திங்கள், 29 ஜூலை, 2019

"திங்க"க்கிழமை : பருப்புப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

பருப்புப் பொடி,  இட்லி மிளகாய்ப் பொடி :

பெங்களூர் வந்திருந்தபோது, என் பையன், பருப்புப் பொடி போட்டு சாதம் சாப்பிடறேன் என்றான். நான் மெனெக்கெட்டு, கூட்டு, கரேமது, குழம்பு இல்லைனா சாத்துமதுன்னு பண்ணினால், ஆஹா ஓஹோன்னு சொல்லாமல் சாப்பிடுவான். அவனுக்கு தொகையல் சாதம், உளுத்தமா பச்சிடி  இல்லைனா, பருப்புப்பொடி சாதம், ஏதேனும் கொஞ்சமா காய் அல்லது கூட்டு, இல்லைனா பருப்பு சாதம், வெந்தயக் குழம்போ இல்லை கரேமதோ என்று எளிய, சுலபமாகப் பண்ணக்கூடியவைகள் ரொம்பப் பிடிக்கும்.  அட..பரவாயில்லையே என்று பருப்புப் பொடி செய்தேன்.

இட்லி, தோசை என்று எதைப் பண்ணினாலும், சட்னி, சாம்பார்லாம் எனக்குப் பிடிக்காதுப்பா. ஒண்ணு மிளகாய்ப்பொடி  இல்லைனா, தயிர் இது போதும்பா என்பான்.  அதனால் இட்லி மிளகாய்ப்பொடியும் செய்தேன். இரண்டின் குறிப்பும் இந்த வாரம்.

பருப்புப் பொடி

தேவையானவை

துவரம்பருப்பு 2 கப்
சிவப்பு மிளகாய் வற்றல் 4 (நான் ஒரு காஷ்மீரி மிளகாய் நிறத்துக்காக உபயோகித்தேன். அதாவது 3 வற்றல் மிளகாய், 1 காஷ்மீரி மிளகாய்)
பெருங்காயம் ஒரு சிறு துண்டு
மிளகு – 12-20
கருவேப்பிலை – 5 ஆர்க்
வறுக்க – சிறிது நல்லெண்ணெய்
உப்பு தேவையான அளவு

செய்முறை :

கடாய்ல சிறிது எண்ணெய் விட்டு, சூடானபிறகு பெருங்காயத்தைப் பொரித்துக்கொண்டு தனியே எடுத்துவைக்கவும்.

பிறகு மிளகாய், மிளகு, துவரம்பருப்பு போன்றவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்  (உடனே மிளகை எப்படி சிவப்பா வறுக்கறதுன்னு கேட்கக்கூடாது.  நல்லவர்களோடு சேருபவர்களும் நல்லவர்களாவதுபோல, துவரம்பருப்பு நல்லா வறுபட்டால், மிளகும் வறுபட்டதுபோலத்தான்). அடுப்பை அணைத்துவிட்டு, வறுபட்டதை எடுத்துத் தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.

சூடு இருக்கும் வாணலியிலேயே கருவேப்பிலை இலைகளைப் போட்டு பிரட்டிக்கொள்ளவும். இது கருவேப்பிலையில் உள்ள நீர்ச்சத்தை எடுப்பதற்காக.

பிறகு எல்லாவற்றையும் போட்டு மிக்சியில் ஒரு சுத்து சுத்தி, தேவையான உப்பைச் சேர்த்து அரைக்கவும்.

ரொம்பவும் நைசாக அரைக்கவேண்டாம்,  அதுக்காக ரொம்ப கரகரவென அரைத்து பருப்பு பல்லிடுக்குகளில் ஒட்டிக்கொள்வதுபோலவும் இருக்கவேண்டாம்.

அரைத்ததை ஒரு தட்டில் இட்டு, கொஞ்சம் ஆறினபிறகு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். நான் வாசனை போகக்கூடாது என்பதற்காக, அரைத்ததை பாத்திரத்தில் போட்டு பாதி திறந்துவைத்துவிடுவேன்.

இதனை நீங்க சுட சாதத்தில் நெய் விட்டுக்கொண்டு, பருப்புப் பொடியைப் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் ரொம்ப நல்லா இருக்கும்.  ஆந்திராக் காரங்க போல அதிகமா காரம் வேணும்னா மிளகாய் இரண்டு மடங்கு போட்டுக்கோங்க.  





இட்லி மிளகாய்ப்பொடி :

நான் வந்த இரண்டு நாட்களில் இங்கு இட்லி மிளகாய்ப்பொடி காலியாகிவிட்டது. அப்புறம், எங்க மாமனார் வீட்டு ரெசிப்பி கேட்டு நான் செய்தேன்.

தேவையானவை

மிளகாய்வற்றல் 1 தம்ளர்  (ரொம்ப அடைக்கக்கூடாது. ஆனால் ஓரளவு தம்ளர் நிறைவாக இருக்கணும்).  இதையே ½ தம்ளர் மிளகாய் வற்றல், ½ தம்ளர் காஷ்மீரி சில்லி என்று போட்டுக்கொண்டால், மிளகாய்பொடி நல்ல நிறமாக இருக்கும்.

உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து – 1 தம்ளர்.  பொதுவா உ.பருப்பு 2/3 பங்கும் க.பருப்பு 1/3 பங்கும் இருந்தால் நல்லது.

பெருங்காயம் – 1 சின்னத் துண்டு
எள் – கறுப்பு எள் வெள்ளை எள்ளைவிட நல்லது – 1 கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – சிறிது

செய்முறை

“பெரிய செய்முறை சொல்ல வந்துட்டார்… எல்லாத்தையும் எண்ணெயில் நன்கு வறுத்து ஆறவிட்டுவிட்டு மிக்சில பொடிக்கவேண்டியதுதானே” என்று சொன்னீங்கன்னா, நீங்க ‘எல்லாம் தெரிஞ்சவங்க. இந்தச் செய்முறையைப் படிக்கறது, என்ன மிஸ்டேக் பண்ணியிருக்கார், அதனைச் சுட்டிக் காட்டலாம் என்பதற்காகப் படிக்கிறீங்க. நடத்துங்க.

சூடான வாணலியில் எள்ளை போட்டு, அதை வெடிக்கவிடணும். பிறகு அதை ஒரு தட்டில் எடுத்து வச்சிடுங்க.

பிறகு சிறிது எண்ணெய் விட்டு, பெருங்காயம், மிளகாய், மற்றும் பருப்பை நன்கு வறுத்து, தட்டில் கொட்டி ஆறவிடுங்க.

ஆறின பிறகு, பெருங்காயம், மிளகாய், உ.பருப்பு, க.பருப்பை மிக்சில தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் எள்ளையும் சேர்த்து இரண்டு சுத்து சுத்துங்க.

இட்லி மிளகாய்ப்பொடி கொஞ்சம் கரகரவென இருந்தால் நன்றாக இருக்கும்.




பருப்புப் பொடி ரொம்ப நல்லா வந்திருந்ததுப்பான்னு பையன் சொன்னான்.  அப்புறம் அவனே நான் அங்கிருந்து கிளம்புவதற்கு சில நாட்கள் முன்பு, நீங்க பருப்புப் பொடி கொஞ்சம் பண்ணிவைத்துவிட்டுப் போங்கோப்பான்னான்.  ஆனா பாருங்க… நான் என்ன மிஷினா? அதே மாதிரி இந்த முறையும் செய்வதற்கு?  உடலுக்கு நல்லதுன்னு கூட கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து பருப்புப்பொடி பண்ணினேன்.  ரெடி பண்ணினப்பிறகு, உப்புலாம் சரியா இருக்கான்னு அவனுக்கு துளி டேஸ்ட் பண்ணக் கொடுத்தேன். அவன் சாப்பிட்டுட்டு, என்னப்பா கருவேப்பிலை வாசனை கொஞ்சம் தூக்கலா இருக்கு, அம்மா பருப்புப் பொடில இவ்வளவு கருவேப்பிலை போடமாட்டாளேங்கறான்.

