சில நாட்கள் இந்த அடையைப் பற்றி தொலைக்காட்சியில் பார்த்தேன்.. சில வருடங்களாகவே அடை என்றாலே எங்கள் வீட்டில் சிறுதானியத்தில் செய்யும் அடை தான்.. வரகு, சாமை, தினை, குதிரைவாலி என எல்லாவற்றிலும் வாங்கி கலந்து வைத்துக் கொள்வேன். அரிசிக்கு பதிலாக இவைகளைச் சேர்த்து அரைப்பேன்..
சரி வாங்க!! இந்த கோதுமை ரவை அடையை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
தேவையானப் பொருட்கள்:-
கோதுமை ரவை - 1 தம்ளர்
கடலைப்பருப்பு - 3/4 தம்ளர்
துவரம்பருப்பு - 1/4 தம்ளர்
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
பயத்தம்பருப்பு - சிறிதளவு
வரமிளகாய் - காரத்துக்கு தகுந்தாற்போல்..
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை -
கொத்தமல்லி -
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் - விருப்பப்பட்டால்
பருப்புகளை களைந்து ஊறவைக்கவும். கோதுமை ரவையை ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. . நான் முளைக்கட்டிய பயறு சிறிதளவு சேர்த்தேன்.. ஊறிய பருப்புகளுடன் வரமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும். அதனுடன் கோதுமை ரவையை சேர்க்கவும்.. உப்பு சேர்க்கவும்.. கறிவேப்பிலையை கிள்ளியும் மாவில் போட்டுக்கலாம். மகள் கறிவேப்பிலையோடு அரை அடையையே தனியே ஒதுக்கி வைத்து விடுவாள் என்பதால் அரைத்து விட்டேன்.. கல்லை காயவைத்து அடையாக வார்த்து எடுக்கவும்.. சட்னியோடோ, வெல்லம் நெய்யுடனும் சாப்பிடலாம்..
வாய்ப்பு தந்த எங்கள் ப்ளாக் குழுவினருக்கு நன்றி..
ஆதி வெங்கட்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்!
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குவாழ்க...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் ,கீத்ஸ்/ கீத்ஸ் மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஅட! ஆதியின் ரெசிப்பியா செம!! ரொம்ப நாளா நினைச்சேன் ஆதியின் ரெசிப்பியும் இங்க திங்கவில் வரலாமேனு!! வந்துருச்சு...!!!
பதிலளிநீக்குஅடை சூடா கொஞ்சம் டேஸ்ட் பார்த்துட்டேன்....இன்னும் கொஞ்சம் வேண்டும். ஸ்ரீராம் வைச்சுருங்க எடுத்து...அப்புறமா வரேன் இனி மதியம் மேல் அல்லது மாலை டிஃபனுக்கு!!!
கீதா
வாங்க வாங்க போயிட்டு மெதுவா வாங்க...
நீக்கு/// மெதுவா வாங்க...///
நீக்குஅவ்வளவு தான்...
அடைக்கெல்லாம் கேரண்டி கிடையாது.
இருக்கிறது எங்களுக்கே பத்தாது!?..
(பட்ஜெட் கொஞ்சம் ஜாஸ்தியா போட்டுருக்கலாம்!!!....)
அடையை மெதுவா வந்து சாப்பிடணும்னா கீதா ரங்கன், கீசா மேடம் சொல்லியிருக்கற மாதிரி ரசம் இல்லைனா, மோர்க்குழம்பை எடுத்துட்டு வந்து அதன் மேல் ஊற்றித்தான் சாப்பிடணும்..ஹாஹா
நீக்குநல்லதொரு சிற்றுண்டியை
பதிலளிநீக்குவழங்கியுள்ள ஸ்ரீமதி ஆதிவெங்கட் அவர்களுக்கும் நல்வரவு...
க்ளிக்ஸ் சூப்பர்...டேஸ்டும் அபாரம். வரேன் அப்பால..
