திங்கள், 29 அக்டோபர், 2018

"திங்க"க்கிழமை : கொழுக்கட்டை - அதிரா ரெஸிப்பி


மோதகம், கொழுக்கட்டை - அதிரா ஸ்டைல்:)
எப்ப அவிச்சு முடிச்சு, எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?:).. 
நித்திரை நித்திரையா வருதே:))

டி வெள்ளிக்கு மோதகம் அவிச்சு அம்மனுக்கு வச்சனான் எனச் சொன்னேனெல்லோ.. அதை அப்படியே படமெடுத்து போடுகிறேன்.. அம்மனின் அருள் இதைப் பார்க்கும் எல்லோருக்கும் கிடைக்கக் கடவது_()_.

செய்முறை சொல்லித்தந்தது அம்மா, அளவுகள் + செய்தது முழுக்க முழுக்க அதிரா.. நம்போணும்... ஜொள்ளிட்டேன்ன்.

இதுக்குத் தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பூ - 1 கப்
வறுத்த பயற்றம் பருப்பு - 2 கப்
சக்கரை[சீனி அல்ல] - 1 கப்

மாக்குழைக்க:
வறுத்த அரிசிமா - 1 கப்
அவித்த கோதுமை மா - 1.5 கப்

இதுக்கு, உடன் திருவிய தேங்காய்ப்பூத்தான் நல்லது, முதலில் தேங்காய்ப் பூவை இப்படி பிரவுண் கலராகும் வரை வறுத்து எடுக்கோணும், கறுக்க விட்டிடக்கூடாது..


 இது நானே வறுத்து உடைத்தெடுத்த பயற்றம் பருப்பு, அதனால கொஞ்சம் கறுக்க விட்டுவிட்டேன்ன்:) பீஸ் எச்ச்சூச்மீஈஈ:)).. முதலில் பயற்றம் பருப்பை அது மூழ்கும் அளவுக்கு மட்டும் தண்ணி விட்டு நன்கு அவிக்கோணும், தண்ணி போதவில்லை எனில், கொதி தண்ணி ஊற்றி, நன்கு அவிந்த பதமாக்கோணும்..

தண்ணி முழுவதும் நன்கு வற்றி, பயறு அவிந்ததும், வறுத்த தேங்காய்ப்பூவைக் கொட்டிக் கிளறி .. அடுப்பை ஓவ் பண்ணிப்போட்டு, பின்பு அந்தச் சூட்டில் சக்கரையைத் தூளாக்கிக் கொட்டிக் கிளறி விடோணும்.

இதில் இரண்டு விசயம் சொல்லோணும் நான்.. நோட் பண்ணிக்கோங்க:).. பச்சையாக தேங்காய்ப்பூச் சேர்த்தால்.. வாசம் குறைவாகும் மற்றும் பயறு தண்ணித் தன்மையாகி விடும். வறுத்துப் போடும்போது, பயறில் தண்ணித் தன்மை இருப்பின், இந்த தேங்காய்ப்பூ உறிஞ்சி விடும்.

அடுப்பில் வைத்தே சக்கரையைச் சேர்த்தால், அதுவும் கரைந்து அப்படியே பயறு தண்ணியாகிடும், பின்பு மாவின் உள்ளே வைப்பது கஸ்டம்.


இப்பொழுது மாவுக்கு, அளவுக்கு உப்புச் சேர்த்து, இடியப்பம் குழைப்பது போல குழைக்கோணும், தண்ணியை நன்கு கொதிக்க விட்டு, பின்பு ஒரு கப்பில் ஊற்றி விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இதில் விட்டுக் குழைக்கோணும்.. இப்போ ரெண்டும் ரெடியாகிட்டுது...

அதிரா என்ன அயகா:) மோதகம் தட்டி விட்டேன் பாருங்கோ:))

இடியாப்பத் தட்டில் வைத்து, இடியப்ப ஸ்...ரீமரில் அவித்து எடுத்தேன்

ஆவ்வ்வ் நடுவில் இருப்பது பிள்ளையாருக்காம்:)), மோதகத்துக்கு மூக்கு கரெக்ட்டா இருக்கோ?:)


ஊசி இணைப்பு:
அனுஸ்[க்கா]:- ஸ்ரீராம் அண்ணாஆஆ சாப்பிட வாங்கோ..

================================
சட்டை கிழிஞ்சுதுன்னாஆஆஆஆஆ தச்சு முடிச்சிடலாம்ம்ம்ம்ம்.. நெஞ்சு கிழிஞ்சிடுச்சேஏஏஏஏஏஏஏ .. எப்பூடி நானும் தைப்பேன்ன்:))..

ஸ்ரீராம்:- பிபிசி ல சிட்டுவேஷன் சோங் போடுறாய்ங்களாம்ம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) முதல்ல பிபிசி யைத்தூக்கி தேம்ஸ்ல போடோணும்:))
============_()_============

137 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா அக்காஸ் அண்ணாஸ், தம்பிஸ் தங்கைஸ் நட்பூக்கள் அனைவருக்கும் எல்லோரும் நலம் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே கீதா... வாங்க... வாங்க... காலை வணக்கம்.

      நீக்கு
    2. @ தி/கீதா, நேத்தே வருவேன்னு சொல்லி இருந்தீங்க! இணையம் சரியா இருக்கு தானே!

      நீக்கு
    3. கீதாக்கா ஆமாம் அதை ஏன் கேக்கறீங்க அதான் என் கணினி புதிய நெட்டை ஏற்க மறுத்தது....அதோடு போராட்டம் தாஜா பண்ணி எப்படியோ..

      கீதா

      நீக்கு
    4. ஆவ்வ்வ்வ்வ் கீதா லாண்டட்டாஆஆஆஆஅ ஜொள்ளவே இல்ல:)).. கீதா வந்த நேரம் என்னால அதிகம் பேச முடியாமல் இருக்கு.. வாங்கோ கீதா வாங்கோ..

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்கோ துரை அண்ணன்.. அப்போ அதிராவுக்கு வாழ்த்து?:) ஹா ஹா ஹா..

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. // அப்போ அதிராவுக்கு வாழ்த்து?:)//

      பூரணமாய் இனிப்பு தந்த
      பூமகளே வாழ்க...
      கொழுக்கட்டை அவித்து தந்த
      கோமகளே வாழ்க...

      நீக்கு
    4. ஆவ்வ்வ்வ்வ் டங்கூ டங்கூ... துரை அண்ணன் இதைப் பார்த்து இப்போ எல்லா இடத்திலும் புகை வரப்போகுதூ பிக்கோஸ் அதிரா பூஊ ... படு எண்டெல்லாம் சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா:)

      நீக்கு
  3. ஆகா..
    இன்னிக்கு பெரிய கச்சேரி தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்ல துரை அண்ணன்.. திங்கள் செவ்வாயில கச்சேரி பண்ண முடியாமல் பண்ணிட்டாங்க கர்ர்ர்ர்:)) கண்ணு பட்டுப் போச்ச்ச்ச்ச் ஹா ஹா ஹா:))

      நீக்கு
  4. வந்தாச்சு.....ஓ அதிரடியின் திங்க வா!!!!! வரேன் அப்பால மோதகம் சாப்பிட....இப்ப சில கடமைகள் ...காலை 4 மணிக்கு எழுந்தாச்சு. ஒரு அடுப்புதான் இண்டக்ஷன் மட்டுமே...7 மணிக்குள் சாப்பாடு ரெடியாகணும்..ஸோள்...என் நடை முடித்துவிட்டு பணிகள் முடித்துட்டு அப்பால வாரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே... அந்த ஊர்ல கரண்ட் எப்போ போகும்னு யாருக்குமே தெரியாதே கீதா ரங்கன்

      நீக்கு
    2. கீதா வந்த வேகத்தை விட அதிக வேகத்தில திரும்பி ஓடுறாவே கர்ர்:))

      நீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  6. அட! இன்னிக்கு தி.கீதா முதலே வந்தாச்சா? அதிரா கொழுக்கட்டை புது மாதிரிச் செஞ்சிருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ கீசாக்கா.. இது புது மாஆஆஆஆஆஆறீஈஈஈஈஈஈ எல்லாம் இல்லை கர்:) இது யாழ்ப்பாணக் கொழுக்கட்டை இப்பூடித்தான் இருக்கும்.. அரிசிமா வெள்ளை அரிசி எனில் வெள்ளையாகவும் சிகப்பு அரிசி எனில் சிகப்பாகவும் இருக்குமாக்கும்.. க்கும் க்கும்..:))

      நீக்கு
  7. வெறும் அரிசி மாவிலே தான் கொழுக்கட்டை பண்ணுவோம். இவங்க வட இந்திய முறைப்படி கோதுமை மாவும் சேர்த்திருக்காங்க! இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறும் அரிசிமா பலசமயம் காலை வாரி விட்டிடும் கீசாக்கா. பதமாக குழைக்காட்டில் வெடிக்கும்:)

      நீக்கு
  8. ஆ. கொழுக்கட்டை. அதிராவின் கொழுக்கட்டை. நல்ல கோதுமையும் அரிசிமாவும் ,தேங்காயும் சேர்ந்து செய்த கொழுக்கட்டை.
    புதுவிதமா அழகா இருக்கு அதிரா. நாட்டு சர்க்கரை சேர்த்திருப்பீர்களோ. இல்லை கரும்பு ஷுகரா.

    செய்முறை விளக்கம் அனைத்தும் அருமை.
    பிள்ளையாருக்குக் கொடுத்துவிட்டு,நானும் எடுத்துக்கறேன் மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வல்லிம்மா.. நாட்டுச் சக்கரை எனில் எதுவெனத் தெரியல்ல இது சாதாரண கரும்புச் சக்கரைதான்.. வெல்லம் அல்ல[நாட்டுச் சக்கரையைத்தான் நாங்க வெல்லம் என்போம் என நினைக்கிறேன் ஹையோ எல்லாம் குழம்புதே மீக்கு:)]..

      நடுவே இருப்பதுதான் பிள்ளையாருக்கு.. உள்ளே மோதிரம் இருக்கு ஹா ஹா ஹா:).

      நீக்கு
    2. நாட்டு சர்க்கரை இம்பியூரிட்டிஸ் இல்லாதது வெல்லத்தை தட்டி பொடியாக்கி பாக்கெட்டில் விற்பாங்க .
      muscovado sugar மாதிரி தூளா இருக்கும் .

      http://media.webdunia.com/_media/ta/img/article/2018-05/09/full/1525846497-3058.jpg

      நீக்கு
    3. அதிரா நாங்களும் எங்கள் பிறந்த வீட்டில் சர்க்கரை என்றுதான் சொல்லுவோம்...அதாவது வெல்லத்தை சீனி என்று சொல்லுவது வெள்ளைச் சீனி....நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்.

      நாட்டுச் சர்க்கரை என்பது ப்ரௌன் நிறத்தில் சீனி போன்று தூளாக இருக்கும் அதிலும் வெவ்வேறு பக்குவங்கல் இருக்கு. சீனி போன்று க்ரிஸ்டலாகவும் இருக்கும்...வெல்லத்தை நன்றாகப் பொடித்தால் எப்படி இருக்குமோ அப்படியும் ஃபைன் தூளாகவும் இருக்கும். வெல்லம் உருண்டையாக கெட்டியாக இருக்கும் மண்டை வெல்லம் என்றும் சொல்லுவோம். உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் நாட்டுச் சர்க்கரை, டெமரரா சுகர் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம் பக்குவத்தில் வருகிறது. வெள்ளை சீனியைத் தவிர இவை எல்லாமே நாட்டுச்சர்க்கரை வடிவம் தான்.

      நானும் சர்க்கரை (வெல்லம்) சேர்த்துத்தான் செய்வது உண்டு. ஆனால் அதில் மண் இருக்கும் என்பதால் கொஞ்சம் தண்ணீர் விட்டு சூடு செய்து கரைத்து வடிகட்டிவிட்டு அப்புறம் சேர்த்து கிளறிச் செய்வதுண்டு. நாட்டுச் சர்க்கரை அதாவது தூளாகக் கிடைக்கும் சர்க்கரையில் கூட சில சமயம் மண் இருக்கும். இப்போதெல்லாம் தூளாக வருவதும் மண்இல்லாமல் வருகிறது. க்ரிஸ்டலாக வருவதில் கலந்திருப்பதில்லை.

      கீதா

      நீக்கு
    4. ஓஒ அப்போ நான் பாவித்திருப்பது நோர்மல் சக்கரைதான்... இங்கு கொஞ்ச்ம் விலை அதிகம் கொடுத்து வாங்கினால் மண் எதுவும் இல்லாதது கிடைக்குது, விலை மலிவாக இருக்கே என வாங்கினால் மண் கஞ்சல் எல்லாம் இருந்திடுது கர்ர்ர்ர்ர்:)... எப்படியெல்லாம் விலை தீர்மானிக்கிறார்கள் பாருங்கோ...

      நீக்கு
  9. காலை வணக்கம், கீதா,ஸ்ரீராம், துராய் செல்வராஜு அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.
    கீதா ரெங்கன் நலமா?
    செட்டில் ஆன விவரம் படித்து தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  11. அதிரா, கொழுக்கட்டை நல்லா இருக்கிறது.
    செய்முறை விளக்கம் அருமை.
    கோதுமை மாவு கலந்து செய்து இருக்கிறீர்கள்.சம்பா கோதுமையை மாவாக்கி அதை ஆவியில் வேக வைத்த மாவா?
    இலங்கையில் கோதுமை மாவு இடியாப்பம், ராகி இடியாப்பம் எல்லாம் சாப்பிட்டோம், அவை அவித்த மாவில் செய்தது என்று நினைக்கிறேன்.
    மோதகம் மூக்கு நன்றாக இருக்கிறது. சிறு வயதில் கேட்ட கொழுக்கட்டை கதை நினைவுக்கு வருது. அம்மா கொழுக்கட்டைக்கு கண் உண்டா, காது உண்டா, மூக்கு உண்டா என்று கேள்விகள் வரும்.
    நீங்கள் மூக்கு சரியா இருக்கா? என்று கேட்டவுடன் நினைவுக்கு வந்தது கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ கோமதி அக்கா...

      //சம்பா கோதுமையை மாவாக்கி அதை ஆவியில் வேக வைத்த மாவா?//

      சே..சே.. நீங்க பெரிய லெவல்ல சிந்திக்கிறீங்க.. சாதாரணமாகக் கடையில் வாங்கும் பிளேன் ஃபிளவர்.

      இதேபோல இரு மாக்களையும் கலந்து வைத்திருப்போம் வீட்டில்.. அப்போ டக்குப் பக்கென ஒரு நொடியில் இடியப்பம் புட்டு எதுவெனினும் அவித்திடலாம்.

      //இலங்கையில் கோதுமை மாவு இடியாப்பம், ராகி இடியாப்பம் எல்லாம் சாப்பிட்டோம், அவை அவித்த மாவில் செய்தது என்று நினைக்கிறேன்.//

      அதேதான் கோமதி அக்கா.. அரிசிமா மட்டும்தான் வறுப்போம்.. கோதுமையை வறுக்க மாட்டோம்ம்.. ஆனா எப்பவாவது கோதுமை மாவை வறுத்துப் புட்டவிப்போம்.. அதன் சுவையே தனிதான்.. ஆனா கோதுமையை வறுத்து சமைத்தால் அதில் ஏதோ பித்தம் வாதம்.. எல்லாம் வரும் எனச் சொல்வாஅர்கள்.. அதனால வறுத்துப் பாவிப்பதில்லை.. அத்தோடு வறுத்தால் வயிற்றில் அதிக சூடாகிடும்.

      நீக்கு
    2. கோதுமை புட்டும் நன்றாக இருக்கும்..ந்ல்ல ஃபேளவரோடு இருக்கும்..இப்போதும் எப்போதேனும் செய்வதுண்டு. உப்புப் புட்டும்...இனிப்புப் புட்டும் கூட....