இங்க இருந்த மிளகாய் வற்றல் ரொம்ப காரம் போலிருக்கு. அதுனால இட்லி மிளகாய்ப்பொடி காரமாக இருந்தது. பையனுக்கு ரொம்ப காரம் நல்லதில்லையே என்று, இன்னும் கொஞ்சம் பருப்பு வறுத்து அரைத்துச் சேர்த்தேன்.  எனக்கு ரொம்ப காரம் கம்மியாகத் தோன்றியது. ஆனால் பையன் ஒண்ணும் சொல்லலை. அப்புறம் என் மனைவிகிட்ட கேட்டேன்.. கொஞ்சம் ஜாஸ்தியே பருப்பு வறுத்து அரைத்துச் சேர்த்தேன். ஆனா அவன் கமெண்ட் பண்ணலையே என்றேன். அதுக்கு அவள், அவனுக்கு பருப்பு ஜாஸ்தியா இருந்தா எப்போதும் பிடிக்கும் என்றாள்.

நீங்களும் செய்துபாருங்கள்.

அன்புடன்


நெல்லைத்தமிழன்

104 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா... வாங்க.. வாங்க...

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்! அட பானுக்கா இன்று முதலில் வந்தாச்சு. பானுக்கா இனிய காலை வணக்கம். மற்றும் தொடரும் அனைவருக்கும்

      இன்று நெல்லையின் ரெசிப்பியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே வந்தால் நெல்லையின் தான்...

      கீதா

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆமாம் அக்கா முதல் வருகையாக வந்து விட்டார்.

      நீக்கு
    4. @கீதா ரங்கன் - //என்று நினைத்துக் கொண்டே வந்தால் // - நான் அப்படி நினைக்கவில்லை. இன்று பா.வெ ஆக இருக்குமோ என்று நினைத்தேன்.

      நீக்கு
  2. படங்களோடு விளக்கியது ஸூப்பர்.
    நானெல்லாம் எனது மகனுக்கு செய்து கொடுத்ததே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... இப்போ முயற்சி செய்யுங்களேன்!!

      நீக்கு
    2. கில்லர்ஜி நானும் அதைத்தான் சொல்ல வந்தேன் ஸ்ரீராம் சொல்லியிருப்பதை.

      நாம் நம் குழந்தைகளுக்காக அன்புடன் சிலது கற்றுக் கொண்டேனும் செய்ய முயற்சி செய்யும் போது அந்த உறவு இன்னும் பலப்படுகிறது என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

      கில்லர்ஜி நீங்களும் முயற்சி செய்யலாம்...இப்போது. உங்க மகளுக்கும் ஏதேனும் செய்து கொண்டு போங்க அவங்களைப் பார்க்கச் செல்லும் போது. வாங்கிச் செல்வதை விட நாமே செய்து கொண்டு போகும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது!

      கீதா

      நீக்கு
    3. @கில்லர்ஜி - //நானெல்லாம் எனது மகனுக்கு செய்து கொடுத்ததே இல்லை// - இதற்கு விளக்கமாக எழுதணும்னுதான் முதல்ல மொபைல்ல எழுதலை கில்லர்ஜி.

      நான் பையன் 8-கல்லூரி முதல் வருடம் வரை அவனுடன் இல்லை. பெண்ணுடனும்தான் (11 வகுப்பிலிருந்து 6 வருடங்களுக்கு மேல்). அந்த வயதுலதான், அவங்களுக்கு 'அப்பா நேரடியாக என்ன செய்தார்' என்பது தேவை. அதை மிஸ் செய்ததால், பையனுக்கு செமஸ்டர் விடுமுறையின்போது அங்கு சென்று, ஒரு சில வாரங்கள் உணவு சமைக்கும் வாய்ப்பு கிடைத்ததை உபயோகப்படுத்திக்கொண்டேன். எனக்கு மிகுந்த மனத் திருப்தி.

      நிச்சயம் நாம் செய்யும் உணவு, என்ன மாதிரிச் செய்தாலும், அவனுக்கு அம்மா சமைப்பது போல வரவே வராது. (வந்தாலும் அம்மாவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதாவது அவங்க அவங்க professionஐ குறை சொல்ல மாட்டாங்க). இருந்தாலும், அவனுக்கு மனதில், அப்பா தனக்காக வந்து செய்கிறார் என்ற எண்ணம் இருக்கும்.

      இன்று காலை 6 மணிக்கே அங்கிருந்து புறப்படணும். ஆனால் நான் 3:30க்கே எழுந்து அவனுக்கு உணவு தயார் செய்துவிட்டு, அவனுக்கு மிகவும் பிடித்த அப்பளாமும் செய்துவைத்துவிட்டு (பிளாஸ்டிக் கவரில் போட்டுவைத்தேன். 2-3 மணி நேரம் முறுமுறுவென இருக்கும்) பிறகு நான் சாப்பிட நேரமில்லாமல் கிளம்பினேன்.

      சின்னச் சின்ன விஷயங்கள்...இப்போது அவற்றை நினைக்க பசங்களுக்கு நேரம் இல்லாவிட்டாலும், அல்லது உலக வாழ்க்கையில் நம்மை மறந்தாலும், பின்பு அவைகள் நிச்சயம் நினைவுக்கு வரும்.

      எப்போதும் உடலுழைப்பால் ஒருவருக்குச் செய்யும் உதவியை அவங்க எப்போதும் நினைவில் வைத்திருப்பாங்க. பணத்தினால் செய்த உதவி எப்போதும் நினைவை விட்டு அகன்றுவிடும். இது என் அனுமானம்.

      நீக்கு
    4. கில்லர்ஜி...அதுக்காக எல்லோரும் கரண்டி பிடிக்கணும்னு சொல்ல வரலை. நம் நேரடியான உடலுழைப்பால் அவங்களுக்குச் செய்யும் உதவி அவங்க மனசுல தங்கும். நீங்க, வாழ்க்கைல மிகவும் கஷ்டப்பட்டு, உறவினர்களோடு இருக்கும் சந்தோஷத்தைத் தியாகம் செய்து எங்கேயோ வெளிநாட்டில் சம்பாதித்து அவங்க வளருவதற்கு உதவியிருக்கீங்க. அதுனால நீங்க இழந்தது அதிகம். அனைத்தும் அவங்க மனசுல நிச்சயம் வரும்.

      நீக்கு
    5. @கீதா ரங்கன் - //நாமே செய்து கொண்டு போகும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது// - இது எல்லோருக்கும் சாத்தியமில்லை கீதா ரங்கன். நாம முயற்சி எடுத்து ஏதேனும் செய்தால் போதுமானது. கில்லர்ஜி எவ்வளவோ செய்திருப்பார். எனக்கே வெளியில் இருந்து பார்க்கும்போது தெரிகிறது. சொல்லத் தயங்குகிறேன்.

      நீக்கு
  3. நெல்லை பருப்புப் பொடி அட்டகாசம்!!!!

    நானும் காஷ்மீரி வற்றல் பயன்படுத்துகிறேன் நிறத்திற்காக. அப்புறம் நானும் வாசனை போகாமல் இருக்க பாத்திரத்தில் போட்டு லேசாகத்தான் திறந்து வைப்பேன் அல்லது பெரும்பாலும் மிக்ஸியிலேயே லைட்டாகத் திறந்து வைத்துவிட்டு ஸ்பூனால் கிளறி மட்டும் கொடுத்துக் கொள்வேன்...ஏனென்றால் பாத்திரம் எக்ஸ்ற்றா ஆகாமல் இருக்குமே !!ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்... வெளிப்படையா எழுதறதுல உங்களை மிஞ்ச முடியாது.

      //பாத்திரம் எக்ஸ்ற்றா ஆகாமல் இருக்குமே !!// - சமையல் செய்வது பெரிய விஷயமில்லை. உடனுக்குடன் பாத்திரம் தேய்ப்பது பெரிய வேலை. நான் முடிந்த வரை உடனுக்குடன் பாத்திரத்தை கிளீன் செய்துவிடுவேன். ஆனால் சோம்பேறித்தனத்தினால், காலை சாதம் வைத்த குக்கரை, சாதம் வெளியில் விழாமல் இருந்த பட்சத்தில், வேறு ஏதேனும் குக் செய்ய மதியம் உபயோகப்படுத்துவேன் (அதனுள்ளேயே பாத்திரத்தில் மிஞ்சின சாதத்தோடு வைத்திருப்பதால்). அதையும் முடிந்த அளவு குறைத்துவிட்டேன்.

      எல்லோரும் இட்லி செய்வது சுலப வேலை என்று சொல்வாங்க. மாவு எடுக்கும்போது சிறிது கீழே விழும், அப்புறம் இட்லித் தட்டெல்லாம் உடனுக்குடன் தண்ணீரில் ஊறப்போடலைனா சுத்தம் செய்வது கஷ்டமாயிடும்...

