செவ்வாய், 23 அக்டோபர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ் - துரை செல்வராஜூதேன்மொழி கூல்ட்ரிங்ஸ்..

துரை செல்வராஜூ 

***********************************


அம்மா!...

என்னடா செல்லம்?.. - திரும்பினாள் சரண்யா..

ஒற்றை விரலைக் காட்டி நின்றாள் ஏழு வயதுடைய மகள்...

கையில் இருந்த இரண்டு வயது மகன் காது ஜிமிக்கியைப்
பிடித்து இழுத்துக் கொண்டிருக்க - சுற்றும் முற்றும் பார்த்தாள்..

அதோ அந்த ஓரத்தில் நவீன கட்டணக் கழிப்பிடம் என்ற பேரில் ஒன்று...

கீழே இருந்த பைகளில் ஒன்றை தோளில் மாட்டிக் கொண்டு மற்றதைக் கையில்
பிடித்து கொண்டு -

வாம்மா!.. - என்றபடி நடந்தாள்..

தத்தித் தத்திக் குதித்தபடி - தாயைப் பின் தொடர்ந்தாள் கீர்த்தி...

அந்தக் கழிப்பிடத்தை நெருங்கும் முன்பாகவே துர்நாற்றம்...

ஆனாலும், அதன் வாசலில் அமர்ந்து -
டீ குடித்தபடி பெரியவர் ஒருவர்...

இந்தக் குழந்தை யூரின் போகணும்!...

அஞ்சு ரூவா....ம்மா!...

சின்னக் குழந்தைக்கு கூடவா காசு?..

பொறந்த புள்ள கக்கூஸ் போனாக் கூட காசு தா...ம்மா!..

கொஞ்சங்கூட சுத்தமா இல்லை...
அஞ்சு ரூபாய் வாங்குறீங்க...ல்ல!...

பெரியவர் தொடர்ந்தார்...

மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு...
முடிஞ்ச வரைக்கும் சுத்தமா வெச்சுக்கிறேன்...
ஆனாலும் பாழாப் போன நாத்தம் போகலை...
இந்த காண்ட்ராக்டரு என்ன சொல்றாரோ
அதத் தானம்மா நாஞ்செய்ய முடியும்?..

சுண்ணாம்பு போடணும்.. பினாயில் அடிக்கணும்...ன்னு
சொன்னா என்னய வேலய விட்டு தூக்கிடுவாரு...
புதுசா வர்றவனும் பழய மாதிரியே வெச்சிருப்பான்...
அதுக்கு நாம வாய மூடிக்கிட்டு வேலை செஞ்சா
நம்ம வயித்துப் பாட்டைப் பாத்துக்க முடியும்... தாயீ!...

பெரியவருக்கு அவருடைய பிரச்னை...

அதற்கு மேல் எதுவும் பேசாத சரண்யா -

ஜாக்ரதையா உள்ளே போகணும்...
சுத்தமா கால் கழுவிட்டு வெளியே வரணும்!..

- என்றவாறு, மகளை கழிவறைக்குள் அனுப்பி விட்டு
பெரியவரிடம் பத்து ரூபாயைக் கொடுத்தாள்..

அருகிருந்த டப்பாவிலிருந்து அஞ்சு ரூபாயைத் துழாவி
எடுத்துக் கொடுத்தார் பெரியவர்...

நீங்களே வெச்சுக்குங்க தாத்தா!..

அந்தவேளையில் - அருகாக சிறுவன் ஒருவன் ஓடிவந்து நின்றான்...

அக்கா.. உங்க பேரு சரண்யா..வா!.. - என்றான் அண்ணாந்து பார்த்தபடி...

நீ யாருப்பா!?.. - என்றாள் ஆச்சர்யத்துடன்...

சொல்லுங்களேன்.. எங்க ஓனர் கேட்டுட்டு வரச் சொன்னார்!..

ஓனரா!?. - மறுபடியும் வியப்பு..

இந்த ஊரில் தன்னைத் தெரிந்தவர் யார்!?..

சிதம்பரத்தில் சோழன் எக்ஸ்பிரஸை பிடிக்க முடியவில்லை...
அதிலும், பொதுப் பெட்டி என்றால் கேட்கவே வேண்டாம்...

இறங்கி இறங்கி ஏற முடியாது!..
- என்று, அங்கிருந்து தஞ்சாவூருக்கு அரசு பேருந்தில் பயணித்தால்
அது இங்கே வந்து ஏதோ கோளாறாகி நின்று விட்டது...

வந்த வரைக்கும் காசைக் கழித்துக் கொண்டு
மிச்சத்தைக் கொடுத்து விட்டார் - நடத்துனர்...

வலு உள்ளவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு
மற்ற பேருந்துகளில் தொற்றிக் கொள்ள -
பிள்ளைகளுடன் சற்றே திகைத்து விட்டாள் சரண்யா...

இங்கிருந்தே தஞ்சாவூருக்கு ஒரு பஸ் இருக்கு...
அதில தாராளமாக இடம் கிடைக்கும் ... ஆனால்,
எப்போ...ன்னு தெரியலை - என்றார்கள்...

அரை மணிக்கு மேலாகி விட்டது...
இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் - என்றிருக்கும் வேளையில்
இந்தப் பேருந்து நிலையத்தில் நம்மைத் தெரிந்தவர் யார்?..

சற்று அச்சமாகவும் இருந்தது....

குழப்பத்துடன் யோசித்தபோது
கீர்த்தியும் அருகில் வந்து ஒட்டிக் கொண்டாள்....ஆனாலும் அந்தப் பையன் விடவில்லை..

ஆமாக்கா!.. அதோ தேன்மொழி கூல்ட்ரிங்ஸ் ...ன்னு போட்டிருக்கே...

அதற்குள் அந்தக் கடையினுள்ளிருந்து வாலிபன் ஒருவன் ஓடி வந்தான்...

அடையாளங்கண்டு கொண்டாள்...

விசு!.. நல்லாருக்கியா?..  - குரல் தழுதழுத்தது...

