செவ்வாய், 16 அக்டோபர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : சாம்பலீஷ் - துரை செல்வராஜூ
சாம்பலீஷ்..
துரை செல்வராஜூ 
*****************

தம்பி!... கிட்டக்கப் போகாதேடா!.. கடிச்சு வெக்கப் போகுது!....

இது வரைக்கும் யாரையும் கடிச்சிருக்கானா?..

இல்லை!...

அப்பறம் ஏன் பயப்படுறாய்!..

புதுசா இருக்கிறாய் நீ!...

மாமா.. நல்ல பாம்பு கூட எல்லாம் இது சண்டை போட்டிருக்கு!..

அக்கா கீதாவின் மகள் - பத்து வயது வாணி சொன்னாள்..

அப்படியா!.. அப்போ நமக்கு இவன் சொந்தக்காரன் தான்!..
டேய்.. கிட்ட வா!... பயப்படாம... வா!...

மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்து
அருகில் வந்து நின்றது அந்த ஜீவன்...ரகு குழைவாகப் பேசினான் - அதனிடம்!..

நீ இருக்கிறது தெரிஞ்சிருந்தா துபாய்..ல இருந்து
பிஸ்கட் எல்லாம் வாங்கியாந்திருப்பேனே!...

அது - அந்தத் தெருவின் செல்லம்... நாலு கால் செல்லம்..

சும்மா சொல்லிக் கொள்ள வேண்டியது தான் - செல்லம் என்று!..

யாரும் விரும்பி ஒரு கை சோறு வைப்பதில்லை...
வைப்பதெல்லாம் மிச்சம் மீதி.. கெட்டுப் போன பழையது தான்...

ஆனாலும், எல்லாரிடத்தும் அன்பு கொண்டாடும்...

முதன் முதலில் யார் சோறு போட்டார்களோ தெரியாது...
இந்தத் தெருவே பிடித்தமானதாகி விட்டது...
இந்தத் தெருவிலேயே தங்கி விட்டது...

தெரு என்றால் பாரம்பர்யம் மிக்க பழைமையான தெரு அல்ல....

ஊரின் ஒதுக்கத்தில் வயல்வெளியை ஒழித்துவிட்டு
அதில் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கும்
வசந்தம் நகரின் இரண்டாவது குறுக்குத் தெரு...

சுத்தமான வெள்ளைத் துணியை -
அந்தக் கால அடுப்புச் சாம்பலில் புரண்டு எடுத்ததைப் போல தோற்றம்...

பேருந்துகள் ஓடும் பிரதான சாலை இங்கிருந்து ஏறத்தாழ இருநூறடி தூரம்...

இந்தப் பக்கமிருந்து தெரிந்த ஆட்கள்
பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றால் பின்னாலேயே செல்லும்...

யாரும் பேருந்திலிருந்து இறங்கி வந்தால்
அழையாத விருந்தாளியாக கூடவே வாசல் வரைக்கும் வரும்...

புதிதாக எவரும் கண்ணில் பட்டுவிட்டால் - அவ்வளவுதான்....

மெல்லியதாக சத்தத்துடன் - மஞ்சள் நிற கோரைப் பற்களைக் காட்டும்...

கண்ட மாத்திரத்தில் எதிராளிக்கு அடிவயிறு கலங்கி விடும்...

ஆனாலும் -
நம்முடைய புன்னகையை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா..
- என்பதைப் போன்ற முகபாவம்...

புருஷன் தன் மனையாளின் முகத்தை
உற்று நோக்குவதற்கே நேரமில்லாத - இந்த காலகட்டத்தில்

இதனுடைய முக பாவத்தையெல்லாம் கவனிக்க அங்கே யாருமில்லை...

ஆனாலும், அதனுடைய நல்ல நேரம்... ரகு கவனித்தான்..

ரகுவை அண்ணாந்து நோக்கியவாறு ஆவலுடன் - ம்ம்!.. - என்றது...