      நீக்கு
  4. இது வரை அளந்து போட்டுச் செய்ததில்லை. கண்ணளவுதான். நன்றாக வரும். இப்போது உங்கள் அளவுகளையும் குறித்துக் கொண்டு விட்டேன். காரம் இதே அளவுதான் போடுவேன்.

    ஆனால் நீங்க கப் அளவு சொல்லவே இல்லையே...கப் என்றால் எந்த கப்? 200 கிராம்? கப்? அப்போ 400 கிராம் எடுத்துக் கொண்டீர்களா? சரி சரி பரவாயில்லை புரிந்து கொள்ள முடிகிறது மிளகாய் அளவு மற்றும் மிளகு பார்த்து பருப்பின் அளவை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப் என்பது ஸ்டாண்டர்டு கப்தான். இருந்தாலும், சில சமயம், மிளகாயின் வித்தியாசத்தால், அதே அளவு எடுத்துக்கொண்டாலும், காரம் ரொம்ப அதிகமாயிடும். இந்த மாதிரி பிரச்சனையைச் சந்தித்திருக்கேன்.

      நீக்கு
  5. நெல்லை உங்களை மிகவும் பாராட்டுகிறேன். மகனுக்காகப் பார்த்து பார்த்து செய்வதற்கு.

    மனமும் நெகிழ்ந்து போனது. இது மேலும் மேலும் பலப்பட வேண்டும் என்ற வாழ்த்துகளும். உங்கள் மகனுக்கு நீங்கள் நல்ல உதாரணம் நாளை அவரும் தன் குடும்பத்திற்குச் செய்வார்.

    என் அப்பாவும் எனக்கு முடியாத போது எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுச் செய்து தருவார். நினைவுகள் பல..

    என் புகுந்த வீட்டில் எல்லா ஆண்களுமே சமைப்பார்கள். குழந்தைகளுக்கும் செய்து கொடுப்பார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பார்த்து பார்த்து செய்வதற்கு. // - ஹா ஹா... இது பெரிய விஷயமில்லை. ஆனாப் பாருங்க... அவனுக்கு லீவு நாளாக இருந்தால் 3 வேளை பண்ணணுமே...அது மட்டும் கொஞ்சம் சிரமமாக இருக்கும். நான் சாதம் ஒரு வேளைக்கு மேல் போட மாட்டேன் (கார்ப் என்பதால். அப்புறம் சும்மா வளர்றவனுக்கு சோத்தை சோத்தைப் போடுவதில் எனக்கு இஷ்டம் கிடையாது)

      எங்க அப்பா எனக்காக சமைத்துத் தந்ததில்லை. ஆனால் மற்ற உதவிகள் எல்லாம் செய்வார். அம்மா மிளகாய்ப்பொடி செய்தால், அதை மிக அழகாக நிறைய பாக்கெட்டுகளில் கட்டி, வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல உதவிசெய்வார். எங்க அப்பா, அம்மா சமைக்க முடியாதபோது செய்தவைகளில் சீரக சாத்துமது, வெண்ணை கரேமது மட்டும் நினைவில் இருக்கு. அப்புறம் ஊட்டியில் அவர் மட்டும் வேலையில் இருந்தபோது, நான் போனபோது அந்தக் குளிருக்கு எனக்குச் செய்துபோட்ட சூடான முள்ளங்கி சாம்பாரும், உருளை காரக் கறியும் நினைவில் இருக்கு.

      நீக்கு
  6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை சொன்னது மூன்று வற்றலில் ஒன்று காஷ்மீரி இரண்டு வற்றல் மி என்று சொல்லிவிட்டு படத்தில் இரண்டு காஷ்மீரி ஒரு வற்றல் மி!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால என்ன கீதா ரங்கன். எனக்கு காஷ்மீரி மிளகாய் ரொம்பப் பிடிக்கும், அதன் நிறத்திற்காக. ஆனாலும் கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள். (உங்க ப்ரொஃபஷன் அதுதானே இப்போது...ஹா ஹா)

      நீக்கு
  7. “பெரிய செய்முறை சொல்ல வந்துட்டார்… எல்லாத்தையும் எண்ணெயில் நன்கு வறுத்து ஆறவிட்டுவிட்டு மிக்சில பொடிக்கவேண்டியதுதானே” என்று சொன்னீங்கன்னா, நீங்க ‘எல்லாம் தெரிஞ்சவங்க. இந்தச் செய்முறையைப் படிக்கறது, என்ன மிஸ்டேக் பண்ணியிருக்கார், அதனைச் சுட்டிக் காட்டலாம் என்பதற்காகப் படிக்கிறீங்க. நடத்துங்க.///haahhaa.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் திங்கும் கிழமை காலை வணக்கம்.

      நெல்லைத்தமிழனின் நளபாகம் இன்று.
      பருப்புப் பொடியும் , மிளகாய்ப்பொடியும்
      இத்தனை அருமையாக படங்களுடன்
      நான் செய்ததில்லை.
      மாவு அரைக்கிற அன்று மி.பொடி புதிதாக இருக்க வேண்டும்.

      பருப்புப்பொடி இங்கு அதிகம் செலவாவது இல்லை.
      செய்முறையும் படமும் சூப்பர். ஆமாம் பச்சையாகத் தான் வண்ணம் தெரிகிறது.

      மகனுக்காக இத்தனை அக்கறை காட்டும் முரளிமாவுக்கு மனம் நிறை பாராட்டுகள்.
      அவர் மகனும் தந்தை வழி நடக்க வேண்டும்.
      என் அப்பாவும் அருமையாகச் சமைப்பார்.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா....இங்க வருகிறவர்கள் எல்லோரும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போல்தானே.. அதனாலத்தான் /என்ன மிஸ்டேக் பண்ணியிருக்கார்,// - இதனை எழுதினேன்..

      நீக்கு
    3. வல்லிம்மா... நீங்கள்லாம் செய்யாததா? எனக்கும் புது மிளகாய்ப்பொடி ரொம்பப் பிடிக்கும். இங்கயும் (சென்னைல), என் மனைவி இல்லாதபோது (சில வாரங்கள் முன்பு), மிளகாய்ப்பொடி இல்லாததைப் பார்த்து கிடு கிடுவென நிறையச் செய்தேன். மனைவி வந்தபோது அவரது உறவினர்களும் வந்திருந்தார்கள். மிகவும் உபயோகமாக இருந்தது (இல்லைனா இன்னொரு வேலை அவளுக்கு இருந்திருக்கும்)

      //அவர் மகனும் தந்தை வழி நடக்க வேண்டும்.// - நீங்க வேற...இதெல்லாமா எதிர்பார்ப்பார்கள். ஆனா நிச்சயம், பெற்றோர் செய்வதை (சொல்வதை அல்லவே அல்ல) நிச்சயம் பசங்க இன்றில்லாவிட்டாலும் பிற்காலத்தில் கடைபிடிப்பாங்க. அதுல எனக்குச் சந்தேகமே இல்லை.

      எங்க அப்பா, 20 பைசா கூடத் தந்துவிட்டார் கடைக்காரர் என்பதற்காக 2 கிலோ மீட்டர் திரும்பவும் நடந்து சென்று 20 பைசாவைக் கொடுத்துவிட்டு வந்தார். நான் 4வது படிக்கும்போது, தெருவில் கிடந்த ஒரு பாக்கெட்டை (அதில் 21 ரூபாய் இருந்தது) எடுத்துவந்து கொடுத்தேன். என் அப்பா, அதை வைத்துக்கொண்டு, வாசல் படியிலேயே உட்கார்ந்திரு...யாரேனும் தேடி வந்தால் கொடுத்துவிடு என்பதும் என் நெஞ்சில் பதிந்தது. அவர் 6 மணிக்கு முன்னால் எழுவதும், இரவு 9 மணிக்கு லைட்ஸ் ஆஃப் என்ற பழக்கமும் எனக்கும் வந்துள்ளது.

      பெற்றோர்கள் எதை பசங்க கடைபிடிக்கணும்னு நினைக்கிறோமோ, அதனைச் சொல்லக்கூடாது...செய்துகொண்டே இருக்கணும் என்பது என் அபிப்ராயம்.

