ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆதிரங்கன் கோயில்

 

ஸ்ரீரங்கப்பட்டணம். 

இங்கு அமைந்த அரங்கநாதசாமி கோயிலின் காரணமாகவே இந்நகருக்கு ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற பெயர் ஏற்பட்டது. அரங்கநாதசாமி இங்குள்ளதால் இந்நகரம் வைணவர்களின் புனித இடமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அரங்கநாதசாமி கோயில் கங்க மன்னர்களால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின் வந்த போசள மற்றும் விஜய நகர அரசுகளால் மேலும் புணரமைக்கப்பட்டு அவர்கள் பாணி கட்டட கலையும் இக்கோயிலில் கலந்துள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில்

இங்குள்ள அரங்கனை ஆதிரங்கன் எனவும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் எனவும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தியரங்கன் எனவும் அழைப்பர்.



காவிரி ஆறு, பாய்ந்து செல்கின்ற வழியில், மூன்று தீவுகளை இணைக்கிறது. 
முதலாவது தீவான ஸ்ரீரங்கப்பட்டணம் பெரிய தீவு (மற்ற தீவுகள்: சிவசமுத்திரம், திருவரங்கம் )



மூன்று தீவுகளிலும் அரங்கன் கோயில் கொண்டுள்ளார். இங்கு நாம் காண்பது ஸ்ரீரங்கப்பட்டண அரங்கநாதர் கோயில். 



ஆட்டோவுக்கு மீட்டர் இருக்கு; குதிரைக்கு? 



Own the ? 


ரங்கா, ரங்கா 







படம் எடுத்தப்போ மணி என்ன? 



பல்பொருள் அங்காடி. 



சிரிப்பிகள் (smiley) என்ன விலை? 



சின்ன மேடையில் எவ்வளவு வாகனங்கள்! 



குதிரைகள் எப்படி இப்படி நிற்கின்றன! 


கோயிலுக்குள் செல்வோம். இனி உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. 



நம்மைச் சுற்றி சில படங்கள் 



வருவோரும் -- 


போவோரும் - - -



ஆங்காங்கே நின்றிருப்போரும் 


= = = = 

பஞ்சரங்க தலங்கள்

கோவில்அமைவிடம்
ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில்ஸ்ரீரங்கப்பட்டணம்
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில்கும்பகோணம்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்திருப்பேர்நகர் என்ற கோவிலடி
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில்மயிலாடுதுறை
நன்றி : விக்கிப்பீடியா. 

= = =  =

35 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பங்குனி மாதம் பிறக்கும் வேளையில் ரங்க தரிசனம்.
    அனைவரையும் இறைவன் அருள் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. கோவில் கோபுரப்படங்கள் மிக இனிமை'.
    கோவில் தலபுராணமும் இருக்குமே.
    பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நானும் இப்பொழுதுதான் பஞ்ச ரங்கம் பற்றி தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
  3. மூன்று அரங்கப் பெருமான்கள் மட்டுமே தெரியும்.
    மற்ற பெருமாள்கள், பள்ளி கொண்ட பெருமாள்கள் நிறைய உண்டு.
    அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று அரங்கப் பெருமாள் கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய உங்களை வீட்டிலிருந்து அழைத்து சென்று திருமபி வீட்டில் விட ஒரு ஏற்பாடு இருப்பதாக ஓட்டுநர் பாபு சொன்னார்.

      நீக்கு
  4. குதிரை பொம்மைகள் உருவமைக்கப் பட்ட விதம்
    பின் கால்களிலும் வாலும் நிற்குமாறு இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி இயல்பான நடைமுறைகளுக்குத் திரும்பப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  6. சீரங்கப்பட்டினம் ஒரே முறை எண்பதுகளில் போனது தான். அதன் பின்னர் பலமுறை அதைத் தாண்டிச் சென்றும் கோயிலுக்குப் போகவில்லை. :( சிவசமுத்திரமும் அரைகுறை நினைவு. இங்கே கொடுத்துள்ளப் பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் கோயிலடி போகணும்னு நினைச்சாலும் பக்கத்திலேயே இருந்தாலும் போக முடியலை. அதே போல் உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் பார்க்கலை! எப்போ அழைப்பு வரும்னு காத்திருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தரிசனம் கிடைக்கட்டும்.