      இலங்கைத் தமிழர்கள் செய்வது என் பாட்டி அத்தைஸ் அங்கு இருந்த போது செய்வார்கள் ஸோ நானும் அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.

      கீதா

      நீக்கு
    3. கோதுமையை வறுத்து சமைத்தால் அதில் ஏதோ பித்தம் வாதம்.. எல்லாம் வரும் எனச் சொல்வாஅர்கள்.. அதனால வறுத்துப் பாவிப்பதில்லை.. அத்தோடு வறுத்தால் வயிற்றில் அதிக சூடாகிடும்.//

      அதிரா, இவ்வளவு விஷயம் இருக்கா?
      கோதுமை மாவை அவித்தே செய்து விடுகிறேன் நன்றி.

      நீக்கு
    4. அதிரா, நாங்கள் கோதுமை மா என்பது தமிழ்நாட்டில் மைதா மா. நாம் ஆட்டா மா என்பது தான் அங்கே கோதுமை மா. அதான் எல்லாருக்கும் இத்தனை கன்ப்யூஷன்.

      நீக்கு
    5. ஓம்..கோதுமைப் புட்டு தனியே அவிக்கும்போதும் ரேஸ்ட்தான் மீதா..

      வாங்கோ ராஜ்ஸ்ரீ, விளக்கத்துக்கு மிக்க நன்றி.. நானும் அடிக்கடி கோதுமையையும் மைதாவையும் போட்டுக் குழப்புவேன் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      நீக்கு
    6. அது மட்டுமில்லை இன்னொன்று சொல்றேன் கோமதி அக்கா, இந்தியாவில நீங்க தேங்காயை உடைச்சு அதிலிருக்கும் இளநியைக் குடிப்பீங்களெல்லோ.. நாங்கள் குடிக்க மாட்டோம்ம் கீழே ஊத்தி விடுவோம்ம்.. ஏனெனில் வாதம் வரும் என்பினம். இளநியிலிருந்து வரும் இளநி மட்டும்தான் குடிப்போம்.

      சிலசமயம் தேங்காய் உடைத்து வரும் இளநியை அப்ப மாப் புளிக்க வைக்க மட்டுமே கலப்பதுண்டு.

      இம்முறை அம்மா இங்கு நின்றபோது, இந்தியாவில எல்லோரும் குடிக்கினம் எனச் சொல்லிக் கொண்டே தேங்காய் உடைச்சு இளநியைக் கப்பிலே சேர்த்தேன் அம்மா ஏசிப்போட்டு எடுத்து ஊத்திப் போட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. சரி பிழை தெரியவில்லை.. பரம்பரை பரம்பரையாக காதில் விழும் செய்திகள் இவை.

      நீக்கு
    7. தேங்காய் தண்ணீரை மாப் புளிக்க வைக்க மட்டுமே கலப்பதூன்டு என்று நெல்லைத்தமிழன் ரவா இட்லி பதிவில் சொன்னார்.
      இனி தேங்காய் குடிக்காமல் விட்டு விடுகிறேன் ஏற்கனவே கால் வலி , கைவலி இருக்கிறது. நல்லதுதான்.
      நிறைய விஷயங்கள் ஞானி அதிராவால் தெரிந்து கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
  12. ஊசி இணைப்பு!
    அனுஷ்கா படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா போஸ்ட் போடும்போது அமைதியாக எழுத முடிவதில்லை.. எதையாவது சீண்டோணும் எனும் நினைவு வந்து விடுகிறது ஹா ஹா ஹா...

      மிக்க நன்றி.

      நீக்கு
  13. சுவையான பதார்த்தம்..

    நாங்களும் அரிசி மாவில் மட்டும் மே செய்வோம் ...கோதுமை மாவான்னு கொஞ்சம் வித்தியாசமா தான் பார்த்தேன் அதிரா...

    அடுத்து பூரணத்துக்கும் நான் வெல்லம் மட்டும் தான் சேர்ப்பேன்..


    கொஞ்சம் புதுமையான கொழுக்கட்டை..ஹி ..ஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ அனு.. நாங்க கொழுக்கட்டை எனில் இதே முறைதான்.. மற்றும்படி கடலைப்பருப்பில் செய்து உருட்டி கடலை மாவில் தோய்த்துப் பொரிப்போம் அதை சூசியம்:) என்போம் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வாங்கோ டிடி.. செய்முறைதான் வித்தியாசம் சாப்பிடும் முறை ஒன்றுதானே ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      நீக்கு
  15. காலை வணக்கம் 🙏.


    ஆஹா இன்னிக்கு அதிராவின் சமையல்.... கொழுக்கட்டை எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வெங்கட்.. ஓமோம் இங்கு இனிப்புப் பிரியர்கள் அதிகம்.. மிக்க நன்றி.

      நீக்கு
  16. கொழுக்கட்டை ஆசையை தூண்டுகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ கில்லர்ஜி.. நீங்களும் இனிப்புக்கு அடிமையோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      நீக்கு
  17. இன்றைய பொழுது அதிரா செய்த மோதகத்தோடா? உள்ளே பூரணம் வைக்கும் படம் இல்லாவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா நெல்லை அந்தப் பூனை ஏதோ சொல்லுவது போல இல்லை? எனக்கு என்ன தோணிச்சுனா...நாம பாட்டுக்கு கொழுக்கட்டை செஞ்சு போட்டுட்டோம்...இவங்க எல்லாம் இதை சாப்பிடுவாங்களா? வைரவா இவங்கலாம் எதுவும் சொல்லாம வாய மூடிட்டு சாப்பிடனுமே காப்பாத்து வைரவானு கெஞ்சுவது போல இருக்குது ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன், பூனை நீங்க சொல்றதுபோலச் சொல்றமாதிரி தெரியலை. அது சொல்லுமு, ‘கடவுளே இது நல்லா வரணுமே அவங்களுக்கு ருசியா இருக்கணுமே.. இல்லைனா என்னிடம் தள்ளிவிட்டுருவாங்களே’ அப்படீன்னு சொல்றமாதிரி தோணுது - என்று சொல்லி எதுக்கு அதிராட்ட சண்டை போடணும். நீங்க சொன்னதுக்கு பதில் சொல்லாம போயிடறேன்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா....குறிப்பா உங்ககிட்ட மாட்டிக்காம போணி ஆகனுமேனு அது நினைப்பது போல இருந்துச்சு!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. //நெல்லைத் தமிழன்29 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:03
      இன்றைய பொழுது அதிரா செய்த மோதகத்தோடா? உள்ளே பூரணம் வைக்கும் படம் இல்லாவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன்.//

      வாங்கோ நெல்லைத்தமிழன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களை நம்ப வைக்கவென்றே நிறைய ஆதாரம் திரட்ட வேண்டி வருது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நம்பிட்டீங்கதானே மிக்க நன்றி.

      பூஸார் ஏற்கனவே குண்டூஊஊஊஊ இதில மோதகத்துக்கு வெயிட்டிங்காம் கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  18. நாங்கள், எப்போதும் செய்த எல்லாவற்றையுமே சுவாமி பங்களின் முன்பு வைத்துவிடுவோம். நீங்க பாதியை உங்களுக்கென்று மறைத்து எடுத்துக்கொண்டீர்கள் போலிருக்கிறது. சோமாசி டிசைன் இரண்டு பண்ணிட்டு ஒண்ணுதான் பூசைக்கு வச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ....ஙா... அப்படி எல்லாத்தையும் வண்டிப்பிள்ளையாருக்குப்:) படைப்பதில்லை நெ.தமிழன்.. அவர் நோகாமல் நொங்கெடுப்பதைப்போல அனைத்தையும் சாப்பிட்டு விடுவார் ஹா ஹா ஹா.. செய்வதில் நல்ல அழகா வந்ததை மட்டுமே அவருக்கு குடுப்போம்.. மொத்தமும் படைப்பதில்லை.. இப்படியான பொருட்கள் எனில் எண்ணி.. 3/5/9 இப்படிப் படைப்போம்..