நான் நல்லா இருக்கேன்... சரண்..
உன்னை இங்கே பார்ப்பேன் ..ன்னு கனாக் கூட காணலை!...

உன் மகள்.. முகச் சாயல் அப்படியே!..  என்ன பேரு?..
இந்தக் குழந்தையை வச்சுத்தான் உன்னைக் கண்டுபிடிச்சேன்...
இவன் பேரு?.. டேய்... கண்ணா!...  மாமாக் கிட்ட...

பட... பட... - என்று பேசிய விசு,
அதெப்படி மாமா..ன்னு சொல்றது?.. - திகைத்து நின்று விட்டான்..

சரி.. வா.. வா.. கடைக்குப் போகலாம்!...

அவளிடமிருந்த குழந்தையை ஆதுரத்துடன் வாங்கி
தன் தோளில் சாய்த்துக் கொண்டான்...

நடப்பதெல்லாம் கனவா.. என்று நின்றிருந்தாள் சரண்யா..

இல்லே... விசு.. உன்னைப் பார்த்ததே சந்தோஷம்...
பஸ்ஸுக்கு நேரமாச்சு!..

அதுக்கெல்லாம் கவலைப்படாதே.. சரண்...
எல்லா பஸ்ஸும் இங்கே நின்னு தான் போகும்....
சரி... வா... நம்ம கடையில உட்கார்ந்து பேசுவோம்...

நடந்ததை விவரித்தாள் சரண்யா...

தஞ்சாவூர் பஸ்ஸா... சூர்ய மூர்த்தி.. அது நாலு மணிக்கு ..
இன்னும் இருக்கே அரை மணி நேரம்...
மாமா தான் கண்டக்டர்... தாராளமா போகலாம்...
வா.. கடைக்கு.. என்னோடது தான்!..

விசு.. உன்னைப் பத்தி நான் கேக்கவே இல்லை...
எப்படியிருக்கே விசு?.. எத்தனை பிள்ளைங்க!..

ஒன்னே ஒன்னு.... தேன்மொழி... அவ பேர்...ல தான் கடை ...

கூல்ட்ரிங்ஸ் கடை வெக்கிறதுக்காகவா
அத்தனை நல்லாப் படிச்சே விசு!?..
கணக்கெல்லாம் விரல் நுனியில வெச்சிருப்பியே...
ஜியோமெண்ட்ரி எல்லாம் அவ்வளவு அருமையா செய்வியே!..
மேல மேல படிக்கப்போறேன்... ந்னு சொன்னியே!..

சரண்யாவின் கண்கள் சட்டெனக் கலங்கின..

அப்படித்தான் நெனைச்சேன் சரண்...
ஆனா, ஒன்னும் சரியா அமையலை...
மளிகக் கடையில கணக்கு எழுதத்தான் முடிஞ்சது...

மளிகைக் கடையிலயா!?... - அதிர்ந்தாள் சரண்யா..

அதுவும் சரிப்பட்டு வரல்லை... அப்பாவுக்கும் முடியலை..

நான் போறதுக்குள்ளே கல்யாணத்தைப் பார்க்கணும்..ன்னு அழுதார்..
அப்புறம் சொந்தத்திலய அமைஞ்சிடுத்து... இது மாமாவோட கடை தான்..
ரேவதி கல்யாணத்துக்கு அப்புறம்...

ஓ.. உன் மனைவி பேரு ரேவதி..யா!..
அது சரி.. மாமா கண்டக்டர்....ன்னு சொன்னே!...

அதுவா... கண்டக்டர் மாமாவை பழக்கத்தில கூப்பிடறது!..
சொல்லிக் கொண்டே தனது கடைக்குள் நுழைந்தான்..

சரி.. நீ என்ன சாப்பிடுறே..
பாதாம் பால், ரோஸ் மில்க்,
வனிலா, சாக்லேட், ஸ்ட்ராபர்ரி,
டீ இல்லே காஃபி.. என்ன வேணும்?...

மெலிதாக சிரித்தாள் சரண்யா...

உனக்கு என்னத்துக்கு சிரமம் .. விசு...

என்ன சொன்னே சரண்?.. சிரமமா?..
எனக்காக என்னென்ன சிரமத்தையெல்லாம் நீ தாங்கிக்கிட்டே!...

இப்போ - இந்த ஒரு குவளை பால் எனக்கு சிரமமா!...
சரி.. பாப்புக்குட்டிக்கு என்ன?...

அவளுக்கு ரோஸ் மில்க்!...

பாப்பு நீ என்ன பிஸ்கட் சாப்பிடுவே... சொல்லு!..

இல்லே... விசு... கொடுக்கிறதில்லை..
அவளுக்கு பிஸ்கெட் ஒத்துக்காது!...

அப்புறம்.... எப்படிப் போகுது விசு!...
என்னையும் ஞாபகம் வெச்சி கண்டுபிடிச்சியே...
மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!...

சரண்யாவின் குரல் தழுதழுத்தது...

நல்லா இருக்கேன் சரண்... இந்தப் பக்கம் காஃபி, டீ,
அப்புறம் பாதாம் பால், ரோஸ் மில்க், ஐஸ்க்ரீம், பிஸ்கட் ...
நியூஸ் பேப்பர், வாரப் பத்திரிக்கை, சிம் கார்டு ரீ சார்ஜ்...ன்னு
ஓரளவுக்கு நல்லா போய்க்கிட்டு இருக்கு...
ஸ்கூல் எல்லாம் திறந்திட்டா இன்னும் நல்லாருக்கும்...
உன் வீட்டுக்காரர் என்ன செய்றார்... சரண்?..

அவருக்கு பேங்க்..ல வேலை... விசு!...
எல்லாம் ஒரு நிமிஷத்தில நடந்த மாதிரி இருக்கு...
வாழ்க்கையே திசை மாறிப் போச்சுடா....
அந்த நாளெல்லாம் திரும்பவும் வராதா...ன்னு இருக்குல்ல!...

அப்பா எப்படி இருக்காங்க சரண்?...

அப்பா காலமாகி ரெண்டு வருஷம் ஆகிடுச்சு..
தம்பி வீட்ல இருக்காங்க அம்மா...
உங்க அப்பா அம்மா?...