      நீக்கு
    4. அன்பு முரளிமா, இந்த அன்பும் கண்டிப்பும் என் அப்பாவுக்கும் உண்டு.
      இயல்பாகவே அப்படி ஒரு தந்தையிடம் வளர்ந்ததால்

      அவரிடம் நேர்மையும் சிக்கனமும் சேர்ந்தே வந்தது.
      என் சின்னத்தம்பியும் அம்மாவைப் போல் கணக்கெழுதி
      வைத்துச் செலவழிப்பான். அவன் இலாக்காவில் கையூட்டு வாங்காதவர்கள்
      குறைவு.
      அதை மனதால் கூட செய்ய மாட்டான்.
      எதற்கு இத்தனை சொல்கிறேன் என்றால்
      தந்தை எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல். தாயும் மகளுக்கு
      அப்படியே.
      உங்கள் பண்பு உங்கள் பையனிடம் கட்டாயம் வளரும்.
      இன்னோருத்தரிடம் நாம் காட்டும் அக்கறை
      எப்பொழுதும் வீணாகாது.
      பிறகு இறைவன் விட்ட வழி.

      என்றும் மக்கள் நலம் சூழ வாழ்க்கை அமைய வேண்டும் மா.

      நீக்கு
    5. ஆமாம் வல்லிம்மா. நான் கூட எம்.எஸ்.ஸி படிக்கும்போதெல்லாம் கணக்கு எழுதியதில்லை. எங்க அப்பா, ஹாஸ்டல் கணக்கு கேட்டபோது, கணக்கு நோட்டு தொலைந்துவிட்டது என்று பொய் சொல்லியிருக்கிறேன். பிறகுதான் கணக்கு எழுத ஆரம்பித்தேன். கணக்கு எழுதுவதைப்போல நல்ல வழக்கம் கிடையாது. (அப்புறம் மனைவிக்கு அந்த வழக்கம் இல்லாமல், பிறகு கணக்கு எழுதுவதே விட்டுப்போய்விட்டது). இப்போவும் ஒரு ஊருக்குச் சென்றால், மனைவி கொடுக்கும் பணத்துக்கு சரியாக கணக்கு எழுதி மிச்சத்தைக் கொடுத்துவிடுவேன்.

      கணக்கு எழுதுவதைப்போல நல்ல பழக்கம் எதுவுமில்லை என்பது என் அபிப்ராயம். இன்னொரு நல்ல வழக்கம் 9 மணிக்குத் தூங்கி 6 மணிக்குள் எழுந்துகொள்வது. இதெல்லாம் எங்க அப்பாவிடம் இருந்து நான் படித்த பழக்கங்கள்.

      எந்தக் காரணம் கொண்டும் 8:45க்குமேல் வரும் போன் கால்களை நான் எடுக்க மாட்டேன். எமெர்ஜென்சின்னா அவங்க எஸ்.எம்.எஸ் அனுப்பட்டும் என்று விட்டுவிடுவேன்.

      நீக்கு
    6. அதுதான் சரி முரளிமா. சீக்கிரம் படுக்கப் போகணும். சீக்கிரம் எழுந்திருக்கணும்.
      நல்ல வழக்கம் .உடல் நலம் சீராக இருக்கும்.

      நீக்கு
  8. மி பொடிக்கு இப்படி பின்னக் கணக்கு எல்லாம் சொன்னா மீக்கு சுத்தமா புரியாது ஹிஹிஹிஹி..

    அளவு கப் எது என்று சொன்னீங்கனா இந்த 1/3 ஒப்போத்திடலாம் அள்வு கப் 200 கிராம் என்றால் 1/3 அளவு கப் அந்த செட்ல உண்டு....ஆனா...இந்த 2/3 ல்லாம் ஹிஹிஹிஹி.....

    நெல்லை இங்கு மி வ காரம் தான். நானும் இங்கு வந்து சென்னையில் செய்வது போல மி பொ செய்து செம காரமாகிவிட்டது. ஸோ கூடவே பருப்பு வறுத்துச் செய்தேன். இங்கு குண்டூர் சில்லி என்று இரு வெரைட்டி அருகில் உள்ள க்டையில் கிடைக்கிறது கூடவே காஷ்மீரி சில்லி.

    உங்கள் அளவையும் குறித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் நீங்கள் கப் அளவு என்ன என்று சொன்னால் நல்லாருக்கும்...

    பருப்பு அளவு எல்லாம் பார்த்தால் 200 கிராம் போலத்தான் இருக்கிறது..படத்தில். ஆனால் படம் ஏமாற்றும்.

    பொடி நல்லாருக்கு நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... என்னை மாதிரி கத்துக்குட்டிகளுக்குத்தான் அளவுலாம் சொல்லணும். நீங்க ரெகுலராக செய்பவர்கள். உங்களுக்கு எல்லாம் மனசுலயே இருக்கும். இப்போவுமே எனக்கு சில ஐட்டங்களுக்கு (மோர்க்குழம்பின் நிறைய வகைகள்) ரெசிப்பி பார்த்துக்கொள்வேன். இல்லைனா மறந்துவிடும். எதையாவது போட மறந்துடுவேன்.

      ஆனா என்னவோ ஒரு சக்தி என்னை இயக்குவதாக நான் நம்புகிறேன்.

      எதையும் திட்டமிட்டு என்னால் சமைக்க முடியாது. கிச்சனில் நுழையும்போது என்ன செய்வது என்று அப்போ நினைத்துத்தான் பண்ணுவேன். நான் இன்று, புளிசேரி, உருளை கட் கரேமது செய்யலாம் என்றுதான் நேற்று நினைத்திருந்தேன். ஆனால் காலை கிச்சனில் நுழைந்த பிறகு பீட்ரூட் கறி, செளசெள கூட்டு, அப்பளாம் என்றெல்லாம் மாறியது.

      இதை ஏதோ போகிறபோக்கில் சொல்லவில்லை. நான் கண்டு உணர்ந்தது.

      நீக்கு
    2. /அருகில் உள்ள க்டையில் கிடைக்கிறது கூடவே காஷ்மீரி சில்லி. // - மூன்று வாரங்களுக்கு முன்பு, அடையாறில், பக்கத்தில் இருந்த கடைகளில் காஷ்மீரி சில்லி ஸ்டாக் இல்லை, யாரோ மொத்தமாக வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள் என்று சொன்னார்கள். நானும் ஒவ்வொரு கடையாத் தேடி, கடைசியில் நடேசனில், ஒரே ஒரு பாக்கெட் மாத்திரம் இருக்கு என்று சொன்னார்கள். அதை வாங்கிவந்தேன் (கோடவுனிலும் ஸ்டாக் இல்லை என்றார்கள்).

      எனக்கு காஷ்மீரி மிளகாய், மி.பொடிக்கு மிகவும் பிடித்தமானது.

      நீக்கு
  9. //“பெரிய செய்முறை சொல்ல வந்துட்டார்… எல்லாத்தையும் எண்ணெயில் நன்கு வறுத்து ஆறவிட்டுவிட்டு மிக்சில பொடிக்கவேண்டியதுதானே” என்று சொன்னீங்கன்னா, நீங்க ‘எல்லாம் தெரிஞ்சவங்க. இந்தச் செய்முறையைப் படிக்கறது, என்ன மிஸ்டேக் பண்ணியிருக்கார், அதனைச் சுட்டிக் காட்டலாம் என்பதற்காகப் படிக்கிறீங்க. நடத்துங்க.//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....நெல்லை பின்ன உங்களைப் பாராட்டிக் கொண்டே கலாய்க்கனும்ல.....இன்னும் கீதாக்கா வரலை...வந்தாங்கனா இஃகி இஃகி நு வருவாங்க பாருங்க!!! உங்களை நல்லா கலாய்க்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா)வுக்கு பாராட்டத்தான் தெரியும்.

      அதைவைத்து கீதா என்ற பெயரில் உள்ளவங்கள்லாம் எல்லோரையும் எப்போதும் பாராட்டுவாங்கன்னு எடிர்பார்ப்பது டப்ப்பா?

      நீக்கு
  10. காலை வணக்கம் அனைவருக்கும். இன்று சென்னை நோக்கிய பயணம் இப்போ ஆரம்பம். மறமொழி தாமதமாகும்.

