புதன், 3 அக்டோபர், 2018

புதன் 181003 யூகி சேதுவா நீங்க?



சென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள். 


இந்த வாரம் மறக்காமல் கேள்விக்கணைகள் தொடுத்திடுங்கள்!

சென்ற வாரக் கேள்விக்கு, பதில்கள் எழுதியிருந்த,
கீதா சாம்பசிவம்,
திண்டுக்கல் தனபாலன்,
நெல்லைத்தமிழன்,
அதிரா
கீதா ரெங்கன்

ஆகியோருக்குப் பாராட்டுகள்.

'அனுஷ்கா தமன்னா பாவனா'வை (அ த பா ) மறக்க வைத்து, 'அதிரா தமிழ்ப் பாடம்' என்று நினைக்க வைத்த அதிராவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!

கேள்வி 180919 பதிலுக்குப் பரிசு என்று அறிவித்தபின், பரிசுக்கான பதில்களைத் தேர்ந்தெடுத்தபின், என்ன பரிசு, எப்படிக் கொடுக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

25/09/18 அன்று நிஃப்டி மார்க்கெட் பார்த்தால், இந்தியா புல் ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. உடனே அஞ்சு பங்குகள் வாங்கி, அன்றே விலை ஏறியவுடன் விற்றேன். செலவுகள் போக நூற்று ஐம்பது ரூபாய்கள் லாபம் கிடைத்தது. அந்தப் பணத்தை பரிசுத் தொகையாக அளித்துவிட்டேன்.

இந்த வாரம் இதுவரை  லாபம் எதுவும் வரவில்லை. நஷ்டக் கணக்குதான்!எனவே, பரிசு எதுவும் கிடையாது! மேலும், சென்ற வாரக் கேள்விக்கு, பதில் அளிப்பவர்களுக்கு பரிசு எதுவும் அறிவிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்!
 
சென்ற வார எங்கள் கேள்வி, ஏறத்தாழ, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.

என்னுடன் வேலை பார்த்த, இளவயது உதவிப் பொறியாளர்,  இந்த சிக்கலில் மாட்டியிருந்தார். பண உதவி செய்தவர் அவருடைய தாய் மாமா. சொந்த ஊரில் உள்ள நண்பரின் தந்தை (விவசாயம்), அதே ஊரில் வசிக்கும், தாய் மாமாவிடம் பேசி, பிளாட் வாங்கப் பணம் வாங்கிக் கொடுத்தார். "பணத்தைத் திருப்பிக்கொடுக்காவிட்டலும் பரவாயில்லேடா, அதற்கு பதிலாக அவருடைய பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டுவிடு" என்று அவர் தந்தை கூறியவுடன் நண்பர் அதிர்ந்துபோனார்! மேலும், "பணத்தை நான் பேசி வாங்கிக் கொடுத்திருக்கேன், அதனால, பணத்தை, என் மூலமாகவே திருப்பிக்கொடு" என்ற அறிவுரை வேறு!. அப்பா பணத்தை வாங்கி, அதைத் திருப்பித் தராமல், தன்னை மாட்டிவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. அப்பாவை ஓவர்லுக் செய்து, பணத்தை தாய் மாமாவிடம் நேரே அனுப்பினால், அப்பா மனம் வருத்தப்படும் என்கிற நிலை.

இந்த நண்பன் கொத்தவரங்காய் வற்றல் போன்று இருப்பார். மாமா பெண்ணுக்கு பிந்துகோஷ் உடம்பு, கோபுரங்கள் சாய்வதில்லை சுகாசினி ஹேர் ஸ்டைல். பறவை முனியம்மா முகம். நண்பர் மிரண்டுபோனதற்கு இவைதாம் காரணம்!

அவருடைய பிரச்னைக்கு, நான் சொன்ன ஒரே தீர்வு, " பணத்தை crossed cheque மூலமாக, மாமா பெயர் எழுதி, உங்க அப்பா விலாசத்திற்கு அனுப்பிவிடுங்க"  அவர் அவ்வாறே செய்து பிரச்சனையிலிருந்து மீண்டார் !


ஏகாந்தன் :

கடன் கதைகள் ஒவ்வொன்றாக உடன் வெளிவரும்படி கேள்வி கேட்டு வைத்திருக்கிறீர்களே.. உங்களை என்ன செய்வது?


ஒன்றும் செய்யாதீர்கள்! கதைகள் எல்லாம் படித்து இரசிப்பதற்கே! 
இந்த வாரக் கேள்வியைப் பாருங்க. துப்பறியும் சிங்கக்களுக்கானக் கேள்வி. நம் வாசகர்களில் எவ்வளவு பேர் துப்பறியும் சிங்கங்கள் என்று பார்ப்போம்! 

வாட்ஸ் அப் கேள்விகள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் :

என்னடா பொல்லாத வாழ்க்கை? என்று எப்போதாவது அலுப்பு தோன்றியதுண்டா? அப்படி தோன்றும் பொழுது எப்படி மாற்றிக் கொள்வீர்கள்?

என்னடா வாழ்க்கை என்று எல்லாருக்குமே ஒரு சமயம் தோன்றும் . இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கையில் நம் எதிர்பார்ப்புக்கும் வாழ்க்கையில் நடப்புக்கும் இடையிலான  வேறுபாடுதான் .  சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு யோசித்துப் பார்த்தால் நம் மன நிலைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் என்பது விளங்கும். இந்த பொறுமை கைவரப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

Never complain in life என்பது என்னுடைய பாலிசி. எனவே, என்னடா வாழ்க்கை என்று நினைத்தது இல்லை. 

மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறீர்களா?  மாட்டு வண்டி, குதிரை வண்டி, கை ரிக் ஷா இவைகளில் பயணித்திருக்கிறீர்களா?

மாட்டு வண்டி மட்டுமில்லை  இரட்டை மாட்டு எரு மொட்டை வண்டி கூட ஓட்டியிருக்கிறேன் வண்டிக்காரரிடம் அனுமதி பெற்று குதிரை வண்டி கூட ஒரு சமயம் ஓட்டி பார்த்திருக்கிறேன் ஒரு 20 அடி. பயணிப்பதைப் பொறுத்தவரை எல்லா வண்டிகளிலும் படயணித்திருக்கிறேன். 

மாட்டு வண்டி ஓட்டியது இல்லை. மாட்டு வண்டி : கல்யாணமகாதேவி என்ற ஊரிலிருந்து திருவாரூர் ஸ்டேஷன் வரை இளவயதில் பயணித்தது உண்டு. குதிரை வண்டி சவாரி நாகைப்பட்டினத்தில். 
கை ரிக்ஷா பயணம் : சென்னையில் எக்மோரிலிருந்து புரசைவாக்கம் வரையிலும் 1971 ஆம் வருடம் பயணித்த ஞாபகம். 
              
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அன்னா ஹஸாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் இப்படி ஏதாவது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறீர்களா?

போராட்டங்களில் கலந்து கொண்டதில்லை.  இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பல கொடுமைகளை நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியாக நடந்தது . ஆனால் சாதித்தது என்ன ?  பல பேருக்கு படுகாயம் சில பேருக்கு மரணம். இந்தப் போராட்டம் தான் எதற்கு என்ற சலிப்பு தோன்றாமல் இருக்கிறதா ?

சிலை கடத்தலை ஆய்வு செய்பவர் நேர்மைக்குப் பெயர் பெற்ற ஐ ஏ எஸ் / ஐ பி எஸ் படும் பாட்டைப் பார்க்கும் போதும் வேதனைதானே !

நான் ஜூனியர் பாலிடெக்னிக் (ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல்) படித்த சமயம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில், (1965 - 66)  சீனியர் பாலிடெக்னிக் மாணவர்களுடன் சேர்ந்து,  ஒருநாள் வீதி ஊர்வலம் சென்றோம். நாலைந்து நாட்கள் பள்ளிக்கூட லீவு கிடைத்தது. 

பொறுமை, சகிப்புத்தன்மை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
பொறுமை இருப்பதால் எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறார்களா? அல்லது சகிப்புத்தன்மையால் பொறுமையாக இருக்கிறார்களா?

பொறுமை என்பது ஒரு நிகழ்வுக்காக காத்திருத்தல். 


சகிப்புத்தன்மை என்பது நிகழ்வுகளோ மற்றவருடைய பழக்க வழக்கங்களோ நமக்குப் பிடிக்காதாயினும் கடந்து போகும் வரை பொறுத்துக் கொள்ளுதல்.

======================

எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் எழுதிய உப்புமாக் கவிதை. சுவையுங்கள். 

உப்பு மாவுமட்டு முப்புமா வாகிடுமோ

தப்பு தான்செய்வீரோ தகையீர் - உப்பிட்ட

மிளகாய் பெருங்காயம் மணக்கத் தாளிக்க

அழகாய் இருக்கு மது.


 

==============================================


இப்போ, இந்த வாரக் கேள்வி. 

கீழ் வரும் உரையாடல், A , B என்ற இருவருக்கு இடையே நிகழ்ந்தது.
இந்த உரையாடலை வைத்து, A & B பற்றி உங்கள் ஊகங்களை/ கண்டுபிடிப்புகளை  நீங்கள் எழுதவேண்டும். 

