிலும் பரிசைத்தாங்கோ:)

    பதிலளிநீக்கு
  23. இம்முறை எங்கட கேள்வித்திலகத்தைக்:) காணல்லியே:). இனித்தான் கூடையிலே வச்சுத் தூக்கி வருவாவோ என்னமோ..
    கீசாக்காவும் இன்று கேள்வி ஏதும் கேட்கவில்லை :) ஒருவேளை கிட்னியில் சரக்கில்லையோ:))) ஹையோ எனக்கு ..னிச:) வந்து நாக்கில குடியேறி இருக்குதுபோல:)) கடவுளே காப்பாத்தப்பா:).

    என் கொஸ்சன் நெம்பர் வன்.. ஒண்ணே ஒண்ணு கண்ணெ கண்ணெனவும் வச்சுக்கலாம்:).

    பாம்பின்கால் பாம்பறியும் என்பார்களே.. பாம்புக்குத்தான் கால் இல்லையே?:) அப்போ எதுக்கு இப்படி ஒரு பழமொழி வந்துது?...

    ஊசிக்குறிப்பு: ஸ்கூலில் பிள்ளைகளுக்கு ஊர்வன பறப்பன பறவை விலங்கு படிப்பிச்சபோது பாம்பு படம் பார்த்து அதுக்கு கால் இல்லை என நினைவு வந்ததும், உடனே இப்பழமொழி நினைவுக்கு வர.. அப்போ புதன்கிழமையில கேட்டிட வேண்டியதுதான் என கிட்னியில சேர்த்து வச்சேன்:).

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் சார்... and என்பதற்கு துல்லியமான பதில்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா விட்டிடாதீங்க டிடி:)) அது ஸ்ரீராம் அல்ல கெள அண்ணனாக்கும்:)) ஹா ஹா ஹா.. இதை வைச்சே நாரதர் கலகத்தை ஆரம்பிச்சு அதிராவுக்குப் பரிசு தராத கோபத்தை நிலை நாட்டிடலாம்ம்:))

      நீக்கு
    2. சாதாரண 10 digit calculator உபயோகப்படுத்தி, 11.6666667 என்று பதில் கூறிய சாதாரண வாசகர்கள் அனைவருக்கும் நன்றி...

      நீக்கு
  25. எல்லாருக்கும் இனிய முன்னிரவு லேட் மாலை வணக்கம் :)
    காலையில் வெளியே போகும் வேலை இருந்திச்சி பிற்பகல் வந்து கமெண்ட் போட்டு கேள்வி கேக்க நினைச்சி முதல் கேள்விக்கான பதிலை படிச்சி மயங்கினதுதான் இப்போதான் எழும்பினேன் :)

    பதிலளிநீக்கு
  26. // இம்முறை எங்கட கேள்வித்திலகத்தைக்:) காணல்லியே:). இனித்தான் கூடையிலே வச்சுத் தூக்கி வருவாவோ என்னமோ.. //

    கர்ர்ர் யாரையோ எனக்கு மயக்கமருந்து அடிச்சி தூங்க வச்சிட்டாங்க ..
    இதோ கொண்டாரேன் கூடையில் இல்லை கார்கோ பிளேனில்

    பதிலளிநீக்கு
  27. a ,.எனக்கு தெரிந்த உணவு வகையாகவே இருந்தாலும் மறுபடியும் முழுதும் வாசிப்பேன் ரெசிபியை .
    ஏன்னா அப்போதான் நான் சரியா செய்கிறேனா என்பதை தெரிஞ்சிக்க முடியும் .அப்படி ரசம் ரெசிப்பியில் மேலே பொங்கி வரத்தை எடுக்கமாட்டேன் இப்போ கீதாக்கா ரெசிப்பி பார்த்து எடுக்கறேன் ரசம் சூப்பரா இருக்கு .
    b , யெஸ் நிச்சயம் படிப்பேன்
    c ,ஆமாம் படித்து பார்த்து திருத்தங்களை ஏற்று அங்கேயே பதிவு செய்து அடுத்தமுறை குறிப்பில் சொன்ன மாதிரி செய்து பார்த்து ரசித்த ருசித்தாஹ் குறிப்புக்கள்ன்னு என் பக்கம் பகிர்ர்ந்ததுண்டு
    d , தெரியாத பண்டம்னாலும் செய்து பார்க்க முயற்சிப்பேன் ஆனால் அதில் எனக்கு ஒத்துக்கொள்ளும் இங்க்ரெடியன்ட்ஸ் இருக்கணும் .
    e ,குறிப்பிட்டுள்ள பொருட்களில் எங்கள் மூவருக்குமான அளவை தெரிவு செய்து செய்வேன் .ஆல்வேஸ் குறைந்த அளவே செய்து பார்ப்பேன் .
    f ,ஒரூ சில சமையம் அளவு முறைகள் அதிகமா தோணும் அப்போ குறைப்பேன் குறிப்ப கடுகு மற்றும் காரம் குறைப்பேன்


    பதிலளிநீக்கு
  28. இதோ கேள்விகள் :)

    1, மாப்பிள்ளை முறுக்கு அப்படின்னா என்ன ? முழு விளக்கம் தேவை ?
    2, உங்களை பொறுத்தவரை வாழ்வின் /வாழ்க்கையின் அர்த்தம் என்ன ?
    3, அனுபவங்களால் நம்மை நம் செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளும் நாம் பிறரிடம் மட்டும் அவர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களை இவர் இப்படித்தான் என்று எதற்கு ஜட்ஜ் செய்கிறோம் ?
    4, தோசை ஏன் வட்டமா இருக்கு ? யாரும் சதுர தோசை சுட முயற்சிக்கல்லியா ??
    5,கோபம் இருக்கிற இடத்தில குணம் இருக்கும் என்கிறார்களே எப்படி ?? விளக்கம் ப்ளீஸ் ?
    6, யாராவது உங்ககிட்ட சிகரெட் பத்த வைக்க நெருப்பு /லைட்டர் கேட்டதுண்டா ?
    நாம் தம்மடிக்காத பட்சத்தில் இப்படி திடீர்னு கேட்டா எப்படி உணர்வீங்க அப்படி உணர்ந்த அனுபவம் இருக்கா ?
    7,சாப்பாட்டு ராமன் ,கும்பகர்ணன் ,நளபாக சக்ரவத்தி போன்ற நல்ல பிரச்சினை தாரா அடைமொழிகளை பட்ட பெயர்களை ஆண்களுக்கு கொடுத்து நீலி ,மந்தரை ,சூர்ப்பனகை போன்ற வில்லத்தனமான பேர்களை பட்ட பெயர்களாக பெண்களுக்கு கொடுத்ததன் பின்னணி என்ன ??
    8,நடிகர்களின் கட்டவுட்களுக்கு பாலூற்றுவதை அந்தந்த நடிகர்கள் சொல்லி தடை செய்ய முடியாதா ? ஏன் சொல்ல மாட்டேன்கிறார்கள் சொன்னா ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ரசிகசிகாமணிகளுக்கு இல்லையா ?
    9, கோழி முட்டை நீள்வட்டமா தானே இருக்கு ஆனா டீச்சர்ஸ் விடைத்தாளில் போடும் முட்டை எதுக்கு வட்டமா இருக்கு ?
    10,மறதி நல்லதா ? வரமா சாபமா ..?

    பதிலளிநீக்கு
  29. நவராத்திரி விழா ஆண்களுக்கு சுண்டலாவது கிடைத்ததே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!