இவர்கள் இங்கே வீடு கட்டுகையில்
யாரைக் காவலுக்கு வைப்பது என்று தவித்தபோது
முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது - இந்த ஜீவன் தான்!...

தம்பி... நாங்க வீடு கட்டுறப்போ இது தான்டா காவல்..
செங்கல் ஜல்லி கிட்ட யாரையும் விடாது...
சாரக்கம்பு, பலகை, கம்பி.. ன்னு எல்லாமும் வெளிய தான் கிடக்கும்...
சிமெண்ட் ஷெட் வாசல்...ல படுத்துக்கிட்டு எல்லாத்தையும்
காவல் பார்த்துக்கிட்டு இருக்கும்...ஓ!... காவல்காரர் சம்பளம் மிச்சம் ..ன்னு சொல்லுங்க!...

பின்னே இல்லையா... அத்தானுக்கு ரொம்ப சந்தோஷம்...

அப்போ கிரக ப்ரவேசத்தன்னிக்கு டவுசர் எடுத்துக் கொடுத்தீங்களா!..

டவுசரா!?...- அக்காளும் அவள் மகளும் வாய் விட்டுச் சிரித்தார்கள்...

சரி.. இவனுக்கு பேர் ஏதும் வெக்கலையா!..

பேரா.. அது எதுக்கு?.. தோத்தோ...ன்னா வருது!...

தோத்தோ..வா!?... அதெல்லாம் வேணாம்..
வேற நல்ல பேர்!.. ம்.. சாம்... சாம்பலீஷ்!..

என்னது சாம்பலீஷா?...

ஆமா... சாம்பல் நிறத்துல இவன் இருக்கிறதால - சாம்பலீஷ்.. சாம்!...

எங்கே கூப்புடுங்க.. ஹாய்.. சாம்.. சாம்பலீஷ்!..

என்ன புரிந்ததோ அந்த ஜீவனுக்கு!...

வாலைக் குழைத்தபடி -  ஙூங்...ஙூங்!.. - என்றது...

ஆக - உனக்கு பெயர் சூட்டியாயிற்று..
இனிமேல் நீ.. சாம்பலீஷ்.. சாம்!..

மிக்க மகிழ்ச்சியுடன் - ததக்..ததக்.. - என்று குதித்தான்...
வாலை ஆட்டிக் கொண்டு குழைந்தான்...
சக்கரம் போலச் சுற்றியபடி கீழே விழுந்து புரண்டான்...

அக்காவுக்கு ஆச்சர்யம்....ன்னா ஆச்சர்யம்...

இதென்னடா ரகு.. உங்கிட்ட இப்படி ஒட்டிக்கிச்சு!...

அதான் பைரவர் மந்திரத்தோட மகிமை!...

பைரவர் மந்திரமா.. எனக்கும் சொல்லிக் கொடேன்!...

பைரவர் உத்தரவு கொடுத்தார்... ன்னா சொல்லித் தாரேன்..
இப்போ ஸ்ட்ராங்கா காஃபி!...

சொல்லி முடிக்கவும் வாசலில் மாதவன் ஸ்கூட்டியில் வந்து இறங்கினார்...

ரகு!..

வாங்க அத்தான்!.. சௌக்கியமா?...

****************************************
நாட்கள் சில சென்றன..

ரகுவின் புண்ணியத்தில்
வீட்டில் எல்லாருக்கும் செல்லமாகி விட்டான் - சாம்...

மாமா.. மாமா.. ஆத்துல தண்ணி போகுது.. போய்ப் பார்ப்போமா!...

புதுத்தண்ணி.. உடம்புக்கு ஒத்துக்காது... இப்போ போய் குளிக்க வேண்டாம்!...
அடுக்களையிலிருந்து அக்கா குரல் கொடுத்தாள்....

சரி.. சரி.... சும்மா போய் பார்த்துட்டு வர்றோம்...

ரகுவும் வாணியும் வாசலை விட்டு இறங்கியதும்
அவர்களுக்கு முன்னால் சாம் சுறுசுறுப்பாக ஓடினான்...