அதிகபட்ச எண்ணிக்கையில், ஏற்றுக் கொள்ளும் வகையில் பாயிண்டுகளை பதிவோருக்கு பரிசு கிடைக்கலாம். (அடுத்த வாரம் கொஞ்சம் லாபம் கிடைக்கும் போலிருக்கு!) 

A : " இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்." 


B : " சரி. அப்படியே செய்கிறேன்." 

=================================================


139 கருத்துகள்:

  1. அருமை Kgg, ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  2. எப்போ வரும்!..
    எப்டி வரும்?..

    ஓ..

    இன்னைக்கு புதன் கிழமையா!...

    ஆனாலும் -
    அருமை.. அருமை..

    அப்புறமா வாரேன்!...

    பதிலளிநீக்கு
  3. அழகாய் இருக்கு மது!..
    அழகாய் இருக்கும் அது!..

    மது!.. நீ ரொம்ப அழகா இருக்கே!..
    மது!.. நீ ரொம்பத் தான் அழகா இருக்கே!..

    மது அழகா இருக்கா!..

    மது அழகா இருக்கா?..

    பதிலளிநீக்கு
  4. வயசான காலத்துல
    இதுக்கு வேற ஆராய்ச்சி!..

    வேலை கெடக்கா இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... மது யார்? (மா - துணைக்காலை மட்டும் அடைப்புக்குறிக்குள் கொண்டுவர விருப்பம். டைப்புவதில் முடியாது.)

      நீக்கு
    2. அதானே!..

      யார் மது!..

      யாரோட மது?..

      இஃகி... இஃகி.. இஃகீய்!....

      நீக்கு
    3. //இஃகி... இஃகி.. இஃகீய்!.... //

      இஃகீய்!... அந்த ஃபைனல் டச் பிரமாதம்!

      நீக்கு
    4. ஃபைனல் டச் ஆஆஆஆஆஆஆ ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    5. ஹா அஹ ஹா ஹா ஹா கீதாக்கா உங்க வார்த்தைகளை பேட்டன்ட் பண்ணிட்டீங்களா? இங்க பாருங்க துரை அண்ணா ஸ்ரீராம் எல்லாரும் யூஸ் பண்ணிருக்காங்க....விடாதீங்க ராயல்டி கேட்டிருங்க...
      ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  5. /// மா- துணைக் காலை மட்டும்..///

    இதுக்கெல்லாம்
    வலைச்சித்தர் வரம் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. செக் மூலம் கொடுத்தது சிறப்பு.

    மது மாது :) துணைக்கால் போட வழி உண்டா பார்க்க வேண்டும்....

    உப்புமா கவிதை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்... வெண்பா உப்புமாவைப் பற்றியது. அதைச் செய்துகொடுப்பவரைப் பற்றியதல்ல. தீபாவளி ஶ்ரீரங்கப் பயணத்தில் மனது இருக்கா?

      நீக்கு
  7. செக் பரிமாற்றம் நல்ல யோசனை.
    விடயங்கள் ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
  8. கவிதைல (வெண்பா) தவறு இருக்கிறதா என்று பார்த்தேன். பொருட்குற்றம். உப்புமா முன்னப் பின்ன செய்திருக்கிறாரா இல்லை ருசியாகச் செய்ததில்லையா?

    அழகா யிருக்கு மது. என்ற ஈற்றடிக்குப் பதில் சுவையா யிருக்கு மது

    என்று எழுதாத்தனால் வந்த சந்தேகம். கேஜிஒய் சார்...

    பதிலளிநீக்கு
  9. சென்ற வார கேள்விக்கு நீங்கள் சொல்லியிருக்கும் தீர்வைத்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்து பதிய மறந்து விட்டேன். ஏனென்றால் நான் எல்லா பண பரிமாற்றங்களையும் காசோலை மூலம் செய்வதுதான் பழக்கம். என் கணவர் வலியுறுத்தும் விஷயம் இது.

    பதிலளிநீக்கு
  10. உப்புமா கவிதை சிறப்பு!. கடைசி வரி அழகாய் இருக்குமது என்பதற்கு பதிலாக சுவையாய் இருக்குமது என்றால் இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும் இல்லையா ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கேள்வியை அந்தக் கவிதையை எழுதிய ஆசிரியருக்கு ஃபார்வேர்ட் செய்கிறேன்!

      நீக்கு
    2. பானுக்கா ஹைஃபைவ்! எனக்கு'மது' தோன்றியது!!!!! ஸ்ரீராம் ஃபார்வேர்ட் பண்ணும் போது என் பெயரையும் சேர்த்துக்கோங்க ஹிஹிஹி...காலைலியே மொபைல்ல பார்த்துட்டு அப்புறம் கருத்து போட முடியலை இப்பத்தான் வலைப்பக்கம் வந்தேன்...

      கீதா

      நீக்கு
  11. இந்த வார கேள்விக்கு விடை: 1. துணிகளை அயர்ன் செய்யக் கொடுப்பவர் சூட்டை கொஞ்சம் குறைக்கச் சொல்ல, அவர் சரி எங்கிறார்.
    2. வீட்டில் ஏதோ விசேஷம், பரிசாகர் செய்து கொடுத்த பட்சணத்தை சுவைத்தவர் தழலின் சூட்டை கொஞ்சம் குறைக்கச் சொல்ல, பரிசாகர் சரி எங்கிறார்.
    3. உடல் மசாஜ் செய்து கொள்ளச் சென்றவர், உடலில் தேய்க்க வேண்டிய எண்ணெய்யின் சூட்டை குறைக்கச் சொல்ல மசாஜ் செய்பவர் சரி எங்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி அக்கா, நீங்கள் தவறாகப் புரிஞ்சிட்டீங்க.. கீழே நெ.தமிழன் சொன்னதுதான் சரி என நினைக்கிறேன்.. அதாவது.. அந்த இருவரின் மனநிலைகளைப் பற்றிக் கேட்டிருக்கிறார்ர்...

      நீக்கு
  12. A : " இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்."

    B : " சரி. அப்படியே செய்கிறேன்."

    இதில் நீங்கள் கேட்டிருப்பது, இருவரைப் பற்றிய ஊகம், கண்டுபிடிப்பு. இந்த உரையாடலை நிறைய இடங்களில் பொருத்திப் பார்க்கலாம்.

    இதில், A என்பவர் சொல்லும் இடத்திலும், அதிகாரம் பொருந்தியவராகவும், Bக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரம் மிக்கவராகவும் தெரிகிறார். B சொல்வதைச் செய்பவராகவும், Aஐ எதிர்ப்பார்ப்பவராகவும் (பணத்துக்கோ மற்றவற்றிர்க்கோ) தெரிகிறார்.

    1. அரசியல் தலைவர், பேச்சாளர். உதாரணமா ஜி.எஸ்.டி ஐ எதிர்த்து பேசச்சொல்லியிருக்கிறார் கூட்டத்தில். பேச்சாளர் கொஞ்சம் அதிகமாகவே வார்த்தைகளை விட்டுவிடுகிறார். கூட்டம் முடிந்தபிறகு, கொஞ்சம் சூட்டைக் குறைக்கச் சொல்ல, பேச்சாளரும் சரி என்கிறார்.

    2. வம்பு வளர்க்க.... ஸ்டாலின் (A), சும்மா சும்மா ஈழத்தைப் பற்றிப் பேசவேண்டாம். ரொம்பவும் பிரதமரை எதிர்ப்பதாக பாவ்லா காட்டவேண்டாம். கொஞ்சம் சூட்டைக் குறைத்துக்கொள் என்கிறார். வைகோவும் (B), சரி.. இனிமே அப்படியே செய்கிறேன் என்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில ரெண்டு உதாரணங்கள் கொடுத்திருந்தாலும் பதில் ஒன்றுதானே[அதாவது மொரு மனநிலை பற்றி மட்டும்தான் சொல்லியிருக்கிறீங்க.. மீ கணக்கெடுப்பேன்ன்.. பரிசு எம்பாலாருக்கே:)).. ஹையோ நம்மில் இன்னும் ஆரும் சொல்லல்லியோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடி வாங்கோ பதில்களை அள்ளி அள்ளி வீசுங்கோ மீன் வலைபோல:))]

      நீக்கு
    2. அதிரா நம்பாலாரில் நான் பானுக்கா சொல்லிருக்கோமே..பாருங்கோ....அப்புறம் பூஸார் பாருங்க நோட் திஸ் பாயின்ட் எனக்கு மறந்து போகும்....நெல்லை அரசியல் பதில் சொல்லிருக்கார்...கௌ அண்ணனுக்கு அரசியல் கூடாதே!!! ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ

      கீதா

      நீக்கு
    3. ஓ அது வேறையோ கீதா? அப்போ நெ.தமிழனுக்கு மனஸ் வன்:) விழுந்திருக்கும்.. ஓகே அப்போ நாங்க அடசியலை:) டச்சூஉ பண்ணாமலேயே பதில் கொடுப்போம் டீல்ல்ல்ல்ல்?:)).. பரிசு நமக்கே:))

      நீக்கு
  13. //அவருடைய பிரச்னைக்கு, நான் சொன்ன ஒரே தீர்வு, " பணத்தை crossed cheque மூலமாக, மாமா பெயர் எழுதி, உங்க அப்பா விலாசத்திற்கு அனுப்பிவிடுங்க" அவர் அவ்வாறே செய்து பிரச்சனையிலிருந்து மீண்டார் !//

    மாமா பெண்ணை மணப்பதில் இருந்தும் நண்பர் தப்பி விட்டார் என்று நினைக்கிறேன். உங்கள்
    நல்ல தீர்வால் அப்பா, மாமாவிடமிருந்து தப்பிவிட்டார் உங்கள் நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோமதி அக்கா நீங்களுமோ?:) ஹா ஹா ஹா:)

      நீக்கு
    2. அதிரா, நான் உண்மையைதானே சொன்னேன். அந்த நண்பரின் எண்ணம் மாமா பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்பது அதில் இருந்து தப்பதானே யோசனை கேட்டு இருக்கிறார். அதை தான் சொன்னேன்.

