ஞாயிறு, 21 அக்டோபர், 2018

காதுகளை பங்ச்சர் பண்ணிட்டாங்க மாமா...



 "ஒண்ணும் இல்லை...   ஒண்ணும் இல்லைனு சொல்லியே காதுகளை பங்ச்சர் பண்ணிட்டாங்க மாமா...."





அடடா...   வலிக்காதும்மா...  சரியாய் போயிடும்...  இதோ பாரு பொம்மை!



"அட.. நல்லாயிருக்கே..."



இதென்ன ஆப்பிளும் வண்ணத்துப்பூச்சியும்...?



இதுதான் அது!  வெற்றிலை பாக்கில் வைத்துக்கொடுக்க...



என் பாஸ் வழி உறவினர் சிறுமி பொதிகை சேனலில் பாடல் போட்டியில் கலந்துகொண்டாள்.  பின் வரிசையில் அமர்ந்து ஒரு பெரிய பெண்ணால் மறைக்கப்பட்ட அவளை காத்திருந்து டீவி மானிட்டரிலிருந்து புகைப்படங்கள் எடுத்தேன்.


இதை அந்தக் குழந்தையின் உறவுகளுக்கு அனுப்பிய உடன் அவர்களுக்கு மகிழ்ச்சி.  நான் எடுத்த பல புகைப்படங்களில் சாம்பிளுக்கு இரண்டு...  அந்தச் சிறுமி கண்களால் கேமிரா காணும் நேரம் எடுக்கப்பட்டது!



சென்னையில் மிக அதிக கனமழைனு முன்னறிவிப்பாமே....  ரெட் அலர்ட்டாமே...  கவலைப்படாதே...  அரசு ஆக்ஷன் எடுத்தாச்சு...  என்ன ஆக்ஷன்?   ஸ்கூல், காலேஜுக்கு எல்லாம் லீவு விட்டாங்க..  அதனால?  மழை போயிடுச்சு!



ஒரு ஹோம பூஜையின் சில காட்சிகள்.  


பூஜை தொடங்கும் முன்...


'பேக்'கிலிருந்து இப்போதுதான் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது!


மலர்கள் தயார்.

41 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. காதணி விழா நடந்து கொண்டிருப்பதால் அனைவரும் கையோடு மொய் கொண்டு வரவும்...

    பதிலளிநீக்கு
  3. சிவபூஜைக்கு எல்லாம் தயார்!..

    கரடி?...

    அது நுழைந்தால் தானே சிவபூஜை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... உங்கள் கற்பனை அபாரம்!

      எனக்குத் தோன்றாமல் போச்சே!

      ஆனால் வேறு வேறு நிகழ்வுகள்!

      நீக்கு
  4. //ஒண்ணும் இல்லை... ஒண்ணும் இல்லைனு சொல்லியே காதுகளை பங்ச்சர் பண்ணிட்டாங்க மாமா//

    ஹா.. ஹா.. ஸூப்பர் டயலாக்.

    பதிலளிநீக்கு
  5. புகைப்படம் எடுத்து அனுப்பியது சிறப்பு...

    பதிலளிநீக்கு
  6. குங்குமச் சிமிழ்களும் பஞ்சாம்ருத அபிஷேகமும் அருமை

    பதிலளிநீக்கு
  7. எனக்கு சிவனுக்கு தேனாபிஷேகம் செய்யணும்னு பலப்பல வருடங்களாக ஆசை. இதற்காக ஒரு முறை பஹ்ரைனிலிருந்து தேன் வாங்கி வந்திருந்தேன். எங்கு, எப்படிச் செய்யணும்னுதான் தெரியலை. கீசா மேடம் அறிந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      அக்கா கீதா அவர்களிடம் கேட்டதற்கு நான் பதில் சொல்லலாம் அல்லவா!..

      அருகிலுள்ள சிவாலய குருக்களிடம் அபிஷேக நேர்த்தியை சொல்லி விட்டால் - அதற்கான திரவியங்களை வாங்கி வரச் சொல்வார்கள்..

      அல்லது அதற்கான தொகையைக் கொடுத்து விட்டால் அவர்களே அனைத்தையும் தயார் செய்து விடுவார்கள்..

      அபிசேக திரவியங்களுக்குள் தேனும் ஒன்று..

      வெளியே வாங்கும் தேனுக்குப் பதிலாக வாங்கியுள்ள தேனைக் கொடுத்து விடுங்கள்...

      அபிசேக வேண்டுதல் எனும் போது அபிஷேக திரவியங்கள் , வஸ்திரங்கள், அலங்காரத்துக்கான மாலை அர்ச்சனைக்கான தேங்காய் பழம், தாம்பூலம், பூக்கள் இவற்றுடன் நிவேத்யமும் சேர்ந்தது.

      வாழ்க நலம்!...

      நீக்கு
    2. கீதா அக்கா என்னவெல்லாம் சொல்கிறார்களோ...

      வரட்டும் பார்க்கலாம்!..

      நீக்கு
    3. Very Sorry. காலையில் எழுதும்போது உங்க நினைவு வரவில்லை துரை செல்வராஜு சார். அவங்க இடுகையைப் படித்ததனால் அந்த நினைவுதான் மனதில் இருந்தது. . நீங்கள் இருவரும் சொல்லும் பதில் எனக்கு உபயோகமாக இருக்கும்.

