ஞாயிறு, 12 ஜனவரி, 2020

ரம்ய மாலை!





இன்னமும் ஷில்லாங்கில்தான் இருக்கிறார்கள் என்பதற்கான நிரூபணமாம்!


தோசையில் எண்ணெய் போறாதுங்க....


பரவாயில்லை...   டேஸ்ட்டாதான் இருக்கு...


ரம்ய மாலை!


உடைச்சுப் போட்டா சாட்...   அப்படியே சாப்பிட்டா?


மலைச்சரிவில் இறங்கும் மரங்கள்...!


என்னங்க...   பாதையெல்லாம் புல்லு முளைச்சுடுச்சு...!

கால் கழுவி சுத்தமா...    அப்படி எல்லாம் இல்லீங்க...   வண்டி நின்னுப் போச்சு!

அந்த மரமும் 'கால் கழுவி' இருக்கு போல!


மேலே தெரியும் மரங்களுக்கிடையே கயிறு கட்டி துணிகள் காயப்போட்டால் பாதுகாப்பாய் இருக்கும்!

ஸாரிங்க...   இதற்கு எதுவும் தோணலை!


தனிமைக் கட்டிடங்கள்...


மரம் தெரிகிறதா?  இலை தெரிகிறதா?  பழங்கள்?

தெரியாம கைபட்டு கேமிரா கிளிக்காயிடுச்சு போல...

கீழடி இல்லீங்க...   மேலடி!

மலையின் மேல் இரண்டு நரிகள்...

இரண்டு யானைகளில் ஒன்று கீழே விழப் போகிறது!


பனிமூட்டம்...    மேகமூட்டம்!


பால பாதை 


ஒதுங்க கொஞ்சம் நிழல்....

60 கருத்துகள்:

  1. எல்லோரும் மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிரப் பிரார்த்தனைகள், நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  கூடாரவல்லி வாழ்த்துகள், நல்வரவு, நன்றி.

      நீக்கு
    2. நான் முழங்கை வழிவார சர்க்கரைப் பொங்கல் பண்ணித் தரேன், வாங்க என்று கீசா மேடம் நமக்கு வாழ்த்துச் சொல்லிக் கூப்பிடுவாங்கன்னு பார்த்தா வெறும் வாழ்த்தோட நிறுத்திக்கிட்டாங்களே கீதா சாம்பசிவம் மேடம்?

      இருந்தாலும் நம்ம வாழ்த்தையும் சொல்லி வைப்போம்

      நீக்கு
  2. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சுலபமா துரை செல்வராஜு சார்? ஒரு கொசு கடித்தாலே அதை அடித்துக் கொல்பவர்கள் நாம

      நீக்கு
    2. கொசுவின் இந்தப் பிறப்பை முடித்து அடுத்த பிறப்புக்கு ஏற்றி வைக்கிறோம்...

      கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனொடு நேர்..

      என்றும் வள்ளுவர் ஸ்வாமி சொல்லி இருக்கின்றாரே!...

      நீக்கு
  3. அனைவருக்கும் கூடாரவல்லி நல் வாழ்த்துகள்...

    அன்பின் வணக்கங்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...   கூடாரவல்லி வாழ்த்துகள்.

      நீக்கு
    2. கூடாரவல்லியின் மணக்கும் வாழ்த்துகள் அனைவருக்கும்.

      நீக்கு
  4. ரசனையான விளக்கங்களுடன் கூடிய படங்கள். எல்லாம் அருமை. பாபட் சாட் சாப்பாடு ஆர்டர் செய்தால் தானே ஸ்டார்டருக்குக் கேட்டால் கொண்டு வருவார். டிஃபனுக்குமா? இப்போப் புதுசாக் கொத்துமல்லிக் காரச் சட்னியில் முக்கி க்ரில் செய்த பனீர்த்துண்டுகள் ஸ்டார்டருக்குத் தந்துட்டு இருந்தாங்க. அங்கே ஷிலாங்கில் கிடைக்குதா என்னனு தெரியலை. தமிழ்நாட்டில் கொடுத்துட்டு இருந்தாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...    இப்போதான் சாப்பிடலாம் வாங்க படிச்சுட்டு வந்தேன்...