    இது போன பெங்களூர் பயணத்தில் செய்தது. வெளியிட்ட எ.பிக்கு நன்றி. காலையில் பாட்ரூட் கரேமது, சௌசௌ கூட்டு, புளிசேரி, அப்பளாம் செய்து வைத்துவிட்டுக் கிளம்புகிறேன். மகனின் செமஸ்டர் விடுமுறை இன்னும் பத்து நாட்களில் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைல்ல தட்டச்சு செஞ்சா எழுத்துப் பிழை வரும்தானே (கண்ணாடி இல்லாததால்). பீட்ரூட் கரேமது என்று படித்துக்கொள்ளவும். அது bad ரூட்டாக எனக்கு வராது. நல்லாவே செய்வேன்.

      நீக்கு

  11. ///சூடான வாணலியில் எள்ளை போட்டு, அதை வெடிக்கவிடணும். ///

    எதை வாணலியைவா? எப்ப நீங்க தீவிரவாதியாக மாறீனிங்க நெல்லைததமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செங்கோட்டையில் வளர்ந்து கட்சி மாறி மதுரைத் தமிழன் என்று பெயர் வைத்துக்கொண்ட துரை.

      இப்போதான் மோர்க்கூழ் பண்ணி அனுபவப் பட்டிருப்பீங்க. இன்னும் சந்தேகமா? செய்முறையைப் படித்து மனைவி ஆபீஸ் சென்றபிறகு முயற்சி பண்ணுங்க. அவங்க ஆபீஸ்லேர்ந்து வந்த பிறகு நீங்க கேட்டிருக்கும் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

      நீக்கு
    2. அதென்ன பாட்ரூட் கரேமுது? :))))

      நீக்கு
    3. கீசா மேடம்... 'பீட்ரூட் கரேமது' என்றுதானே எழுதியிருக்கேன். உங்களுக்கு மாத்திரம் 'பாட்ரூட்' என்று தெரிகிறதா? ஹா ஹா (நீங்கள் அந்தப் பத்தியிலிருந்து எடுத்துப் போட்டாலும் என் பதில் இதுதான்)

      நீக்கு
  12. வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் வரப் போகும் துரைக்கும் நல்வரவு, வணக்கம், பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்..

      ஊர்க்கோவில் விசிட் முடிந்ததா? பிள்ளையார் சிறபத்துடன் (மாமா சின்ன வயதில் வழிபட்டது) இடுகை ரெடியா?

      நீக்கு
    2. நேத்திக்குப் பிள்ளையாரை எடுக்கலை!

      நீக்கு
    3. துரை எங்கே? இன்னிக்கு ஏன் இன்னமும் அவரைக் காணோம்??????????????

      நீக்கு
    4. grrrrrrrrrr... நான்தான் முதலில் கேட்டேன்!

      நீக்கு
    5. நீங்க எங்கே கேட்டிருக்கீங்க? நான் இன்னமும் அதைப் பார்க்கலை! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    6. இதோ நானும் வந்து விட்டேன்...

      காலையில் வராததற்கான காரணத்தை கீழே சொல்லியிருக்கிறேன்...

      வாழ்க நலம்...

      நீக்கு
    7. ஊரில் இருந்து வேப்பம் பூ பொடி கொண்டு வந்தேன்.. அவ்வப்போது சுடு சோற்றில் நல்லெண்ணெயுடன் சாப்பிடுவது வழக்கம்...

      சென்ற ஆண்டு சமையலறை கை வசம் இருந்தபோது இட்லிப் பொடி, பருப்புப் பொடி, கறிவேப்பிலைப் பொடி எல்லாம் செய்து கொள்வேன்..

      இப்போது அதெல்லாம் கனவாகி விட்டது....

      நீக்கு
    8. வேப்பம்பூ பொடி - ஆஹா..நினைவுபடுத்திவிட்டீர்களே... அதுவும், மணத்தக்காளி வறுவலும் சாதத்துடன் கலந்து சாப்பிட (நெய்யுடன்) ரொம்ப நல்லா இருக்கும்.

      நீக்கு
  13. இதெல்லாம் கூட அனுப்பலாமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தெரியாமல் போச்சே! ஆனால் நான் காஷ்மீரி மிளகாய் வத்தல் எல்லாம் பயன்படுத்தியதே இல்லை. நம்ம உள்ளூர் மி.வத்தல் தான். அதிலேயே மிளகாய்ப் பொடி நல்ல நிறமாகவரும். எங்க வீட்டுக்கு வரவங்க சொல்லுவதே மி.பொடி நிறத்தைப் பார்த்தால் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருந்தது. ஆனால் மி.பொடியில் காரமே இல்லை என்பது தான். இங்கே நான் செய்யும் இட்லிக்கும், மி.பொடிக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இதெல்லாம் கூட அனுப்பலாமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தெரியாமல் போச்சே! // கீதா அக்கா நான்தான் என்னுடைய விமர்சனத்தில் சொல்லி விட்டேனே, நீங்கள் முதல் பெஞ்ச் மாணவி. நாங்கள் அனுப்பும் சமையல் குறிப்புக்கள் கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு.

      நீக்கு
    2. //இதெல்லாம்கூட அனுப்பலாமா?//- உணவு சம்பந்தமா எதையும் அனுப்பலாம்னு நினைக்கறேன். ஒண்ணு மத்தவங்க புதிதாத் தெரிஞ்சுக்கலாம் இல்லைனா கலாய்க்கலாம். ஹா ஹா.

      திராவிட மிளகாய் வற்றல் காஷ்மீரி மிளகாய் மாதிரி நல்ல சிவப்பா அழகா இருக்குமா? அவங்க எவ்வளவு அழகு .. பார்த்துக்கிட்டே இருக்கலாம் (மொபைல்ல தட்டச்சு பண்ணறதுனால வார்த்தைத் தவறுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது)

      நீக்கு
    3. //மிளகாய்ப்பொடி நிறம் பார்த்து பயம்ம்ம்ம்மா இருக்கு// - நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. அவங்க, கோபத்துல சிவக்கற உங்க விழிகள் பற்றிச் சொல்லியிருக்கப் போறாங்க. எனக்கு நீங்க எழுதற கர்ர்ர்ர்ர்ர்ர் படிக்கறச்சயே பயம் வருது

      நீக்கு
    4. //இட்லிக்கும் மி.பொடிக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு//-

      முதல்ல இதெல்லாம் ராணுவத்துல ஆயுதங்களா சேர்த்துட்டாங்களான்னு கேட்கத் தோணித்து.

      விரைவில் திருவரங்கம் வரும் வாய்ப்பு இருக்கு. எதுக்கு இலவச டிபனைக் கெடுத்துக்கணும்னு, உங்களை பாராட்டறதோடு நிறுத்திக்கறேன்

      நீக்கு
    5. பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... சந்தடி சாக்குல நான் இருக்கும் கடைசி பெஞ்சில் உங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்ய எண்ணாதீர்கள். அதுக்கெல்லாம் சமையல்ல ஆரம்பப் படில இருக்கறவங்கதான் அப்ளை பண்ணவே யோசிக்க முடியும்

      நீக்கு
  14. அளவெல்லாம் கண் திட்டம் தான். கறுப்பு எள் என்று சொல்லிட்டு நெல்லை வெள்ளை எள்ளை வறுத்து வைச்சிருக்கார். இட்லி மிளகாய்ப் பொடிக்குக் கடலைப்பருப்புச் சும்ம்ம்ம்ம்ம்ம்மாக் கொஞ்சம் போல் போட்டால் போதும். உளுத்தம்பருப்புத் தான் நிறைய வேண்டும். அவசர மிளகாய்ப் பொடியில் கடலைப்பருப்பு சீக்கிரம் மசியாது என்று அதைப் போடாமலேயே பண்ணுவது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... நீங்க மதுரைக் காரங்கன்னு எனக்கு திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்த வேண்டியதில்லை. நக்கீரி(கீரன்) மாதிரி கரெக்டா வெள்ளை எள்ளைப் பார்த்துட்டீங்களே... அப்போ அங்க வெள்ளை எள்தான் இருந்தது. கறுப்பு எள், தர்ப்பணத்துக்கு உபயோகிக்கும் பாட்டிலில் இருந்தது, அதனால் அதனை எடுக்கவில்லை.

