புதன், 9 பிப்ரவரி, 2022

பேச்சுச் சுதந்திரம் என்னும் பெயரில் பிள்ளைகள் அப்பாவை எதிர்க்கிறார்களோ?

 

கீதா சாம்பசிவம் : 

1. தப்பே பண்ணாதபோது தண்டனை அனுபவித்தது உண்டா?

# சரியாக நினைவில்லை. பள்ளிநாட்களில் ஆசிரியர் ஒருவர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு பலமாக கன்னத்தில் அறைந்தது நினைவுக்கு வருகிறது.

& உண்டு. என்ன செய்வது!! என்னுடைய விதி என்று நினைத்து விட்டுவிட்டேன். 

2. நீங்கள் தப்புப் பண்ணலைனு நிரூபிக்கச் சந்தர்ப்பமே கொடுக்காமல் தண்டனை மட்டும் பெற்ற அனுபவம்?

# ஏதும் இல்லை.

& அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், நாம் என்ன சொன்னாலும், செய்தாலும் - அதை நாம் நம்முடைய செயலை justify செய்கிறோம் என்றுதான் நினைப்பார்கள். தண்டனை ஒன்றும் பெரிய தண்டனை இல்லை என்றால் - grin and bear it - என்று விட்டுவிடுவேன். 

3. யாரானும் என்னைத் தவறாக நினைத்தால் மனம் வருந்திக் கொண்டே இருப்பேன். அதே நம்ம ரங்க்ஸ் என்றால் "விட்டுத்தள்ளு!"னு சொல்லிட்டுப் படுத்துத் தூங்கிடுவார். இது ஆண்/பெண் என்னும் பாகுபாட்டிலா? இல்லை அவரவர் மனப்போக்கா?

# நிச்சயமாக தனிமனிதர் மனப்போக்குதான்.  இதில் ஆண் பெண் என்ற பாகுபாட்டுக்கு இடம் இல்லை என்றே நினைக்கிறேன்.

& ' அலை மனமே ! பலவீனமே ! உன் பெயர்தானோ பெண்! என்று **செகப்பிரியர் சொல்லியிருக்கிறாரே !! (சண்டை போட விரும்புபவர்கள் ஷேக்ஸ்பியரிடம் போடுங்கள் - என்னை விட்டுடுங்க!! ) (இதில் # கருத்துதான் என்னுடைய கருத்தும்) 

** (Hamlet denounces his mother's swift remarriage with the statement, "Frailty, thy name is woman." He thus describes all of womankind as frail and weak in character. The phrase is recognized as one of the "memorable expressions" from the play to become "proverbial".) 

4. இப்போதெல்லாம் அப்பா/பிள்ளை, அம்மா/பெண் ஆகியோருக்கு நடுவேயும் பிரச்னைகள் தோன்றக் காரணம் என்ன? குழந்தைகளுக்குக் கொடுக்கும் அதீத சுதந்திரமா?

# எப்போது ஆனாலும் சரி, பிரச்சினைகள் தோன்றுவதற்கு முதல் காரணம் யாரோ ஒருவர் அடுத்தவரை சரியாகப் புரிந்து கொள்ளாததுதான்.

& எந்தப் பிரச்னையையும் உணர்ச்சி பூர்வமாக அணுகாமல் - இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து, அறிவு பூர்வமாக நிதானமாக பேசி, யோசித்தால்,  பிரச்சனைகள் அகலும். ஆனால், இதற்கு நிறைய பொறுமை தேவை. இருவரும், ஒருவர் சொல்வதை மற்றவர் முழுவதுமாகக் கேட்டு, தங்களுக்குள் பேசி முடிவு எடுக்கவேண்டும். The first and foremost thing in 'Listening' is to close your mouth and keep the eyes, ears and mind open. Is this possible?? 

5. முன்னெல்லாம் அப்பா தான் கண்டிப்பார்; அம்மா அரவணைப்பார் என்று சொல்வார்கள். இப்போதும் அத்தகைய அம்மாவைப் பார்க்க முடியுமா?

# இப்போதும், எப்போதும்,  அம்மாவின் அரவணைப்பை பிள்ளைகள் எதிர்பார்ப்பதும் அம்மா அதைத் தருவதும் இயற்கையாக நடந்து கொண்டே தான் இருக்கிறது.

6. முன்னரும் இருந்தாலும் இப்போதெல்லாம் பேச்சுச் சுதந்திரம் என்னும் பெயரில் பிள்ளைகள் அப்பாவை எதிர்க்கிறார்களோ எனத் தோன்றுகிறது. அப்பா என்றால் கண்டிப்பு எனப் பெயர் உண்டு. இப்போதைய அப்பாக்கள் அப்படித்தான் கண்டிப்பாக இருக்கிறார்களா?

# இது பற்றி விவரமாக ஆராய்ச்சி செய்ய நமக்கு வசதிகள் இல்லை.  எனினும் பொதுவாக கண்ணில் கண்டதை வைத்துச் சொல்வதாக இருந்தால், தற்காலத்தில் கண்டிப்பான பெற்றோர்களைக் காணமுடிவதில்லை என்பதே உண்மை.  எனவே பிள்ளைகளுக்கு அப்பா அம்மா என்றால் இருக்கவேண்டிய அச்ச உணர்வு (தப்பு செய்தால் அப்பாவோ அம்மாவோ கோபிப்பார் என்ற பயம்) மிகவும் அரிதாகி வருகிறது.

& பேச்சு சுதந்திரம் என்பதை, ஒரு குடும்பத்துக்குள் வேறு யாராவது கொடுக்க முடியுமா? எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்தானே தீர்மானம் செய்துகொள்ளவேண்டும்? குழந்தைகள் எல்லோரும் படிப்பு முடிக்கும் வரையில், பெற்றோர் சொல்வதைத்தான் பெரும்பாலும் கேட்டு நடப்பார்கள். அவர்கள் வேலை பார்க்க ஆரம்பித்து, சுய சம்பாத்யம்  என்ற நிலை வந்தவுடன், அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை கொடுப்பதுதான் நியாயமானது. அவர்களுக்குத் திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்துவிட்டால், பெற்றோர் எதிலும் அதிகம் தலையிடாமல், ஆலோசனை கேட்கப்பட்டால் மட்டும் கொடுப்பது சாலச் சிறந்தது. 