      நீக்கு
  19. சினிமாலதான் கதை, எடுத்தவிதம் நல்லா இல்லைனா ஒரு குத்துப் பாட்டு, டான்ஸ் சேர்ப்பான். அப்போதான் ரசிகர்கள் வருவாங்கன்னு. இங்க கொழுக்கட்டை நல்லாத்தானே வந்திருக்கு. அப்புறம் எதற்கு அனுஷ்காவின் கவர்ச்சிப்படம்? உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அப்புறம் எதற்கு அனுஷ்காவின் கவர்ச்சிப்படம்? //

      ஹா ஹா ஹா எதுக்கு இப்பூடிப் புகையுதூஊஊஊஊஊ:)) அடுத்து தமனாக்காவைப் போட்டிட வேண்டியதுதேன்:)) ஹா ஹா ஹா.. நல்லாத்தான் ஓசிக்கிறீங்க.. நல்ல உவமானம் சினிமாவும் குத்துப்பாட்ட்டும், கொழுக்கட்டையும் அனுக்காவும் ஹா ஹா ஹா...

      நீக்கு
  20. இப்போ பசி நேரந்துல எனக்கு அம்மனின் அருளைவிட கொழுக்கட்டையின் அருள்தான் உடனடியாத் தேவையாயிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க இன்னும் இனிப்பைக் கைவிடேல்லையோ?:) இல்ல இடையில விட்டு திரும்ப ஆரம்பிச்சாச்சோ...

      மிக்க நன்றி நெ.தமிழன்.

      நீக்கு
  21. வித்தியாசமான கொழுக்கட்டை. ஒரே ஒரு சந்தேகம் வறுத்த மாவும், வேகவைத்த மாவும் மீண்டும் வேக வைக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ பானுமதி அக்கா.. ஏன் பச்சை மாவிலயா கொழுக்கட்டை செய்வது இல்லைத்தானே? புட்டு, இடியப்பம்.. கொழுக்கட்டை எதுவாயினும் அவிச்சதை..,
      அல்லது வறுத்ததை, திரும்ப அவிப்போம் தானே...

      அப்போ நீங்க கொழுக்கட்டை மாவை வறுக்க மாட்டீங்களோ.. அவ்வ்வ்வ்வ்வ் எல்லமே கொயப்பமா இருக்கெனக்கு... மிக்க நன்றி.

      நீக்கு
  22. வறுத்த மாவில் கொழுக்கட்டை . புது மாதிரியாக இருக்கிறது , செய்து பார்க்கிறேன் . இடியாப்ப Steamer இப்பொழுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருணா இப்படியான தட்டுகள் இங்கும் கிடைக்கிறதே. இடியாப்பத் தட்டுகள். சின்ன சின்ன மூங்கில் தட்டுகள் கூட கிடைக்குது அதை எந்த ஸ்டீமரில் வைத்தாலும்..ஏன் குக்கரில் கூட வெயிட் போடாமல் வைத்து எடுக்கலாமே..வாணலியைக் கூட தண்ணீர் விட்டு இட்ட்லி வேக வைப்பது போல் வேக வைத்து எடுக்கலாம்..

      கீதா

      நீக்கு
    2. வாங்கோ அருணா.. ஓ நீங்க இடியப்பம் அவிப்பதில்லையோ.. இப்படி தட்டில் அவித்தால்தான் சுவையாக இருக்கும் இடியப்பம், இத்தட்ட்டில்தான் அவிக்கும் பொருட்களை ஈசியா அவிச்செடுப்பேன்.. வடைக்கறிக்கும் செய்யும் வடையையும் இதில் அவிப்பேன்.. கீதாவும் சொல்லியிருக்கிறா..

      மிக்க நன்றி.

      நீக்கு
  23. ஈரமாவை வறுத்து எடுத்து வைத்துக் கொண்டால் நீண்ட நாள் இருக்கும் விரத நாட்களில் வறுத்த மாவுதான் பயன் படுத்துவார்கள்.
    வேக வைத்த மாவு பத்து என்பார்கள் . வேக வைத்த மாவு என்றால் இடித்த ஈர மாவை துணியில் கட்டி ஆவியில்வேக வைத்து கட்டியில்லாமல் உதிர்த்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

    கோதுமை மாவு, மைதா மாவு எல்லாம் இப்படி செய்து இடியாப்பம், எல்லாம் செய்வார்கள் நனறாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா அதே அதே....பானுக்காவின் கேள்விக்கு இதைத்தான் பதிலாகச் சொல்ல வந்தேன்...நீங்களே சொல்லிருக்கீங்க...ஸோ உங்கள் பதிலை டிட்டோ செய்துட்டேன்...(நன்றி நன்றி ஹப்பா டைப்ப வேண்டாம்...ஹா ஹா ஹா ஹா)

      கீதா

      நீக்கு
    2. அதேதான் கோமதி அக்கா, ஊரில் இருந்தபோது ஆட்கள் வந்து மா இடித்து உடனேயே வறுத்து தருவார்கள்.. அது தனி சுவை.. 2,3 மாதத்துக்கொரு முறை இப்படி செய்து வைத்திருப்போம். ஆனா இப்போ எல்லாம் மெசினில்தான் அரைப்பது.. இங்கு ரெடிமேட்டாக வறுத்த மா கிடைக்குது.. கோதுமை மாவில் கூட அவித்து பக் பண்ணி வருது.. எந்த வேலையும் நமக்கில்லை.. ஆனா கோதுமை மா நானே அவித்தெடுப்பேன்.

      அரிசிமா அவித்து செய்வதில்லை எதுவும்.. அப்படி நினைவில்லை எனக்கு...

      நீக்கு
    3. மெசினில் ஈர அரிசி அரைத்து தருவார்கள் அதிரா . அதிரசம் அதில் நன்றாக வ்ரும். ஈர அரிசி மாவில்தான் பாகு காச்சி விட்டு எடுத்து வைப்பார்கள் மூன்று நாள் கழித்து செய்யும் போது அதிரசம் நன்றாக இருக்கும்.
      ஈர ஆரிசி மாவைதான் வறுத்து வைத்துக் கொள்வோம். சிலர் ஆவியில் வேகவைத்து எடுத்து சலித்து வைத்துக் கொள்வார்கள்.
      மிக்ஸியில் ஈர அரிசி திரித்துக் கொள்கிறேன் இப்போது. இங்க்கும் வறுத்த பச்சரிசி மாவு கடையில் கிடைக்கிறது.

      நீக்கு
  24. ஆஆஆஆஆஆஅ என்னாது இன்று அதிரா வீட்டுக் கொழுக்கட்டையோ.. அதுவும் அதிரா கையால செய்தது அவ்வ்வ்வ்வ்வ்:).. திகதியை மறந்து போயிருந்தேன்.... ஆடி வெள்ளிக்கு அவிச்சதெல்லோ:))... நன்றி நன்றி அனைவருக்கும் நன்றி..

    நான் எப்போ வருவேன் எப்போ பதில்கள் சொல்லுவேன் என எனக்கே தெரியாது... ஆனா பதில்கள் போடுவேன்... அதுவரை மன்னிச்சுக்கோங்க..