அப்பா தான் தவறிட்டாரே..
அம்மா எங்கூடத்தான் இருக்காங்க!..

நான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தது தப்பு சரண்...
நோட்ஸ் கொடுக்க வந்த என்னை
உங்க அப்பா தப்பா புரிஞ்சுக்கிட்டார்!...

என் மனசுல இருக்கிற ஆறாத ரணம்....
அதை மறுபடியும் கிளறாதே.. விசு...

எங்க அப்பா உன்னைப் பேசின பேச்சு ஏழு ஜென்மத்துக்கும் போதும்....
அக்கம் பக்கமெல்லாம் கூடி நின்னு வேடிக்கை பார்த்திச்சு...
நானும் ஒரு பொய்யாவது சொல்லிடலாமா... ந்னு தான் நினைச்சேன்!...

நீ அன்னைக்கு அந்த மாதிரி சொல்லியிருந்தா
எவ்வளவு பெரிய பிரச்னை ஆகியிருக்கும் தெரியுமா?...

அதெல்லாம் பொண்ணைப் பெத்தவங்களோட பயம்...
அதுதான் இயற்கை... எல்லாருக்கும் இப்படித்தான்...
நாம தப்பா எடுத்துக்கக் கூடாது... சரண்!...

எங்கோ வெறித்திருந்தாள் சரண்யா...

ஒவ்வொரு கட்டத்திலயும்
ஒவ்வொரு மாதிரியான பயம்!..
எல்லாத் தலைமுறைக்கு இடையிலயும்
எவ்வளவோ இடைவெளி இருக்கு!...
எவ்வளவோ பிரச்னையும் இருக்கு!...

மௌனம் கலைத்து சரண் பேசினாள்..

அதுக்கப்புறம் அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்....
அம்மா ஒரு தடவை உன்னை மார்கெட்....ல பார்த்திருக்காங்க...
ஆனா - கூட்டத்தில மிஸ் பண்ணிட்டாங்க...
வீட்டுக்கு... வந்து அப்பா கிட்ட சொன்னப்போ
இன்னொரு தடவை பார்த்தா வீட்டுக்கு கூட்டிட்டு வா... ன்னார்.

அடிக்கடி என் கையப் புடிச்சிக்கிட்டு -
அநியாயமா சந்தேகப்பட்டு ஒருத்தனை திட்டிட்டனே...
இந்தப் பாவம் எங்கே போய்த் தீரும்..ன்னு... மனசு உடைஞ்சி அழுவார்...

சலனமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான் விசு...

என்னமோ.. விசு... இப்படியெல்லாம் ஆகும்..ன்னு நெனைக்கலை...
ஆனாலும் எப்படியோ நல்லவிதமா போய்க்கிட்டு இருக்கு....

அவசியம் ரேவதிய அழைச்சுக்கிட்டு நீ வீட்டுக்கு வரணும்...
இதான் என்னோட அட்ரஸ்!...

ஆகட்டும் சரண்!... அவசியம் வர்றேன்!...

நேரம் ஆகிக்கிட்டுருக்கே... பஸ்ஸை இன்னும் காணோமே!...

சரண்யாவிடம் பரபரப்பு கூடியது..

பதற வேணாம்.. நம்ம கடை வாசல்ல தான் வந்து நிற்கும்!...

சொல்லி முடிப்பதற்குள் -
தஞ்சாவூருக்குச் செல்லும் சூரிய மூர்த்தி பளபளப்பாக வந்து நின்றது...

மாயவரம்... கும்மோணம்... பாபநாசம்... தஞ்சா....வூர்!...
மாயவரம்... கும்மோணம்... பாபநாசம்... தஞ்சா....வூர்!...

வெளியே தலையை நீட்டியபடி சத்தம் போட்டார் - நடத்துனர்...

மாமா!...

என்னடா மாப்ளே!...

தஞ்சாவூருக்கு ப்ளஸ் ஒன்னு!...

ஓகே!... ரவி கிட்டயும் சொல்லிடு!...

சொல்லிட்டா போகுது... ரவீ...ய்!.. தஞ்சாவூருக்கு ப்ளஸ் ஒன்னு!..

பேருந்தின் பின் வாசலில் நின்று கொண்டிருந்த
ரன்னிங் செக்கர் ரவி - சரி... சரி.. என்று, தலையாட்டினான்...

சரண்யா புறப்பட ஆயத்தமான வேளையில் -
கீர்த்தியின் கைகளில் பை ஒன்றைக் கொடுத்தான் - விசு...

அதில் நிறைய பழங்களும் சாக்லேட்களும் இருந்தன...

விசு ... என்ன இதெல்லாம்!... - சரண்யா தடுத்தாள்...

இருக்கட்டும் சரண்... பிள்ளைகளை பத்திரமா பார்த்துக்கோ!...

கீர்த்தியை ஏற்றி விட்டபின்
தானும் பேருந்தில் ஏறினாள் - சரண்யா...

மற்ற பைகளைத் தூக்கிக் கொண்டு ஏறிய விசு -
அந்தப் பக்கம் மூன்று பேர் அமரும் இருக்கையில் அமர வைத்தான்...

கீர்த்தி கையை வெளிய நீட்டிடாம பார்த்துக்கோ!...

கீர்த்தி... விசுவுக்கு டாட்டா சொல்லுமா!...

கீர்த்தி பிஞ்சுக் கைகளை அசைத்தவாறு சிரித்தாள்...
இளையவன் தோளில் தூங்கிக் கிடந்தான்...

சரி.. விசு... நா போய்ட்டு வர்றேன்!...

ஆகட்டும் சரண்!...

பேருந்து மெல்ல நகர்ந்தது...
கை அசைத்தவாறே - இறங்கிக் கொண்டான் விசு...

பேருந்து இந்தப் பக்கமாக வளைந்து திரும்பி -
நெடுஞ்சாலையில் வேகமெடுத்தது...