பதிலளிநீக்குகீதா
// க்ளிக்ஸ் சூப்பர்!..//
நீக்குவெங்கட் நாகராஜ் ..
அவரோட கேமரா ஆச்சே...
சூப்பரா இருக்கறதுக்கு
கேக்கணுமா!...
அடை பதிவு நல்லா வந்திருக்கு. படங்கள் வரிசை மாறியிருக்கு.
பதிலளிநீக்குநீங்களே முளை கட்டுகிறீர்களா இல்லை கடையில் வாங்கினீர்களா?
கொத்தமல்லியை அடைக்கு அரைத்தால், கருவேப்பிலை/பெருங்காய வாசனை போய்விடாதா? அடைக்கான மணத்தைக் கொடுப்பது அவை அல்லவா?
என் வீட்டிலும் கர்ம சிரத்தையாக கருவேப்பிலையை எடுத்து தூரப்போடும்போது மனதுக்குள் கர்ர்ர்ர்ர்... அதனால் அரைத்துவிட முயல்வேன். அடைக்கு ஏராளமான கறிவேப்பிலையை அரைத்துவிடுவேன்.
அருமையான அடை. அடிக்கடி பண்ணுவேன். பறங்கி இளங்கொட்டை அல்லது முருங்கைக்கீரை அல்லது வெங்காயம் போன்றவையும் சேர்க்கலாம். தேங்காய்த் துருவலாக இல்லாமல் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம். முளைக்கட்டிய பயறு மீந்தால் அதோடு இந்தக் கலவைகளைச் சேர்த்து அடை அல்லது அடை தோசையாக வார்த்துடுவேன். மற்றப் பயறுகள் முளைக்கட்டியது மிஞ்சினாலும் அடை அல்லது சாதமாகச் செய்துடுவேன். இப்போக் கூடக் கொண்டைக்கடலை இப்படித் தான் மிஞ்சி இருக்கு. வடை அல்லது அடையாகச் செய்யணும். :)))
பதிலளிநீக்குஎனக்கு அடையோடு எலுமிச்சம்பழ ரசம் ஊற்றிச் சாப்பிடத் தான் ரொம்பப் பிடிக்கும். போனவாரம் அடை பண்ணினப்போ அதான்! காலம்பரே ஏற்பாடாக வைச்சுடுவேன். அடையில் நெய் ஊற்றிக் கொண்டு எலுமிச்சம்பழ ரசத்தை ஊற்றிக் கொண்டு (ரசம் ரசமாக இருக்கணும். திக்காக இருக்கக் கூடாது) சாப்பிட்டால் சொர்க்கம் தான்! :))))) இஃகி, இஃகி, எனக்கு!
பதிலளிநீக்குகீசா மேடம்... இது என்ன காம்பினேஷன்? எனக்கு மனசுல, அடை கார்டு-போர்ட் அட்டை மாதிரி அடை வார்த்தால்தான், வந்தால்தான் வாயில் மென்று சாப்பிட ரசத்தில் அதைனை ஊறவைக்கணும். (ஒருவேளை அதனால்தானோ? என்னைவிட்டால் யார் உங்கள்ட தைரியமா வம்பு வளர்க்கிறார்கள்?)