ஆற்றுக்குப் போகின்றார்கள் என்று அவனுக்குப் புரிந்து விட்டது...

வீட்டிலிருந்து சற்று தூரத்தில் ஆறு...
காவிரியின் தென்கரையில் பிரிந்து வருவது...

குடமுருட்டி என்று பெயர்..


இந்த ஆற்றின் பாலத்தில் தான் - யாரோ வெடிகுண்டு வைத்ததாக
நாற்பது வருசங்களுக்கு முன்னால் ஊரெல்லாம் பேசிக் கொண்டார்கள்....

கல்லணைக்கு தண்ணீர் வரத்து அதிகமில்லாததால்
முறை வைத்து அதாவது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாக
திறந்து விட்டுக் கொண்டிருந்தார்கள்....

இதோ குடமுருட்டி..
கரையோரமாக முழங்கால் அளவுக்கு நீர்...
அங்குமிங்குமாக மீன் குஞ்சுகளுடன் சலசலத்துக் கொண்டிருந்தது...

விறுவிறு என்று ஓடிய சாம் - சடக்கென்று நின்றான்...

பார்வை சுருக்.. என்று கூர்மையானது...
காதுகளை நிமிர்த்திக் கொண்டு விறைப்பானான்...

ஆற்றின் அக்கரையில் தூங்குமூஞ்சி மரம்...
அதன் நிழலில் இவனுடைய ஜாதிக்காரன் ஒருவன்...
சிவனே!.. - என்று படுத்துக் கிடந்தான்..

டேய்!.. யார்றா நீ?... எப்டிடா இங்கே வரலாம்!?...
பார்த்தியா!.. எங்க ஆளுங்கள... ஓடிடு!...
ஒழுங்கு மரியாதையா ஓடிடு!.. ஓடியே போய்டு!...

கர்... புர்... - என்ற சத்தத்துடன் நான்கு கால்களாலும்
தரையைப் பிறாண்டித் தள்ளினான்....

ஈர மண்ணின் துகள்கள் பின்னோக்கிப் பறந்தன...

இவன் போட்ட சத்தத்தில் திடுக்கிட்ட அக்கரைக்காரன்,
இதென்னடா.. வம்பு!.. - என்று ஓடியே போனான்...

அந்த விநாடியே சாம்பலீஷின் உடல் தளர்வானது..
மறுபடியும் குஷியானான்...

இதற்குள் வாணி தண்ணீரில் குதித்து
இங்கும் அங்குமாக அளைந்து கொண்டிருந்தாள்...

சாம்பலீஷுக்கும் உற்சாகம் பற்றிக் கொண்டது...

தண்ணீரில் பாய்ந்தான்.. விருக்.. விருக்.. என்று தாவிக் குதித்தான்...
தண்ணீரை விட்டு வெளியேறி ஆற்று மணலில் கிடந்து புரண்டான்...

திரும்பவும் தண்ணீருக்குள் பாய்ந்தான்.. நீரைக் கலக்கியடித்தான்!...
நீந்திக் கொண்டிருந்த மீன்கள் எல்லாம் பயத்தால் துள்ளிக் குதித்தன...

அப்படித் துள்ளிக் குதிக்கும் மீன்களைக் குறி வைத்துப் பாய்ந்தான்..
நீருக்குள் விழுந்தான்.. முங்கினான்.. எழுந்தான்.. நீந்தினான்...

சாம்பலீஷின் சேட்டைகளைக் கண்டு வாணிக்கு ஏகப்பட்ட சந்தோஷம்...

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ!.. - என்றிருந்தது ரகுவுக்கும்...

மாமா... சாம் மீன் திங்கறான்...

இல்லேடா... மீனைத் துரத்துறான்.. ஆனா திங்கலை..

ஏன்... மாமா?....

அதான் ஆச்சர்யமா இருக்கு!.. - ரகுவுக்கு மிகுந்த வியப்பு...

ஓடும் நீரில் மீனைக் கௌவிப் பிடித்துத் தின்பது
இந்த ஜீவராசிகளுக்கு இயல்பான ஒன்று..