சரண்யாவின் கண்கள் திரண்டிருந்தன...
அம்மா!.. - என்றவாறு துடைத்து விட்டாள் கீர்த்தி..
**************

அங்கே - தேன்மொழி கூல்ட்ரிங்ஸ்...

அண்ணே.. அந்த அக்காகிட்டே ஏன் பொய் சொன்னீங்க?..

என்னடா பொய் சொன்னேன்!?..

சொன்னீங்க தானே!...

சரி.. சரி.. போய் வேலையப் பாரு!..
ஃஃஃஃஃஃஃ

88 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... கூல்ட்ரிங்க்ஸ் ரெடியா?

   நீக்கு
  2. இங்கே குளிர் பத்து நாடகளுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது....

   நேற்று விடியற்காலையில்
   சாரல் மழை....

   இருந்தாலும்
   தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ்.. ஆகா!..

   நீக்கு
 2. இன்று எனது சிறுகதையை வெளியிட்டுள்ள அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதைகள் அனுப்பி கௌரவப்படுத்திவரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. தொடரட்டும் சேவை.

   நீக்கு
  2. எனக்கு ஊக்கமளித்தது தாங்கள் தானே!..

   நீக்கு
 3. இன்று எனது சிறுகதையை
  வாசிக்கவும் நேசிக்கவும் வருகை தரும்
  அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 4. வேலைத் தளம் அழைக்கிறது..
  பிறகு வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான கதை. முடிவு யூகம் செய்தேன். அதே போல்! சிக்கென்ற வார்த்தைகளில் உணர்ச்சிப் பிரவாகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> சிக்கென்ற வார்த்தைகளில் உணர்ச்சிப் பிரவாகம்.. <<<

   கடைசி சில வரிகளின் நானும் கலங்கி விட்டேன்...

   தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இம்மாதிரி நிகழ்ச்சி நடந்தது உண்டு. அந்தப் பெண் டெக்னிகல் இன்ஸ்டிட்யூடில் படிக்கையில் கூடப் படிக்கும் ஒருவர் இந்தப் பெண்ணிடம் இருந்து குறிப்பு எடுக்க ஒரு புத்தகத்தை இன்ஸ்டிட்யூடில் வகுப்பு நடக்கும்போது வாங்கிவிட்டுப் பின்னர் திருப்பித் தர வீட்டுக்கு வந்தபோது அந்தப் பெண்ணின் அப்பா அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொள்ள அந்தப் பெண்ணை அனுமதிக்காததோடு அப்படியே வாங்கிக் கிழித்தும் போட்டார். அதன் பின்னர் அந்த நபர் அந்தப் பெண்ணுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். என் அப்பா செய்ததுக்கு நான் என்ன செய்யமுடியும் என அந்தப் பெண் கேட்டபோதும் கடைசி வரை பேசவே இல்லை. ஆனாலும் அந்த நிகழ்வின் முடிவு இப்படி இல்லை. அவர் வேறே ஊருக்கு வேலை மாற்றல் ஆகிச் சென்று விட்டார். அந்தப் பெண் அதன் பின்னரும் படித்து வேலை பார்த்துக் கல்யாணமும் ஆனது.

   நீக்கு
 6. மனதை நெகிழச் செய்யும் கதை
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. கதை நன்றாக இருக்கிறது.

  //அண்ணே.. அந்த அக்காகிட்டே ஏன் பொய் சொன்னீங்க?..

  என்னடா பொய் சொன்னேன்!?..

  சொன்னீங்க தானே!...

  சரி.. சரி.. போய் வேலையப் பாரு!..//


  கதை நிறைவு பெற்றது போல் இருந்தது , மனதில் தொடருது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> கதை நிறைவு பெற்றது போல் இருந்தது, மனதில் தொடருது... <<<

   தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. அன்பின் ஜி
  முடிவு மனதை வருத்தியது எங்குதான் காதல் இல்லை ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   >>> எங்குதான் காதல் இல்லை? ..<<<

   இங்கு காதல் இல்லையே!..

   தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. விசு கூறியதாகச் சொல்லப்பட்ட பொய்யில், இரண்டு விதமான பொய்கள் தோன்றியது. ஒன்று அன்றைக்கு விசு உண்மையாகவே காதல் கடிதம் கொடுக்கச் சென்றிருந்து, அவமானப்பட்டு திரும்பியிருக்கலாம். இரண்டு கல்யாணம் ஆகிவிட்டதாக கூறியது பொய்யாக இருக்கலாம். இந்த இரண்டில் எது நிஜமான பொய்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசுவுக்கு அவளிடமும், அவளுக்கு விசுவிடமும் காதல் இருந்தது உண்மையே...

   நீக்கு
 12. @ kg gouthaman...

  >>> இந்த இரண்டில் எது நிஜமான பொய்?.. <<<

  அதுதாங்க எனக்கும் தெரியலை!..

  தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனக்குத் திருமணமானதாகவும் மனைவி பெயர் என்று சொன்னதும்தான் பொய். அதுதான் கதையை மேன்மைப்படுத்துது

   நீக்கு
 13. @ KILLERGEE Devakottai...

  >>> விசுவுக்கு அவளிடமும், அவளுக்கு விசுவிடமும் காதல் இருந்தது உண்மையே... <<<

  என்ன இது.. இன்னும் ஒருத்தரையும் காணோமே.. - ன்னு நெனைச்சேன்..

  பத்த வெச்சாச்சா!?...

  அன்பின் ஜி..
  தங்களன்பின் வருகையும் கருத்துரையும்.. ஆகா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாதூஊஊ இருவருக்கும் காதலாஆஆஆ ?:), என்னை விடுங்கோ இப்பவே காண்ட் கோர்ட் போய் இதுக்கொரு முடிவு கட்டுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)

   நீக்கு
  2. கண்டக்டர் மாமா நம்ம ஊருலதான் பொண்ணு எடுத்து இருக்காரு அவரு ஏற்கனவே விசுவைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கில்லர்ஜி ஊரிலயா? அப்போ கில்லர்ஜியையும் கூண்டில ஏத்திட வேண்டியதுதான் ஜாட்சிக்காக:)..