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூஸாரே உங்களுக்கென்ன அந்த மாமன் மகள் மீது இப்படியொரு சப்போர்ட்டு...ஹா ஹா ஹா...பாவம் அந்த நண்பர்.!!!! பிடிக்காமல் மணம் செய்வது சரியாகுமோ!! நீங்க சும்மா கௌ அண்ணணை ஓட்டுறீங்கனு தெரியுது!!! கௌ அண்ணன் இதுக்கெல்லாம் பயப்படும்/ அசரும் ஆள் இல்லையாக்கும்...ஹா ஹா ஹா

      நான் கோமதிக்காவின் சைடுதான்...

      கீதா

      நீக்கு
    4. என்னுடன் ஒருவன் வேலைபார்த்தான். அவன், அவனுடைய அக்கா மகளைக் கட்டிக்கச் சொல்லி பெற்றோர் முதற்கொண்டு எல்லோரும் வற்புறுத்துகின்றனர் என்று சொல்வான். அவனே இன்னும் தனக்கு கல்யாணம் ஆகலைன்னும் சொல்வான். நான் சொன்னேன், இதுல ரிஸ்க் இல்லையே... நீ உன் அக்கா மகளையே திருமணம் செய்துகொள்ளவேண்டியதுதானே, உறவு விட்டுப் போகாது, பெற்றோரை முழு மனதுடன் கவனித்துக்கொள்வாள், எல்லாருக்கும் நல்லதுதானே என்று சொன்னேன். ஆனால் அவனோ, எனக்கு அந்த மாதிரி மனசு வரவே இல்லை, அவளை கல்யாணம் செஞ்சுக்கணும்னு தோணவே இல்லை என்று சொல்லிட்டான்....

      யார் யாருக்கு யார் கிட்ட மாட்டணும்னு இருக்கோ அங்கதானே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆகும்... ஹாஹாஹா

      நீக்கு
    5. ஹா ஹா ஹா மனம் போல மாங்கல்யம் அமைஞ்சால்தான் வாழ்க்கை சிறக்கும்.. ஆனா சிலர் எந்த ஐடியாவுமே இல்லாமல், மாமா மகள் கறுப்பு குண்டு எனச் சொல்லிக்கொண்டு அழகிய பெண்ணைத்தேடி ஓடி, அப்பெண்ணின் குணம் கூடாமல்.., கவிண்டு வாழ்க்கையைத் தொலைத்தோரும் உண்டு.. என்னைப்பொறுத்து நமக்கென ஏதும் ஐடியா இல்லை எனில்.. பொறுப்பை[பெரியோரிடம்] அப்பா அம்மாவிடம் ஒப்படைப்பது பெட்டர்:)..

      என்ன கீதா இப்பூடிச் சொல்லிட்டீங்க.. அங்க பாருங்கோ மேசை ஆடுவது தெரியுதோ?:) கெள அண்ணன் மேசைக்குக் கீழே:)). ஹா ஹா ஹா.

      நீக்கு
    6. ஹையோ கோமதி அக்கா சீரியஸ் ஆகிட்டா போல ஹா ஹா ஹா இல்ல கோமதி அக்கா அது ச்சும்மா கெள அண்ணனுக்காக கலாய்த்தேன்ன்:).

      நீக்கு
  14. உப்புமா கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. ஆஆஆஆஆஆஆ இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈ:) இம்முறை பெண்கள் கை ஓங்கியிருக்கிறது என்பதனால பரிசை நிறுத்திக் கொண்டார் கெள அண்ணன்ன்ன்ன் இது கொஞ்சம்கூட நல்லாவே இல்ல:).. நான் கீசாக்கா எல்லாம் எங்கட ஃபோன் நம்பர் மட்டுமில்ல எங்கட நண்பர்களிண்ட நம்பர்களையும் வாங்கி வச்சிருந்தோம் ரொப் அப் பண்ணி விடுவீங்களென:)).. சே..சே.. கவிட்டுப் போட்டீங்களே:) வரவர ஆரை நம்புறதெண்டே தெரியுதில்லை:)).. சரி விடுங்கோ இதுவும் கடந்து போகும்:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்களுக்கு கொஞ்சம் டாப் அப் பண்ணினாலும் சில மாசங்கள் வச்சுப்பாங்க. பெண்களுக்கு டாப் அப் பண்ணி யாருக்கானும் கட்டுப்படியாகுமா? கொஞ்சம் ரூட் போடறவங்க (கல்யாணத்துக்கு முன்னால் பல்லைக் காண்பிக்கவும் தூண்டில்ல மீனை சிக்க வைக்கவும்தான் பசங்க பெண்களுக்கு டாப் அப் பண்ணுவாங்க) திருமணம் வரைல ரொம்ப கேர் எடுத்துக்கற மாதிரி டாப் அப் பண்ணறது, கேட்டதை வாங்கிக்கொடுக்கறது, உலகத்திலேயே நல்ல பையன் தான் என்பதுபோல அந்தப் பெண் புரிஞ்சுக்கவிடாம நடிக்கறது என்றெல்லாம் பண்ணுவாங்க. திருமணம் ஆன மறுநாள், டாப் அப், புது மொபைல்னு பேசுங்க... அப்புறம் தெரியும்.

      அது இருக்கட்டும் சொல்ற விஷயத்துக்கு வர்ரேன். பெண்களுக்கு டாப் அப் பண்ணி அம்பானிக்கே கட்டுப்படியாகாது. அவங்க போன் பேச ஆரம்பிச்சாங்கன்னா, அதுவும் யாரோ ஒருவர் டாப் அப் பண்றாங்கன்னு தெரிஞ்சால் (ஏன்னா அவங்க கைக்காசை செலவழிக்க மாட்டாங்க)........

      நீக்கு
    2. நாங்க என்ன எங்கட வாழ்க்கை முழுக்கவா ரொப் அப்:) அதாவது டொப் அப்:) பண்ணச் சொன்னோம்ம்ம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒருக்கால்தானே:)).. அதுவும் பவுண்டில கேய்ட்டோம்ம் அது டப்பாஆஆஆ?:))..

      ////அது இருக்கட்டும் சொல்ற விஷயத்துக்கு வர்ரேன். பெண்களுக்கு டாப் அப் பண்ணி அம்பானிக்கே கட்டுப்படியாகாது. ///

      ஹையோ அம்மாணி எதுக்கு பெண்களின் ரொப் ஐ அப் பண்ணப்போறாரூஊஊஊஊஊஊஊஊ ஹையோ முருகா ஆபத் பாண்டவா திருத்தணிகை செந்தூரா:) என்னைக் காய்ப்பாத்துங்கோ:)) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  16. //'அனுஷ்கா தமன்னா பாவனா'வை (அ த பா ) மறக்க வைத்து, 'அதிரா தமிழ்ப் பாடம்' என்று நினைக்க வைத்த அதிராவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!
    //

    என்வலப்புஊஊஊ இல்லையோ கெள அண்ணன்?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்வலப்பூஊஊஊஊஊஊஊஊஊஉ வா? நம்ம பதிலுக்கே இல்லை! அப்புறம் இதுக்கு மட்டும் கிடைச்சுருமாக்கும்..சொக்கா எனக்கில்லை பரிசுனு புலம்ப வேண்டியதுதான் ஹா ஹா ஹா....பார்ப்போம் அடுத்த வாரம் ஏதோ லாபம் வருதாமே!...அதிரா அடுத்த புதன் மறந்துராதீங்க. கண்டிப்பா மேடைக்கு வந்து பரிசு பெற்றுக் கொண்டு செல்லவும்...இது நான் சொல்லலை கௌ அண்ணன் சொல்லுவார்! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. அதுதான் ஐடியாக் குடுத்திட்டேன் கீதா:) லாபம் இல்லை எனில் இருக்கவே இருக்கு ஸ்ரீராமின் புயு மொபைல். அடகு வச்சுக் கட்டிடுவார் கெள அண்ணன் ஏனெனில் அவருக்கு வாக்குத்தானாம் முக்கியம்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
  17. //சென்ற வாரப் பதிவில், எங்களைக் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்டார்கள். //

    உண்டகளை தொண்டர்களுக்கும் உண்டாக்கும்:))

    பதிலளிநீக்கு
  18. ///இந்த வாரம் இதுவரை லாபம் எதுவும் வரவில்லை. நஷ்டக் கணக்குதான்!எனவே, பரிசு எதுவும் கிடையாது! ///

    ஒரு குட்டி வருத்தம்கூடப் படாமல் சொல்கிறாரே கர்ர்ர்ர்ர்:)) பரிசு குடுக்க நினைச்சால்.. ஸ்ரீராமின் மொபைலை வாங்கி அடவு வச்சுக்கூடக் குடுத்திருக்கலாம்:).. இல்லையா கீசாக்கா:))[எதுக்கும் துணைக்கு கூப்பிட்டு வைப்போம்ம்:))] ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ பூஸார் நானும் அந்த லிஸ்டில் இருக்கேனாக்கும்...கீதாக்காவைக் காணவே இல்லையே இன்று...சே தானைத்தலைவி இருந்தா சண்டை போட்டு வாங்கியிருக்கலாம். தானைத் தலைவி வந்து குரல் கொடுக்கவே இல்லை...பாருங்க...