​​

ஆனால் -சாம்பலீஷ் எந்த ஒரு மீனையும் பிடித்துத் தின்னாதது
ஏனென்று புரியவில்லை - ரகுவுக்கு...

ஆயிற்று நேரம்..   வீட்டுக்குப் புறப்பட்டார்கள்...

ரகுவுக்கு முன்னால் பாய்ந்த சாம்
வழிநடைப் புழுதியில் புரண்டு எழுந்து
உடலைக் குலுக்கிக் கொண்டான்...

முன்னோக்கி ஓடினான்...
சடக்கென்று திரும்பி ஓடி வந்து
ரகுவை நடக்க விடாமல் கால்களுக்குள் உரசிக் கொண்டான்...

குதித்தான்.. தாவினான்...
உந்தி எழுந்து முன் கால்களால் ரகுவைப் பற்றிக் கொண்டு
செல்லம் கொஞ்சினான்..

அதோ வீடு.. நெருங்கி விட்டார்கள்...

வாசலில் அக்கா நின்று கொண்டிருக்கிறாள்...

திடுதிடு.. என, ஓடிய சாம் -
அக்காவைக் கண்டதும் தனது வாலைச் சுருட்டிக் கொண்டான்...
தத்தளித்துத் தவிப்புடன் சாலையின் ஒருபுறமாக ஒதுங்கினான்...

அம்மா.. அம்மா... சாம் மீனெல்லாம் பிடிச்சு வெளையாடினான்...

கர்மம்.. கர்மம்... அதெல்லாம் வேற தின்னானா!?...

அக்கா... நீ நெனைக்கிற மாதிரி மீனெல்லாம் அவன் திங்கலை!...
நீ என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கே அவனப் பத்தி !..

கண்டதையும் திங்கற விலங்கினம் தான்... ஆனா,

உன்னோட தயிர் சாதத்துக்கும் வத்தக் குழம்புக்கும்
அடிமையாக் கிடக்கிறான்...

அது ஏன்...ன்னு உனக்குப் புரியுதா!..

இவனுக்கும் நமக்கும் ஏதோ ஜன்ம ஜன்மாந்திர உறவு...
விட்டகுறை.. தொட்ட குறை..ன்னு சொல்வாங்களே.. அது!..
ஆனா, அது என்னா...ன்னு தான் தெரியலை...

இவனோட அறிவு, இவன் நம்மகிட்ட காட்டுற அன்பு,
இவன் நமக்குக் கொடுக்கிற பாதுகாப்பு...

எல்லாத்தையும் செஞ்சிட்டு
எனக்கு ஒன்னும் தெரியாது...ங்கற மாதிரி அடக்கம்!...

உருவந்தான் விலங்கு...
ஆனா, உள்ளே இருக்குற ஆத்மா - தேவ ரூபம்...

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்..
பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம்.. - ன்னார் கவியரசர்...

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம பாசம் காட்டுறானே -
இவனை யாரு..ன்னு நெனைக்கிறே!...

மனுசன் தன்னோட நடத்தையால மிருகமாகிற இந்தக் காலத்தில
ஒரு விலங்கு தன்னோட குணத்தால மனுசனுக்கும் மேலா ஆகுது.... ன்னா
இவனும் ஒரு தெய்வந்தான்!...

அப்படியே குனிந்து சாம்பலீஷின் முகத்தோடு
தன் முகத்தை வைத்துக் கொண்டான் - ரகு...

அக்காவின் மனம் நெகிழ்ந்து போனது...

ஆமா.... ரகு.... அன்னைக்கு செங்கல் அடுக்குக்குள்ள
நுழைஞ்ச நல்ல பாம்பைத் தப்பிக்க விடாம
சுத்திச் சுத்தி வந்து தடுத்து நிறுத்தினான்...