      நீக்கு
    2. கீசா மேடத்தையே சனி பாசிடிவ் செய்திகளில் குறிப்பிடலாம். படங்களைப் பாராட்டித் தள்ளியிருக்காங்களே

      நீக்கு
  5. ரம்ய மாலை சாலை சுத்தமாகக் காண முடிகிறது. வீடுகளும் அருமை. அந்த இடப்பக்கம் முதல்லே தெரியும் வீட்டு மொட்டை மாடி பால்கனியில் போய் உட்கார்ந்து கொண்டு பகோடாவுடன் நல்ல அருமையான கதைப்புத்தகத்துடன் அமர்ந்து படிக்கணும். பின்னணியில் மஹாராஜபுரம் சந்தானம்!

    பதிலளிநீக்கு
  6. விளக்கங்கள் ஸ்ரீராம் கைவண்ணம்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த முந்திரிப் பருப்புகள் இல்லைனா பாயசம் எங்க போணியாகும்? ஶ்ரீராம் தனித்திறன் கொண்டவர்

      நீக்கு
    2. ஹிஹிஹி....   போங்க நெல்லை...   வெக்கம் வெக்கமா இருக்கு!

      நீக்கு
  7. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்...

    மனம் கூடார்
    இனம் கூடார்
    குணம் கூடார்...

    இத்தகைய கூடாக் கூகைகளை
    போட்டுத் தள்ளி விடுவானாம் கோவிந்தன்..

    இப்படியான கோவிந்தனைத் தான்
    கொழுநன் எனக் கொண்டு
    கூடாரவல்லி எனும் நெய்ப்பொங்கலுக்குள்
    கொண்டு வந்து விட்டாள் கோதை...

    தைப் பொங்கல் மூன்று நாட்களுக்கு முன்பு
    கட்டியம் கூறுகிறாள் கோதை நாச்சியார்...

    கூடி இருக்க விரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பினாலும் அதற்கும் அந்தக் கோவிந்தன் தானே மனம் வைக்க வேண்டும்...

      சரியா முடிச்சிருக்கேனா து செ சார்?

      நீக்கு
    2. கூடி இருக்க விரும்புவோம்..
      அதுவும் கோவிந்தனின்
      விருப்பமாகவே இருக்கட்டும்...

      நெல்லை அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
  8. படங்களுக்கான விளக்கங்கள் படத்தை மீண்டும் ஒருமுறை கவனிக்கச் செய்தது...அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. கூடியிருந்து குளிர்வதுதானே கூடாரவல்லியின் சிறப்பு! நண்பர்கள் எல்லோருக்கும் கூடாரவல்லி வாழ்த்துகள்.  படங்களை சிறப்பிக்கின்றன கேப்ஷன்கள். ஸ்ரீராம் ஃபார்முக்கு திரும்பி விட்டார் போலிருக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய இனிமையான நாளுக்கு வாழ்த்துகள் அனைவருக்கும்.
      ஷில்லாங்க படங்களுக்கு அருமையான தலைப்புகள் கொடுத்து மீண்டும் பார்க்க வைக்கிறார் ஸ்ரீராம்.
      பெஸ்ட் அப்பள சாட்.
      பசுமையான மகிழ்ச்சியான படங்கள். நெட்டைத் தென்னை மரங்களில் ஊஞ்சல்
      கட்டினால் எப்படி இருக்கும்!!!! Bunjee jump செய்யவும் நல்ல இடம்.