      கீதா

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஅ கீதாவும் இருக்கிறாவாக்கும் ஜொள்ளிட்டேன்ன் வரவர எம்பாலாரின் காண்ட்டூஊஉ ஒங்குதூஊஊஊஊ:).. ஹையோ இன்னும் மீ பதிலே ஜொள்ளல்லியே எதையவது புரியாத பசையில ஜொள்ளி வைப்போம்ம்:))

      நீக்கு
  19. //அவருடைய பிரச்னைக்கு, நான் சொன்ன ஒரே தீர்வு, " பணத்தை crossed cheque மூலமாக, மாமா பெயர் எழுதி, உங்க அப்பா விலாசத்திற்கு அனுப்பிவிடுங்க" அவர் அவ்வாறே செய்து பிரச்சனையிலிருந்து மீண்டார் !
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு சந்ததியை ஆலம்விழுதுபோல வளர விடாமல் தடுத்துப்போட்டுப் பெருமை பேசுறார் கெள அண்ணன்:))..இது தகுமோ அடுக்குமோ.. எவ்ளோ கஸ்டப்பட்டுக் கடன்பட வச்சு மகனை லொக் போட்டு அந்த மருமகளுக்குக் கட்டி வைக்கோணும் எனத் தந்தை பாடுபட்டிருக்கிறார்ர்:)) குறுக்கே பூந்து கெடுத்துப் போட்டீங்களே ஐடியாக் குடுத்து:)).. ஹையோ இண்டைக்கு மீக்கு சனி நாக்கிலபோல:)) மீ ரன்னிங்ங்ங்ங்ங்ங்:)).. நாளைய வியாள மாற்றம் இண்டைக்கே எனக்கு ஆரம்பிச்சுட்டுதுபோல கர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  20. இந்த சந்ததிக் கதை பற்றி என்னிடம் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கு[இதை என்பக்கம் எழுதியிருக்கிறேன் எப்பவோ.. அதை நெ.தமிழன் படிச்சிருப்பார்ர்:).. அவர்தான் என் பக்கத்தில் முழுமையாக ஆதி முதல் படிச்சிட்டார் என நினைக்கிறேன்:))].

    என் நண்பியின் அண்ணா.. அவருக்கு ஒரு நண்பன், அந்த நண்பனுக்கு ஒரு அக்கா மீது காதல்... அப்போ நேரில் கேட்கப் பயத்தில கொஞ்சக் காலமாக சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்ர்.. இனிக் கேட்கலாமே எனும் தைரியம் வந்தபோது, நம் நாட்டுப் பிரச்சனையால பாவம் அந்த ஒண்ணும் இல்லாத அப்பாவி அண்ணனை ரவுண்டப் எனும் பெயரில், ஆமி பிடிச்சுப் போய் பூஸா முகாமில் வைத்து விட்டார்கள்.

    அங்கிருந்து கடிதம் அனுப்பும் வசதி கொடுக்கப் பட்டிருந்தது. அப்போ அந்த அண்ணா அவரின் பெயர் சுந்தர்., அந்த சுந்தர் அண்ணன்.. இந்த என் நண்பியின் அண்ணனுக்கு ஒரு லெட்டர் போட்டார்ர்.. இப்படி இந்த பிள்ளையை தான் விரும்பியதாகவும், முடிவைக் கேட்க முன்னரே பூஸாவுக்கு வந்து விட்டதாகவும், தனக்காக தன் விருப்பத்தை சொல்லி, அந்தக்காவிடம் முடிவைக் கேட்டுச் சொல்லச் சொல்லியும்.

    அப்போ என் நண்பியின் அண்ணா போய் அந்தக்காவிடம் கேட்டபோது, அவ சொன்னாவாம், தனக்கு ஒரு மச்சான் இருக்கிறார், அவரைத்தான் மணம் முடிக்க பெற்றோர் நிட்சயித்திருக்கினம், அவரைத்தான் செய்யப் போகிறேன் என.. இப்பதிலை, சுந்தர் அண்ணாவுக்கு தெரிவித்தபோது.. அதுக்கு பதிலை கவிதைபோல எழுதி இந்த அண்ணாவுக்கு அனுப்பியிருந்தார்..

    இடையில என் கதையையும் சொல்லோணும்.. எனக்கு கவிதை எனில் பைத்தியம்போல கலக்ட் பண்ணுவேன் படிக்கும்போது.. அப்படி ஒரு லவ் கவிதையில்.. அதுக்காக எல்லாக் கவிதையும் அல்ல.. மனதைத் தொடும் கவிதைகள்.. அது என் நண்பிகளுக்கு தெரியும் என்பதால், எங்கு உணர்ச்சி மயமான கவிதை கண்டாலும் எனக்கு எடுத்து வந்து தருவார்கள், நானும் பத்திரமாக எழுதி வைப்பேன்.

    இதனால இந்த என் நண்பியும், தன் அண்ணாவின் பொக்கட்டில் இருந்த இந்த சுந்தர் அண்ணனின் கடித்தத்தை களவா எடுத்து வந்து தந்தார் டக்கென எழுதிப்போட்டுத் தாங்கோ திரும்ப கொண்டுபோய் வைக்கோணும் என.. அவசரமாக எழுதிவிட்டுக் குடுத்து விட்டேன்..

    ஆனா அது தொலைந்து போயிட்டுது பட்.. சில வரிகள் மட்டும் நினைவில் இருக்கு...

    அது இதுதான்..

    அன்றொரு அம்புஜத்தைக் கண்டு
    என் மனதைப் பறி கொடுத்தேன் -ஆனால்
    அது ஆதவனுக்குரியது ‘
    என அறிந்து- என்
    ஆசைக்கு விலங்கிட்டேன்..
    சந்ததியை வளர்க்க விரும்பும்
    பெற்றோருக்கு -இந்த
    சுந்தர் என்றும்
    வில்லனாக
    இருக்க மாட்டான்:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நல்லா இருக்கே கவிதை!

      நீக்கு
    2. அதிரா சம்பவம் மனதை வேதனை செய்தது பாவம் இல்லையா...

      கவிதை அருமை ஆனால் வேதனையா இருக்கு இல்லியா...

      கீதா

      நீக்கு
    3. ஒரு கவிதையிலேயே ஒருவனை நல்லவன் என்று நினைக்க வைத்துவிட்டாரே அந்த சுந்தர்... அவர் எங்காவது நலமாக வாழ்ந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன்.

      தாமரை, சூரியனுக்கு உரியது. எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.

      அந்தப் பெண்ணும், பெற்றோர் ஆசைக்குக் குறுக்கே நிற்கவில்லை. காலம் அவள் முடிவு சரியானது என்று சொல்லியிருக்கட்டும்.

      நீக்கு
    4. உண்மைதான் அதன் பின்பு என்னாச்சோ தெரியாது...

      நீக்கு
  21. பளபளக்குற பகலா நீ...? படபடக்குற அகலா நீ...?

    அனலடிக்கிற துகளா நீ...? நகலின் நகலா நீ...?

    மழையடிக்கிற முகிலா நீ...? திணறடிக்கிற திகிலா நீ...?

    மணமணக்குற அகிலா நீ...? முள்ளா மலரா நீ...?

    சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை...
    சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை...

    கூட்டைதான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை...
    வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை...

    முடிந்தால் சூடாக சாயந்திரம் வர்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! டிடி எதுக்கு சூடா வரணும்!!! கூலாக வாங்க!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  22. இரண்டு நாளாக நல்ல மழை மதுரையில். வெயிலின் கொடுமையை அனுபவித்த மக்கள் மழையில் குளிர்ந்து போனதால் இளம் வெயிலையும் தாங்காமல் கேட்டுக் கொண்டார்கள் சூரியனிடம்.

    //இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்.//

    மதுரை மக்கள் மிதமான சூடாக இருந்த சூரியனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
    அவரும் சரி. "அப்படியே செய்கிறேன் என்று" இன்று வெயிலின் சூட்டைக் குறைச்சு கொண்டார்.
    மழையும் இல்லை வெயிலும் இல்லை இப்போது.