ஆறடி நீளம் அந்தப் பாம்பு... கோபத்தில சீறுது புஸ்ஸு.. புஸ்ஸூ...ன்னு...
தைரியமான ஆளுங்களே பாம்போட சத்தத்தைக் கேட்டு நடுங்குனாங்க!...

இவந்தான் தைரியமா போராடி கொன்னு போட்டான்!...

ஆற்றாமை மிகவாக - அருகில் அமர்ந்த கீதா
சாம்பலீஷின் உச்சியைத் தடவிக் கொடுத்தாள்...

அதற்காகவே காத்திருந்த மாதிரி
அவளோடு சாய்ந்து கொண்டான் சாம்பலீஷ்!...

****************************************

ரகு மீண்டும் துபாய்க்கு வந்து ஆறேழு மாதங்களாயிற்று..

கினுங்..கினுங்...

தொலைபேசியில் அக்கா.. குரல் உடைந்திருந்தது...

ரகு... சாம் நம்மை விட்டுப் போய்டுவான் போல இருக்கு..
நாலு நாளா உடம்பு சரியில்லை... தஞ்சாவூருக்கு கொண்டு போய்
காட்டுனோம்... வயதாகிடுச்சு.. அவ்வளவு தான்...ன்னு சொல்லிட்டாங்க...
வாணி அழுதுகிட்டே இருக்கா... என்ன சொல்றது..ன்னு தெரியலை...

ரகு அதிர்ந்தான்... ஒன்றும் புரியவில்லை...

அதற்குப் பின் -
நாலைந்து நாட்களுக்கு மேலாகியிருந்தது...
என்ன.. ஏது.. என்று கேட்பதற்குத் தெம்பில்லை....

கினுங்... கினுங்...

ரகு!... நம்ம சாம்...

என்ன ஆச்சு.. என்ன ஆச்சு?... - அழுகையுடன் அதிர்ந்தான் ரகு...

பொழச்சிக்கிட்டான்..டா!...

ஓ!... - ஆனந்த விம்மல் ரகுவிடமிருந்து...

உனக்கு போன் செஞ்ச மறு நாள்...
வீட்டு வாசல்...ல புதுசா ஒரு நாய்க்குட்டி...
அதுவா வந்து.... சாம்...கிட்ட ஒட்டிக்கிச்சு...

அந்தக் குட்டி சாமை நக்கிக் கொடுக்க
சாம் அந்தக் குட்டிய நக்கிக் கொடுக்க... ஒரே களேபரம் தான்..

இப்போ சாம் நல்ல சுறுசுறுப்பாயிட்டான்...
ஓடியாடி வெளையாடுறான்... நல்லா சாப்டுறான்...
எங்கே போனாலும் புரோ கூடத்தான்...

என்னது... புரோ.. வா!...

ஆமா... புதுசா வந்த செல்லம் பழுப்பா இருக்கு.. அதுனால புரோ!...

அக்கா.. இன்னும் ரொம்ப வருசத்துக்கு நல்லா இருப்பான் சாம்!...

விழி நீரைத் துடைத்துக் கொண்டான் ரகு!..ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

54 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. இன்று எனது சிறுகதையைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை அனுப்பி எங்களைச் சிறப்பித்தமைக்கு எங்கள் நன்றி துரை ஸார்.

   நீக்கு
 3. கதைக்குள் கதையாக
  தங்களது பதிவிலிருந்து உருவானதே இது.

  தக்க இடத்தில் சாம்பலீஷின் படங்களைச் சேர்த்து அழகு செய்தமைக்கு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களது பாராட்டுகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. தமிழகத்தில் இருப்பதால் பதிவுகள் படிப்பது குறைந்திருக்கிறது. விடுபட்ட பதிவுகள் தலைநகர் திரும்பிய பிறகு தான் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. மனுசன் தன்னோட நடத்தையால மிருகமாகிற இந்தக் காலத்தில
  ஒரு விலங்கு தன்னோட குணத்தால மனுசனுக்கும் மேலா ஆகுது