   நீக்கு
  4. ஹலோ கண்டக்டர் மாமா இப்போ விவாகரத்து வாங்கிட்டாரு... அதனால இந்த கேஸிலிருந்து என்னை நீக்கி விடவும். நான் ஆறு மாசம் உகாண்டா போறேன்.

   நீக்கு
  5. அப்போ அவரின் விவாகரத்துக்கு கில்லர்ஜி உடந்தையாஆஆ?:) இதுக்கொரு கேஸ் போட்டிட வேண்டியதுதேன்ன்ன்ன்:)... உகண்டா எயார்போர்ட்டில பொலீஸ் வெயிட்டிங்:).. காப்புடன்:)

   நீக்கு
 14. துரை அண்ணனின் கதை என்றதும் படிக்கும் ஆவலில் ஓடி வந்தேன், பாரதிராஜா படம் போல கிராமத் தழுவல் எப்பவும் இருக்கும் உங்கள் கதையிலும்... மிக அழகு.

  நம் கலாச்சாரத்தைச் சுட்டிக் காட்டி நிற்கும் கதை, என்னதான் காதல் அன்பு எனினும் , திருமணம் என்ற ஒரு பந்தத்துள் நுழைந்தபின், நாகரீகமாக நடந்துகொள்ளும் பண்பாடு.

  அதுதானே எப்படி மாமா முறை? ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமா என்பது முன்பின் தெரியாத யாரையும் குழந்தைகள் அழைக்கும் முறை. இதில் ஒரு அர்த்தம் தமிழ் கலாச்சாரத்துல இருக்கு. அம்மாவின் சகோதரன் மாமா. அப்படி விளிக்கும்போது அம்மாவுக்கு அது களங்கத்தை உண்டாக்குவதில்லை.

   நீக்கு
  2. அதிரா எங்க ஊருல போலீஸ்காரவுங்களைக்கூட மாமா என்று உரிமையுடன் அழைப்போம்.

   நீக்கு
  3. ஹா ஹா ஹா நேக்கு தெரியும் ஆனா இக்கதையில் அக்குழந்தை மாமா எனும்போது அவர் ஒருகணம் திடுக்கிடுறாரெல்லோ அங்குதான் இடிக்குது ஹா ஹா ஹா:)...
   நெ தமிழன் ஏன் நேற்றைய போஸ்ட்டில ஒளிச்சுத் திரிகிறார்:)

   கில்லர்ஜி நான் ட்றம்ப் அங்கிளையும் மாமா எனத்தானே அழைக்கிறேனாக்கும்:)..

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. //23 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:44
   இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//

   ஸ்ரீராம் எனக்கு இந்த கருத்து என்னானு உடனே தெரிஞ்சாகணும் :)

   நீக்கு
  6. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) அது ஶ்ரீராமுக்கே தெரியாது:)

   நீக்கு
  7. இங்கு என்ன எழுதி அழிக்கப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்ததில்...

   அதைச் சொல்லமா வேண்டாமா என்றும் தெரியவில்லை.

   சரி, எனக்குத் தெரியாது என்றே வைத்துக்கொள்வோம்!

   நீக்கு
  8. @sriram

   https://zero-to-three.s3.amazonaws.com/images/1015/b010ca7e-88c5-46a8-8699-552fed04c57d-landscape_small.jpg?1473438952

   நீக்கு
 15. துரை சார் பாதி வரை படித்திருக்கேன். படித்து முடித்தபிறகு கருத்திடுகிறேன்

  பதிலளிநீக்கு
 16. கதை அருமை. ரிஷபன் சார் பாணி. உரையாடல்களில் நாம் கதையைப் புரிஞ்சிக்கணும். Well Done துரை செல்வராஜு சார்.

  காதல் அவ்வளவு மகத்தானதா அல்லது எனக்குத்தான் அதில் அவ்வளவு சென்டிமென்ட்ஸ் இல்லையா? கிடைக்காதவளை நினைத்து நம் வாழ்க்கையை ஏன் முறித்துக் கொள்ளணும்? இதைப் பற்றிய அனுபவங்களை எல்லாம் பொது வெளியில் எழுத முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெரி ப்ராக்டிக்கல் thinking .இது காதலுக்கு மட்டுமில்லை படிப்பு வேலை எல்லாத்துக்குமே பொருந்தும்

   நீக்கு
  2. /தொலைந்த காதலை தூக்கி சுமக்காதீர்கள் தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும் //
   இப்போ மனசு ..குமார் பக்கம் 96 மூவி பற்றிய கடிதம் பதிவில் படிச்சேன் :) அப்படியேயுங்கள் கருத்தை பிரதிபலிப்பது போலிருந்தது

   நீக்கு

  3. அப்படி அர்த்தமில்லை நெ தமிழன்.. காதலோ இல்லை துக்கமோ நம் மனதை அதிகம் பாதித்தால், அதிலிருந்து மீள சிலருக்கு நீண்ட நாட்கள் தேவைப்படும்... அதி அவர்களின் சூழல் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பது என் கருத்து.... மற்றும்படி மாறாது என்றில்லை.

   நீக்கு
  4. //தொலைந்த காதலை தூக்கி சுமக்காதீர்கள் தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும் ///

   காதல் தொலையுமா?

   அல்லது,

   தொலைவது காதலா?

   நீக்கு
  5. கலைவது எல்லாம்
   மேகம் ஆகலாம்..
   தொலைவது எல்லாம்
   காதல் ஆகாது!..

   நீக்கு
  6. //காதல் தொலையுமா?

   அல்லது,

   தொலைவது காதலா?//

   ayyyaang aaaa
   https://previews.123rf.com/images/dimjul/dimjul1508/dimjul150800012/43692754-portrait-of-sad-crying-baby-girl-on-white.jpg

   நீக்கு
  7. ஹா... ஹா... ஹா...

   அய்யாங் போட்டோ நல்லாயிருக்கு!

   நீக்கு
  8. ///
   ஸ்ரீராம்.23 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:57
   //தொலைந்த காதலை தூக்கி சுமக்காதீர்கள் தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும் ///

   காதல் தொலையுமா?