    மீண்டும் சூடு வேண்டும் என்று மக்கள் கேட்கும் போது வருவார்.

    பதிலளிநீக்கு
  23. ஏ மனைவியாக இருக்கலாம். கணவர்.....அடுப்பில் ஏதோ ஒரு பதார்த்தம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுப் போக செய்கிறார். பொரித்தல் அல்லது சப்பாத்தி அல்லது தோசை இப்படி ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்..அடுப்பின் சூட்டைக் குறைக்கச் சொல்லி மனைவியின் ஆர்டர்???!!!!! ஆனால் வரி ஆர்டர் செய்வது போல இல்லை!!!! கொஞ்சம் பாவம் மனைவியாக இருக்கலாம். அதாவது பல ஜோக்குகளில் வரும் மனைவி அல்ல!! ஹிஹிஹி...அதனால் தான் ரொம்ப சாஃப்டாக "" இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்." என்று இருக்கிறது. ஒரு வேளை கல்யாணம் ஆன புதிதாகக் கூட இருக்கலாம். ஹிஹிஹிஹி...அதான் கணவன் B அப்படியே செய்கிறேன் என்று சாஃப்டாகச் சொல்லுகிறார் போலும்! இது ஒரு யூகம்.

    இதே நிகழ்வு....b சமையல் கற்றுக் கொள்ளும் மாணவி/மாணவர் அல்லது வயதில் பெரிய குடும்பத்து உறுப்பினர் அல்லது தோழர் தோழி யாக இருக்கலாம்...A சொல்லிக் கொடுக்கும் நபர் சொல்லும் வரியாகவும் தோன்றுகிறது

    2. ஒரு குழுவில் காரசாரமான விவாதம் நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் ஒரு உறுப்பினர் கொஞ்சம் காட்டமாகப் பேசுகிறார் என்பது புரிந்ததும் அந்தக் குழுவின் தலைவர் - வார்த்தை இங்கு முக்கியம் - தலைவர்/லீடர் நாட் பாஸ்!!! அந்த வரியைச் சொல்லுகிறார். அவர் ஸாஃப்டாகச் சொன்னதால் அந்த உறுப்பினரும் கொஞ்சம் சூடு தணிந்து பொலைட்டாக பதில் சொல்கிறார். இதில் அந்த A சொல்லும் வரியின் டோன் அதாவது குரலாக வரும் போது எப்படி வரும் என்பது மிக முக்கியம். வரி ரொம்ப பொலைட்டாக இருப்பது போலத்தான் இருக்கிறது.

    3 வது யூகம். அயர்ன் செய்பவரிடம் நாம் மிக மிக ஒரு நல்ல உடை அத்தனை சூடு தாங்காத உடை கொடுத்து அவர் வழக்கமான சூட்டில் அயர்ன் செய்தால் நாம் சொல்லும் வரியாக எடுத்துக் கொள்ளலாம். அந்த மனிதர் அப்படியே செய்கிறேன் என்று சொல்கிறார்.

    4 வது குளிர்பிரதேசம். வீட்டில் வார்மர் போடுகிறார் B. ஆனால் சூடு கொஞ்சம் கூடுதலாக இருக்கவும் A சொல்லுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

    5 வது யூகம் இது ரொம்பப் பொருத்தம் இருக்காவிட்டாலும்...என் அனுபவத்திலிருந்து வருவது....என்னைப் போன்று நெருப்புக் கோழியாக அடுப்பிலிருந்து எடுக்கும் சூடான காபியைக் குடிக்க விரும்புபவர்களிடத்தில் என் வீட்டில் என்னிடம் சிலர் சொல்லும் வரி.."கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்கனா நல்லாருக்கும்" என்று அட்வைஸ் வருவது போல் இரு வசனங்களும் எடுத்துக் கொள்லலாம்.

    அடுத்த யூகம். A குளிக்க வெந்நீர் வைக்கப்படுகிறது. அதிக சூடாக இருப்பதால் அப்படிச் சொல்லலாம். (என் மாமியார் அடிக்கடிச் சொல்லும் வரி இது. ஆனால் இங்கு A வயதில் பெரியவர் அலல்து விருந்தினர் என்று ஏதேனும் ஒன்று) B அதற்கு அளிக்கும் பதில்.

    இப்போதைக்கு இவ்வளவுதான் ரூம் போட்டு யோசிக்க முடிகிறது. வேறு தோன்றினால் அப்பால வாரேன் பதில் சொல்ல...இப்ப செ வா கே ப பார்க்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப எனெர்ஜியைச் செலவழிச்சுட்டீங்களே கீதா ரங்கன். இந்த வாரம் டாப் அப் கிடையாது, டாப் டவுன். அதாவது வெற்றி பெறுபவர்கள், கேஜிஜி சாருக்கு டாப் அப் பண்ணணும். இதை மேல நீங்க படிக்கலையா?

      நீக்கு
    2. ///அதாவது வெற்றி பெறுபவர்கள், கேஜிஜி சாருக்கு டாப் அப் பண்ணணும். இதை மேல நீங்க படிக்கலையா?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) இப்போ மீ, பதில் சொல்லுறதோ வாணாமோ?:))

      நீக்கு
    3. கீதா, கொஞ்சம் இன்னும் மாத்தி ஓசியுங்கோ.. அதாவது யாரால் யாருக்கு.. எச்சந்தர்ப்பத்தில் எண்டெல்லாம் கிளவி கேய்க்கவில்லை கெள அண்ணன்.. அவர் கேட்டது ஒரு வரியை வச்சு அவர்களின் குணாதிசயங்களைச் சொல்லும்படி..

      அதாவது சிலரின் கண் பார்வையை வச்சே.. சொல்லுவோமே.. இவரின் பார்வையே சரியில்லையே என அல்லது பார்க்க ரொம்ப அப்பாவியாக இருக்கிறாரே என.. இப்படியான பதில்களைத்தான் எங்கள் புளொக்கின் கெட் ஆசிரியர் எடிர்பார்க்கிறார் என நினைக்கிறேன்ன்:))

      நீக்கு
    4. கீதா நீங்க பாட்டுக்கு யூகித்துத் தள்ளி விட்டீர்கள், தவறான் யூகதிற்கு மைனஸ் மார்க் கிடையாது என்னும் தைரியமா?

      நீக்கு
  24. என்னுடைய முதல் யூகத்தில்....கூட ஒரு சேர்க்கை. இலங்கைத் தமிழர் என்றால் அவர்கள் குழந்தைகளையும் கூட மரியாதையாகத்தான் விளிப்பார்கள். கணவன் மனைவியையும் மரியாதையாகத்தான் விளிப்பார்கள் என்பதால் கணவர் மனைவிக்கு!!! அல்லது அம்மா தன் மகனுக்கோ மகளுக்கோ கூட சமையல் சொல்லிக் கொடுப்பதாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாகபூஸாரின் கணவர் பூசாருக்கு சமையல் கலை பயிற்றுவிக்கிறார்! ஹையா நெல்லைக்கும் ஏஞ்சலுக்கும் பூஸாரை விரட்ட ஒரு பாயின்ட் எடுத்துக் கொடுத்தாச்சு...ஹப்பாடா!!!
    நம்ம பூஸார் அவர் மகனுக்குச் சமையல் பயிற்சி கொடுக்கிறார்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நீங்க என்னதான் டொன்னாலும் என்னோடு சண்டைக்கு வரப் பயம் எல்லோருக்கும்:)) பிக்கோஸ் மீ தேம்ஸ்ல தள்ளி விட்டிட்டு ஓடிடுவேன் எல்லோ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  25. " பணத்தை crossed cheque மூலமாக, மாமா பெயர் எழுதி, உங்க அப்பா விலாசத்திற்கு அனுப்பிவிடுங்க" அவர் அவ்வாறே செய்து பிரச்சனையிலிருந்து மீண்டார் !//

    சூப்பர்!! சொல்யூஷன்! எல்லா பண பரிவர்த்தனைகளும் அக்கவுண்டபிளாக லீகலாக இருப்பது நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. எந்த வருசம் கன்னிச்சாமி வரலையோ அந்த வருசம் உன்னை மணப்பேன்னு மஞ்சமாதாவுக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன் மாதிரி எந்த புதன்கிழமை அனுஷ்கா பத்தி பேச்சு வரலியோ அன்னிக்குதான் நான் இங்க வருவேன்.

    பதிலளிநீக்கு
  27. நானும் மாட்டு வண்டி ஓட்டி இருக்கேன்

    பதிலளிநீக்கு
  28. //A : " இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்."


    B : " சரி. அப்படியே செய்கிறேன்." //

    A HUSBAND :)முறுகல் பேப்பர் ரோஸ்ட் செய்யறார் B வீட்டம்மாவாக இருக்கலாம் அதனால்தான் தோசை தீஞ்ச வாசனையால் சூட்டை குறைக்க சொல்லியிருப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத பாருங்க... உங்க வீட்டு விஷயம்லாம் இங்க பொதுவெளில சொல்லாதீங்க. ஏற்கனவே நீங்க அஞ்சப்பம் செய்யறேன்னு நூடுல்ஸ் செய்தது, பிறகு உங்கள் கணவர் அழகான அஞ்சப்பம் செய்ததுலாம் எங்க மனசுல இருக்கு. அதுனாலதான் தேவதையின் கிச்சன்ல நீங்க செய்முறையை வெளியிடறதில்லை (செஞ்சாத்தானே எழுத).