  அருமை
  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. கொலு வேலை, உடல்நலக்குறைவு, அலைச்சல்னு சரியா வரமுடியலை. இன்னிக்குக் கொஞ்சம் உடம்பு பரவாயில்லை. சும்மாச் சும்மாச் சொன்னால் புலம்பலாயிடும்னு சொல்லிக்கலை! (இப்போ மட்டும் என்ன வாழ்ந்ததுனு என்னோட.ம.சா. கேட்குது) இஃகி, இஃகி,

  சாம்பலீஷ் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியமாக வாழட்டும். படங்களும் அழகான சம்பவங்களும் துரை தன் எண்ணங்களை அருமையாகப் பதிவு செய்திருப்பதைக் காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   தாங்கள் பூரண நலம் எய்த வேண்டுகின்றேன்...

   உடல் நலமில்லாதபோதும் கதையை வாசித்து
   கருத்துரை வழங்கியதற்கு மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. //புருஷன் தன் மனையாளின் முகத்தை
  உற்று நோக்குவதற்கே நேரமில்லாத - இந்த காலகட்டத்தில்//

  அன்பின் ஜி
  நிதர்சனமான உண்மையின் வெளிப்பாடு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. கதை நெகிழ வைத்து விட்டது.
  மிக அருமையான கதை.
  செல்லத்துக்கு ஏற்ற கதை.
  சாமை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்த புரோ வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 11. மனுசன் தன்னோட நடத்தையால மிருகமாகிற இந்தக் காலத்தில
  ஒரு விலங்கு தன்னோட குணத்தால மனுசனுக்கும் மேலா ஆகுது.... ன்னா
  இவனும் ஒரு தெய்வந்தான்!...//

  மிக நன்றாக சொன்னீர்கள்.
  செல்லத்தின் படம் மிக நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய நடைமுறை வாழ்க்கை
   பலவீனமான மனதுடைய மனிதர்களை வேறுவழியில் திருப்பி விடுவதாகி விட்டது...

   தங்களன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 12. வயதானலும் ஒரு பிடிப்பு வாழவேண்டும் என்ற எண்ணத்தை கொடுப்பது பேரன், பேத்திகள் மனிதர்களுக்கு என்றால் செல்லத்திற்கும் ஒரு குட்டிச்செல்லம் வந்து மீண்டும் ஒரு புது பிறப்பை கொடுத்து விட்டது. பலகாலம் புரோவுடம் மகிழ்ந்து இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல மனிதர்களைச் சார்ந்திருக்கும் விலங்குகளும்
   அவர்களைப் போல ஆசாபாசங்களுக்கு ஆளாகி விடுகின்றன...

   தங்களன்பின் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 14. ஆவ்வ்வ்வ்வ் சூப்பரா இருக்கு கதை... இது இயற்கையாகவே நடக்கும் சம்பவங்கள்தானே..
  மிக அருமையாக சுவாரஸ்யமாகப் படிச்சேன். முடிவிலே வயிற்றைக் கலக்க வைத்து நேராக்கிட்டார் திரை அண்ணன்...:). அது டுவிஸ்டூஊஉ வைக்கிறாராம் எங்களுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவுமே மொபைலில் ரைப் பண்ணும்போது துரை அண்ணன் திரை அண்ணனாகிடுறார்.. மன்னிச்சுக்கோங்கோஒ:)..

   நீக்கு
  2. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 15. நைட் ஒரு கனவு, எங்கள் பூனைக்குட்டியையும் ஒரு நாய்ப்பிள்ளையையும் இன்னொரு ஊருக்கு கூட்டிச் சென்று மறந்துபோய் விட்டு விட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறோம், பின்பு அவற்றை விட்டு விட்டோமே என எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கிறது, எங்கு போய்த் தேடுவதென்றும் தெரியவில்லை பின்பு அடுத்த நாள் அவர்களாக நம்மிடம் வந்துவிட்டனர்.. நிம்மதியாக கண்முழிச்சேன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவில் கூட வளர்ப்புச் செல்லங்களின் நினைப்பு என்றால் அருமை...

   வாழ்க நலம்..

