சனி, 20 அக்டோபர், 2018

ஒன்லி லேடீஸ்

1)  ".....   ஏழு வயதிலிருந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். இரண்டு முதல் மூன்று முறை படிப்பேன். அதன்பிறகு பிறருக்கு கொடுத்து விடுவேன். ஈரோட்டில் உள்ள உறவினர் ஒருவருக்கு நுாலகம் அமைக்க 50 ஆயிரம் புத்தகங்கள் கொடுத்தேன். ஒரு நாளைக்கு 2 முதல் 3 புத்தகங்களை படிப்பேன்....." 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று இங்கு வந்த கோவிலுாரைச் சேர்ந்த 88 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை சாவித்திரி 5 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி சென்றார். 

தனது 88 வயதிலும் புத்தகம் படிப்பதைஉயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்து வருகிறார், ஓய்வு பெற்ற ஆசிரியை சாவித்திரி...


2)  ......  தாங்கள் இருந்த வளாகத்தில் மரங்களை நடுவது பழைய பேப்பர்களை மீண்டும் எப்படி உபயோகிப்பது என்பது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்......

லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.  இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவியான வையெந்தி மாலா ‛ சீட்செம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி பள்ளி மாணவியரிடம் சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
3)  வாழ் நாள் முழுவதும் சேவையாற்றி வந்த இவர், 1983ல், 78வது வயதில் உயிரிழந்தார்.அவரை போற்றும் வகையில், ஆத்துார், வரசித்தி விநாயகர் கோவில் கோபுரத்தில், சீதாராமன் அய்யருக்கு, உருவச்சிலை வைத்து, அப்பகுதியினர் வழிபாடு செய்துவருகின்றனர்.


4)  வாய்ப்பில்லாமல், மலைகளில் இருக்கும் ஆதிவாசிப் பெண்கள், 100 பேரை அழைத்து, தொழில் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். விரைவில் அதையும் செய்து விடுவேன்...

கரூரிலிருந்து மதுரை செல்லும், தேசிய நெடுஞ்சாலையில், 'ஒன்லி லேடீஸ்' நிறுவனத்தின், சி.இ.ஓ., தலைமை நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி.


21 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. இன்றைய தொகுப்பு அருமை..

  அதிலும்
  88 வயதில் புத்தகம் வாங்கும்
  அந்த புண்ணிய ஆத்மாவுக்கு வணக்கம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கெல்லாம் இப்பவே, இந்த சின்ன வயசிலேயே படிக்க கண்ணைக்கட்டுது!

   நீக்கு
 3. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். புத்தகங்களைப்போல் (நல்ல புத்தகங்கள்), நண்பன் இல்லை. வைஜெயந்தி பெயர் பிழையுடன் வந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் பெயரே அதுதான் என்று நினைக்கிறேன் நெல்லை. அங்கேயே அப்படிதான் இருக்கிறது. லிங்க் க்ளிக்கிப் பாருங்கள்.

   நீக்கு
  2. ஶ்ரீராம்... எனக்கு இப்போ குழப்பம் வத்துடுத்து. நிறைய இடங்களில் நடிகை வைஜெயந்தி மாலாவை வையெந்தி மாலா எனக் குறிப்பிட்டுள்ளனர். இது தமிழ்ப்படுத்துதலா இல்லை தட்டச்சுப் பிழையானு குழப்பமா இருக்கு

   நீக்கு
 4. சினிமா நடிகனுக்கு சிலை வைத்து வணங்குவது, அவனது சமாதியை வணங்குவதைவி, அப்பகுதி மக்கள் அறியப்பட்ட திரு. சீதாராமன் ஐயரை வணங்குவதில் தவறில்லை. (அதேநேரம் நாமும் அவரை வணங்குவது அறியாமை அந்த நல்ல மனிதரை மானசீகமாக மனதால் மதிக்கிறேன் அவரது சந்ததியினரை இறைவன் காப்பானாக)

  பதிலளிநீக்கு
 5. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்கள்

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான தகவல்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  88 வயதிலும் ஒரு நாளைக்கு இரண்டு புத்தகம் படிப்பது மகிழ்ச்சி.
  என் மாமியார் 94 வயதில் பொன்னியின் செல்வன் கதையை ஒரு வாரத்தில் அத்தனை பாகத்தையும் படித்தார்கள்.ஆர்வம் தான் காரணம்.

  பதிலளிநீக்கு
 8. அனைத்தும் சிறப்பான தகவல்கள்! 88 வயதில் சுறுசுறுப்பாக புத்தகங்கள் படிக்கும் சாவித்திரி அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!! என் அம்மாவிற்கு 100 வயது ஆரம்பமாகப்போகிறது! இன்னும் புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிப்பதை விடவேயில்லை!!

  பதிலளிநீக்கு
 9. அருமையான வழிகாட்டிகள்!
  அவர்களைப் போல ஏனையோரும்
  நல்லது செய்யத் தொடரலாம்!

  பதிலளிநீக்கு
 10. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்!

  பதிலளிநீக்கு
 11. சில முகநூல் வழி படித்தேன்.

  அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. மனித உருவத்தில் வாழும் தெய்வங்கள்

  பதிலளிநீக்கு
 13. எல்லாமே புதுசு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. மிக மிக அருமையான பதிவு. எங்கள் ஊர்ப் பள்ளி மாணவி இத்தனை நல்ல காரியங்கள் செய்து வருகிறார் என்பது மிக மகிழ்ச்சி தரும் செய்தி. சாவித்திரி அம்மாள் பற்றி அறிய மிக மகிழ்ச்சி.

  புத்தகம் ஒன்று தான் எப்பொழுதும் நண்பனாக இருக்க முடியும்.
  அந்தப் புத்தகங்களைத் தருவதால் இன்னும் நற்பயன் பெறுகிறார் இந்த மூதாட்டி. நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்.
  கோபுரத்தில் ஏற்றி வைத்த மக்கள் அதிசயமானவர்கள். சீதாராமன் ஐயாவுக்கு நல் வணக்கங்கள்.
  இத்தனை நல்ல செய்திகளைப் படித்ததில் மிக மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!