      நீக்கு
    4. இப்போ சமீபத்தில் கருவிலி சற்குணேஸ்வரர் அபிஷேகத்தின் போதும் சரி, பூம்பாறையிலும் சரி தேன் அவங்களே வாங்கிட்டாங்க! அதிலும் பூம்பாறயில் ஒரு பெரிய பாட்டில் நிறைய மலைத்தேன்! எங்களுக்கு அப்படியே கொடுத்டுட்டாங்க. விநியோகம் போக மீதம் தினம் தினம் கொஞ்சம் பிரசாதமாகக் குளிச்சுட்டுச் சாப்பிடறோம்.

      நீக்கு
    5. //அபிசேக வேண்டுதல் எனும் போது அபிஷேக திரவியங்கள் , வஸ்திரங்கள், அலங்காரத்துக்கான மாலை அர்ச்சனைக்கான தேங்காய் பழம், தாம்பூலம், பூக்கள் இவற்றுடன் நிவேத்யமும் சேர்ந்தது.// ஆமாம்,உள்ளூராக இருந்தால் பிரசாதம் நாமே தயாரித்து எடுத்துச் செல்லலாம். வீணாகாத பிரசாதங்களை வெளியூர்களுக்கும் எடுத்துச் செல்லலாம். அப்படித் தான் நான் நெய்க்கொழுக்கட்டை, நம்ம நண்பருக்கும், ஆஞ்சிக்கு வடையும் எடுத்துச் சென்றேன். பூம்பாறை போனப்போ தினைமாவை நன்கு நெய்யில் வறுத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தேன் விட்டு எடுத்துச் சென்றேன்.

      நீக்கு
  8. குழந்தைக்கு ஆசிகள். அபிஷேக காட்சிக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. @நெ.த.: சிவ பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்ய வேண்டும் என்னும் உங்கள் எண்ணம் சிறப்பு! துரை சார் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. குழந்தை அழுதால்கூட அழகுதான். ஆனால் பாவம் காது குத்தி அழும்போது என்று நினைக்கும்போது....

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகள் காது குத்துக் போது பெற்றோரும் அழுகிறார்கள்.
    வலிக்காமல் இருக்க ஒரு பேஸ்ட் தடவி காது குத்துகிறார்கள்.
    அவ்வள்வுதான், அவ்வள்வுதான் என்றே காதி குத்தி விடுவார்கள்.

    அழம் குழந்தைக்கு பொம்மை காட்டியது அருமை. ஆனால் வேறு சமயத்தில் எடுத்தபடம். அதையும் குழந்தை அழுகையை நிப்பாட்டிய படத்தையும் இணைத்து விட்டீர்கள் அருமை.
    பாடும் உறவினர் பெண் , புறக்களின் மொழி, சிவ பூஜை படம் எல்லாம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். காது குத்தும்போது குழந்தை மட்டுமல்ல, குழந்தையின் அம்மா, அப்பா, சித்தி, பாட்டி, தாத்தா எல்லோரும் கண்கலங்கினார்கள். நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  12. அழகான அழுகை. வந்தவர்களுக்கு காப்பரிசியும்,கட்டிப்பருப்பும். எல்லா படங்களும் அழகு. விசேஷமானபூஜை. வாத்தியார் வந்து செய்கிரார்கள். கலசமெல்லாம் வைத்து பார்க்கவும் நன்றாக உள்ளது.பக்தி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. ஆமாம். காப்பரிசி கிடைத்தது. நன்றி காமாட்சி அம்மா,

    பதிலளிநீக்கு
  14. இப்பதான் ஒரு நிமிடத்தில் வலிக்காமல் காது குத்திவிடுகிறார்களே.
    இன்னும் பிறந்த நாளுக்குக் கத்தவிட்டு அழ வைத்து.பாவம் இந்த பாப்பா. அன்பு வாழ்த்துகள்.

    அபிஷேகம் அருமை.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. கடைசி புகைப்படம் - என்ன பூ அது?

    பதிலளிநீக்கு
  16. புறாக்கள் பேசிக்கொள்வது அழகு. எல்லாமே நல்லா இருக்கு :)

    பதிலளிநீக்கு
  17. எங்க குட்டிக்குஞ்சுலுவின் காது குத்து நினைவில் வந்தது. பட்டுக்குஞ்சுலு இப்போ என்னைப் பாட்டினு கூப்பிட ஆரம்பிச்சிருக்கு. ஆனால் ரொம்ப யோசிச்சுச் சொல்றது. தாத்தாவைப் பார்த்ததும் தாத்தானு சொல்றாப்போல் என்னைப் பார்த்ததும் பாட்டினு சொல்றதில்லை! ஹிஹிஹி, ரொம்ப இளமையாத் தெரியறேனோ? :)))))))

    பதிலளிநீக்கு
  18. இந்த மாதிரிக்குங்குமச் சிமிழ் ஆனால் மேலே நம்ம நண்பரின் படம் போட்டு வாங்கி இந்த வருஷம் நவராத்திரிக்குக் கொடுத்தேன். :))) இதே போல் ஆப்பிள், வண்ணாத்திப்பூச்சி எல்லாமும் இருந்தது. ஆனால் நம்ம தேர்வில் எப்போதுமே நண்பருக்குத் தான் முதலிடம்.

    பதிலளிநீக்கு
  19. ருத்ர ஏகாதசினிக்கான ஏற்பாடுகளா? சிவனார் தயாராகிறாரே? சஷ்டி அப்த பூர்த்தி? பீமரத சாந்தி? சதாபிஷேகம்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!