   நீக்கு
 16. ஒன்று கவனித்திருக்கிறீர்களா நம் இலக்கியங்களில் நாயை மிகவும் கேவலமாக சித்தரிக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 17. நிபந்தனை அற்ற அன்பைத் தரும் செல்லத்தைப் பற்றிய பதிவு நெகிழ்ச்சியாக இருந்தது. சாம்பலீஷ் என்னும் பெயருக்கு பொருத்தமான படம்.பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....

   கதைக்கான படங்கள் அன்பின் ஸ்ரீராம் அவர்களது உபயம்..

   நீக்கு
 18. சாம்பலீஷுடைய வாரிஸ் அது. ரத்தபாசம் உயிர்பிழைக்க வைத்து விட்டது. குட்டி , என்ன அருமை அப்பா. .வர்ணனைகளும், ஸம்பவங்களும் மனதை நெகிழ்த்தி விட்டது. ஸூப்பர். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   அன்பு மிக்க ரத்தபாசம் தானே உயிர்களை வாழ வைப்பது...

   தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 19. அன்பு காட்டும் தெய்வங்கள் இந்தச் செல்லங்கள். இப்பொழுதும் எங்கள் வீட்டு வாசல் கேட்டருகே பழுப்பு நிற நாய் ஒன்று ,உணவு கொடுக்க யாரும் இல்லாவிட்டாலும்
  காத்துக் கிடக்கிறது. அவ்வப்போது உணவு தேடி அலைந்து மீண்டும் இங்கே படுக்கை.
  உங்கள் சாம்பலீஷ் பிழைத்ததௌ புரோவின் மகிமையால்.
  உற்ற துணை கிடைக்கும் போது உயிர் வாழ்வது இன்னும் சந்தோஷமாகிறது. விவரிப்பும் ,பாசமும் பொங்கும் இந்தக் கதை மனதில் நிற்கிறது.
  படிக்கக் கொடுத்த உங்களுக்கும் ஸ்ரீராமுக்கும் மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கு மகிழ்ச்சி...

   /// உற்ற துணை கிடைக்கும்போது உயிர் வாழ்வது இன்னும் சந்தோஷமாகின்றது..///

   சாத்தியமான வார்த்தைகள்...

   இரவு நேரத்தில் இவ்வகை விலங்குகள் உணவு இல்லாமல் திரிவது வேதனையானது..

   நீக்கு
 20. ஆஜர் போட்டுட்டேன். பிறகு படித்து எழுதறேன். அலைச்சல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
   முடிந்தபோது எழுதுங்கள்.. நன்றி..

   நீக்கு
 21. கதை அருமை பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அசோகன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 22. மனதை வருடி சென்றது சாம் என்ற சாம்பலீஷின் அன்கண்டிஷனல் அன்பு .அதை அழகாய் விவரித்த துரை அண்ணாவுக்கும் பகிர்ந்த எங்கள் பிளாக்குக்கும் பாராட்டுக்கள் .
  ஊரில் நிறைய சாம்பலீஷுகளை பார்ப்போம் அன்றாடம்.. மெட்றாஸில் எங்க வீட்லயும் ஒரு ப்ரோ வாசலில் அமர்ந்து அப்படியே வீட்டுக்குள் நிரந்தர என்ட்ரி கொடுத்தான் :)
  சாம்பலிஷின் நிலையில் பல முதியோரும் உண்டு நல்லா கவனிச்சு பார்த்தா பேரப்பிள்ளைங்களோட அவங்க மெண்டாலிட்டியே மாறிடும் இளமை காலம் மீண்டும் திரும்பினாற்போல் உற்சாகமாகுவாங்க .இங்கே ப்ரோ சாம்பலீஷை மீட்டதுபோல் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   // சாம்பலீஷின் நிலையில் பல..//

   உண்மை தான்....

   அன்பிற்குத் தானே உயிர்கள் ஏங்கிக் கிடக்கின்றன....

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 23. மனதில் நின்ற கதை. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!