      நீக்கு
    2. அப்பக்குடத்தான் தரிசனம் விரைவில் உங்களுக்குக் கிட்டட்டும். நிறைய படிகள் ஏறணும். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாலையில் அப்பம் பிரசாதம் கிடைக்கும். உறையூர் கோவில் பக்கத்துலதானே இருக்கு. டக்குனு போய்ட்டு வரலாமே.

      நீக்கு
    3. அப்பக்குடத்தானை தரிசிக்கவென ஒரு முறை போயிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டாசாரியார் வர தாமதம் ஆனதால் பார்க்க முடியலை. அதன் வழியாகவே செல்கிறோம். ஆனால் இன்னமும் தரிசனம் கிட்டவில்லை. அவன் அருள்!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அழகான கோவில் தரிசனம் கண்டு கொண்டேன். இந்த கோவிலுக்கு இங்கு வந்தவுடன் தீடிரென மைசூர் பயணம் செல்லும் சமயம் அவசரமாக சென்று தரிசித்துதான். அதிகம் நினைவில் நிறுத்த இயலவில்லை. அதனால் சென்ற மார்ச் மாதம் திட்டமிட்டு மைசூர் பயணங்கள் வகுத்ததில், இந்தக் கோவிலை ஆறஅமர தரிசித்து ரெங்கனை வழிபட ஆசை கொண்டோம். கொரோனா வந்து தடை செய்து விட்டது. இனி எப்போது ரெங்கன் அழைக்கப் போகிறாளோ?

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. மறுபடி அதே மார்ச்சில் அரங்கன் கோபுர தரிசனம் கண்டு திருப்தியடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  10. ஆதிரங்கம் சென்றுள்ளேன். அருமையான கோயில்.
    அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி....விக்கிப்பீடியாவில் இக்கோயிலின் கோபுர புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டதாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // விக்கிப்பீடியாவில் இக்கோயிலின் கோபுர புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டதாகும்.// அப்படியா! பாராட்டுகள்.

      நீக்கு
  11. படங்கள் அழகு ஜி
    விவரணங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    அனைத்தும் அழகான புகைப்படங்கள்! மயிலாடுதுறையிலும் புகழ்பெற்ற பெருமாள் கோவில் உள்ள‌து என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  13. படங்கள் அனைத்தும் அழகு. பஞ்சரங்கத் தலங்கள் - மூன்று இடங்களுக்குச் சென்றிருக்கிறேன் - திருவரங்கம், கோயிலடி மற்றும் கும்பகோணம். மற்ற இரண்டு இடங்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் சந்தர்ப்பம் கிடைக்க வாழ்த்துகள்.

      நீக்கு
  14. ஸ்ரீரங்கப்பட்டினம், சிக்க திருப்பதி, மேலக்கோட்டை - ஒவ்வொரு முறை சென்று தரிசித்துள்ளேன், பெங்களூர் வந்து வசிக்க ஆரம்பித்தபின்பு. அழகான கோயில்கள், அமைதியான தரிசனங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சொல்லுவது மிக உண்மை. தர்மஸ்தலா தவிர்த்த அனைத்துக் கர்நாடகக் கோயில்களிலும் அமைதியாகவும் நிதானமாகவும் தரிசிக்க முடியும். அதே தமிழ்நாட்டுக் கோயில்களில் முடியாத ஒரு விஷயம். :(

      நீக்கு
  15. 1970ல் ஸ்ரீரங்கப்பட்டணம் பள்ளிச்சுற்றுலாவில் போனேன் . அப்புறம் போகவே இல்லை,
    படங்கள், வரலாறு எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  16. படங்களும் பகிர்வும் அருமை
    ஒருமுறை சென்றிருக்கிறேன்
    நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!