நீக்கு//என்னைவிட்டால் யார் உங்கள்ட தைரியமா வம்பு வளர்க்கிறார்கள்?)//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெ.தமிழன்:) நீங்க வமபை வளர்ப்பீங்க மீ கீசாக்காவையே பிடிச்சு இழுப்பேனாக்கும் ஹாஅ ஹா ஹா:)).. இஸ்கி இஸ்கி[இப்படி சிரிச்சுக் காட்டினால்தான், நான் சிரிக்கிறேன் என கீசாக்காவுக்குத் தெரியும்:)]
நெ.த. முறு முறு அடையில் சூடாய் இருக்கும்போதே நெய்யை விட்டுக் கொண்டு ரசத்தையும் விட்டுக் கொண்டு முறுகலான ஓரங்களையும், நடுப் பகுதியையும் ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க!:))) எங்க வீட்டில் எல்லோருமே ( என் பிறந்த வீட்டில்) மோர் சாதத்துக்குக் கூட ரசம் விட்டுப்போம். என் அண்ணா, தம்பி குழந்தைகள், எங்க வீட்டில் எங்க பையர் ஆகியோருக்கும் இந்தப் பழக்கம் வந்திருக்கு! ஹிஹிஹி, பரம்பரை! :))))
நீக்கு//என்னைவிட்டால் யார் உங்கள்ட தைரியமா வம்பு வளர்க்கிறார்கள்?)// இதெல்லாம் ஜுஜுபி என்னும் அளவுக்கு அம்பி, என்னோட கொபசெவான வேதா என்னும் வேதா(ள்), தக்குடு, வருத்தப்படாத வாலிபர் சங்கக்குழு நண்பர்கள், திராச, தி.வா(திருமூர்த்தி வாசுதேவன்) இவங்க எல்லாம் ஒரு கூட்டாகச் சேர்ந்து கொண்டு என்னை வம்பிழுப்பதே அவங்க வேலையா வைச்சிருந்தாங்க! அதெல்லாம் கடந்து போய் ஏழு, எட்டு வருடங்கள் ஆகின்றன. தி.வா இணையத்தில் இருக்கார் எனினும் எப்போவானும் தான் பார்க்க முடியுது. திராசவும் ரொம்ப பிசி. எப்போவானும் பழைய நினைவில் வந்து வம்பு பண்ணிட்டுப்பதிலை எதிர்பார்க்காமல் போயிடுவார். அம்பியும் அப்படியே! அம்பியோட தம்பி தக்குடு குடும்ப வாழ்க்கையில் முழுதும் மூழ்கியாச்சு! மத்தவங்க இணையத்திலேயே காணோம்! :)))) ரேவதியைக் கேட்டுப் பாருங்க! :)))) ஆகையால் இந்தப்பனங்காட்டு நரி(சிங்கம், புலி, கரடி) ஜலஜலப்புக்கு எல்லாம் அஞ்சாது. வேதாவை எப்போவானும் முகநூலில் பார்க்கிறேன். கீறல் மட்டுமா, இல்லைனா விரிசலா? இடைவெளியா எனத் தெரியாத அளவுக்குத் தொடர்பு இல்லாமல் இருக்கோம். :)))) இதுவும் கடந்து கொண்டிருக்கிறது.
நீக்கு@அதிரடி, அது இஸ்கி, இஸ்கி இல்லை! இஃகி, இஃகி. இம்பொசிஷன் எழுதுங்க! இந்த அழகில் தமிழில் "டி" யாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குநான் தோசை, மோர் சாதத்துக்கு எல்லாம் ரசம் தொட்டுக் கொள்வதுண்டு. அடைக்குத் தொட்டுக்க கொண்டதில்லை. ஆனால் ஒன்று.. மொறுமொறு என்று அடை செய்து அதில் ரசம் ஊற்றுவது பாவம். நடுப்பகுதியில் வேண்டுமானால் ரசம் ஊற்றி மொறுமொருவிப் பிய்த்து அதில் தோய்த்துச் சாப்பிடலாம்!
நீக்குஶ்ரீராம்... ரசத்துன் மண்டி அல்லது சாம்பாரை, சப்பாத்தி மேல் ஒரு கரண்டி, அதன்மேல் ஒரு சப்பாத்தி, அதன்மேல் ஒரு கரண்டி என நாலைந்து சப்பாத்திகள் சாப்பிடப் பிடிக்கும். தோசை, அடைல்லாம் ரசமா? கர்ர்ர்ர்ர்...
நீக்குஇருந்தாலும் கீசா மேடம் சொல்வதால் முயற்சிக்கிறேன். இப்போ என் சப்போர்டுக்கு கீதா ரங்கன்(க்கா... நேர்ல பாத,தா என் பக்கத்துல அவங்க லில்லிபுட்டினாக இருக்கலாம். ஹாஹா) வேற இங்க காணலை...