= = = = = 

பயனுள்ள தகவல் எதையாவது பகிர்ந்துகொண்டு, வாசகர்களுக்கு உபயோககரமான விஷயத்தை சொன்னால் என்ன என்று தோன்றியது. 

இதோ அது:

நாம் அனைவரும் ஸ்மார்ட் ஃபோன் உபயோகிப்பவர்கள். சில பயனுள்ள app - என்ற தலைப்பில், இன்று நான், " Offline Diary " app பற்றி சுருக்கமாக இங்கே பகிர்கின்றேன்.  

உங்களுக்கும் இது பயன்படும். 

நீங்களும் இதை நிறுவி, சோதித்துப் பார்த்து - உங்கள் அனுபவத்தை பகிரலாம். 

நான் சொல்லியிருப்பது android ஃபோன் உபயோகத்திற்கு சோதித்துப் பார்க்கப்பட்ட app. 

எப்படி நிறுவுவது? 

உங்கள் போனில், google play - கிளிக் செய்யவும். 

Search ஜன்னலில், Offline Diary என்று கொடுக்கவும். 

அநேகமாக கீழே காணப்படும் app - கிடைக்கும். 


அதை, உங்கள் போனில் install செய்துகொள்ளுங்கள். 

இப்போ, அந்த ஆப் திறந்தால், என்ன தெரியும் என்று சொல்கிறேன். 

முதலில் அந்த app நிறுவியபின் அதைத் திறந்தால், அது உங்கள் தேர்வாக ஒரு நான்கு இலக்க PIN கேட்டு பதிவு செய்துகொள்ளும். 

அந்த PIN எண்ணை ஒவ்வொரு முறையும் கொடுத்தால்தான் உங்கள் டைரி திறக்கப்படும். இந்த வசதி, உங்களைத் தவிர வேறு யாரும் உங்கள் டைரியைத் திறந்து படிக்கமுடியாதபடி பார்த்துக்கொள்ளும் !

சரி. 

app இன்ஸ்டால் செய்தாயிற்று.


PIN நம்பர் கொடுத்து டைரி திறந்தாயிற்று. 

press left arrow at top. 

அப்புறம்?


என்பதை click செய்யவும். 

அதன் பின் title - அன்றைய தேதியை கொடுக்கலாம். 

இதில் முதல் icon : gallery யிலிருந்து படம் இணைக்க. 
இரண்டாவது icon காமிரா மூலம் போட்டோ எடுத்து இணைக்க. அப்படி சேர்க்கப்படும் படங்கள் யாவும் மேலே காணப்படும். 


உங்கள் போனில் google keyboard நிறுவப்பட்டிருந்தால் - ஆங்கிலத்தில் type செய்ய + voice typing செய்யலாம். 

தமிழில் எழுத + voice typing செய்ய : 


தமிழ் கீ போர்டுக்கு மாற்றி , சுலபமாக விவரங்களைப் பதிவு செய்யலாம். 

இறுதியாக - மேலே உள்ள டிக் மார்க் பொத்தானை click செய்து அன்றைய செய்தியை சேமித்து வைத்துவிடலாம். 

இப்படி சேமித்த செய்தியை எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பவும் திறந்து, மேலும் விவரங்களைச் சேர்க்கலாம். ஒவ்வொரு முறை டைரியைத் திறக்கும்போதும் PIN எண் கொடுக்கவேண்டும். 

போனில் நாம் வேறு தளங்களில் படித்தவைகளைக்கூட copy செய்து, இங்கே paste செய்யலாம். 

உதாரணத்திற்கு, நான் சென்ற வாரம் இணையத்திலிருந்து நகல் எடுத்து சேர்த்த ஒரு விவரம் இது : 

இந்த 6 ராசிக்காரங்க பிறவியிலேயே நல்ல தலைவனா இருக்கும் தகுதியை கொண்டவங்களாம்..

By Maha Lakshmi S

Published: Thursday, February 3, 2022, 15:00 [IST]

ஒரு குழுவை திறம்பட வழிநடத்துவது என்பது அனைவராலும் முடியாது. அதற்கு சரியான தலைமை பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள் மிகவும் நம்பகமானவர்கள் மற்றும் எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளக்கூடியவர்ளாக இருப்பார்கள். இந்த தலைமைத்துவ பண்புகள் அனைவரிடத்திலும் இருந்துவிடாது.

ஆனால் சிலருக்கு பிறவியிலேயே இந்த தலைமை பண்புகள் இருக்கும். இதற்கு பிறக்கும் போது கிரகங்களின் நிலையும் ஓர் காரணம். ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசியைக் கொண்டு அவரின் தலைமைப் பண்புகளை அறிய முடியும். அந்த வகையில் ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல தலைவராக இருக்கும் பண்புகள் உள்ளன. அத்தகைய ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.


மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இத்தகைய செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுபவர். இதனால் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க அஞ்சம் கொள்ளதவர்களாகவும் உள்ளார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தலைமைப் பண்பு பிறப்பில் இருந்தே உள்ளது. அதோடு இவர்களின் குணாதிசயங்கள் மிகவும் வலுவானதாக கருதப்படுகிறது. அதனால் அவர்கள் மிகவும் வேகமாக மற்றவர்களுடன் பழகி, அவர்கள் மனதில் ஒரு நல்ல இடத்தைப் பெறுகிறார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இத்தகைய சூரியன் நவகிரகங்களின் ராஜா/தலைவராக கூறப்படுகிறார். இதன் காரணமாகவே, சிம்ம ராசிக்காரர்கள் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடவும், பெரிய விஷயங்களை செய்யவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கவும் விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்களிடம் சிறு வயதில் இருந்தே தலைமைப் பண்பு காணப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையையே வாழ விரும்புவார்கள் மற்றும் பணியிடத்தில் பெரிய பதவிகள் மற்றும் பெரிய பொறுப்புக்களை நன்றாக கையாளுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய் தான். ஆகவே தான் இந்த ராசிக்காரர்களின் குணங்கள் மேஷ ராசிக்காரர்களைப் போலவே உள்ளது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் அதிக தைரியம் கொண்டவர்கள். பெரிய ரிஸ்க் எடுக்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் நல்ல தலைவர்கள் என்பதை அடிக்கடி நிரூபிப்பார்கள். இருப்பினும், பல நேரங்களில் இவர்கள் குறிப்பிட்ட வெற்றியைக் கண்ட பின்னர் சற்று கர்வத்துடன் இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவான் கர்மத்திற்குரிய பலனை அளிப்பவராக கருதப்படுகிறார். இதனாலேயே இவரின் இயல்பில் நீதி காணப்படுகிறது. இதன் காரணமாகவே நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் நடைமுறைக்குரியவர்கள். மேலும் இவர்கள் ஒரு விஷயத்திற்கு நன்கு யோசித்து ஆராய்ந்த பின்னரே தங்கள் முடிவை வழங்குவார்கள். இதனாலேயே பலர் இந்த ராசிக்காரர்களின் வழிகாட்டுதல்களைப் பெற விரும்புகிறார்கள். இதனால் இவர்கள் சிறந்த தலைவருக்கான பண்பையும் கொண்டுள்ளார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களும் சனி பகவானை அதிபதியாக கொண்டிருப்பதால், இவர்கள் கர்மாவை நம்புபவர்கள் மற்றும் மிகவும் நேர்மையானவர்கள். அதே வேளையில் இந்த ராசிக்காரர்கள் எதை நினைத்தாலும் அதை செய்து முடித்தாக வேண்டும் என பிடிவாதமாக இருப்பார்கள். மேலும் இவர்கள் தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் தங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்குகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு எதிராக இருந்து யாராலும் வெற்றி பெற முடியாது. இதனாலேயே இவர்கள் மிகவும் நல்ல தலைவர்களாக கருதப்படுகிறார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் மிகுந்த மரியாதையைப் பெறுவார்கள். இவர்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணங்களைக் கொண்டுள்ளனர். மேலும் கஙடக ராசிக்காரர்கள் இயற்கையாக மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் கருத்துக்களை மதித்து ஏற்றுக்கொள்வார்கள். இது அவர்களை போற்றுதலுக்குரிய நபராக ஆக்குகிறது. மேலும் இந்த ராசிக்காரர்கள் உயர்ந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர். அதனால் அடுத்து என்ன செய்வதென்பதை எப்போதும் திட்டமிடுவார்கள். ஆகவே தான் அவர்கள் ஒரு சிறந்த தலைவருக்கான குணத்தைக் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.

( பின் குறிப்பு : மேற்கண்ட 6 ராசிகளிலும் என்னுடைய ராசி இல்லை!!) 

இந்த digital டைரியால் என்ன பயன் என்று கேட்கின்றீர்களா ? 

இந்த டைரியில் நீங்கள் உங்கள் சௌகரியம் போல எப்போது வேண்டுமானாலும் விவரங்களைப் பதிவு செய்யலாம். தூங்குவாதற்கு முன்பு கூட படுத்தபடியே டைரி எழுதி சேமித்து வைக்கலாம். 

நான் கடந்த மூன்று வாரங்களாக, தவறாமல் இந்த டைரி மூலமாக பல விஷயங்களை உள்ளிட்டு வருகின்றேன். 

உங்களுக்கும் நிச்சயம் பயன்படும். 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க : 

1) 

2) 


3) 

= = = = = 


103 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கமலாவுக்கும் இன்னும் வரப் போகும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கிய வாழ்வு என்றும் நம்முடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதுவேதான் நானும் வேண்டிக் கொண்டேயுள்ளேன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

    ஆறாவது கேள்வியும் பதிலும் அருமை. முன்பு நம் காலத்தில் தந்தைக்கு மிகவும் மரியாதை தந்தோம். அதனால் அவர் பேச்சுக்கு மதிப்பளித்து அவர் என்ன சொன்னாலும் அதன்படி நடந்து கொண்டு விடுவோம். (நமக்குள் சிறிது மனக்குறை இருந்தாலும்) தாயிடம் சலுகைகள் நிறைய உண்டு. அப்போதே இது சில குடும்பங்களில் அப்படியே மாறியிருக்கும். இப்போது நம் குழந்தைகளுக்கு ஒரளவு பேச்சு சுதந்திரம் (நம்முடைய இளவயது மன ஆதங்கத்தினால்) நாமே தந்து விட்டோம். அதனால், எவ்வித மாறுபாட்டிற்கும் மனச்சஞ்சலம் அடையாத மனப்பக்குவத்தையும் ஒரளவு கற்று அடைந்து விட்டோம். இனி வரும் சந்ததியினர் இன்னமும் மாறும் வாய்ப்புகள் உள்ளது. அதையும் கண்கூடாக பார்த்துதான் வருகிறோம். பொதுவாக மாற்றங்களுக்கு பழகி வரும் மனது நல்லதுதானே..!
    மற்றைய கேள்வி பதில்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ஹரிஹரன் மேடம்... நானும் யோசித்துப் பார்த்திருக்கேன். நாம் சின்ன வயதில் எப்படி இருந்தோம், எவ்வளவு மரியாதை கொடுத்தோம், அடக்க ஒடுக்கமாக நடந்துகொண்டோம் என்பதைச் சரியாகச் சொல்ல வல்லவர்கள் நம் பெற்றோரும் பெரியவர்களும்தான்.

