சனி, 13 அக்டோபர், 2018

இலவச விமானப் பயணம்


1)  ஹரியானா மாநில கிராமத்தை சேர்ந்த, 70 வயதுக்கு மேற்பட்ட, 22 முதியவர்களை, விமானி ஒருவர், தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றதை, கிராம மக்கள் பாராட்டிஉள்ளனர். 






2)  சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கிய தம்பதியின் செயல், பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.






3)  .".............இதனால், செலவு அதிகரிக்கும் என்றாலும், சாலை வெட்டுக்காக காத்திருக்காமல், நேர விரயத்தை தவிர்த்து, பொதுமக்களுக்கான இடையூறுகளையும் களைந்து, விரைந்து வடிகால் பணிகளை முடிக்க முடியும். ....."


சென்னையில் முதல் முறையாக, சாலையை தோண்டாமல், நவீன தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் முயற்சியில், மாநகராட்சி களம் இறங்கி உள்ளது.








4)  "சென்னையில் சிறுவன் சிகிச்சை பெறுவதற்கும், அவரது பெற்றோர் தங்கி கவனிப்பதற்கும் ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக வழக்கறிஞர் ருக்மணி வேணுகோபால் உள்ளிட்ட மூன்று பேர் தெரிவித்தனர்......."


இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ருக்மணி வேணுகோபால் நம் பதிவுலக நண்பர் சேட்டைக்காரர் வேணுஜியின் புதல்வர்.





5)  இந்தக் குழியை மட்டுமல்ல தன் மகன் இறந்து போன இந்த மூன்று வருடங்களில் 550 குழிகளை நகரின் ஒவ்வொரு மூலையிலும் தேடித் தேடி மூடியிருக்கிறான் இந்த தகப்பன்.....

முகநூலிலிருந்து...    நன்றி ஹரிஹரசுதன் தங்கவேலு.



20 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  3. அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  4. நீங்கள் குறிப்பிட்டுக்காட்டும்

    நல்ல நல்ல பதிவுகளை நம்பி -இந்த
    நாடே இருக்குது தம்பி!

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் பாராட்ட்டுக்கள், வாழ்த்துக்கள்.


    //இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ருக்மணி வேணுகோபால் நம் பதிவுலக நண்பர் சேட்டைக்காரர் வேணுஜியின் புதல்வர்.//

    செய்தி கேட்டு மேலும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நம்ம ஏரியாவில்
    கீதா ரெங்கனின் கதை வெளியாகி இருக்கிறது.

    சு டோ கு கதை

    https://engalcreations.blogspot.com/2018/10/blog-post.html​

    பதிலளிநீக்கு
  9. போற்றத்தக்கவர்கள். பாராட்டவேண்டிய பணி.

    பதிலளிநீக்கு
  10. எட்டுகோடி ரூபாய் நிலத்தை தானமாக கொடுத்தவர்களைவிட 22 முதியவர்களை விமானத்தில் சொந்த செலவில் அழைத்து சென்றவர் மாறுபட்டவராக தெரிகிறார்.

    பதிலளிநீக்கு
  11. இன்று காலையிலிருந்து எல்லோருடைய தளமும் திறக்கிறது ஆனால் கருத்துப்பெட்டி திறக்கவில்லை.

    என்னுடையதும்...

    பதிலளிநீக்கு
  12. புற்று நோய்க்கான தானம் கொடுத்த தம்பதிகள் பற்றிய செய்தி படிச்சேன். சேட்டைக்காரரின் மகன்/மகள் பற்றி முகநூலில் அவரும் குறிப்பிட்டிருக்கிறார். மற்றவை புதுசு.

    பதிலளிநீக்கு
  13. புற்று நோய் சிகிச்சைக்காக பிக் பாஸ் வெற்றியாளர் தெலுங்கு ரூ.50 லட்சத்தையும் வழங்கி இருக்கிறாராமே

    பதிலளிநீக்கு
  14. பரோபகாரத் தந்தை என்று மூன்று வருஷங்களுக்குமுன், இந்தத் தந்தையை, இதே படத்துடன் நான் சொல்லுகிறேனில் போட்டிருந்தேன். அதே மனதுடன் இன்னும் செயல்படுவது ஆச்சரியமளிக்கிறது. மனதிருந்தால் எத்தனை விதமான ஒத்தாசைகள் செய்ய முடிகிறது? நல்ல செய்திகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!