கீசா மேடம் எழுதியிருப்பதன் அர்த்தம், அவங்கள்ட வம்பு வளர்க்கிறவங்க காலப்போக்குல காணாமல் போயிடறாங்க என்பதா?
நீக்கு//ரசத்துன் மண்டி அல்லது சாம்பாரை, //
நீக்குஎனக்கு நாக்கு நாலு முழம் நெல்லை. சப்பாத்திக்கு சாம்பார் எல்லாம் தொட்டுக்கொள்ள மாட்டேன். குருமா அல்லது தால்தான். பெரும்பாலும் குருமா. இப்ப சமீப காலமா தக்காளி தொக்கு கூட தொட்டுக்கறேன். கா.கோ. இதற்கும் நெய் சர்க்கரை உண்டு! அது கடைசி இரண்டு சப்பாத்திக்கு. அல்லது கடைசி இரண்டு சப்பாத்திக்கு (அல்லது பூரிக்கு) பால் சர்க்கரை!
அதே போல கடைசி இரண்டு இட்லி தோசைக்கு தயிர் சேர்த்து சாப்பிடும் வழக்கம் சமீப காலமாய்...
ரசமண்டி எல்லாம் போட்டுக்க மாட்டேன். சாதத்துக்கு சரி, தோசைக்கும் சரி தெளிவாகத்தான் ரசம்.
சப்பாத்திக்கு ரசம், சாம்பாரா? ஹையோ, ஹையோ! எங்க வீட்டில் சாம்பாரும் கெட்டியா இருக்காது. அபூர்வமா இருக்கும்போது நம்ம ரங்க்ஸ் இது என்ன கூட்டு என்பார்! :) ரசத்திலும் அடி மண்டி எல்லாம் வராது. ரசமே ஒத்தாற்போல் மேலிருந்து கீழ் வரை கலக்கினால் ஒரே மாதிரி இருக்கும். புளியும் ஜாஸ்தி சேர்க்கக் கூடாது ரசத்துக்கு. பருப்பும் கரைத்துத் தான் விடணும். பருப்பை சாம்பாருக்குச் சேர்க்கிறாப்போல் சேர்க்கக் கூடாது. :)
நீக்குமிக நல்ல சத்தான ரெசிபி. கோதுமை ரவை இருக்கே. படங்கள் தான் கொஞ்சம் மாறி விட்டதோ. பராவாயில்லை. எண்ட் ப்ராடக்ட் நல்லா இருந்தால் அது போதும்.
பதிலளிநீக்குசூடா அடை எடுத்துக் கொண்டுவிட்டேன். ம்ம்ம்ம். நல்லா இருக்கு.
கருவேப்பிலை அரைக்கும் யோசனை எங்களுக்கெல்லாம் தோன்றாமல் போச்சே.
அடைவார்க்கும் போது கொத்த மல்லியும் முருங்கை இலையும்
போட்டால் இன்னும் வாசனை. வாழ்த்துகள் அன்பு ஆதி.
ஆஹா! என்னுடைய ரெசிபி..வாய்ப்பு தந்த எங்கள் ப்ளாகுக்கு நன்றி..
பதிலளிநீக்குஇப்படி சொல்லிவிட்டு சும்மா இருந்து விடாமல் அடிக்கடி அனுப்பினால் நலம்!!!!
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குபடங்கள் எடுத்தது நான் இல்லை!
வாய்ப்பளித்த எங்கள் பிளாக் குழுவினருக்கு என் சார்பிலும் நன்றி!
சுவைக்கத் தூண்டுகிறது
பதிலளிநீக்குநன்றி
அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅடை நன்றாக இருக்கிறது. செய்முறை குறிப்பு, படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபளிச் பளிச் படங்கள்..