      கால தேச வர்த்தமானத்தில் சிறிது வித்யாசமும் சிந்தனைப் கோக்கும் இருக்கலாமே தவிர, நம்மைப் பற்றி நம் பெற்றோருக்கு அப்போ என்ன மனக்குறைகள் இருந்ததோ அதேபோல்தான் நமக்கும் நம் பசங்கமேல இப்போ இருக்கும். பசங்க நம்மைக் காப்பியடித்துத்தான் வாழ்க்கையைப் புரிந்து நடக்கிறார்கள். இது என் கருத்து

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /கால தேச வர்த்தமானத்தில் சிறிது வித்யாசமும் சிந்தனைப் கோக்கும் இருக்கலாமே தவிர, நம்மைப் பற்றி நம் பெற்றோருக்கு அப்போ என்ன மனக்குறைகள் இருந்ததோ அதேபோல்தான் நமக்கும் நம் பசங்கமேல இப்போ இருக்கும்/

      உண்மைதான். என்னதான் நாம் நம் வாரிசுகளுக்கு இப்போது ஒரளவு பேச்சு சுதந்திரம் தந்தாலும், "நாங்களெல்லாம் அந்த காலத்தில் எவ்வளவு மரியாதையாக பெற்றவர்களை, வீட்டின் பெரியவர்களை நடத்தி அவர்களின் சொல்பேச்சு கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம் தெரியுமா?" என்பது போல நம் பேச்சுக்களின் சில சமயங்களில் நம் மனதின் வெளிப்பாடுகளை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்தி விடுவோமே...! அதையும் நம்முடனே இருக்கும் அவர்கள் புரிந்து கொண்டுதானே கற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒன்று.. என்னதான் கேட்டு வளர்ந்தாலும், காலத்திற்கேற்ப பார்த்து வளர்த்தாலும், இந்த மனக்குறை என்பது பெற்றோர், பிள்ளைகளிடையே எப்படியோ எந்த விதத்திலோ வந்து விடுகிறது. (அந்த காலத்திலும் சரி... இன்றைய காலத்திலும் சரி..) ஏன் அப்படி? இது அவரவர் கருத்தை சரியென முழுதாக அவரவர்கள் நம்புவதால்தானோ எனவும் நானும் யோசித்திருக்கிறேன். ஆக, இந்த கருத்து வேறுபாடு உள்ளங்களில் இருக்கும் வரை உண்மையான அன்பை புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ இயலாமல் போகிறது. இதுதான் ஒவ்வொருவர் வாழ்விலும் நிதர்சனம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் அனைவருக்கும்.

    புதிய app உபயோகம்தான். இப்போதான் ஆன்ட்ராய்டுக்கு மாறியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது உபயோகித்துப் பார்க்கிறேன். நேற்றுதான் மாத்திரைகளை நினைவுபடுத்தும் செயலியை இன்ஸ்ட்டால் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா ! நன்று. உபயோகித்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மாத்திரைகளை நினைவுபடுத்தும் செயலி பற்றி சிறு குறிப்பு வரைந்து எனக்கு அனுப்புங்கள். அடுத்த புதன் அன்று அதை மற்றவர்களுக்கும் பகிர்வோம்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    ஃபோனில் கற்றுக் கொள்ள பயனுள்ள தகவலாக தந்துள்ளீர்கள். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

    படங்கள் அருமை. மூன்றையும் பெரிதாக்கி பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவதைப் பெரிதாக்கிப் பார்த்து ப்ரெஷர் ஏறினால் கம்பெனி பொறுப்பேற்காது

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. இப்போதும் ஃபோன்தானா என்ற ப்ரெஷர் உடன் பயணிக்கும் அந்த பெண்ணிற்கல்லவா? நமக்கென்ன வந்தது.? :)

      நீக்கு
    3. :)))) கருத்துரைகளுக்கு நன்றி. என்று தணியும் இந்த selfie மோகம் !!

      நீக்கு
    4. //ப்ரெஷர் உடன் பயணிக்கும் அந்த பெண்ணிற்கல்லவா?// காலையிலிருந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்... இரண்டு பேரும் சேர்ந்து விழுந்தார்களா? இல்லை பெண்ணைக் கட்டிய கயிறு விடுபடாமல் ஆண் மட்டும் விழுந்தானா? பெண், இவன் விழுந்தாலும் தான் விழக்கூடாது என்று நினைத்து தன் கயிறை அவிழ்ந்துவிடாமல் இன்னொரு முடிச்சு போட்டிருந்தாளா? இதான் சாக்கு என்று கழற்றிவிடப்பார்க்கிறாளா? விழுந்தவன் மேலே வந்தானா? இப்படீல்லாம் யோசித்தால் ப்ரெஷர் வருமா வராதா?

      நீக்கு
  6. அன்பின் கீதா சாம்பசிவத்தின் கேள்விகள் அனேகமாக எல்லார் மனதிலும் எழுவதுதான்.

    பெண்கள் இளகியவர்கள், வலிமை இல்லாதவர்கள்
    என்று ஷேக்ஸ்பியர் சொன்ன காலம் வேறு.
    அவர் ஊரில் இருக்கும் ராணியும், இருந்த மார்கரெட் தாட்சருமே
    இந்த சிந்தனையில் இருந்து வேறு பட்டவர்கள்.


    பொதுவாக ஆண்களைப் பல விஷயங்கள் பாதிப்பதில்லை.
    பெண்களுக்கு அவர்களின் சுய கௌரவத்தை
    யாராவது அவமதித்தால் வருத்தம் வரத்தான் செய்யும்.

    அதைக் கணவர்கள் சட்டென்று புரிந்து கொண்டால்
    வாழ்வு கொஞ்சமேனும் சிரமம் இல்லாமல்
    இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் இளகியவர்கள் என்பது உண்மை. வலிமை இல்லாதவர்கள் என்பது வலிமைக்கு நாம் புரிந்துகொள்ளும் அர்த்தத்தைப் பொறுத்தது. மனவலிமை, எதையும் தாங்கி வாழ்க்கையை நடத்திச் செல்லும் துணிவு பெண்களுக்கு மிக அதிகம். இது இயற்கை தந்த சக்தி. இல்லைனா கணவனுக்குனா பிள்ளபெறும் டாஸ்கை இயற்கை ஒப்படைத்திருக்கும்.