      இங்கு இனிதான் கூடாரை வெல்ல கோவிந்தனும், பிறகு கூடிக்களிக்க
      அக்கார அடிசிலும் வரப் போகிறது.நமக்கு எங்கள் ப்ளாக் தான் பிக்னிக் ஸ்பாட்.
      இங்கே ஒன்று சேர்ந்தாலே நல்ல பொங்கல் தான்.
      கோவிந்தன் அருளால் நற்பொங்கல் பொங்கி
      வாழ்வின் இனிமையை உணர வாழ்த்துகள் அனைவருக்கும்.

      நீக்கு
    2. அவ்வளவு உயரத்தில் ஊஞ்சலா? அம்மாடி...   பீதியூட்டறீங்களே வல்லிம்மா...
      நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. படங்களுக்கு அதற்கு கொடுத்து இருக்கும் வாசகங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. வீட்டிலும், கோவிலிலும் கூடாரவல்லி ஆச்சு. எல்லோருக்கும் கூடாரவல்லி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. ரம்ய மாலை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. ரம்யமா ? -- நேற்று மாலை வளசரவாக்கத்து சந்து ஒன்று கூட இந்த மாதிரித் தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளசரவாக்கமாயிருந்தால் ரம்யம் இருக்கக் கூடாதா ஜீவி ஸார்?

      நீக்கு
  15. பாதையெல்லாம் புல்லு முளைச்சுடுச்சு...

    புல்லு முளைச்ச பாதையெல்லாம்...

    -- ஒரே மாதிரித் தோன்றும் வரி மயக்கங்கள்!



    பதிலளிநீக்கு
  16. //ஸாரிங்க... இதற்கு எதுவும் தோணலை!.. //

    நம்ம ஏரியா கு.கு. கிட்டே காட்டுங்களேன்.. அவறுக்குத் தான் கலர் ஸாரி பற்றியெல்லாம் தெரியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் ! இது நியாயமா ! அந்தக் கதைகளில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. எங்கேயும் சாரி என்று நான் எழுதவில்லை. ட்ரெஸ். அதை கவனித்தீர்களா ?

      நீக்கு
    2. ஆமாம். இது பெரிய சஸ்பென்ஸ். இவரு பெரிய இட்ச்காக்கு!

      நீக்கு
    3. //ஸாரிங்க. //

      இந்த ஸாரிக்கு அந்த சாரி.

      டிரெஸ் எனக்குத் தெரியும். இங்கேயிருந்து மனசு அங்கே போனது தான் விசேஷம்!

      நீக்கு
  17. //மரம் தெரிகிறதா? இலை தெரிகிறதா? பழங்கள்? //

    பழங்கள் தெரிந்தால் கண் பார்வை கிளயர்ன்னு கிளயராச் சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
  18. //கீழடி இல்லீங்க... மேலடி!..//

    கீழடின்னா தமிழர் நாகரிகம். சரி, மேலடின்னா?..

    பதிலளிநீக்கு
  19. //மலையின் மேல் இரண்டு நரிகள்... //

    நரிகள் மேலே மேலே வானமாக்கும்!..

    பதிலளிநீக்கு
  20. //இரண்டு யானைகளில் ஒன்று கீழே விழப் போகிறது!//

    ஒரு யானை கீழே விழுந்தால் இன்னொரு யானை அங்கேயே இருக்கப் போறது!.. :))

    பதிலளிநீக்கு
  21. பனிமூட்டம் + மேகமூட்டம் = மேகப்பனி மூட்டம்!

    பதிலளிநீக்கு
  22. // பால பாதை //

    பாதையாய் பாலம்

    //ஒதுங்க கொஞ்சம் நிழல்.... //

    ஒதுங்க வைக்கும் வெயில்

    பதிலளிநீக்கு
  23. பதிவு ஜோர் என்றால் ஜீவி சாரின் பின்னூட்டங்கள் இன்னும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதைச் சொல்ல நினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க.

      நீக்கு
    2. நன்றி சொல்ல வேண்டும், நல்லிதயங்களுக்கு..

      நீக்கு
  24. நல்ல படங்கள். உங்கள் கருத்துகளும் சிறப்பு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!