பதிலளிநீக்குஅருமையான குறிப்பு..
படங்களோடு சொன்னவிதம் அழகு சகோ.
பதிலளிநீக்குஅடை ஒன்று சாப்பிட்டாலே வயிறும் 'அடை'த்து விடும்...
பதிலளிநீக்கு"அட"
நீக்குஅடை மிக அருமையாக வந்திருக்குது. பொதுவா அடை என்பது கொஞ்சம் மொத்தமாக எல்லோ இருக்கும், இது தோசைபோல வார்த்திருக்கிறீங்க.. பார்க்க நல்லா இருக்கு.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் போட்ட அடைக்குறிப்பே இன்னும் நான் செய்யவில்லை:)
அதிரடி, அடை மெல்லிசா இருந்தால் தான் 2 அடையாவது சாப்பிட முடியும். எங்க அம்மா வீட்டில் அடை தோசை என்றே சொல்வார்கள். அப்படி மெலிசாக இருக்கும்/ இங்கே தான் கனமாக இருக்கணும். இப்போல்லாம் மாத்தியாச்சு! :)))))
நீக்குஅடை கொஞ்சம் கனமாகத்தான் இருக்கவேண்டும் என்பது என் பணிவான சொந்த ருசி அபிப்ராயம்! ஆனால் கருகக்கூடாது.
நீக்குநடுவில் பொன்னிறமாக,
ஓரங்களில் லேசான மொறுமொறுப்புடன்
எடுத்துத் தட்டில் போட்டபின்னும் எண்ணெய் பொன் முத்துகளாய் மின்னிக்கொண்டிருக்கவேண்டும்!
:)
நீக்குஹையோ ஸ்ரீராம் ஹைஃபைவ்!!! எனக்கும் அந்த ருசி பிடிக்கும் ஆனால் இப்பல்லாம் மெலிதாகத்தான்..மாறித்தானே ஆகனூம் மாற்றம் ஒன்றே மாறாதது!! ஹா ஹா ஹா....ஆனால் அதுவும் பொன்னிறமாக மொறு மொறுவென்று வார்ப்பதுண்டு. நான் சில சமயங்களில் சிவப்பரிசியும் பயன்படுத்துவேன் சிவப்பரிசி புழுங்கல். அதுவும் நன்றாக வரும். டேஸ்டும் செமையா இருக்கும்.
நீக்குநான் பார்த்த வரையில் அடை என்பது ஒவ்வொருவரது வீட்டிலும் ஒவ்வொரு ப்ரொப்போர்ஷன். நான் எல்லோரிடமும் தெரிந்து கொண்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாய்....
கீதா
ஶ்ரீராம்... நான் இந்த விஷயத்தில் கீசா மேடம் கட்சி. எங்க அம்மா முறுகலா மெலிசா அடை வார்த்துப் போடுவாள். கேட்டால் சிவப்பரிசி உபயோகப்படுத்துகிறேன் என்பார்.. இதோ இப்போவே எங்கம்மாட்ட ரெசிப்மி கேட்கிறேன்..
பதிலளிநீக்குஅந்த மாதிரி அடை நான் சாப்பிட்டதே இல்லை. அடைக்கு மினகாய்ப்பொடி எண்ணெய்தான்.
நானும் இப்பல்லாம் மெலிசாதான் அடை சாப்பிடுகிறேன் நெல்லை. என் பாஸ் பெரும்பாலும் அப்படிதான் செய்கிறார். நான் அதை அவரை வெறுப்பேற்ற பெசரட்டு தோசை என்பேன்!
நீக்குநெல்லை நானும் சிவப்பரிசி பயன்படுத்துவதுண்டு....டேஸ்ட் நல்லாருக்கும்...