      நீக்கு
    2. நெல்லை சொல்வதை முற்றிலும் ஆதரிக்கிறேன். பல பெண்களின் மனோதிடத்தைக் கண்டிருக்கேன்/கண்டு கொண்டும் இருக்கேன்.

      நீக்கு
    3. சுவையான, ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. முதல் படத்தின் வண்ணக் கொக்கும் வெள்ளை கொக்கும்
    என்ன பேசிக்கொள்ளும்.?
    நாங்கள் இந்த ஊருக்குப் புதுசு. இங்கே நல்ல மீன் கிடைக்கிறதா?

    இரண்டாவது படத்து ராஜபுதனக் கல்யாணப் பெண்ணைப்
    பத்திரிக்கைகளில் பார்த்தேன். கையிலிருந்து தொங்கும் அணிகள் மற்றவர்களைக்
    குத்தாமல் இருக்க வேண்டுமே என்று தோன்றியது:)

    மூன்றாவது படம் டிரிக் ஷாட்?

    பஞ்சீ ஜம்ப் மாதிரி இருந்தாலும் இது செல்ஃபீ மோகம்
    கொண்ட ,ஃபோடோஷாப் செய்யப்பட்ட ஜோடி என்று நினைக்கிறேன்.
    நேற்று செல்ஃபி எடுக்கப் போய் மலையிலிருந்து விழுந்த இளைஞர் நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. selfie சிலரின் வாழ்க்கையை சூனியமாக்கிவிடுவது கொடுமை.

      நீக்கு
    2. //என்ன பேசிக்கொள்ளும்.?// - பேச்சுன்னா ஓக்கேதான். ஆனால் கல்யாணம்னா உங்க சிவப்பு கலர் ஜாதியிலேயே ஆளைப் பாத்துக்க. எங்க கௌரதையை விட்டுக்கொடுக்க சம்மதிக்க மாட்டாங்க.

      நீக்கு
  8. அம்மா எப்போதும் அம்மாதான். மாற்றம் கிடையாது.
    பிள்ளைகள் இன்னும் மரியாதையோடு தான் இருக்கிறார்கள்.
    அவர்கள் குழந்தைகள்
    எப்படி மாறுவார்களோ தெரியாது. இது புது உலகம்.

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளும் பதில்களும் நன்றாக உள்ளன. 

    படக்கருத்துகள்.

    1. எத்தனை கேள்வி குறிகள் (புதன்?)
    2. நேற்று போட மறந்த அவந்திகா படம்?
    3. பங்கீ ஜம்ப் ஆனாலும் selfi எடுக்கவோ இருவர் கட்டிப்பிடித்தோ குதிப்பது அனுமதியில்லாத ஒன்று. இந்த படம் போட்டோஷாப் செய்தது போல் உள்ளது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வரும் நாட்கள் பிரச்னை இல்லாமல் அமைதியாகக் கழியவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. கேள்வி/பதில்களுக்குப் பின்னர் வரேன். கொக்குகள் படம் மட்டுமில்லாமல் எல்லாப் படங்களுமே "க்ராப்பிங்" செய்யப் பட்டதோ? கடைசிப் படம் செயற்கையாகத் தெரிகிறது. திருமணத்திற்குத் தயாராகக் காத்திருக்கும் பெண்ணின் நகை அலங்காரங்களைப் பார்த்து மாப்பிள்ளை பயந்து ஓடிடப் போறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண்ணின் நகை அலங்காரங்களைப் பார்த்து // - நல்ல கேசரிக்கு முந்திரி/கிஸ்மிஸ் லாம் எக்ஸ்ட்ராதான். சரக்கு சரியில்லை என்றால்தான் அதிகமாக முந்திரி/கிஸ்மிஸ் போட்டு படம் காட்டணும் - னு நான் எழுதினா யாரேனும் சண்டைக்கு வந்துடுவாங்களோ?

      நீக்கு
  12. பொதுவாக அம்மா என்றால் ஓர் புனித பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது என்பது என் கருத்து. உங்கள் கருத்து என்ன?

    அம்மா எனில் சாதாரணமானவளாக இருக்க மாட்டாளா? எப்போதுமே தியாகி தானா?

    தான் பெற்ற குழந்தைகளையே சரியாகக் கவனிக்காத அம்மாக்களைப் பார்த்திருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம்.

      நீக்கு
    2. //எப்போதுமே தியாகி தானா?// விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் இதற்குப் பதில் எப்போதுமே ஆமாம் ஆமாம் ஆமாம். எனக்கு இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

      நீக்கு
    3. இம்மாதிரிச் சொல்லிச் சொல்லி அம்மா என்றால் தனிப்பிறவினு ஓர் கருத்து ஏற்பட்டு விட்டதோ?

      நீக்கு
  13. செகப்பிரியர் சொன்னது ஹாம்லெட்டின் தாய்க்கு மட்டும் பொருந்தும். ஒருவேளை ராஜகுடும்பத்துத் தாய்மார்கள் அப்படி இருக்கலாம். ஒரு சில பெண்களைத் தவிர்த்துப் பொதுவாகப் பெண்கள் ஆண்களை விட மனோபலம் அதிகம் உள்ளவர்கள். என்னைப் பொறுத்தவரை ஆண் தான் பெண்ணைச் சார்ந்து இருக்கிறான். பெண் ஆணைச் சார்ந்து இல்லை. பெண் இல்லை எனில் ஆணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறாது. தனியாய் வாழ்க்கை நடத்தவும் முடியாது. ஆனால் பெண் தனியாக இருந்து வாழ்ந்து காட்டுவாள். வெற்றியும் பெறுவாள். ஹிஹிஹி! இவை என்னோட தனிப்பட்ட கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சொல்லிவிட்டு கடோசீல ஜகா வாங்கிட்டீங்களே !!