   அல்லது,

   தொலைவது காதலா?//

   ஆங்ங்ங்ங் இதுக்குத்தான் ஸ்ரீராம் மாதிரிக் கவிஞர்கள் வேணுமென்பது:) அப்பப்ப கை கொடுக்க:).. அஞ்சுவுக்கு சமையல்தான் தெரியாது என நினைச்சிருந்தேன்.. காதலுமோ?:) ஹா ஹா ஹா ஹையோ வழி விடுங்கோ. வழி விடுங்கோ.. இன்னொரு கொயந்தை அழுமுன் மீ ரன்னிங்:))

   நீக்கு
 17. கதையில் சரண்யா ப்ராக்டிகல். விசு சென்டிமென்ட் மற்றும் நல்லவன்.

  பொதுவா ஆண்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். பெண்கள் எந்த ஏமாற்றத்தையும் பற்றிக் கவலைப் படாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழறவங்க. அதுனால விசு செய்தது யாருக்கும் பிரயோசனமில்லாத வெட்டி வேலை. ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவா ஆண்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். பெண்கள் எந்த ஏமாற்றத்தையும் பற்றிக் கவலைப் படாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழறவங்க//////

   இது யாருடைய ஸ்டேட்மெண்ட்ட்ட்ட்ட்:) இப்பவே போகிறேன் மீ 2 க்கு பூஸோ கொக்கோ:)...

   ஆண்கள் நம்பிக்கைக்குரியவர்களாமே//// ... பன்மையில் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்..... இதை என்னால தாங்க முடியல்ல:) என்னைத் தூக்கி தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)

   நீக்கு
  2. அதானே நானும் கவனிக்கல இந்த ஸ்டேட்மெண்டை :)
   சில ஆண்கள்னு சொன்னாலும் பரவால்ல :)

   நீக்கு
  3. //என்னைத் தூக்கி தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)//


   இத்தினி நாளும் குதிக்கப்போறேன்னு கப்ஸா விட்டுட்டு இப்போ உங்க குண்டூ உடம்ப நாங்க தூக்கி போடணுமா ஆஆ ??
   ஸாரி நானா வரல இந்த விபரீதத்துக்கு என் கைக்கு இன்சூரன்ஸ் எடுத்துட்டு ட்ரை பண்றேன்

   நீக்கு
  4. //பன்மையில் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்.....// - நான் தர்மர் மாதிரி என்பதாலும், அவருடைய பார்வையில் உலகில் உள்ள ஆண்கள் எல்லாம் நல்லவராகத் தெரிகிறார்கள் என்று சொன்னால், என்னை நானே பாராட்டிக்கொள்வதாகச் சொல்லிவிடுவீர்கள்.

   நீக்கு
  5. http://www3.allaroundphilly.com/blogs/pottstown/openmike/uploaded_images/BIG_CAT_FOUND_Spoh-760994.JPG

   நீக்கு
  6. //நெல்லைத் தமிழன்23 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:58
   //பன்மையில் சொல்லிட்டார்ர்ர்ர்ர்ர்.....// - நான் தர்மர் மாதிரி என்பதாலும்,///

   இதுக்கு மேலயும் இந்த உசிரு உடம்பில இருக்குமோ?:)) மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன் ஃபயர் எஞ்சினுக்கு உடனே அடிச்சு என்னைக் காப்பாத்துங்கோ:)) பிறகு குளிரில விறைச்சுப்போவேனெல்லோ:))

   நீக்கு
 18. சரண் குழந்தையும்,குட்டியுமாக. விசு கடையும்,வியபாரமும்,நல்ல எண்ணமுமாக. ரேவதி கற்பனையில். கடை பையன் கேள்வி கேட்டுவிட்டான்.நாமும் கற்பனையில் சரண்யாவையும்,விசுவையும் பலவித மனநிலைகளில்க் காண்கிறோம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 19. அருமையான கதை ..போகிற போக்கில் அப்படியே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசரத்துக்கு கூட உதவ இயலாத ஒதுங்குமிடங்கள்நிலையையும் அவலத்தையும் காட்சிப்படுத்தியது அருமை

  பதிலளிநீக்கு
 20. ஒரு காதல் மலர் அரும்புமுன்னே பறிக்கப்பட்டதோ ?
  80/90 களின் சில பெற்றோர் கொஞ்சம் அவசரப்படும் குணமுடையோர்தான் ..அது அவசரம் என்பதைவிட தற்காப்பு .
  என் நட்பு ஒருத்தியின் தந்தை தான் படங்களை பார்த்து அதில் காதல் காட்சி இல்லைனாதான் வீட்டில் பிள்ளைகளை பார்க்க அனுமதிப்பாராம் ..

  பதிலளிநீக்கு
 21. தேன்மொழி கூல்ட்ரிங்க்சில் பன்னீர் சோடா குடித்ததுபோல இருந்தது குளுமையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ தேன்மொழி பெயர்க்காரணம்தான் என்ன?!!

   நீக்கு
  2. என்ன ஒரு ஆராய்ச்சி! துரை ஸாருக்கே புதிதாய் இருக்குமோ!

   நீக்கு
  3. ஹாஹாஹா :) என் ப்ரண்ட் ஒருத்தி பேர் எலிசபெத் ரீட்டா பொற்கொடி
   என் ஸ்கூலில் படிச்ச நிறைய பொண்ணுங்களுக்கு இப்படி வால் மாதிரி பேர் இருக்கும் .
   ஆனா கூப்பிடறது ஒரு பேர்தான் :)

   நீக்கு
  4. ஏங்க.... விசு காதலித்தபோது வெட்டி வேலையா, சரண்யாவின் குரலைத் தேன் போல் இருக்கு என்று வழிந்து, அவளுக்கு தேன் மொழின்னு பட்டப் பெயர் கொடுத்திருக்கலாம் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை? என்னதான் காதலித்தீங்களோ, கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களோ...ஹாஹா