    பதிலளிநீக்கு
  25. ஹை அதிரா நல்ல ரெசிப்பி. நான் அரிசி மாவும் கோதுமை மாவும் சம அளவு எடுத்து செய்ததுண்டு. அது ஒரு பதிவே போடலாம் அப்படியாகக் கற்றுக் கொண்டது. வடஇந்தியாவில் அதாவது சிம்லா வட கிழக்கு மாநிலங்களில் (திபெத் தான் மோமொஸ் பிறந்த இடம் என்று சொல்லப்படுகிறது...) மோமோஸ் ஃபேமஸ்...ஸ்டஃப்ஃபிங்க் இனிப்பு அல்ல...அதை சுவைத்ததும் மகனுக்குப் பிடித்துவிட வீட்டில் செய்ததுண்டு. அது மைதா மாவு என்பதால் கோதுமை மாவில் செய்தால் இன்னும் நல்லதாச்சே என்று முழுவதும் கோதுமை மாவில் செய்தேன். மாவை ஸ்டீம் செய்து விட்டு...ஸ்டஃபிங்க் என்று. அப்புறம் வீட்டில் ஸ்வீட் பிரியர்கள் அதிகம். எனவே நம் கொழுக்கட்டை செய்யலாமே என்று மோமோஸ் ஸ்வீட் செய்து அப்புறம் அவிச்ச கோதுமை மாவிலும் செய்து....அரிசி மாவும் அவிச்ச கோதுமை மாவும் கலந்து அதிலும் செய்து என்று நன்றாகவே வந்தது. அரிசி மாவுடன் அவித்த சிறுதானிய மாவும் கலந்தும் செய்து பரீட்சித்துப் பார்த்தாச்சு. தினை கொழுக்கட்டை செய்வதுண்டு இல்லியா...பல வித ஸ்டஃபிங்கும் முயற்சி செய்தாச்சு. மாமியார் வீட்டில் எல்லோருமே ஸ்வீட் பிரியர்கள். மாமியார் உட்பட.

    அதிரா ஹைஃபைவ் நானும் தேங்காயை பச்சையாகச் சேர்த்துச் செய்தாலும் வறுத்தும் சேர்ப்பதுண்டு. தேங்காய் பூரணம் செய்தாலும் கொஞ்சம் வறுத்துச் செய்தால் அது தனிச் சுவை.

    நீங்க கோதுமை மாவு 1.5 போட்டுருக்கீங்க அதையும் நோட் செய்து கொண்டேன்...

    பாக்கவே அழகா இருக்கு அதிரா...மூக்கு நல்லாவே பிடிச்சிருக்கீங்க..கொழுக்கட்டைக்கும் மூச்சுப் பயிற்சி கற்றுக் கொடுத்தீங்களோ?!!!!!.ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொமோஸ் தனி கோதுமையில் செய்வார்கள் என நினைக்கிறேன் கீதா.. அதுவும் சைனீஸ் கடையில் வாங்குவது இன்னும் சுவை அதிகம்.

      //தினை கொழுக்கட்டை செய்வதுண்டு இல்லியா//

      தினை, சாமி மாவில் தனியே பிடிக்கொழுக்கட்டைபோல செய்வோம் கீதா.

      சம அளவை விடக் கொஞ்சம் கோதுமையை அதிகம் சேர்த்தால், பிடிக்க நல்ல சேப் வரும், சட்டிபோல:).. இன்னொன்று மா அவிக்கும்போது நன்கு அவிந்திருக்கோணும்.. அவியல் குறைந்திட்டாலும் ஒட்டப் பார்க்கும் கவனம்.

      பச்சைப் பூவும் சிலர் சேர்ப்பார்கள்.. அது நீர்ஹ்ட்துவிடும், கொழுக்கட்டைக்குள் வைத்து மூட சில சமயம் சக்கரையோடு தண்ணியாகிடுமாம், அதனாலேயெ வறுக்கச் சொன்னா அம்மா.

      மூக்கு அயகா இருக்கா? அதிராவைப்போல?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா.

      நீக்கு
  26. அனுஸ்கா அழகு! இந்தப் படத்தைப் பார்த்ததும் "கண்ணா வருவாயா" (பாடல்) என்று அனுஸ்கா தேடுவது போல் இருந்ததால்... ஸ்ரீராம் அண்ணாஆஆ சாப்பிட வாங்கோ..என்பது ஸ்ரீராம் கண்ணாஆஆ சாப்பிட வாங்கோனு அனுஸ்கா பாடுவது போல் கண்ணில் பட்டுவிட்டது! அப்புறம்தான் அண்ணாஆஅ என்று கண் சரியாகப் படித்தது..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம் அண்ணாவா...அவருக்கு அப்படி என்ன வயசாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆயிடுச்சு?!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கீதா புதன் கிழமைப் போஸ்ட்டில் கெள அண்ணன் ஜொன்னார்ர் அனுக்கா உடம்பு மெலிவதற்காக வெளிநாடு போயிருக்கிறாவாம்ம்.. அப்போ மெலிஞ்சு ஸ்லிம்மாகி வந்தால் பத்து வயசைக் குறைச்சுக் காட்டுமெல்லோ.. அப்போ அண்ணாஆஆஆஆஆ எனத்தானே விழி/ளிப்பா:)) ஹா ஹா ஹா:).. இது எப்பவோ அனுப்பியது ஆனா கெள அண்ணன் சொன்னதுக்கு பொருந்திவிட்டது.. ஓகே பின்பு வாறேன்ன்..

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.... இப்படி வேற கதை போகுதா...க்ளாஸுக்கு ஆப்சென்டாயிட்டா நிறைய கதைகள் விட்டுப் போகுதூஊஊஊஊஊஉ...

      கீதா

      நீக்கு
    3. அது சரி உடம்பு மெலிய எதுக்கு வெளிநாடு போனும்??!!!!

      கீதா

      நீக்கு
    4. அதைக் கெள அண்ணனிடம்தான் கேட்கோணும் கீதா:)).. ஏனெனில் நியூஸ் தந்தவர் அவர்தானே:).. ஸ்ரீராமுக்குக் கூட இது தெரியுமோ என்னமோ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  27. பயத்தம்பருப்பு பூர்ணம் வைத்து செய்த கொழுக்கட்டை. மாவைக் கிளராமல், வென்னீரில் பிசைந்து செய்வதும் ஒரு வழிபோலும். ஒன்று வெந்து பதப்படுத்தியமாவு,இன்னொன்று வறுத்தமாவு. ஒன்றுக்கொன்று ஒத்தாசை செய்து, விட்டுப்போகாமல் சொப்பு செய்ய உதவுகிறது. இதுவும் ஒரு டெக்னிக்தான். எப்படியும் ஆவியில் வேகத்தான் போகிறது. நல்ல குழக்கட்டை அதிரா. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சிமா எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு நானும் வலைப்பக்கம் வராததால்...நலம்தானே அம்மா?

      கீதா

      நீக்கு
    2. நம்ம ஏரியா உங்கள் புனைவுக்கு பின்னூட்டம் கொடுத்தேன். உங்களைப் பார்க்கமுடியலே. இன்றுதான் உங்கள் பதிவும்பார்த்தேன்.குளிர் ஆரம்பம் இங்கே.மும்பை போகிறேன். தொடர்கதைகள் நீண்டதாகவே இருக்கிறது. நலமா,நலமே என்று சொல்லுகிறேன். அன்புடன்

      நீக்கு
    3. வாங்கோ காமாட்சி அம்மா நலம்தானே..
      ஓம் கொழுக்கட்டை மாவை, இடியப்ப மா பதத்துக்கு குழைத்துச் செய்வோம்ம்..

      மிக்க நன்றி.

      நீக்கு
  28. நான் காலையிலயே கேக்கணும்..டு
    நெனச்சேன்...

    அதாரது?... அனுஷ்காவுக்கு
    சாம்பலைப் பூசுனது?... வடிவான பிள்ளைக்கு இந்தக் கோலம் நல்லா இருக்கோ?...

    காலக் கெரகமடா கந்தசாமி!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா...!!!

      கீதா

      நீக்கு
    2. ஹையோ துரை அண்ணன்.. உங்களுக்கு எதுவுமே தெரியாது.. வெளுத்ததெல்லாம் பாலென நினைக்கிறீங்க கர்ர்:)).. அது ஆம்பல்:) இல்ல:) இதுதான் ஒரிஜினலாம்:)).. மற்றும்படி வெள்ளைக்கிரீம் பூசி வருவாவாம் படத்தில:)) ஹையோ ஹையோ இதை மட்டும் படிச்சதும் கிழிச்சு அந்த பேரீச்ச மரத்தடியில தாட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  29. //ஆடி வெள்ளிக்கு மோதகம் அவிச்சு அம்மனுக்கு வச்சனான் எனச் சொன்னேனெல்லோ.. அதை அப்படியே படமெடுத்து போடுகிறேன்.. அம்மனின் அருள் இதைப் பார்க்கும் எல்லோருக்கும் கிடைக்கக் கடவது_()_.