      நீக்கு
    2. அதெல்லாம் இருக்கட்டும் கீசா மேடம். வீட்டில் பரமாச்சார்ய்ர் படம் வச்சிருக்கீங்களா இல்லை நல்லதங்காளா?

      நீக்கு
    3. //ஆண் தான் பெண்ணைச் சார்ந்து இருக்கிறான். பெண் ஆணைச் சார்ந்து இல்லை. பெண் இல்லை எனில் ஆணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறாது. தனியாய் வாழ்க்கை நடத்தவும் முடியாது. ஆனால் பெண் தனியாக இருந்து வாழ்ந்து காட்டுவாள். வெற்றியும் பெறுவாள்.// - இது எல்லாமே சரியானதுதான். 'வெற்றியும் பெறுவாள்' என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கு. அந்த 'வெற்றி' திருமணம் செய்துகொள்ளாமலேயே வந்தது என்றால் நல்ல பெயர் கிடைக்காது. கணவன் மறைந்து பிறகு வந்தது என்றால் சமுதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக மிளிர்வாள். பெண், நேரடியாக ஆணைச் சார்ந்து இல்லை என்றாலும், மனதின் ஓரத்தில், வெள்ளம் இழுத்துக்கொண்டு போனால், காப்பாற்ற கரையிலிருக்கும் அப்பா இருக்கிறார் என்று குழந்தை மன தைரியம் கொள்ளுவது போன்ற, லேசான மறைமுகமான தைரியத்தை ஆண் கொடுக்க முடிந்தால் போதுமானது.

      நீக்கு
    4. எனக்குத் தெரிந்து என் அண்ணா பிள்ளையின் மாமியாருக்கு அக்கா ஒரு spinster. இப்போத் தங்கையுடன் தான் இருக்கார். இம்மாதிரிச் சில பெண்களை அறிவேன். அதே போல் தன்னந்தனியாக இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய/காப்பாற்றும் பெண்களும் உண்டு. ஆண் பெண்ணை மட்டம் தட்டாமல் இருந்தாலே போதும்! மனைவியாகவே இருந்தாலும் ஒரு காரியத்தை ஆரம்பிக்கையில் "ஆமா! நீ ரொம்பக் கிழிச்சுடுவே!" எனச் சொல்லாமல் ஊக்கம் கொடுக்கக் கூட வேண்டாம். பேசாமல் இருந்தாலே போதும்.

      நீக்கு
    5. அதே சமயம் எல்லாவற்றுக்கும் பிறரை, முக்கியமாய்க் கணவனைச் சார்ந்திருக்கும் பெண்களும் உண்டு. இவங்க குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் இருந்து அன்றாட சமையல் வரை அனைத்திற்கும் கணவன் உதவி இல்லாமல் செய்ய மாட்டார்கள்/இவங்களால் முடியாது. அதே சமயம் செய்து கொடுத்ததற்கான பலனையும் கணவனுக்குக் கொடுக்க மாட்டாங்க. விசித்திரமாய் இருக்கும் இவங்க நடவடிக்கைகள். எத்தனை விதமான மனிதர்களை அன்றாடம் பார்த்து வருகிறோம்! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    6. ஆண் பெண்ணை மட்டம் தட்டாமல் இருந்தாலே போதும்! மனைவியாகவே இருந்தாலும் ஒரு காரியத்தை ஆரம்பிக்கையில் "ஆமா! நீ ரொம்பக் கிழிச்சுடுவே!" எனச் சொல்லாமல் ஊக்கம் கொடுக்கக் கூட வேண்டாம். பேசாமல் இருந்தாலே போதும்.//

      கீதாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஅ சூப்பரோ சூப்பர்!! கை கொடுங்க ஹைஃபைவ் நிறைய தட்டறேன். நான் சொல்ல நினைத்தது!! இதுக்கு முன்னவும் இதே கருத்தை இங்கு சொல்லியிருக்கிறேன் அது போல ஆதி எழுதிய அவரும் நானும் தொடரிலும்!!! கருத்து...

      கன்னாபின்னானு உங்களுக்குக் கை தட்டி ஆதரிக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    7. ஆஹா - கீதாக்கள் எல்லாம் ஒண்ணு சேந்துட்டாங்க !!

      நீக்கு
  14. யாரானும் அடிக்க வரதுக்கு முன்னாடி, முக்கியமாய் நெல்லை! நான் ஓடிடறேன். அப்புறமா வந்து எட்டிப் பார்த்துட்டு நிலவரம் தெரிந்து கொண்டு மற்ற பதில்களைக் கொடுக்கணும். :))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெ த உடனே மேடைக்கு வரவும்.

      நீக்கு
    2. Actually it is debatable. I gave.my.opinion.

      நீக்கு
    3. எல்லாமே நீங்கதான் !! வெளியாகியிருக்கும் நேரங்கள் உண்மையை சொல்கின்றன!!

      நீக்கு
    4. ஹெஹெஹெஹெ, மொபைலில் இருந்து கருத்துக் கொடுத்துப் பார்த்தேன். தெரியாத்தனமா அனானியை அழுத்திட்டேன் போல. ரோபோ வந்து படுத்திண்டு இருந்தது. :)

      நீக்கு
    5. நீங்க வரச்சே பரமாசாரியார் படத்தைப் பார்க்கலையா? இருங்க முடிஞ்சால் ஃபோட்டோ எடுத்துப் போடறேன் குஞ்சுலு அம்பேரிக்காவில் இருந்தோ/நைஜீரியாவில் இருந்தோ எங்களுடன் பேசும்போதெல்லாம் அவரைப் பார்த்துவிட்டு "உம்மாச்சித்தாத்தா" என்று சொல்லும்.