   நீக்கு
  5. ஹாஹா :) நெல்லைத்தமிழன் இங்கே ஆடு மேய்க்கப்போன இடத்தில ஒரு 21 வயது பையனை சந்தித்தேன் .அவர் தான் ஆட்டுப்பட்டிக்கு இன்சார்ஜ் ..பேசிட்டிருக்கும்போது என்கிட்டே கேட்டார் //உனது பெயருக்கு காரணம் என்னன்னு ..நானா உண்மையை சொன்னேன் தேவதைபோலஇருந்ததால் அந்த பேர்னு :) நோ offence ஓகே ஓகே :)
   உடனே சொன்னான் அவன் பிறக்குமுன்ன பேரன்ட்ஸ் ஒரு அக்ரிமெண்ட் போட்டாங்களாம் பெண்ணாயிருந்தா அவனோட அப்பா பேர் செலக்க்ஷன் ஆணாயிருந்தா அம்மாவின் செலக்க்ஷன் அவன் பெயர் paul அவன் அம்மாகிட்ட கேட்டானாம் பால் என்ற apostle நினைவா பேர் வச்சாங்களான்னு அவங்கம்மா சொன்னாராம் இல்லையில்லை எனது ex பாய்பிரண்ட் பேர் பால் அதனால் தான் இந்தப்பேர்னு

   நீக்கு
  6. //Angel23 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:28
   ஹாஹாஹா :) என் ப்ரண்ட் ஒருத்தி பேர் எலிசபெத் ரீட்டா பொற்கொடி
   என் ஸ்கூலில் படிச்ச நிறைய பொண்ணுங்களுக்கு இப்படி வால் மாதிரி பேர் இருக்கும் .
   ஆனா கூப்பிடறது ஒரு பேர்தான் :)//

   நினைச்சேன் சிரிச்சேன்:) அப்போ அஞ்சுவுக்கு “சுந்தராம்பாள் ஏஞ்சலின் முத்தம்மா” என வருமோ ஹா ஹா ஹா:)..

   நீக்கு
  7. ஹாஹா :) நான் சொல்ல மாட்டேனே சொல்ல மாட்டேனே
   ஆனா எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் தங்கம்மா ஜெகதாம்ம்பா பாரிஜாதம் கமலவல்லி மல்லிகா இப்படின்னு நிறைய அதிலும் மூணாவதா வர பேர் இருக்கு அதிலும் கடைசீ பேர் தூய தமிழ் பேர் எனக்கு நல்லவேளை மேற்சொன்ன எதுவும் வரலை .இதில் எங்கப்பாக்கு பேத்திக்கு தமிழ் பேர் வைக்கலைன்னு கவலை :) அந்த ஜெர்மன்காரன் பேரை படிச்சி மயங்கி விழவான்னு வைக்கலை

   நீக்கு
 22. ஒவ்வொரு கட்டத்திலயும்
  ஒவ்வொரு மாதிரியான பயம்!..
  //எல்லாத் தலைமுறைக்கு இடையிலயும்
  எவ்வளவோ இடைவெளி இருக்கு!...
  எவ்வளவோ பிரச்னையும் இருக்கு!...// யதார்த்தத்தை புட்டு வைத்த வரிகள்.
  துரை சாருக்கே உரிய இயல்பான சம்பவங்கள், உரையாடல்கள்.
  நல்ல இலக்கியமோ, நடனமோ, சினிமாவோ, எல்லாவற்றையும் அப்பட்டமாக வெளிப்படுத்திவிடக் கூடாது, வாசகர்களின், ரசிகர்களின் யூகத்திற்கு இடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் இது ஒரு சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. கதைகளில் கூட எல்லோரையும் நல்லவர்களக சித்தரிக்கும் ஆசிரியர் ஆனால் எனக்கென்னவோநெல்லைத்தமிழனின் கருத்துடன் உடன்படத் தோன்றுகிறது/பெண்கள் எந்த ஏமாற்றத்தையும் பற்றிக் கவலைப் படாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழறவங்க. அதுனால விசு செய்தது யாருக்கும் பிரயோசனமில்லாத வெட்டி வேலை./

  பதிலளிநீக்கு
 24. பொய் மறைத்த நிஜம்.

  கடைசி பாரா ஷார்ப் !

  பதிலளிநீக்கு
 25. அன்பின் ஸ்ரீராம்...

  இன்றைய பொழுதுக்கு தூக்கம் வரலை..
  இருந்தாலும் கொஞ்ச நேரம் தூங்கி எழுவதற்குள் இத்தனை அக்கப்போரா!?...

  மரியாதைக்குரிய காமாட்சி அம்மா தான் சொல்லிட்டாங்களே...

  >>> சரண் குழந்தையும், குட்டியுமாக
  விசு கடையும், வியாபாரமும், நல்ல எண்ணமுமாக
  ரேவதி கற்பனையில்.
  கடை பையன் கேள்வி கேட்டுவிட்டான்.
  நாமும் கற்பனையில் சரண்யாவையும், விசுவையும்
  பலவித மனநிலைகளில் காண்கிறோம்.. <<<.

  முதல்...ல - மாமா எனும் பிரச்னை..

  சரண்யாவையும் பிள்ளைகளையும் காண்கின்ற - விசு தான்
  டேய்... கண்ணா!... மாமாக் கிட்ட... (வா...) - என்று சொல்லி தடுமாறுகின்றான்...

  சரண்யாவின் மீது காதலெனும் அன்பு கொண்டிருந்த நிலையில்
  தன்னை மாமனாகப் பாவித்துக் கொள்ள மனம் வரவில்லை...

  அடுத்ததாக - கண்டக்டர் மாமா..

  பொதுவாக நமது நாகரிகத்தில்
  உரிமையுடன் பழகும் சற்றே வயதானவர்களை
  மாமா.. - என்று தாய் மாமனுக்கு நிகராக அழைத்து மகிழ்வதுண்டு...

  அன்பின் நெ.த., அவர்கள் சிறப்பாக சொல்லியிருக்கின்றார்...