      நான் கொஞ்சம் அதிகமாகவே கடலைப்பருப்பு போட்டிருக்கிறேன் (செய்முறை பிரகாரம்). எனக்கு சின்ன வயதிலிருந்தே மிளகாய்ப்பொடின்னா அவ்வளவு இஷ்டம். அதிலும் தயிர் சாதத்துக்கு (ஆறின சாதம்..காலை அல்லது முந்தின நாள் இரவு சாதம்) மிளகாய்ப்பொடி எண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். அப்போ எங்க பெரியம்மா வீட்டில் இருந்தபோது, ரொம்ப கொஞ்சம்தான் போடுவார்கள், சமயத்துல இல்லைனு சொல்லிடுவாங்க-அவங்க கையால இடித்துச் செய்யணும் என்பதால். ஆனா பாருங்க... சமீப சில வருடங்களா நான் என்ன நினைத்தாலும் வாங்கிச் சாப்பிடலாம்.... ஆனால் பல உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை... ஹா ஹா

      நீக்கு
  15. பருப்புப் பொடிக்கு எண்ணெயில் எல்லாம் வறுக்க வேண்டாம், பெருங்காயம் உள்பட. வெறும் வாணலியிலேயே வறுபடும். அதோடு எல்லாத்தையும் சேர்த்து வறுக்காமல் தனித்தனியாக வறுத்தால் நன்கு வறுபடும். மிளகை வெறும் வாணலியில் போட்டுப் புரட்டிக்கொடுக்கையிலேயே வெடித்துச் சிதற ஆரம்பித்தால் சரியான பதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...இதுமாதிரி குறைந்த அளவு செய்துபார்க்கிறேன். (என் பையனுக்குத்தான்...அதற்கான சந்தர்ப்பம் இன்னும் சில மாதங்கள் கழித்துத்தான் வரும்). வசிஷ்டர் ஓகேன்னு சொல்லியாச்சுன்னா சரிதான்.

      சில நாட்களுக்கு முன்பு பாதுஷா (என் அம்மாவின் வெர்ஷன்..இதனை பாதுஷான்னு பலர் ஒத்துக்க மாட்டாங்க. அவங்களுக்கு வனஸ்பதில மைதாவைப் பிரட்டி, லேயர் லேயரா எண்ணெய்ல உள்ள மிதந்தால்தான் பாதுஷான்னு ஒத்துக்குவாங்க) பண்ணிக்கொடுத்தேன். மறுநாள், நீங்க ஊருக்குப் போவதற்கு முன்னால் இன்னும் பண்ணித்தாங்க என்றான். அதனால் இந்தத் தடவை இன்னும் அதிகமாக (10 பீஸ் என் பெண், மனைவிக்கும் எடுத்துச் செல்லலாமே என்று நினைத்து) பண்ணினேன். அவனுக்கு இரண்டாவது தடவை செய்தது ரொம்பப் பிடித்திருந்தது. இதே மாதிரி இனிமே செய்யுங்கோ என்றான். நான் ஞே என்று விழித்தேன். அதே ரெசிப்பிதான். ஆனால் இந்தத் தடவை எண்ணெய் பதம் சரியா இருந்திருக்கு, மாவும் நல்லா பிசைந்திருக்கேன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. பாதுஷாவுக்கு வனஸ்பதியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நாங்கல்லாம் வெண்ணெய் தான் போடுவோம். வனஸ்பதியிலே செய்தால் வாசனை வராதோ? கொஞ்சமாப் பண்ணினாலும் வெண்ணெய் போட்டால் தான் பாதுஷா!

      நீக்கு
    3. //பாதுஷாவுக்கு வனஸ்பதியா?// - சமீபத்தில் ஒரு திருமணத்துக்குப் போயிருந்தேன். ரிசப்ஷன் உணவில், பால்போளி என்று நினைத்து ஏதோ போட்டார்கள். நானும் 'இனிப்பு சாப்பிடாத விரதத்தை' முடித்துக்கொண்டு சாப்பிட்டால்..ஒரே வனஸ்பதி வாசனை, நாக்கிலும் ஒட்டியது.

      அது சரி..இப்போல்லாம் செங்கல் போல அச்சடித்த வெண்ணெயைத் தவிர, கடைந்து எடுத்த வெண்ணெய் எங்கேயும் கிடைக்குதா?

      நீக்கு
    4. இங்கே நல்ல வெண்ணெய் கிடைக்கிறது என்பதோடு நான் பெரும்பாலும் வாங்கும் பாலில் உறை ஊத்திய தயிரிலிருந்து எடுக்கும் ஆடைகளைச் சேர்த்து வைத்து வெண்ணெய் எடுக்கிறேன். அதைத் தான் பயன்படுத்துவேன். அவசரத்திற்குக் கடைகளில் முக்கியமாய் வெண்ணெய்க் கடைகளில் கிடைக்கும் வெண்ணெயை ருசி பார்த்துவிட்டு வாங்குவோம். கரூரில் இருந்து நல்ல வெண்ணெயாக தினம் தினம் வரும். விலை அதிகம்.

      நீக்கு
    5. //ஆடைகளைச் சேர்த்து வைத்து வெண்ணெய் எடுக்கிறேன்// - நான் ஏழாவதுலாம் படிக்கும்போது எங்க அம்மா, தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பார். வெண்ணெய் எடுத்த பிறகு இருக்கும் கூழான கடுத்த மோர் அவ்வளவு நன்றாக இருக்கும் (இது தாளவாடி, சத்தியமங்கலம் மலைப் பகுதியில் கிடைத்த பால்).

      இப்போவும் அபூர்வமாக கடைகளில் சில இடங்களில் வெண்ணெய் கிடைக்கும் (மைலாப்பூரில் ஒரு கடை தெரியும்).

      நீக்கு
  16. பருப்பைச் சிவக்க வறுக்க வேண்டும். கடலைப்பருப்பைச் சேர்த்தால் காரம் குறைவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீசா மேடம். சிவக்க வறுத்தேன்.

      ஓ.. கடலைப் பருப்பு காரத்தைக் குறைக்குமா?

      நீக்கு
  17. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    சுவையான குறிப்புகள். நான் செய்வதில்லை. வீட்டில் இருந்து வரும்போது கொண்டு வந்து விடுவேன். அதுவும் இட்லி மிளகாய் பொடி மட்டும். பருப்புப் பொடி அவ்வளவாக பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜன்.

      புளிக்காய்ச்சல், ஊறுகாய் இவைகளும் திருவரங்கத்திலிருந்து இம்போர்ட்தானா?

      எனக்கு ஆந்திராவில் சாப்பிடும்போது போடும் பருப்பு பொடிதான். வீட்டில் சாப்பிடுவது பிடிக்காது

      நீக்கு
  18. பருப்பு பொடிக்கும் கடலைப் பருப்பு சேர்பதுண்டு. என் அக்கா கொப்பரையும் கொஞ்சமாக வறுத்து சேர்ப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். கொப்பரை சேர்த்தால் தேங்காய்பொடி மாதிரி ஆகிவிடுமே. ஆனால் அதுவும் நல்லாதான் இருக்கும்

      நீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. இரண்டு பொடிகளும் செய்முறை படங்களுடன் மிக நன்றாக இருக்கிறது.
    அன்பை குழைத்து செய்யும் போது அது நன்றாகவே இருக்கும்.

    நான் காஷ்மீரி வத்தல் வாங்கியதே இல்லை.

    பருப்பு பொடி நல்லா வந்து இருக்கிறது என்று மகன் மீண்டும் கேட்டால் வேறு மாதிரி செய்து கொடுத்து விட்டீர்கள். கருவேப்பிலை அதிகம்தான் பச்சை கலரில் இருக்கே ! பருப்புபொடி.
    "உடலுக்கு நல்லது கண்ணா" அதுதான் கருவேப்பிலை கூட கொஞ்சம் சேர்த்தேன் என்று சொல்லவேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      எனக்கு காஷ்மீரி வற்றல் தரும் அதீத சிவப்பு நிறம் பிடிக்கும்.

      அவனுக்கு கருவேப்பிலை பிடிக்கும்னு கருவேப்பிலை அதிகமா சேர்த்துட்டேன். தவறுதான்.

      நீக்கு
  22. இட்லி மிளகாய்ப் பொடிக்கு கறுப்பு எள் போட்டும், போடாமலும் திரித்து வைத்துக் கொள்வேன். எள் இரவு சேர்க்ககூடாது என்று அம்மா சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். இரவு எள் சேர்க்கக்கூடாதுன்னு நான் கேள்விப்பட்டதில்லை. புதுச் செய்தி.

      எங்க வீடுகள்ல ஞாயிறு நெல்லிக்காய் சம்பந்தமா சாப்பிடக் கூடாதும்பாங்க

      நீக்கு
    2. பொதுவா எள் சேர்த்து இட்லி மிளகாய்ப் பொடி பண்ணினால் சீக்கிரம் வீணாகிவிடும் என்பார்கள்.