நீக்குகீதா
//..நடுவில் பொன்னிறமாக, ஓரங்களில் லேசான மொறுமொறுப்புடன்
பதிலளிநீக்குஎடுத்துத் தட்டில் போட்டபின்னும் எண்ணெய் பொன் முத்துகளாய் மின்னிக்கொண்டிருக்கவேண்டும்!//
மெத்தச்சரி! எங்கள் வீட்டில் அடிக்கடி அடை..விதவிதமான அடை. நேற்றும் கொத்தமல்லிசேர்த்தரைத்த அடை. மொறுமொறு அடைக்கு விறுவிறு மிளகாய்ப்பொடி-நல்லெண்ணெய் சேர்த்து உள்ளே தள்ளுவது பிடிக்கும். சில சமயங்களில் வெல்லச்சர்க்கரையும்..
அடை ஒரு South-Indian delicacy. வட இந்தியர்களுக்கு இதன் அருமை தெரியாது. அவர்கள் இன்னும் தோஸாயணம் படித்து முடித்தபாடில்லை!
ஏகாந்தன் ஸார்...
நீக்குஅடைக்கு தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி ஓகே.
நான் வெல்லமும் நெய்யும் சேர்த்து தொட்டுக்க கொள்வதுண்டு. அதாவது தனித்தனியாய்ப் போட்டுக்கொண்டு தனியாய் ஒரு தரமும், இதிலும் அதிலும் சேர்த்து ஒரு தரமும் தொட்டு...!!!
என் அம்மா நினைவு வருகிறது.
ஸ்ரீராம் ஹைஃபைவ் மீண்டும். வெல்லம் நெய் தனித் தனியே அப்புறம் சேர்த்து ஆஹா ஆஹா செமையா இருக்கும்....
நீக்குநீங்க வெண்ணை வெல்லம் டேஸ்ட் பார்த்திருக்கீங்களா ஸ்ரீராம்? அதுவும் செமையா இருக்கும்....என் மகனுக்கும் வெண்ணை அல்லது நெய் வெல்லம்...பிடித்த கோம்போ...இது எதுவும் இல்லை என்றால் மிளகாய்ப்பொடி...இதற்கு அப்புறம் தான் வெங்காயச் சட்னி எல்லாம்...
கீதா
ஏகாந்தன் அண்ணா //வட இந்தியர்களுக்கு இதன் அருமை தெரியாது. அவர்கள் இன்னும் தோஸாயணம் படித்து முடித்தபாடில்லை!// இதை வாசித்துச் சிரித்துவிட்டேன்...ஆமாம் அவங்களுக்கு இட்லி தோசை நம்ம ஊர் வடை எல்லாம் இன்னும் பிடிபடவில்லை. ஆனால் நாம அவங்க ஊர் பதார்த்தங்களையும் செய்துவிடுகிறோம். அதே போல நாம ஹிந்தி கற்றுக் கொண்டுவிடுவோம்..ஆனா அவங்களுக்குத் தமிழ் கஷ்டம் அப்படிம்பாங்க..எங்களுக்குத் தமிழ் கஷ்டம் நீங்க ஹிந்தில பேசுங்கனு...ஹிந்தி ரொம்பவே ஈசி அப்படிம்பாங்க...
நீக்குகீதா
@ கீதா: //அவங்களுக்கு இட்லி தோசை நம்ம ஊர் வடை எல்லாம் இன்னும் பிடிபடவில்லை. //
நீக்குசெய்யத்தெரியாது. ஆனால் மொக்கத் தெரியும்! அதுவும் அவர்கள் (டெல்லியில்) சாம்பார் குடிக்கும் அழகு இருக்கிறதே.. அதுவே ஒரு பொன்னோவியம்! ஒரு தோசையை வாங்கிவைத்துக்கொண்டு, மேலும் மேலும் சாம்பார் கேட்டதில், டெல்லி மதராஸ் ஹோட்டல்காரர்கள் (80-கள்) ஒருசமயம் கடுப்பாகி, எக்ஸ்ட்ரா கப் ரூ.2 என்று போட்டார்கள். அடங்கிவிட்டார்கள்.. லாஸ்ட் ட்ராப்பை ஆசையோடு உறிஞ்சிக்கொண்டே!