      நீக்கு
    6. யாரானும் அடிக்க வரதுக்கு முன்னாடி, முக்கியமாய் நெல்லை! நான் ஓடிடறேன்.//

      எதுக்கு ஓடணும்...நான் இருக்கிறேன்!! நெல்லை என்னா செய்ய முடியும்!!! ஹாஹாஹாஹாஹாஹா

      இங்கு.. உங்க கருத்து பெண்கள் பற்றியது...மேலே எல்லாம் வாசித்துவிட்டேன் அத்தனையும் டிட்டோ அண்ட் ஹைஃபைவ்!!

      ஆண் பெண்ணிற்கு கை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தலைல குட்டாம இருந்தாலே போதும்...

      கீதா

      நீக்கு
  15. மறந்துட்டேனே. ராசிகளுக்குச் சொன்ன பண்புகளில் மேஷ ராசிக்காரர்கள் நான் பார்த்தவரை அப்படி ஒண்ணும் உசத்தியாக இல்லை. சோம்பேறித்தனமாகவும் படுக்கையை விட்டே எழுந்துக்காதவங்களாகவும், குளிக்கக் கூட மனம் இல்லாதவங்களாயும் தான் இருக்காங்க. அடுத்தவங்களை அதட்டி வேலை வாங்கறாங்க பெரும்பாலான மேஷ ராசிக்காரங்க. தலைமைப் பண்பா? அப்படின்னா என்னனு கேட்பாங்க! சுறுசுறுப்பைத் தேடித் தான் பார்க்க வேண்டி இருக்கு.

    நீங்கள் கொடுத்த ராசிகளில் என்னோட ராசியும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அடுத்தவங்களை அதட்டி வேலை வாங்கறாங்க பெரும்பாலான மேஷ ராசிக்காரங்க.// அதுவும் ஒரு தலைமைப் பண்புதான். Management is the art of getting things done within stipulated time with available resources. Managing by threatening is also one among the techniques!!

      நீக்கு
    2. //படுக்கையை விட்டே எழுந்துக்காதவங்களாகவும், குளிக்கக் கூட மனம் இல்லாதவங்களாயும் தான் இருக்காங்க.// - கீசா மேடம் சொல்வதைப் பார்த்தால் நூற்றுக்கு 95 இளையதலைமுறை மேஷ ராசிதான் போலிருக்கு. வேலை பார்ப்பவர்களில் 100க்கு 95 பேர், சனி ஞாயிறு அன்று மேஷ ராசிக்கு ஆட்டமேட்டிக்கா மாறிடுவாங்க போலிருக்கு

      நீக்கு
    3. அடுத்தவங்களை அதட்டி வேலை வாங்கறது தலைமைப் பண்பா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதே அவங்களை உதவி கேட்டாச் சண்டைக்கு இல்ல வருவாங்க! :(((( அவங்க காரியம் வரைக்கும் தான்! சுயநலம் மிக மிக மிக மிக அதிகம்.

      நீக்கு
    4. அக்கா என் மாமியாரும் அவரது ஒரு பேத்தியும் மேஷம் தான் ஆனால் செம சுறு சுறுப்பு...நல்லா வேலை செய்வாங்க. தானே செஞ்சுக்குவாங்க.

      கீதா

      நீக்கு
    5. ம்ம்ம்ம்ம்? அப்படீங்கறீங்க தி/கீதா? எங்க வீட்டு மேஷங்கள் எல்லாம் உண்மையான மேஷங்கள் மாதிரியே இருப்பாங்க. குளிக்கக் கூட நெட்டித் தள்ள வேண்டி இருக்கும். :)))) நல்லவேளையா அவங்கல்லாம் இப்போ என்னோடு அடிக்கடி தொடர்பில் இருப்பதில்லை.

      நீக்கு
  16. சிம்ம ராசி/சிம்ம லக்னம் காரங்களைப் பற்றிச் சொல்லி இருப்பது சரியே. எங்க சுற்று வட்டாரத்தில் ஒரு சிம்ம ராசி/3 சிம்ம லக்னம். எல்லாம் சொன்னது சொன்னது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! தகவலுக்கு நன்றி. எங்கள் குடும்பத்தில் ஏராளமான சிம்மங்கள் உண்டு.

      நீக்கு
    2. //ஏராளமான சிம்மங்கள்// - சிம்மங்கள் ஒற்றுமையா இருக்காதே..இருக்கவும் முடியாதே... ஹிஹிஹி

      நீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  18. குழந்தைகளிடம் அனைத்து விசயங்களிலும் சற்றே/சிறிய பாகுபாடு காண்பித்தாலும் பின்னாளில் அதுவே பிரச்சனைக்கு காரணமாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகுபாடு காண்பிக்காமல் தராசு மாதிரி இருப்பது சாத்தியமற்றது. ஆனால் எப்போதும் மனசாட்சிப்படி நடந்துகொண்டால், அதுவே பிரச்சனைகளைத் தவிர்க்கும், பிரச்சனை உண்டானாலும், நமக்கு அதனால் குற்ற உணர்வு இருக்காது.

      நீக்கு
    2. உண்மை நெல்லை. அவங்க தப்பாவே நினைச்சாலும் நம்மளவில் ஓர் நிம்மதி இருக்கும்.

      நீக்கு
  19. மொபைல் டைரி - அதான் Notes என்று உள்ளதே - மேற்சொன்ன அனைத்து வசதிகளுடன் - (எனது Vivo கைப்பேசியில்) (1+ pin வசதி இல்லை)

    பதிலளிநீக்கு
  20. ஆப் - இது பற்றி தெரிந்திருந்தாலும் நான் டவுன்லோட் செய்யவில்லை இன்னும்.

    ராசிகளில் ஹிஹிஹிஹிஹி எனக்குச் சுத்தமாகப் பொருந்தவில்லை. என்னுடைய தனிப்பட்டக் கருத்து என்னதான் ராசியின் குணாதிசயங்கள் என்று சொல்லப்பட்டாலும் வளர்ப்பினால் ஏற்படும் மாற்றங்கள் சூழ்நிலையினால் ஏற்படும் மாற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது. இது என் தனிப்பட்டக் கருத்து. நாட் ஃபார் விவாதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா கீதாக்களும் இன்றைக்கு இப்படி ஜகா வாங்கி ஓடுகிறார்களே! என்ன காரணம்?