      நீக்கு
    3. அப்படியா கீசா மேடம்.... நான் வாசனை போகக்கூடாது என்பதற்காக (வெளிநாட்டில் இருக்கும்போது) மிளகாய்ப்பொடி டப்பாவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பேன். அதுபோல எக்ஸ்டிரா ஸ்டாக்கையும் அப்படித்தான் வைத்திருப்பேன்.

      நீக்கு
  23. வீட்டில் இட்லிப்பொடி செய்யும் போதெல்லாம் மூன்று விதமாக செய்வார்கள்... இந்த செய்முறையும் வீட்டில் சொல்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

      அதில் ஒரு முறைல பூண்டு சேர்ப்பீங்களே. நாங்கள் அதுக்கு பதிலாத்தான் பெருங்காயம் சேர்க்கிறோம்.

      நாங்க தேங்காய் பொடி என்று ஒன்று செய்வோம். அதில் மிளகாய் பொடி செய்முறையில் கொப்பரைத் தாங்காய் திருவி வறுத்துச் சேர்ப்பது (காய்ந்த கொப்பரை அல்ல)

      நீக்கு
    2. இதெல்லாம் நார்மல்... கறிவேப்பிலை பொடி, கொள்ளுப் பொடி, எள்ளுப் பொடி, பலவகை பருப்புப் பொடி, முருங்கைகீரை உட்பட பல கீரைகளின் பொடி - என பல பொடிகள், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு என்று பலது இருக்கும்... அவற்றை எல்லாம் கலந்து இட்லிப்பொடியை கொடுப்பார்கள்... அதில் + எதில் எனது முகம் மாறுகிறதோ, அது தான் அன்றைய மாத/வார இட்லிப்பொடி...!

      என்ன கொடுமை சார் இது...!

      நீக்கு
    3. திண்டுக்கல் தனபாலன் - //எதில் எனது முகம் மாறுகிறதோ// - சந்தோஷமாவா இல்லை கோபமாவா? மனைவியின் அன்றைய மூடைப் பொறுத்து என்கிறீர்களா? ஹா ஹா.

      வெந்தயப் பொடி கலந்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இரவு வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் மென்று தின்னும்போது எனக்கு அதன் பலன் தெரியும்.

      நீக்கு
    4. இங்கு கருத்துரை போடும் முன்பே, பதிவின் இணைப்பை மனைவியின் WhatsApp-க்கு அனுப்பி விட்டேன்... கருத்துரைகளையும் வாசித்து விட்டால், நானும் நாளை காலை வெந்தயத்தை விழுங்க வேண்டும்...!

      குறிப்பு : இந்த வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் மென்று தின்னுவது - எனது இரண்டாவது அக்கா சொன்னது... சில காலங்கள்... ஆம் சில வருடங்கள் இவ்வாறே - இனிப்பானவன் என்பதால்...! அதற்கு வெள்ளிவிழா இந்த வருடம் கொண்டாட வேண்டும்...!

      நீக்கு
    5. திண்டுக்கல் தனபாலன்
      வெந்தயம் 48 மணி நேரம் ஊறணும். (முளை வருவதுபோல இருக்கும்). அதை எடுத்து நன்கு மென்று தின்னலாம். ஃபைபர் உண்டு. ரொம்ப நல்லது. இதனைத் தொடர்ந்து செய்யலாம்.

      இதைச் செய்ய முடியலைனா 24 மணி நேரம் ஊறி அதை மென்று தின்பது நல்லது.

      எனக்கு ஷுகர் கிடையாது. இருந்தாலும் நான் கசப்பை விரும்பி உண்பவன். இது, பாகல் சாம்பார்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (அதுக்காக சிலர் பண்றமாதிரி பாகல்காயை விதையோடு கட் பண்ணிப்போட்டாலோ இல்லை வெறும் பாகல்காயை வெட்டி எலுமிச்சை சார் போட்டு சாப்பிடச் சொன்னாலோ பிடிக்காது).

      நீங்கள் சமயம் கிடைக்கும்போது, வேப்பம் இலைக் கொழுந்தை அலம்பிவிட்டு வாயில் போட்டு மெல்லலாம். நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடுவேன். இது வயிற்றில் உள்ள பூச்சிகளைக் களையும்.

      நீக்கு
    6. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம், இரு உணவுகளுக்கு இடையில் நொறுக்குத் தீனிகளைத் தின்பது. அதிலும் ஸ்வீட்ஸ் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தமானது.

      இப்போ இரண்டு வாரங்களாக, டிரையல் பேஸிஸ்ல, இனிப்பை ஒதுக்கியிருக்கேன் (என் பையனுக்கு ஜாமூன், பாயசம், பாதுஷா செய்து கொடுத்திருந்த போதிலும் நான் டேஸ்ட் செய்யவில்லை). இது எத்தனை நாள் வைராக்கியமோ தெரியலை.

      நீக்கு
    7. // ஸ்வீட்ஸ் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தமானது // வைராக்கியத்துடன் வாசித்து விட்டேன்... ஹா... ஹா... ஆனால் என்னைப்போலவே எனது இரண்டாவது அக்காவும் ஸ்பெஷல் இனிப்பானவர்கள் (IDDM - Insulin Dependent Diabetes Mellitus)... பலவிதமான இனிப்புகள் செய்வதிலும் கில்லாடி... ஆனால், செய்யும்போது சிறிதளவு கூட சுவை பார்க்காமல் செய்வதில் நிபுணர்...

      // 48 மணி நேரம் // இதுபோல் செய்ததில்லை... மீண்டும் தொடரணும்... சளி பிடிக்குமோ...? இருமுறை எனக்கு அப்படி நடந்ததால், எனக்கு இதை கொடுப்பதை வீட்டில் மறந்து விட்டார்கள்...

      நீக்கு
    8. //சளி பிடிக்குமோ?// - வெந்தயம் குளிர்ச்சிதான். சளி பிடித்தால் சிறிது இடைவெளி விடுங்க. ஆனா ரொம்ப ரொம்ப நல்லது, நார்ச்சத்து இருப்பதால்.

      எனக்கு ஷுகர் நினைத்தால் பயமா இருக்கு. ஆசையுள்ள பலாப்பழம், மாம்பழம், திராட்சை - இவைகளை விட்டுவிட வேண்டியிருக்குமே...

      என் நண்பனுக்கு Blood Sugar இருந்தது. அதனால் 25 வயதிலிருந்தே இனிப்பை மறக்கவேண்டிய நிலைமை. (ஆனால் காரில் சாக்லேட் எடுத்துச் செல்வான். டக் என்று ஷுகர் லெவல் குறைவது போலத் தோன்றினால் சாப்பிட...மொத்தத்தில் நிலைமை கஷ்டம்)

      நீக்கு
  24. பருப்புப்பொடி, இட்லி மிளகாய்ப்பொடி குறிப்புகள் பிரமாதம்! படங்களும் அழகாய் இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன். இதெல்லாம் ஜுஜுபி உங்க எல்லோருக்கும். இருந்தாலும் படங்களோடு அனுப்பணும் என்று நினைத்து அனுப்பியிருக்கிறேன்.

      நீக்கு
  25. ஜப்பானில் சாதம்கிடைக்குமென்றுதெரிந்து இங்கிருந்து பருப்பு பொடி எடுத்துச் சென்றேன் ஆனால் ஒசாகா விமான நிலையத்தில் அதை ஏதோ போதைப்பொருள் என்று சந்தேகப்பட்டுஏகப்பட்ட கேள்விககேட்டனர் !!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி.எம்.பி சார்.... நான் மிளகாய்பொடி தடவின இட்லி போன்றதெல்லாம் மெக்சிகோவுக்குக் கொண்டு சென்றிருந்தேன். அவங்களும் கேள்வி கேட்டாங்க. நான் கோபப்பட்டேன். அப்புறம் அவங்க, ஆளைப் பார்த்து போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். அங்க உணவு எப்படி இருக்குமோ என்று பயந்ததனால் இதெல்லாம் எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால் அங்கு தங்கியிருந்த ரிசார்டில் (நாளுக்க்கு 250 டாலர்கள் 8 வருடங்கள் முன்பு) எல்லாவிட உணவுகளுக்கும் தனித் தனியாக உணவுக்கூடங்கள் இருந்தன (ஏஷியன், காண்டினெண்டல், இடாலியன், ஃப்ரெஞ்ச் என்பன போன்று). சைவமும் இருந்தன. சாப்பாட்டுக்கு அங்கு ஒரு குறையும் இல்லை (பிட்சா, ரைஸ்/தால், டோஸ்ட்/தேன், ஜாம், வெண்ணெய் என்று அட்ஜஸ்ட் செய்ய ரெடியாக இருந்தால்).