      நீக்கு
    2. ஹாஹா :) இதெல்லாம் மறக்காதே யாருக்கும் .நான் செஞ்ச க்ளாக்காஊறுகாய் உங்க நினைவில் வரலை :)

      நீக்கு
    3. ஸ்ஸ்ஸ்ஸ் நெலைத்தமிழன் சூட்டைக் குறைங்கோ.. சூட்டைக் குறைங்கோ:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
  29. A : " இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்."


    B : " சரி. அப்படியே செய்கிறேன்."
    ஆங் இன்னொன்றும் சொல்லலாம் வீட்டில் ரேடியேட்டர் செட்டிங்கில் (தெர்மோஸ்டாட் ) குறைக்க சொல்கிறார்
    A டெக்னீஷியன் B வீட்டு ஓனரிடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆ இதாரிது.. சூடு - குறைச்சல் எண்டதும் ஏதும் சமையல் குறிப்பாக்கும் என ஓடி வந்திருப்பா கர்ர்ர்ர்:)) முதல்ல தேவதை கிச்சினின் சூட்டைக் கொஞ்சம் கூட்டுங்கோ பிலீஸ்ஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
  30. கௌதமன் சார் நான் கேள்வி எழுத வியாழன் நினைச்சேன் ஆனா ஸ்ரீராம் முத்துராமன் அங்கிள் வீடியோவோட பாட்டை போட்டு வச்சார் அதை பார்த்து பேசக்கூட முடியாம ஆச்சுன்னா பாருங்களேன் :)
    இப்போ வரேன் கேள்விகளோட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. oஒ மை கடவுளே ஓடுங்கோ ஓடுங்கோ எல்லோரும் ஓடிப்போய்த் தேவதைக் கிச்சினில் ஒளிங்கோ.. பிக்கோஸ் அங்கு மட்டும்தேன் இபோ அஞ்சு வரமாட்டா மூடிக்கிடக்கூஊஊஊஊ:))

      நீக்கு
    2. // ஆனா ஸ்ரீராம் முத்துராமன் அங்கிள் வீடியோவோட பாட்டை போட்டு வச்சார் அதை பார்த்து பேசக்கூட முடியாம ஆச்சுன்னா பாருங்களேன் :) //

      கர்ர்ர்ர்ர்ர்ர்...

      நீக்கு
    3. // ஓடிப்போய்த் தேவதைக் கிச்சினில் ஒளிங்கோ.. பிக்கோஸ் அங்கு மட்டும்தேன் இபோ அஞ்சு வரமாட்டா மூடிக்கிடக்கூஊஊஊஊ:)) //

      ஹா... ஹா... ஹா... ஆனால் இப்போ ஏஞ்சலை எங்கேயுமே காணோமே அதிரா... நீண்ட இடைவெளிக்குப்பின் இப்பதான் வெளிப்பட்டிருக்கிறார்...

      நீக்கு
    4. ஹையோ அடிமேல் அடிஅடிச்சே கூட்டி வந்திருக்கிறேன்ன்.. அடுத்தகிழமை வரை தொடர்ந்து எங்கள் புளொக் வந்தால் பரிசுண்டு எனச் சொல்லி வையுங்கோ பிளீஸ்ஸ்:) மிச்சத்தை அடுத்த புதன் பார்த்துக்கலாம் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    5. ஒரு பிளேட் சாம்பார் வடை உடனே கிடைக்குமா ? பெரிய பரிசெல்லாம் வேணாம்

      நீக்கு
  31. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து (1128)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெஞ்சத்தால விரும்புபவரே காதலராக வந்தால்ல்.. இப்படித்தானே வரும் விளக்கம் பிளீஸ்ஸ் டிடி..

      நீக்கு
    2. தன் நெஞ்சினிலேயே தன் காதலர் எப்போதும் இருப்பதால், சூடான பொருட்களை சாப்பிட்டால்/குடித்தால், அவருக்கு கஷ்டமாக இருக்குமே (நெஞ்சுல குடிகொண்டிருக்கிறாரே) என்று எண்ணி அந்தப் (பேதை) பெண், சூடானவற்றை உண்ணவே அஞ்சுகிறாளாம்....

      திருவள்ளுவர் நல்லாத்தான் எழுதியிருக்கிறார்.... (அந்தக் காலத்துல அவருக்கு எங்க மற்ற பெண்களைக் காணும் வாய்ப்பு இருந்திருக்கப்போகிறது... இருந்திருந்தாலும், ஆண்களின் உள்ளக் கிடக்கையை அவர் எங்க வெளிப்படையா எழுதுவார்).

      நீக்கு
    3. ஓ இதுவோ விளக்கம் அருமையான குறள்..

      //ஆண்களின் உள்ளக் கிடக்கையை அவர் எங்க வெளிப்படையா எழுதுவார்).//
      ஹா ஹா ஹா ஆண்களுக்குத்தான் உள்ளக்கிடக்கையே கிடையாதே:)) ஹா ஹா ஹா உடனுக்குடன் உளறிக் கொட்டி விட்டிடுவார்களே:) இல்லை எனினும் பட்டர் பண்ணிக் கொட்ட வச்சிடுவோமெல்லோ:) அதனாலதான் அந்தத் தாத்தா எதுக்கு வம்பென எழுதேல்லையாக்கும்:))

      நீக்கு
  32. விருப்பமில்லாம சந்தர்ப்பசூழலால் பொருத்தமில்லா ஒரு பெண்ணை வாழ்க்கை துணையாய் ஏற்பது தவறுதான் .ஆனா தாய் மாமன் என்று சொல்கிறீர்கள் உறவினர் என்பதால் அந்த பெண்ணும் ஆசையை எதிர்பார்ப்பை வளர்த்திருப்பாரோ :( ..நானும் பூஸாரின் கட்சிதான் இந்த விஷயத்தில்
    நீங்கதான் பிரச்சினையை க்ராஸ் செக் மூலம் முடித்து வைத்தீர்கள் என்பது அந்த பெண் வீட்டாருக்கு தெரியுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///நீங்கதான் பிரச்சினையை க்ராஸ் செக் மூலம் முடித்து வைத்தீர்கள் என்பது அந்த பெண் வீட்டாருக்கு தெரியுமா ?///

      ஆஆஆஆஆஆ கொஸ்ஸன் மார்க் போட்டிட்டீங்க அஞ்சு.. அடுத்த புதன் கிழமைக்கு ஒரு கொஸ்ஸன் ரெடீஈஈஈஈஈஈ ஹா ஹா ஹா:))

      நீக்கு
  33. உப்புமாவைப்பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்து, மது அழகாய் இருக்கு என்கிறாரே? மது நன்றாக இருந்ததா அல்லது மதுக்கோப்பை அழகாக இருந்ததா?
    காலையில் காப்பிக்கு பதிலாக மதுவைக் கையிலெடுத்த அந்த போதைக் கவிஞர் யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆண்டவா.... நீங்களும் வெங்கட்டும் கலாய்க்கிறீங்களா?

      அவர் எழுதியதில் இன்னொரு பிழை. செய்யுள் எழுதும்போது, சேர்த்துத்தான் எழுதணும். வார்த்தையைத் தேவையில்லாமல் பிரிக்கக்கூடாது. அவர் எழுதியிருக்கவேண்டியது,

      அழகா யிருக்கு மது.

      ஆனால் எழுதியிருப்பது "அழகாய் இருக்கு மது". இது தவறு. பொருள், அழகாக இருக்கு மது என்று வந்துவிடுகிறது. அதனால் உங்கள் கேள்வி சரிதான் ஏகாந்தன் சார்.

      நீக்கு
  34. ///A : " இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்."


    B : " சரி. அப்படியே செய்கிறேன்." ///

    சரி இனி என் பதிலுக்கு வருகிறேன்ன்.. என் சுவீட் 16 கிட்னிக்கு ஏற்ப ஜிந்திச்ச இடத்திலே:)...

    1. ஏ, பி இருவருமே நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்.. ஒரு விசயத்தை நகைச்சுவையோடு சீரியசாக சொல்கிறார்கள்.[ஏதும் சீரியசான சம்பாசனையின்போது கூட இப்படிச் சொல்லலாம்]

    2. ஏ கொஞ்சம் கோபக்காரர் ஆனா இருவருமே மரியாதையைக் கடைப்பிடிப்பவர்கள்.

    3. இருவருமே தலைக்கனம் இல்லாதவர்கள்போல தெரியுது.

    நில்லுங்கோ அப்பப்ப கிட்னியில் தட்டும்போது எடுத்து வந்து போடுகிறேன்ன்.. வரும் சண்டே வரை சொல்லலாமெல்லோ?:)... இது வேற சண்டே..