எனக்குத் தெரிந்து புது தில்லி ரயில் நிலையத்துக்கு எதிரே ஓர் தெருவில் முழுக்க முழுக்க ஓட்டல்கள் & தங்குமிடம் நிறைந்த தெரு! அங்கே சில ஓட்டல்களில் பஞ்சாபியர் இட்லி, தோசை செய்வதைக் கண்டிருக்கிறேன். வேறு சில வட இந்தியர்கள், தென்னிந்திய சமையலில் ஈடுபாட்டுடன் செய்வார்கள். ஆனால் என்ன சமைத்தாலும் சாம்பார் ருசியில் இவங்க வேறே என்பதைக் காட்டிடுவாங்க! இட்லியை வார்த்து ஒரு எவர்சில்வர் ட்ரம் நிறையக் குவித்து வைப்பார்கள். ஆர்டர் கொடுத்ததும் தேவையான இட்லியை மைக்ரோவேவில் வைத்துச் சூடு செய்து கொடுக்கிறாங்க. தெருப் பெயர் மறந்துவிட்டது. எல்லாம் குறிச்சு வைச்சிருக்கோம். தேடணும் குவியல்கள் இடையே
நீக்குபாஹட்d Gகஞ்ச் பகுதி தான் நீங்கள் சொல்வது. இப்போதும் அங்கே ஹோட்டல்களும் தங்குமிடங்களும் உண்டு. மஹா ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த பகுதி!
நீக்குபக்கெட் பக்கெட்டாக சாம்பார் குடிப்பது இவர்கள் வழக்கம்.
மெல்லிய கோதுமை ரவை. அதனாலே பரவாயில்லை. ரவை பெரிசா இருந்தா கூட சேத்து ஒரு சுற்று சுற்றி விடலாம். நான் இந்த தலியாதான் கஞ்சிக்கு உபயோகப் படுத்தறேன்.ட்ரேட் மார்க்வேறெ. அடை நன்றாக இருக்கு மெல்லியான அடைகள்தான் படங்களும் அழகு. அன்புடன்
பதிலளிநீக்குநானும் பருப்பு அரைக்கையில் கோதுமை ரவையைப் பத்து நிமிஷமாவது ஊறவைத்துக் கடைசியில் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றுவேன். இங்கேயும் பெரிய கோதுமை ரவைதான். வெள்ளை ரவைதான் பொடியாக இருக்கு!
நீக்குநாளைக்கு காலை இதான் டிஃபன். சரியா வரலியோ எல்லாரும் ஆதி அண்ணி வீட்டுக்கு டிஃபனுக்கு போய்டுவோம்.
பதிலளிநீக்குஆதி கோதுமை ரவை, கோதுமை இதையும் வைத்து செய்வதுண்டு. உங்க ப்ரொப்போர்ஷனையும் பார்த்துக் கொண்டேன் ஆதி. நான் து ப தூக்கலாக க ப குறைவாகப் போடுவேன். அது போல பாசிப்பருப்பு போட்டால் கொஞ்சத்தை அரைத்து விட்டு ஊறிய மீதிப் பருப்பை அப்படியே சேர்த்துவிடுவேன் கொஞ்சம் க்ரிஸ்பாக இருக்குமே என்று..ரொம்பநல்லா வந்துருக்கு ஆதி. சூப்பர்
பதிலளிநீக்குஅது சரி அடையை திருப்பி போட்ட ஃபோட்டோ போடலியே!!! ஹா ஹா ஹா ஹா
கீதா
சுவையான ரெசிபி வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅடை பலருக்கும் விருப்பமான சிற்றுண்டி. கோதுமை ரவை அடை புதுமையான முயற்சி.
பதிலளிநீக்குஅடை பலருக்கும் விருப்பமான சிற்றுண்டி. கோதுமை ரவை அடை புதுமையான முயற்சி.
பதிலளிநீக்கு