      நீக்கு
    2. நீங்களும்தான் !! மேலே பார்க்கவில்லையா?

      நீக்கு
    3. //வளர்ப்பினால் ஏற்படும் மாற்றங்கள் சூழ்நிலையினால் ஏற்படும் மாற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது. // - இதுல என்ன சந்தேகம்? பங்கனப்பள்ளி மாமரம்தான். ஆனால் மாங்காய் நிலத்துக்கு நிலம் ருசியில் வேறுபடும். வளர்ந்த சூழ்நிலை. ஆனால் பொதுவா பங்கனப்பள்ளியின் குணம் இருக்கும். அதுபோலத்தான் ராசியும்.

      நீக்கு
  21. அடுத்தடுத்த தலைமுறைகள் வாழ்வு இன்னும் தவறான பாதையில் செல்லும்.

    கடந்த நாற்பது வருடங்களாக... அலைபேசி மெமோவில்தான் நான் பதிவுகளை எழுதி சேமிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. நான் சொல்லியிருப்பது டைரி போன்ற அமைப்பு. நம்மைத் தவிர யாரும் திறக்க முடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்த தேதி குறிப்பையும் பிறகு மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.

      நீக்கு
  22. முதல் படம் : இது கலையோ அலல்து சிலையோ!!
    ஓடுமீனோட உறுமீன் வருமளவும் 'காத்து' நிற்குமாம் கொக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. 2 ம் படம் : அவந்திகா ஆராம்ஸே உக்காந்து யோசிக்கிறா ப்ளானிங்க் அந்த ஆளை எப்படிப் போட்டுத் தள்ளிடலாம்னு! கை வைச்சிருக்கற போஸ்ச்சர், கண்ணின் பார்வை எல்லாம் காட்டுது பாருங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. 3 வது படம் : பங்கி ஜம்பிங்க்?!! செல்ஃபி மேனியாஸ்!! கிரேஸி பீப்பிள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. 1. திருமணம் ஆன பெண்கள் ஏன் தாய்வீட்டிலேயே கணவனோடு இருக்காமல் கணவன் வீட்டிற்கு வந்து வாழத் துவங்குகின்றனர்? (ஶ்ரீலங்காவில் தமிழர்களில் மாப்பிள்ளை தான் மாமியார் வீடு போகிறார். இங்கே மாமியார் வீடென்றால் அர்த்தமே வேறே!)
    2. கணவன் வீட்டில் வசிக்கும் பெண்ணிற்குப் பிறந்தகத்தின் மேல் பற்று இருப்பது தவறா?

    3. பற்று எனில் வாரம் ஒரு முறையாவது பிறந்த வீட்டுக்கு வந்து குறைந்தது 2 நாட்களாவது தங்கிப் போகும் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எங்க வீட்டிலேயே உதாரணங்கள் உண்டு.
    4. உள்ளூரிலேயே பிறந்தகம், புக்ககம் இரண்டும் இருப்பது சரியா? இல்லை சரியாக வராதா?
    5. இன்றைய திருமணங்கள் ஒப்பந்த ரீதியிலேயே இருப்பதன் காரணம் என்ன?

    6. திருமண பந்தத்தின் முழு அர்த்தமும் புரிந்து தான் இப்போதெல்லாம் திருமணங்கள் நடைபெறுகின்றனவா?
    7.சப்தபதி முடிந்த பின்னரும் கருத்து வேறுபாட்டால் மருமகளை அப்படியே விட்டு விட்டுச் சென்றால் அது சட்டப்படி சரியா? அந்தப் பெண் அதன் பின்னர் வேறு திருமணம் செய்துக்கலாமா? அல்லது முறைப்படி விவாகரத்து பெற வேண்டுமா? ஏனெனில் ஹிந்து திருமணச் சட்டபப்டி சப்தபதி ஆனாலே போதும். அந்தத் திருமணம் செல்லும் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  26. 8. மாமியார்/மாமனாரை "லகேஜ்" எனச் சொல்லும் மருமகள்கள் அவங்க பெற்றோரைப் பற்றியும் அப்படி நினைப்பார்களா?
    9. படிப்புக்கும் புகுந்த வீட்டில் ஒத்துப் போவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கா? படிக்காத பெண் மட்டும் ஒத்துப் போவாளா? இல்லை வளர்ப்பு காரணமா?
    10.இப்போதைய சிக்கலான மணவாழ்க்கைக்கு ஒரே குழந்தை என்னும் பெற்றோர் எடுத்திருக்கும் முடிவு தான் காரணம் என்பது என் கருத்து. இது சரியா?

    பதிலளிநீக்கு
  27. இன்றைய கேள்வி பதில்கள் அருமை.

    1)வெள்ளையும் சிகப்புமாக அழகு காட்டுகிறார்கள்.
    2) எத்தனை மணி நேரம்தான் காத்திருப்பது.
    3) கால் பெல்ட் அவிளாதவரை வெற்றி.

    பதிலளிநீக்கு
  28. கேள்வி பதில்கள் நன்று. Offline diary app குறித்த தகவல்கள் சிலருக்கு பயன்படும். Google Docs, Notes போன்றவையும் இதேபோல பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  29. கேள்விகள் அதற்கு பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    3வது கேள்வி மிக உண்மை. ஆண்கள் பொருட்படுத்தாமல் போய் விடுவார்கள், பெண்கள் அதை நினைத்து நினைத்து புலம்பும் குணம் இருக்கும் தான்.

    4வது கேள்விக்கு பதில் அருமை.

    எல்லோரும் அமர்ந்து மனம் விட்டு பேசினால் தீர்வு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  30. டிஜிட்டல் டைரி பற்றிய தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!