      நல்லவேளை நீங்க மிளகாய்ப்பொடி எடுத்துச் சென்றிருக்கவில்லை. நீங்க டேஸ்ட் பண்ணினாலும், அவங்க டேஸ்ட் பண்ணியிருந்தாங்கன்னா...... ஹா ஹா

      நீக்கு
  26. எங்கே துரை செல்வராஜூ ஸாரைக் காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ இங்கேயா?

      நீக்கு
    2. நானும் அவரைத் தேடினேன். பிறகுதான் புரிந்தது...இது மாதக் கடைசி. நெட் பாக் தீர்ந்துபோயிருக்கும். அவரது கோடவுனிலும் ஸ்டாக் சரிபார்க்கும் வேலையும் இருக்கும். அதனால் துரை செல்வராஜு சாரை இணையத்தில் காணோம்.

      வந்து நமக்குக் காரணம் சொல்வார்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாங்க... அதே தான்...

      போன மாதம் புதிதாக வாங்கிய Net card இந்த மாதம் வேலை செய்யவில்லை.. அதனுடைய Plan வேறு... பங்களாதேஷி ஏமாற்றி விட்டான்...

      அதையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு புதிதாக இணைப்பு வாங்கி இருக்கிறேன்...

      இனி தோசைக்காரனிடம் மாவு வாங்குகிற வேலை இல்லை...

      நேரடியாக இணைப்பிற்கு மாதந்தோறும் பணம் கட்டி விடலாம்...

      அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    4. வாங்க துரை செல்வராஜு சார்... அப்படீன்னா நான் மெயிலை இன்றே அனுப்பறேன் (குறிப்புகளோட ஹா ஹா).

      ஆனாலும் பாருங்க...உங்களுக்கு சமையலறை இன்னும் கிடைக்காமப் போகுதே..

      நீக்கு
  27. எனக்கு சின்ன வயதிலிருந்தே மிளகாய்ப்பொடின்னா அவ்வளவு இஷ்டம். அதிலும் தயிர் சாதத்துக்கு (ஆறின சாதம்..காலை அல்லது முந்தின நாள் இரவு சாதம்) மிளகாய்ப்பொடி எண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிட ரொம்பப் பிடிக்கும்.///// same blood.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நம்ம ரசனை இதில் ஒத்துப்போகுதுன்னு சொல்லுங்க. இப்போ உள்ள சாதத்தை (10+ வருடங்களா), ஜலம் விட்டு வச்சா நல்லாவே இருக்கறதில்லை. எல்லாத்திலயும் கலப்படம் போலிருக்கு வல்லிம்மா.

      நீக்கு
  28. அருமையா இருக்கு ...


    பருப்பு பொடி இதே போல அம்மா செய்வாங்க ...எங்க பசங்களுக்கு சாதத்துக்கு பிடிக்கறது இல்லை ..

    ஆனால் இட்லி பொடி எப்பவும் வேணும் ...போதும் வேணாம் ன்னு வார்த்தை யே வராது ..ஆனா அளவுகள் ஒவ்வொரு முறையும் வேறுபடும்..போன வாரம் அரைத்த பொடியில் மிளகும் , கறுப்பு எள்ளும் அதிகம் போட்டு dark கலர் பொடி ...இன்றைக்கு மதிய உணவுக்கே அதான் எடுத்துப் போனார்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

      அது என்னவோ...ஆந்திரா மீல்ஸ்ல எப்போதும் பருப்புப் பொடி வைக்கறாங்க. ஆனா பருப்பு பொடி சாதம், எனக்கு மென்னைப் பிடிப்பதுபோல இருக்கும்.

      மிளகு போடறீங்களா? (இட்லிபொடில). ரொம்ப நல்லது அது, ஆனா பசங்களுக்குப் பிடிக்காதே... என் பெண், வெண்பொங்கலில் மிளகைப் பொறுக்கி தூரப் போட்டுவிடுவாள். அதுனாலயே நான் சில சமயம் பொடித்துப் போடுவேன். அப்புறம் 'வெண் பொங்கல்' என்றாலே, 'வேணாம்' என்று சொல்லிடுவா.

      நீக்கு
    2. எப்பவுமே பொடில மிளகு சேர்ப்பேன் ..

      இந்த தடவை ரொம்ப அதிகம் மிளகு வாசம் வரும் அளவு ..சரி சொதப்பியாச்சு ன்னு நினைக்கும் போது எல்லாருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது ...

      சின்னவனுக்கு கொஞ்சம் இருமல் அதுக்காக இப்படி மிளகு சேர்ப்பது ...
      பொங்கல் ல வந்தா எல்லாம் ஒதுக்கி வச்சுடுவாங்க ..அதுனால அங்கும் பொடித்தே சேர்ப்பது ..

      நீக்கு
    3. நன்றி அனுராதா ப்ரேம்குமார். அடுத்த தடவை கொஞ்சமாக இங்கு செய்துபார்க்கிறேன். செலவழிவது கொஞ்சம் கஷ்டம்தான். என் பெண், மிளகுன்னா காத தூரம் ஓடிடுவா. பார்க்கலாம். (ஆனால் உடம்புக்கு ரொம்ப நல்லது. அலர்ஜி, உணவின் குறைகள் இவைகளைப் போக்கும் குறுமிளகு)

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி, செய்முறைகள் படங்களுடன் மிக அருமையாக தந்துள்ளீர்கள். மகனுக்காக, மகளுக்காக என்று பாசத்தின் வசப்பட்டு பார்த்து, பார்த்து ஒவ்வொன்றையும், சுவையாக செய்வதற்கு கற்றுக் கொண்ட தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளுடன். வாழ்த்துக்கள்.

    நான் பருப்பு பொடிக்கும் கொஞ்சம் கடலை பருப்பும் சேர்த்து வறுப்பேன். இட்லி மிளகாய் பொடிக்கும் க. ப கொஞ்சம் சேர்ப்பேன். எள்ளு சேர்க்கும் போது க.பருப்பு தேவையில்லை என என் உறவுகள் சொல்வதுண்டு.எனக்கென்னவோ அதுவும் கொஞ்சம் சேர்த்தால்தான் இ. மி. பொடி முழுமையான திருப்தி கிடைக்கும். எள்ளை கொஞ்சம் நீரில் ஊற வைத்து களைந்து வடிகட்டி பின் வறுக்கும் போது ருசியாகவும் இருக்கும்.அதிலுள்ள மண், கல்லும் அகற்றப்படும். எள்ளோதரை, எள்ளு கொழுக்கட்டை, செய்யும் போதும் அப்படித்தான். எள் சேர்க்காமலும், ஆனால் க. ப சேர்த்த மி. பொடி இடித்து வைத்துக் கொள்வதுண்டு. அதை ஏதாவது கார கறி செய்யும் போது பயன்படுத்திக் கொள்வேன். தங்கள் செய்முறைகள் மிக அழகாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நேற்று ரொம்ப பிஸியாயிட்டீங்களோ?

      பருப்புப் பொடிக்கு கடலைப் பருப்புமா? இந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பருப்புப்பொடி செய்முறையைப் பார்க்கணும். அது நிறையபேரைக் கவர்ந்திருக்கிறது.

      எள்ளுக் கொழுக்கட்டை - சாப்பிட்டதில்லை. பெங்களூரில் இருக்கும்போது, பிள்ளையார் சதுர்த்தி வந்தால், உங்களை மாதிரி நிறையபேர் வீட்டுக்கு ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறேன் (பா.வெ.மேடம் சுற்றுலா போகாம இருக்கணும், கீதா ரங்கன் சென்னைக்கு வராம இருக்கணும். ரஞ்சனி நாராயணன் மேடம் எதுவும் அன்றைக்கு பண்ண மாட்டாங்க. வேற யார் யார்னு யோசிக்கணும்)

      நீக்கு
  30. பதில்கள்
    1. வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... ரொம்ப நாளாக காணலையே.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!