  >>> மாமா என்பது முன்பின் தெரியாத யாரையும் குழந்தைகள் அழைக்கும் முறை. இதில் ஒரு அர்த்தம் தமிழ் கலாச்சாரத்துல இருக்கு. அம்மாவின் சகோதரன் மாமா. அப்படி விளிக்கும்போது அம்மாவுக்கு அது களங்கத்தை உண்டாக்குவதில்லை..<<<

  அதுதான் இங்கே!..

  அடுத்ததாக -

  விசு தான் அந்த நிலையில் இருக்கின்றானே தவிர -
  சரண்யா மனதில் எவ்வித சலனமுமில்லை..

  தன் தந்தையால் விசு அவமானப்படுத்தப்படும் போது
  ஆமாம்!.. - என்று சொல்லியிருக்கலாமோ என்று சரண்யா நினைக்கிறாள்...

  ஆனால் சொல்லவில்லை...

  இப்போதும் விசுவின் மேல் மாறாத அன்பு மட்டும் தான்!..

  அடுத்ததாக -

  ஸ்ரீராம் அவர்களின் கேள்வி..

  >>> அப்போ தேன்மொழி பெயர்க்காரணம்தான் என்ன?!.. <<<

  தேன்மொழி கூல்ட்ரிங்க்ஸ்!...

  சரண்யா கேட்கிறாள்..

  விசு உன்னைப் பத்தி நான் கேக்கவே இல்லை...
  எப்படியிருக்கே விசு?.. எத்தனை பிள்ளைங்க!..

  விசு சொல்கிறான்..
  ஒன்னே ஒன்னு.. தேன்மொழி.. அவ பேர்..ல தான் கடை...

  ஆகையினால்
  தேன்மொழி என்பது விசுவின் மகளுடைய பெயர்...

  அதுக்கப்புறம்...

  ///தொலைந்த காதலை தூக்கி சுமக்காதீர்கள்..
  தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும்.. ///

  அது ஒரு வறட்டு வாதம்!..

  இதற்குத்தான் நான் சொல்லியிருக்கின்றேன்

  கலைவது எல்லாம்
  மேகம் ஆகலாம்..
  தொலைவது எல்லாம்
  காதல் ஆகாது!..

  அடுத்ததாக

  அன்பின் ஏகாந்தன் -

  பொய் மறைத்த நிஜம்..
  கடைசி பாரா ஷார்ப்!.. -

  என்றுரைத்தார்...

  அன்பின் கௌதம் ஜி அவர்களும் காலையிலேயே கேட்டிருந்தார்கள்...

  இந்தக் கதையை எழுதிய நாளிலிருந்தே
  நண்பர்களிடம் களேபரத்தை உண்டாக்கும் - என்று நினைத்திருந்தேன்...

  அதே மாதிரி ஆனதில் மகிழ்ச்சி...

  அந்தக் கடைசிப் பாராவின் முடிச்சு
  அடுத்த வருடம் பிப்ரவரி மாத வாக்கில் அவிழலாம்!...

  இனி வேலைக்குக் கிளம்பவேண்டும்...

  அனைவருக்கும் பதிலுரைகளை நாளைக்கு வழங்குகின்றேன்..
  கருத்துரைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...

  மகிழ்ச்சி.. நன்றி...
  வாழ்க நலம்.!..

  அன்புடன்,
  துரை செல்வராஜு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //விசு சொல்கிறான்..
   ஒன்னே ஒன்னு.. தேன்மொழி.. அவ பேர்..ல தான் கடை...
   //

   அடடே... ஆமாம்ல... அதை விட்டுட்டேன் பாருங்க...!

   நீக்கு
 26. அன்பின் அதிராநந்தையும் அன்பின் ஏஞ்சலினும்
  களத்தில் அடித்து ஆடியதில் மிகுந்த கலகலப்பு..

  அவர்களுக்குத் தனித்தனியாக நன்றியும் மகிழ்ச்சியும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதிராநந்தையும்//

   ஹையோ இது என்ன புது வம்பாக்கிடக்கூஊஊஊஉ டக்கெனப் படிக்க நத்தை என வருது ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))

   நீக்கு
  2. ஹையோ என் கண்ணுக்கு அது அதிரா ஆந்தைன்னு பட்டுச்சு கீகீஏ

   நீக்கு
 27. அன்பின் சகோதரி கீதா ரங்கன் அவர்களைக் காணாததில் மனக்குறை...

  இணையம் சீராகி - சீக்கிரம் பதிவுகளுக்கு வரவேண்டும்!..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 28. உள்ளம் உருக்கும் பாசமும் அன்பும் காதலும்.
  இந்தத் தியாகராஜனான விசுவுக்கு இனிய வாழ்க்கை அமையட்டும்.

  சரண்யா என்ன உணர்ந்தாளோ ,
  அன்றைய தவற்றுக்குத்தான் இன்னும் நீர் பெருகுகிறதோ.

  மாமா, அம்மாவுக்கு அடுத்த இன்னோரு அம்மான்.
  விசு அதைச் சொல்லத் தயங்கும்போது,
  அவன் மனசில் தொக்கி நிற்கும் காதல்
  வெளிப்படுகிறதே.

  நலமுடன் இருக்கட்டும் தேன்மொழி கூல் ட்ரிங்க்ஸ்.
  மிக அருமையான எழுத்து நடையில் கதையைக் கோர்த்துக் கொடுத்த துரைசெல்வராஜுவுக்கு மானம் நிறை வாழ்த்துகளும் நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
 29. நன்று பாராட்டுகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அசோகன்
   தங்களது வருகையும் பாராட்டுரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 30. அன்பின் துரை செல்வராஜ் சார்! வணக்கம்! நலமா? இந்தக் கதையை நான் வெளியிடும் தேன் சிட்டு மின்னிதழுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்! உங்களின் அனுமதி கிடைப்பின் இந்த மாத இதழில் கதை பிரசுரமாகும். அருமையான கதை! பாராட்டுக்கள்! கதையை பாராட்டி வந்த திறனாய்வுகள் மிகவும் சிறப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சுரேஷ்..

   நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பு...

   இந்தக் கதையைத் தாராளமாக தங்களது மின்னிதழில் வெளியிடுங்கள்..

   தங்களது வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!