    பதிலளிநீக்கு
  35. ஆஜர் மட்டும் வைச்சுக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோஓஓஓஓஓ கீசாக்கா வாங்கோ இண்டைக்கு ரெக்கோர்ட் அடிக்காமல் விடப்போவதில்லை நாம்ம்:)) 200 ஐத் தொடோணும் கிளவி சே சே டங்கு ஸ்லிப்பாகுதே கேய்வி:) கேட்டே ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  36. நான் கஸ்டப்பட்டு என் கிட்னியை ஊஸ் பண்ணி ஒரு கேள்வி முன்பு எப்பவோ கேட்டிருந்தேன்ன்.. கரெக்ட்டா அந்நேரம் பார்த்து கெள அண்ணன் லீவு லெட்டர் குடுத்ததால் த்றீராம்:) என்றி ஆனார்.. என் கிளவியைக் கோட்டை விட்டிட்டார்ர்:) கர்ர்ர்ர்:)) நானும் அப்போ லீவில் இருந்தமையால கவனிக்கவில்லை பின்பு பார்த்தேன்.. சரி திரும்படியும் கேட்கிறேன்ன் பட் சோட்டாக கேட்கிறேன்ன்..

    கிளவி நெம்பர் சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே.., சனி வந்து பேமனட்டா நாக்கில இருக்குதுபோல கர்:))

    கேள்வி நம்பர் 1.

    யாரையாவது நேரில் சந்திக்கோணும் எனும் பேராசை உண்டோ? அல்லது அப்படி பைத்தியமாக இருந்து அவர்களை சந்திக்க முன் அவர்கள் போய் விட்டால்கூட சொல்லலாமே.. உதாரணம் எங்கட கண்ணதாசன் அங்கிளும் நானும்போல:)

    பதிலளிநீக்கு
  37. கொஸ்சன் நெம்பர் 2:
    “திருவாரூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்.. ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன் முக்கால் இருப்பதைப் பாருங்கள்”..

    இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்.. இது இப்போ இல்லை.. அந்தப் பாரி முல்லைக் கேள்வியைப்போல சின்ன வயசிலிருந்தே எனக்குள் இருக்கும் ஜந்தேகமாக்கும்:)) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக் கடவுளே அதிரா........ தப்பும் தவறுமாக எழுதறீங்களே. பாடல் என்னவென்றால்,

      குருவாயூருக்கு வாருங்கள் ஒரு
      குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
      ஒரு வாய்ச் சோறு ஊட்டும் தாய்முன்
      உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்

      என்ற பி.சுசீலா பாடிய பாட்டு.

      நீங்கள் அந்த சமயத்தில் உங்கள் பாடத்தையும் படித்திருக்கமாட்டீர்கள், பாட்டையும் ஒழுங்காக கேட்டிருக்க மாட்டீங்க.

      நீக்கு
    2. ஹையோ மியாவ் அது எவ்ளோ பேமஸான பாட்டு அதையே இப்படி குழப்பி நெல்லைத்தமிழன்கிட்ட கொட்டு வாங்கிட்டீங்களே :)

      நீக்கு
    3. ஹாஹா நெல்லைத்தமிழன் மேடம் FUSION ஸ்பெஷலிஸ்ட் தெரியுமோ :)
      ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இணைச்ச பெருமைக்குரிய ஞானி

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஓ ஹையோ முருகா மனதில சின்ன வயதில் இருந்து பதிந்திருந்த வரிகளை அப்படியே எழுதிட்டேன்ன்:)).. என்னைப் பரிசு வாங்க விடாமலே பிழைபிடிப்போர் இருக்கினம் கெள அண்ணன்:)) இதை எல்லாம் கணக்கில எடுத்திடாமல் வெனிஸ்டே பரிசு எனக்கே எனக்கா:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. இப்போதான் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்ன்:)..

      உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்.. ஹா ஹா ஹா:).. சரி இப்போ இதுவா முக்கியம்:) நேக்கு விளக்கம் தேவை:))

      நீக்கு
    6. ஆதிரா Fusion specialist என்பதை தணிகை செந்தூரா என்று விளித்ததிலேயே தெரிந்தது. ஹா ஹா ஹா

      நீக்கு
    7. யூ ரூஊஊஊஊஊ பானுமதி அக்கா கர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:).. ஆனாப் பாருங்கோ என்னை ஆஆஆஆஆஆ திரா என அழைச்சிட்டீங்க:)

      நீக்கு
  38. எனக்கு எப்பவுமே ஒழுங்கான கிளவிகள் கிடைக்குதேயில்லை:)) அதனால அஜீஸ் பண்ணிக்கோங்க..

    கொஸ்ஸன் நெம்பர் 3:
    கால்நடைகள் எனச் சொன்னால் மிருகங்களைப் பற்றியே நினைக்கிறோமே? ஏன் மனிசர்களும் காலாலதானே நடக்கிறோம்ம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு எனக்கு பதில் தெரியும். சொன்னால் கேஜிஜி சார் கோபப்பட்டு டாப் டவுன் செய்துவிட்டார் என்றால்.....

      நீக்கு
    2. @MIYAAW தெய்வமே எங்கியோ போயிட்டிங்க ..எங்கே உங்க காலை காட்டுங்க :)

      நீக்கு
    3. //கேஜிஜி சார் கோபப்பட்டு டாப் டவுன் செய்துவிட்டார் என்றால்.....//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) இம்முறை பரிசு எம்பாலாருக்கே என்பது கொன்ஃபோமானமையால:) இப்பூடி ரொப் டவுன்:) என ஐடியாவை எடுத்துக் குடுக்கிறார் நெ.தமிழன்.. ஹையோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட விடாமல் பண்ணிடுவார் போல இருக்கே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கெள அண்ணன் ரொப் அப்பும் வாணாம் டவுனும் வாணாம் பிறகு போலீஸ் கேஸ் ஆகிடப்போகுது:)) நீங்க செக் ஆக அனுப்பிடுங்கோ ஓகே:)..

      நீக்கு
    4. அஞ்சூஊஊஊஊஊ என் காலைக் காணம்ம்ம்ம் இங்கதானே வச்சிருந்தேன்ன்:)) ஆண்டவா ஆட்டைக் கடிச்சூ மாட்டைக் கடிச்சூஊஊ முடிவில ஒரு அப்பாவியின் காலையும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
  39. 1,எனக்கு இந்த பாட்டு என்ன மொழி என்று தெரியணும் ?
    //பல்டி பாக்குற டர்ல
    வுடனும் பல்தே//
    அத்துடன் இந்த வரிக்கு விளக்கமும் வேணும் ?
    அப்புறம் சிம்டங்காரன் அப்படினா என்ன ?
    2,பிஸிபேளா பாத், சாம்பார் சாதம் ..இவை இரண்டில் எது உங்கள் சாய்ஸ் ?
    3,கனவுகள் பின்னால் வரப்போவதை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கின்றனவா ?
    4,SELFIE கலாச்சாரம் அவசியமா ?
    5, ராஜிவ் அவர்களின் மகள் பெயர் ப்ரியங்கா அப்புறம் சுஜாதா அவர்களின் பிரிவோம் சந்திப்போம் கேரக்டர் மதுமிதா போன்ற பெயர்களை தாக்கம் மற்றும் செலிப்ரிட்டி காரணங்களால் அந்தந்த காலத்தில் மக்கள் வைச்சாங்க இப்போ அந்த மாதிரி சமீபத்தில் அதிகமாக வைக்கும் பெயர்கள் என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///1,எனக்கு இந்த பாட்டு என்ன மொழி என்று தெரியணும் ?
      //பல்டி பாக்குற டர்ல
      வுடனும் பல்தே//
      அத்துடன் இந்த வரிக்கு விளக்கமும் வேணும் ?
      அப்புறம் சிம்டங்காரன் அப்படினா என்ன ?///
      ஹையோஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்:)) கெள அண்ணனை எமேஜென்சிக்கு அனுப்பாமல் விட மாட்டா போலிருக்கே:)).. ஹா ஹா ஹா இதுக்குப் பதில் லியோனி அங்கிள்தான் கரீட்டாச் சொல்லுவார்:))..

      இருந்தாலும் நீங்க நம்பிக்கை இழந்திடாதீங்க அஞ்சு:) நாம் இம்முறை கிளவிகேட்டே பரிசு வாங்கோணும்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    2. @miyaw :)

      https://media1.tenor.com/images/a1705a7e2e6ad09f8c6f801b0af080a8/tenor.gif?itemid=7525573

      நீக்கு
    3. //அப்புறம் சிம்டங்காரன் அப்படினா என்ன ?// நேற்று சர்க்கார் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி பார்க்கவில்லையா?