    செய்முறை சொல்லித்தந்தது அம்மா, அளவுகள் + செய்தது முழுக்க முழுக்க அதிரா.. நம்போணும்... ஜொள்ளிட்டேன்ன்.//

    நம்பிட்டோம் ஆனா கொழுக்கட்டை எங்கே ங்கே ங்கே ?? என் கண்ணுக்கு momos மட்டுமே தெரியுது :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ அஞ்சு.. எப்பூடி இருக்கிறீங்க? டேவடைக்:) கிச்சின் எப்படி இருக்குது?:).

      /நம்பிட்டோம் ஆனா கொழுக்கட்டை எங்கே ங்கே ங்கே ??//
      கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  30. /ஆவ்வ்வ் நடுவில் இருப்பது பிள்ளையாருக்காம்:)), மோதகத்துக்கு மூக்கு கரெக்ட்டா இருக்கோ?:)//
    ohh க்ரீக்ட்டா இருக்கு குருவி மூக்கு :)
    தேங்காய் ரோஸ்ட் செய்ஞ்சதில்லை இதுவரை இனிமே நீங்க சொன்னமாதிரி செய்றேன் ஆனா டேஸ்ட் நல்லா வரலைன்னா வரலைன்னா அவ்ளோதான் நீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ அதிரா மூக்குமாதிரி நல்ல கூராக:) இல்லையோ?:)

      அல்லோ ஸ்லோ ஃபயரில நீண்ட நேரம் கை எடுக்காமல் கிண்டிக் கிண்டி வறுக்கோணும் ஜொள்ளிட்டேன்.. இல்லை எனில் டமால் எனக் கறுத்திடும்:)..

      ///ஆனா டேஸ்ட் நல்லா வரலைன்னா வரலைன்னா //

      வரல்லன்னா:)) தேம்ஸ்ல வீசிட வேண்டியதுதேன்ன்ன்:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  31. ஆனாலும் எதை செஞ்சாலும் அதில் அதிராவின் டச் இருக்கும் அந்த மாவை உருட்டி சரியா கோழி முட்டை ஷேப்புக்கு எடுத்ததில் உங்களை மிஞ்ச யாருமில்லை :)

    பதிலளிநீக்கு
  32. ஆங் இருங்க முடிச்சிக்கிறேன் ..#தீபாவளிக்கு வீட்டிலேயே நாட்டுவெடிகுண்டு தயாரித்து செய்முறை வழங்கிய பூஸாருக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் நடுல உள்ள அந்த பிள்ளையாருக்கு வைச்ச கொழுக்கட்டைக்குள்ள மோதிரம் இருக்காமே....அது உங்களுக்குத்தானே?!!! அந்த மோதிரம்?!!! உங்களுக்கு பூஸார் வைத்திருக்கும் பாக்கியை எல்லாம் இப்படித்தான் எடுத்துக்கணும்...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. haaahaa geetha thats size 13 ring :) i cant wear that

      நீக்கு
    3. அந்த மோதிரத்தை அவங்க போடறமாதிரி செஞ்சி வச்சிருக்காங்க நான் போட்ட கைநழுவி விழும்

      நீக்கு
    4. நோஓஓஓஓஓஓ அது டயமண்ட் வச்ச மோதிரம்.. வள்ளிக்கு நேர்த்திக்கடனை நிறைவேத்த வச்சிருக்கிறேனாக்கும்:))

      நீக்கு
  33. ஹாஹா :) உண்மையில் கொழுக்கட்டை நல்லா வந்திருக்கு மியாவ்
    அப்டியே தீபாவளி பலகாரங்களை வரிசையாக எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதூஊஊஊஊஉ டீபாளியா? அது எப்போ? ஹையோ கெளரி விரதத்தால மீ மயங்கிப்போய்க் கிடக்கிறேன்ன் இதில பலகாரமோ கர்ர்:)) உறைப்பு முறுக்கு மட்டும் வேணுமெண்டால் செய்வேனாக்கும்..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.

      நீக்கு
  34. ஹலோவ் நண்பர்களே இந்த மதுரை தமிழன் என்றொரு அப்பாவி நண்பர் இருப்பாரே அதனானுங்க நயன்தாராவின் உடன்பிறவா சகோதரன் ,பூரிக்கட்டைக்கு அதன் பயன்பாட்டுக்கு மொத்த உரிமையாளர் அவரை எங்கேயும் காணோமே அங்கே முகப்புத்தகத்தில் பார்த்தா நானா நலம் விசாரிச்சதா சொல்லுங்க ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மதுரை தமிழன் என்றொரு அப்பாவி நண்பர்//

      இதாரிது? எங்கயோஓஓஒ கி.மு காலத்தில கேள்விப்பட்ட பெயரா இருக்குதே:).. ஒருவேளை நயன் அக்காவை மீட் பண்ண இந்தியா போயிருப்பாரோ?:).. அதானே இடைக்கிடையாவது வருவார் இப்போ காணோம்:(.

      நீக்கு
  35. எங்கே ஶ்ரீரா ம் அண்ணாவைக் (அனுக்கா முறையில் ஜொன்னேன்:)) காணோம் இங்கின:)... மனமொடிஞ்சு போயிட்டாரோ?:)... ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:) எஸ்கேப்ப்ப்ப்ப்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பனே முருகா ஸ்ரீராம் அண்ணாவை இன்னமும் காணம்.. ஒருவேளை என்னைத்தேடி வெளிநாட்டுக்கு வந்திட்டாரோ உடம்பு மெலியப்பண்ண:).. இப்படிக்கு அனுஸ்:)[ஸ்ரீராம் முறையில சொன்னேன்:)]..

      https://i.pinimg.com/736x/1e/be/18/1ebe18e76df28d70f58d48de284c016d.jpg

      நீக்கு
  36. பை.பருப்பில் பூரணமா?!

    இதுக்கும் அனுஷ்காவுக்கும் என்னப்பா சம்பந்தம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ராஜி.. ஹா ஹா ஹா சம்பந்தம் இருக்கே..

      மிக்க நன்றி.

      நீக்கு
  37. எனக்கு சாப்பிடத்தான் தெரியும் சமைக்க தெரியாது சுடுதண்ணிர் வைக்கவும் தடுமாற்றம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வாங்கோ.. நீங்கதான் கவிதையில், கதையில் அனைத்தையும் பண்ணிடுவீங்களே பிறகென்ன.. மிக்க நன்றி.

      நீக்கு
  38. அரிசி மாவு தேங்காய் வெல்லம் சேர்த்த பூரணம் கொண்டுதான் கொழுக்கட்டை செய்வாள் என்மனைவி நன்றாகவே இருக்கும் படத்தில் கொழுக்கட்டை நிறம் மாறி இருக்கிறதே

    பதிலளிநீக்கு
  39. வாங்கோ ஜி எம் பி ஐயா.. ஒவ்வொருவர்.. ஊருக்கு, இடத்துக்கு.. மொழிக்கு ஏற்ப ஒவ்வொரு விதமாகச் செய்கிறார்கள் போலும்.. சிவப்பு அரிசிமாவில் செய்தால் சிவப்பாக வரும்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. யாரும் குறையோ.. கோபமோ எடுத்திடாதீங்க.. இன்று இப்போஸ்ட்டுக்கு பதில் குடுக்கோணும் என்றே வந்தேன்ன்.. முடியல்ல.. எல்லோரிடமும் வருகிறேன் விரைவில்.. அதுவரை மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வருண்October 29, 2018 at 12:30 PM
    ஒரு தகவல்
    அமெரிக்காவில் வசிப்பவரும் மதுரையை சேர்ந்த " அவர்கள் உண்மைகள் " என்னும் தளத்தை நடத்தும் துரை அவர்கள் செப்டம்பர் 2018 22 ஆம் திகதி அமெரிக்காவில் காலமானார்

    வருண் பிண்ணுட்டமாக ராமருக்கு போட்டிருந்தார்் அதிர்ச்சியாக இருந்தது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
    Replyஆழ்ந்த இரங்கலை இங்கு பதிகிறேன் அவர்கள் உண்மைகள் துரை அவர்களே (உறவினர்களுக்கு) அவரை நாங்களும் மிஸ் பண்ணுகிறோம். அவரது போட்டோ பதிவிடவும்.அவரது இழப்பில் மீண்டு வர இறைவன் அருள் வேண்டி பிரார்த்கிறோம் (எங்கள் புளொக்கு நன்றி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழன், செங்கோட்டையைச் சேர்ந்த துரையைப் பற்றியா சொல்கிறீர்கள்? அதிர்ச்சியான செய்திதான். உண்மையா? சிறிய வயதுதானே... ஆனால் கிட்டத்தட்ட 8 வாரங்களாக பதிவும் போடவில்லை, மறுமொழிகளையும் வெளியிடவில்லை. மதுரைத் தமிழன் எங்கள் நெஞ்சில் எப்போதும் இருப்பார்.

      நீக்கு
  42. சமீப காலங்களில் கேட்ட அதிர்ச்சிச் செய்திகளில் இதுவும் ஒன்று. உண்மையில் இது நிஜம்தானா, நம்பலாமா என்றே தோன்றுகிறது. தன் குடும்பத்தின் மேலும் மனைவி மேலும் அதிகம் பற்றுதல் கொண்ட மதுரைத் தமிழரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரப்பட்டு அவருடைய ஆன்மாவுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டேனோ? இன்னமும் அவர் இறந்திருப்பார் என்பதை நம்பமுடியவில்லை. இந்தச் செய்தி பொய்யாகவே இருக்கட்டும். நூறாண்டுக் காலம் வாழட்டும்! விரைவில் நல்ல செய்தி கிடைக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  43. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி......பெரும் அதிர்ச்சி...இது உண்மையா...ப்ளீஸ் இல்லை அவரே இப்படி விளையாடுகிறாரா? ஏனென்றால் அவர் இப்படி விளையாடுவார். அப்படி விளையாடியிருந்தால் அது விளையாட்டாகவே இருக்கட்டும். என்று இறைவனை வேண்டுகிறேன். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். கருத்துகளில் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கு. ஆனால் நேரில் மிக மிக மிக நல்ல மனிதர்.

    அவரை நேரில் சந்தித்திருக்கிறேன், வாட்சப்பிலும் அவ்வப்போது தொடர்பு கொண்டுள்ளேன். இடையில் தான் பார்க்கும் பணியிலிருந்து விலகி வீட்டில் இருப்பதாகத் தெரிவித்திருந்தான் வலையிலும். அப்போது கூட உடல்நலக் குறைவாக இருக்கும் என்ற சந்தேகம் கூட வரவில்லை. வந்திருந்தால் நான் அவரிடம் கேட்டிருப்பேன். சர்க்கரை வியாதி உள்ளவர் என்பது தெரியும். அவரது மனைவிதான் இடையில் மிகவும் உடல் நலம் குறைந்து மீண்டு வந்திருந்தார்.

    நிச்சயமாக உறுதியாகத் தெரியாத வரையில் என்னால் நம்ப இயலவில்லை....இந்த வருண் பதிவர் வருணா? ராமர் யார்?

    உண்மையாக இருந்திருந்தால் விசு சொல்லியிருப்பாரே. அவர் அவரது வீட்டிற்கும் போயிருக்கிறார். ரமணி அண்ணாவும் போயிருக்கிறார். விசுவிடமிருந்து ஏதேனும் மெயில் எங்களுக்கு வந்திருக்கிறதா என்று பார்க்கிறேன்....ஏனென்றால் நான் மெயில் பாக்ஸ் போய் பல நாட்கள் ஆகிவிட்டது அதாவது எங்கள் ப்ளாகர் மெயில் பாக்ஸ்.

    விசு என்னைக் கூப்பிட்டிருப்பார் அறிந்திருந்தால்....

    என்ன சொல்ல என்று தெரியவில்லை....முகநூலில் யாரேனும் சொல்லியிருக்காங்களா...அப்படி என்றால் துளசி சொல்லியிருப்பாரே...

    இறைவா இது பொய்யாகவே இருக்கட்டும்....மனம் ஏற்க மறுக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... நான் அரசியல் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவதில்லை. ஆனால் அவரின் கடைசி இரண்டு இடுகைகளுக்கு சில பின்னூட்டங்கள் லேட்டாகப் போட்டேன். அது வெளியாகவே இல்லை. நான், இனி அவர் அரசியல் சம்பந்தமாக அழுத்தம் வந்ததால் தளத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டாரோ என்று நினைத்தேன்.

      பாருங்க... பதிவுகள் எழுதுவதால் என்ன பயன் என்று சிலர் கேட்கறாங்க. முகம் அறியாவிட்டாலும் நேரில் சந்திக்காவிட்டாலும் ஒரு நட்பு இழு நம் எல்லோருக்குள்ளும் ஓடுகிறதே. பிரதிஉபகாரம் இல்லா இந்த நட்பு உயர்ந்தது இல்லையா?

      நீக்கு
  44. மதுரைத் தமிழனின் எண்ணைத் தேடினேன் மொபைலில் வாட்சப்பில் இருந்த எண்ணைத் தேடினால் அது இல்லை இப்போது...காணவில்லை...எப்படி என்று தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  45. கடவுளே இது என்ன செய்தி, எனக்கு படிச்சதும் மனம் பதறுது, நான் கீதாவுக்கு உண்மை தெரியும் எப்படியும், என நினைச்சிருந்தேன் இப்போ கீதாவே இப்படி சொல்லும்போது என்ன பண்ணுவது.

    அவருக்கு அரசியல் எழுதுவதால் பல எதிர்ப்புக்கள் இருந்தது எனத் தெரியும், அதனால ஆராவது ஏதும் கதை கட்டி விட்டிருப்பார்களோ சும்மா என நினைத்தேன்.. நம்ப முடியவில்லை... நம்மோடு கூட இருந்து கும்மாளம்போட்ட ஒரு பதிவருக்கு இப்படி ஆகியிருக்கு... நாம் எதுவுமே தெரியாமல் கூத்தடித்துக் கொண்டு இருந்திருக்கிறோமே என நினைக்க மிகவும் வேதனையாக இருக்கு.

    கீதா கொஞ்சம் தீர விசாரிச்சுச் சொல்லுங்கோ உங்களாலதான் முடியும்.. அதுவரைக்கும் என் மனதுக்கு இச்செய்தியை எடுத்துச் செல்ல முடியவில்லை உண்மை என நினைக்க முடியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நான் விசாரித்து செய்தி அனுப்பியுள்ளேன் அமெரிக்கா இப்போது இரவல்லவோ...இங்கு மாலை இந்திய நேர்த்திற்கு தெரிய வருகிறதா என்று பார்ப்போம். அதற்கு முன் இங்கு விஐசி ;என்பவர் கீழே கொடுத்துள்ள ராமன் வெல்லூர் அந்த சுட்டிக்குப் போனேன் அங்கு வருண் என்பவர் (நம் பதிவர் போல் தெரியவில்லை ஏனென்றால் அதை க்ளிக் செய்தால் க்ளிக் ஆகவில்லை...) தான் இங்கு சொல்லப்பட்டது போல் தகவல் கொடுத்திருக்கிறார்..

      ஆனால் அதன் கீழே இப்படி ஒரு தகவலும் இருக்கிறது...

      BalaOctober 30, 2018 at 8:57 AM
      Bro.. is it true?
      There was a update on 14 october

      https://m.facebook.com/avargal.unmaigal

      ஸ்ரீராம் இந்த முகநூல் சுட்டி என்ன சொல்லுது? நீங்க பார்த்திருப்பீங்களே...முகநூலில் அவர் எப்போது இறுதியாக வந்திருந்தார்?

      வளைத்தளத்தில் செப்டெம்பர் 7 ஆம் தேதி....அந்தப் பதிவை நான் வாசித்தேன் ஆனால் பொதுவாக அரசியல் பதிவுகளுக்கு அதுவும் சமீபத்திய பதிவுகளுக்கு நான் பதில் கொடுப்பதில்லை என்பதால் கருத்து கொடுக்கவில்லை...இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுட்டி யின் படி அக்டோபர் அப்டேட் ஆகியுள்ளதா முகநூலில்?