      நீக்கு
    4. அது எதோ விஜய் படத்தோட பாட்டுன்னு தெரியும் ..பேர் சர்க்கார் ஆ !
      இல்லக்கா எங்க வீட்ல தமிழ் சானல்ஸ் இல்லை ..இந்த பாட்டை கூட சிஸ்டரின்லா அனுப்பி வச்சாங்க அதான் மீனிங் கேட்டேன் .நானா சினிமா பார்க்கிறதே அபூர்வம் :) துப்பாக்கின்னு ஒரு படம் வந்துச்சே அதில் பாதி பார்த்தேன் அவ்ளோதான் .நமக்கு இந்த வயலன்ஸ் ரத்தம்லாம் அலர்ஜி :)

      நீக்கு
  40. 6, அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கும் முக்கிய காரணி எது ?
    7, அறிவு ,ஞானம் இரண்டும் ஒன்றா வெவ்வேறா ?
    8,ஒருவரின் குணம் சார்ந்த இயல்பு அல்லது வளர்ப்பு இதில் எது முக்கியப்பங்கு வகிக்கிறது ?
    பிறக்கும்போது பிளாங்கா பிறக்கிறோம் வளர்ப்புதான் நம்மை செதுக்குகிறது என்பது உண்மையா ?
    9,ocd ,aat டிஸ்லெக்சிக் போன்றவைப்பற்றி சமீப வருடங்களாக நம் நாட்டில் அதிகம் பேசுகிறார்களே இது வெளிநாட்டு /சோஷியல் மீடியாக்கள் தாக்கமா ? அல்லது உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்பட்ட மாற்றமா ?
    10, குடும்பம் ,உறவினர்கள் இவற்றுக்கு வித்தியாசம் என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //7, அறிவு ,ஞானம் இரண்டும் ஒன்றா வெவ்வேறா ?//

      அது அறிவுமணி அண்ணாவும் ஞானம் அக்காவும் இருவர் அஞ்சு:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஓஹோ அவங்க ரெண்டுபேருக்கும் லெட்டர் தூது போனது நீங்கதானே :) அவங்க பேரன்ட்ஸ் தேடறாங்களாம் உங்களை

      நீக்கு
  41. // , A & B பற்றி உங்கள் ஊகங்களை/ கண்டுபிடிப்புகளை நீங்கள் எழுதவேண்டும். //
    இதில் முதலாமவர் A குற்றங்குறைகளை குணமா சொல்லுபவர் :)
    B எவ்வித ரெஸ்பான்ஸையும் பொறுமையா ஏற்றுக்கொள்ளும் மனபக்குவமுள்ளவர் :)

    பதிலளிநீக்கு
  42. கொஸ்ஸன் நெம்பர் 4:
    ஹையோ இதில நெல்லைத்தமிழனுக்கு ஏதும் தெரிஞ்சிடக்கூடா ஜாமீஈஈஈஈ:)) வள்ளிக்கு வைர மூக்குத்தி போடுவேன் அடுத்த தீபாவளிக்கு:).. ஹா ஹா ஹா

    4.வளவளவெனப் பேசுவோரில் விசயமில்லை.. வெள்ளாந்திகள், ஆனா மெளனமாக இருப்போர் விசயகாரர் என ஒரு பொதுக் கருத்துண்டு.. இது எவ்ளோ தூரம் உண்மை? அனுபவத்தில சொல்லுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ தெளிவா பேரோட சொல்லணும்

      நீக்கு
    2. எப்பவுமே என்னை, வம்பை விலை கொடுத்தே வாங்க வைக்கிறீங்களே வைரவா அதுவும் பவுண்ட்டில:))

      https://tse1.mm.bing.net/th?id=OIP.MUKP94q7ppyFR0GydLiUdwHaF9&pid=15.1&P=0&w=220&h=178

      நீக்கு
  43. 4 வது குளிர்பிரதேசம். வீட்டில் வார்மர் போடுகிறார் B. ஆனால் சூடு கொஞ்சம் கூடுதலாக இருக்கவும் A சொல்லுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.////////இது ஏ பி சம்பாஷணை.
    இந்த ஊருக்குப் பொருத்தம்.
    அடுப்புக்கும்,
    வார்த்தைகளுக்கும்
    பொருந்தும்.

    உப்புமாக் கவிதை ஜோர். உண்மையிலியே மோர்க்கூழ் செய்கையில் மோர் மிளகாய்
    வறுத்துச் செய்து, உப்புமாவோடு அதைக் கலந்து
    உண்டால் மிக ருசி.
    க்ராஸ் செக் கொடுத்து விஷயத்தைக் க்ராஸ் செய்தவரின் சூக்ஷ்ம அறிவுக்கு வணக்கம்.

    மாமாவைத் திருமணம் செய்வது நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

    அதிராவின் கவிதை அழகு. கதை சோகம். இது போல எத்தனை ஏமாற்றங்களை இள நெஞ்சங்கள் சமாளிக்க வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூகி சேது எங்கள் வீட்டிலிருந்து நான்காம் வீட்டில் இருக்கிறார்.

      இந்த வாரக் கேள்வி.

      //வாழ்க்கையில் இக்கட்டான சூழ்னிலையில் இருக்கும் போது,
      இதுவும் கடக்கும் என்பதை எத்தனை நாள் நம்புவது.//

      என் கணினி கேள்விக்குறி போடாது.

      நீக்கு
    2. //இது போல எத்தனை ஏமாற்றங்களை இள நெஞ்சங்கள் சமாளிக்க வேண்டி இருக்கிறது.//
      உண்மைதான் வல்லிம்மா...

      நீக்கு
  44. அடேங்கப்பா இந்த வாரம்தான் கச்சேரி களை கட்டுது! நன்றி நெ.த, அதிரா, ஏஞ்சல் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ பரிசு எங்களுக்குத்தானே கெள அண்ணன்?:) போனாப்போகுது நெ.தமிழனையும் நம் கட்சியில சேர்க்கிறோம் ஹா ஹா ஹா:).

      நீக்கு
    2. ஆங் அதே அதே ஒரு பிளேட் வடை சாம்பார்வடை போதும் எனக்கு

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நாங்க ஆரூஊஊஊஊஊ:) ஓசியில ஒரு பல்லி முட்டாய் கிடைச்சாலே விட மாட்டோம்ம்.. இதை விடுவோமா?:) அதுசரி கெள அண்ணன் ஓசைக்கு வெரி சோரி தோசைக்கு ஆம்பாறி சட்னி இல்லையோ?:).. ஒருவேளை மசாலாத்தோசையோ அவ்வ்வ்வ்:)) பருப்பு வடையாவே சுட்டுத்தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

      எல்லோரும் தவறாமல் அடுத்த வெனிஸ்டேக்கு வந்திடுங்கோ விருந்து வைக்கப்போறார் கெள அண்ணன்ன்ன்ன்ன்ன் டும் டும் டும்ம்ம்ம்ம்:))

      நீக்கு
    4. / ஓசியில ஒரு பல்லி முட்டாய் //
      என்ன மியாவ் கௌதமன் சார் உங்களுக்காக பல்லி முட்டாய் என்ன அந்த பல்லியையே கொண்டாருவார் பாருங்க

      நீக்கு
    5. நான் ஜொன்னனே நான் ஜொன்னனே எனக்கு எதிரி வெளில இல்ல வீட்டுக்க்க்க்க்க்க்குள்ளயேஏஏஏதான்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர் ஐடியாவா எடுத்துக் குடுக்கினமே எல்லோரும்:)

      நீக்கு
  45. கேள்விகள் குறைவாக இருந்தாலும் கேள்விகளும் பதில்களும் நன்றாகவே இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  46. எல்லா ட்ரான்ஸாக்ஷன்ஸுமே செக் மூலம் இருந்தால்தான் நல்லது. ப்ரூஃப் இருக்கும். பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார் அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டாம் என்பதற்காக அவர் பெண்ணைக் கல்யாணம் செய்வது என்பதெல்லாம் எப்படி அதுவும் விருப்பம் இல்லாமல் ...உங்கள் சஜஷன் நல்ல சஜஷன் நண்பரைக் காப்பாற்றியது உட்பட.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  47. எனக்குத் தெரிந்தவரை அதாவது சிறு வயது முதல் வளர்ந்த வரை கோயில்களில் பிரசாதம் என்பது கோயில் மடப்பள்ளியில் செய்து அதை இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதுதான். எங்கள் ஊரில் கோயிலில் வீட்டிலிருந்து அரிசி வெல்லம் நெய் எல்லாம் கொடுத்து அரவணை செய்து ஊருக்கே விநியோகம் செய்வதுண்டு முன்பு. அப்படிச் சாப்பிட்ட நினைவுகள். ஆனால் இப்போது அப்ப்டி ஃப்ரீயாக இறைவனுக்குப் படைக்கப்படும் மடப்பள்ளி பிரசாதம் வினியோகிப்பதாகத் தெரியவில்லை. ஸ்டால்கள் போட்டுவிட்டார்கள்.ஸ்டால்களில் விற்கப்படும் பிரசாதம் எனப்படுவது இறைவனுக்குப் படைக்கப்பட்டு விற்கப்படுகிறதா? அதுவும் தோசை வித் மிளகாய்ப்பொடி என்று ஹோட்டல் போல விதம் விதமாக!..

    இதுதான் கேள்வி. நேற்று அடித்து நெட் போய்விட்டதால் வெளியிட முடியலை...ஸோ இப்ப. எங்கள் வீட்டு நெட் ராத்திரி 9 ....9.30 ஆனா போயிடும் அப்புறம் விடியற் காலைல தான் வருது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  48. சுவையான கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!