      கீதா

      நீக்கு
    2. ஆம் , அக்டோபர் 14 ஆம் தேதி கடைசிப் பதிவு வந்திருக்கு முகநூலில்.

      நீக்கு
    3. நன்றி கீதக்கா....மிக்க நன்றி...

      ஏதோ நம்பிக்கை வருகிறது....

      கீதா

      நீக்கு
    4. கடவுளே அந்த தகவல் பொய்யாக வே இருக்கணும் தான் நானும் ஆசை படுறேன்..

      நீக்கு
    5. ஓ ஒக்டோபர் இல் அப்டேட் பண்ணியிருக்கிறாரோ அப்போ இதில் ஏதோ இருக்கு அது என்ன போடப்பட்டிருக்கு பேஸ் புக்கில்... அவரது வீட்டில் ஆராவது போடும் வாய்ப்பு இருக்குமோ...

      நீக்கு
  46. நான் யாரையும் காணவில்லை எனில், டக்கு டக்கெனத் தேடுவதில்லை, எல்லோரும் பிஸியான உலகில் ஆயிரம் வேலைகள் இருக்கும், அப்பப்ப காணாமல் போய் வந்திடுவார்கள்.. அதுவும் வெளிநாட்டில் இருப்பதால் ஊருக்குப் போய் வரும் வாய்ப்பும் இருக்கும், நமக்கு எல்லாம் சொல்லித்தான் செய்வார்கள் என இல்லைத்தானே அதனால கரைச்சல் கொடுத்து எங்கே எங்கே எனக் கேட்டிடக்கூடாது, கொஞ்ச நாட்கள் விட்டுவிட்டே தேட வேண்டும் என நினைப்பதுண்டு.. அந்த வகையில் ட்றுத் உம் கொஞ்ச நாட்கள்தானே போஸ்ட் எழுதாமல் விட்டார்ர்....:(. நம்மிடம் வருவதைத்தான் ஏற்கனவே குறைச்சிருந்தார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அவர் இப்படி இடையிடையே காணாமல் போய்விட்டு வரும் போது பூரிக்கட்டை அடி ஆஸ்பத்திரியில் இருந்தேன் என்றெல்லாம் சொல்லி நகைச்சுவையாக ஏதேனும் சொல்லிக் கொண்டு வருவார். அப்படி அவர் காணவில்லை என்றே நினைத்தேன்..அவர் மகளுக்காக வீடு கூட மாறியிருந்தார் சில மாதங்களுக்கு முன்....

      உங்களைப் போலத்தான் நானும் நினைத்திருந்தேன் அதிரா...அவர் நம்மைப் போல் கூடச் சொல்லமாட்டார். அவர் அதிசயமாகப் பகிர்ந்திருந்த ஒன்று தன் மகளுடனும் நாலுகால் செல்லத்துடனும் வெகுதூரப் பயணம் ஒன்று காரில் சென்றதைச் சொல்லியிருந்தார்...அதனால் 4 நாள் வரமாட்டேன் என்று...அப்புறம் ஒரு முறை ஹாலிடே ட்ரிப் போவதாகச் சொல்லியிருந்தார். முன்பெல்லாம் அது கூடச் சொன்னதாக நினைவில்லை...

      கீதா

      நீக்கு

  47. ஒரு ஊழியனின் குரல்
    சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

    Sunday, October 28, 2018
    கெத்துன்னா இதுதான் . . .
    விளக்கம் வேண்டாம். படமே போதும் . . .



    Posted by S.Raman, Vellore at 9:21 PM
    Reactions:

    Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Pinterest

    Labels: அரசியல், கேரளா
    3 comments:

    வருண்October 29, 2018 at 12:30 PM
    ஒரு தகவல்
    அமெரிக்காவில் வசிப்பவரும் மதுரையை சேர்ந்த " அவர்கள் உண்மைகள் " என்னும் தளத்தை நடத்தும் துரை அவர்கள் செப்டம்பர் 2018 22 ஆம் திகதி அமெரிக்காவில் காலமானார்

    Reply
    Replies

    S.Raman, VelloreOctober 29, 2018 at 7:28 PM
    வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்


    BalaOctober 30, 2018 at 8:57 AM
    Bro.. is it true?
    There was a update on 14 october
    https://m.facebook.com/avargal.unmaigalமன்னிக்கவேண்டும் இதுபொய்யாகவே இருக்க வேண்டும் வருண் ரலாக்ஸ்பிலிஸ் என நினைத்து விட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. vic என்கிற பெயரில் இங்கு தகவல் கொடுத்துக்கொண்டிருப்பது யார் என்று அறிய விரும்புகிறோம். பிளாக்கர் பக்கம் போனால் விவரம் ஏதுமில்லை.

      நீக்கு
  48. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  49. முகநூலில் அவர் பக்கம் நானும் சென்று பார்த்தேன். வருண் தான் உறுதி செய்ய வேண்டும் நம்பவே முடியவில்லை. மனம் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சென்று பார்த்தேன் oct 14 வரை பதிவு இருக்கு...

      நம்ம முடிய வில்லை...

      நீக்கு
    2. ஃபேஸ்புக்கில் தனி மெஸேஜ் காலையிலேயே இன்பாக்சில் விசாரித்துள்ளேன். அவரிடமிருந்தே நல்ல பதில் வரவேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் ஆமாம் மனம் ஏற்க மறுக்கிறது....

      அந்த வருண் நம்ம பதிவர் வருணா ஸ்ரீராம்? ஏனென்றால் அதைக் க்ளிக் செய்தால் க்ளிக் ஆகவில்லையே...

      எங்கள் தளத்தில் ஒரு சின்ன போஸ்ட் போடுகிறேன் ஸ்ரீராம்....பார்ப்போம் பதில் வராமலா போகும்...

      விசுவிடமிருந்து ஏதேனும் தகவல் வருதானு பார்ப்போம் அவருக்கும் மெயில் அனுப்பியுள்ளேன்...

      கீதா

      நீக்கு
    4. இரண்டு மூணு நாளா கேட்கணும்னு யோசிச்சே நேற்று இங்கே அவரை பற்றி விசாரித்தேன் ..
      கீதா விசு கொர்னேலியஸ் அண்ணாவிடம் விசாரியுங்க .
      அந்த பின்னூட்டம் கொடுத்தது வருண் ரிலாக்ஸ் ப்ளீஸ் இல்லை .வருண் ப்ரோபைலை மறைக்க மாட்டார் எதுனாலும் நேரடியா அவர் தளத்தில் வெளியிடுவார் .

      நீக்கு
    5. ஏஞ்சல் விசுவுக்கு மெயில் தட்டிவிட்டேன்....பார்ப்போம்...மாலை. ஆனால் விசு இப்படியான செய்தி என்றால் கண்டிப்பாகத் தெரிவித்திருப்பாரே...அதான். அப்புறம் யெஸ் இது வருண் இல்லை...

      கீதா

      நீக்கு
  50. என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, ஈசியாகக் கடக்கவும் முடியவில்லை, பேஸ் புக்கில் யாராவது அவரின் அமெரிக்க நண்பர்களுக்கு ஆரேனும் மெசேஜ் அனுப்பிக் கேட்டுப் பாருங்கோ பிளீஸ்.

    பதிலளிநீக்கு
  51. நல்லபடி இருக்கவேண்டும். மனதை சுற்றிவருகிறது. பொய்யாக இருக்கவேண்டும்கடவுளே.

    பதிலளிநீக்கு
  52. என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மதுரை தமிழன் இறந்ததை.
    அவர் விடுமுறைக்கு ஊருக்கு போய் இருபார் என்று நினைத்தேன்
    அதிராவின் பதிவுக்கு வருவாரே , இரண்டு மூன்று பதிவுக்கு வரவில்லை.
    இறைவன் அருளால் நலமாக இருக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!