புதன், 23 நவம்பர், 2022

ஓய்வு பெற்றதும், கிராமத்தில் செட்டில் ஆவது நல்லதா இல்லை நகரத்திலா? + சு நா மீ 03 பகுதி கதை

 

நெல்லைத்தமிழன் .

இதை புதன் கேள்வியாகக் கேட்கலாமா என்று தெரியவில்லை (அதற்கு பதில் சொல்பவர்கள் உண்டா?)

& கேட்கலாம், உண்டு. 

ஔவையார் தன் ஆத்திச் சூடியில், திருமாலுக்கு அடிமை செய் என்று சொல்லியிருக்கிறார். எங்கும் சிவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அதுபோலவே கொன்றைவேந்தனிலும் சிவனைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆயினும் அவரின் இரு நூல்களும் எதனால் சிவனைப் பற்றிய தலைப்பு கொண்டுள்ளது (ஆத்திச்சூடி-ஆத்தி மாலையைச் சூடுபவன், சிவன், கொன்றை வேந்தன் - கொன்றை மாலை அணிந்தவன், சிவன்)( நம்ம ஜீவி சார்தான், சிந்தனையைத் தூண்டும் கேள்வி இல்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறார். அவரையே பதில் சொல்லச் சொல்லுங்களேன்)

& ஆ ! சிந்தனையைத் தூண்டும் கேள்வியா! அப்போ எங்களுக்கு இதற்கு பதில் தெரியாது!! 

மேலும் யோசிக்கையில் - 'திரு' என்றால் செல்வம். 'மால்' என்றால் மெட்ராஸ் பாஷையில் துட்டு. ஆக, 'திரு''மாலு'க்கு அடிமை செய் என்றால், 'யார் உங்களுக்கு சம்பளம் கிம்பளம்' எல்லாம் தருகிறார்களோ அவர்களுக்கு அடிமையாய் இரு - என்று ஔவையார் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

ஔவையார் அருளியவற்றில் சிவன் : 

1. ஆத்திசூடி   

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. 

30. அரனை மறவேல்.

 

 2. கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை 

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

 

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. 

10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு. 

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். 

80. மோனம் என்பது ஞான வரம்பு. 

89. வைகல் தோறும் தெய்வம் தொழு. 

 4. நல்வழி

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு 

அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் 

இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் 

விதியே மதியாய் விடும்.  15 

 

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ் 

ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில் 

உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே 

மடக்கொடி இல்லா மனை.  24 

 

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் 

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை 

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் 

எனையாளும் ஈசன் செயல்.  27 

 

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் 

அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் 

கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே 

விண்ணுறுவார்க் கில்லை விதி.  37   

 

(உலகியபில் நின்றோர்க்கு வினை அடுமே அல்லது இறைவன் திருவடி பற்றி விண்ணுறுவார்க்கு இல்லை விதி என்றவாறூ)

 

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் 

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை 

தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் 

போனவா தேடும் பொருள்.  38 

 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 

திருவா சகமும் திருமூலர் சொல்லும் 

ஒருவா சகமென் றுணர்.  40 

ஔவையாரும், திருவள்ளுவர் சொல்லியதையே சொல்லியுள்ளார். ஆனால் ஏன் நாம் திருக்குறள் மாத்திரம் பொதுமறை என்று ஜல்லியடிக்கிறோம்?

# ஒளவையாரே குறளைப் புகழ்ந்து பாடியிருப்பதால் இருக்கலாம். மேலும் திருக்குறள் பல துறைகளுக்கும் அரிய விளக்கங்கள் - கோட்பாடுகளைத் தருகிறதே...

& திருவள்ளுவர் முதலில் கூறிவிட்டார் என்பதால்தான். முதலில் சொன்னவர்களுக்குத்தான் முதல் மதிப்பெண். 

ஜோசியரை consult செய்யும் வழக்கம் உண்டா? அதில் நம்பிக்கை உண்டா?   

# ஜோஸ்யத்தில் நம்பிக்கை இல்லை எனினும் குடும்பத்தில் ஜோசியம் தெரிந்த நபர்களுடன் பேசி விளக்கங்கள் பெற்றதுண்டு.

& திருமணப் பொருத்தம், பெயர் வைப்பது போன்ற விஷயங்களுக்கு என்னுடைய மைத்துனரை ஆலோசிப்பது உண்டு. அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்பு,  ஜோதிடம் வைதீகம் எல்லாம் கற்று, செய்து வருகிறார். மற்றபடி சும்மா ஆர்வத்திற்காக அன்றாட ஜோதிடங்களைப் பார்ப்பது உண்டு. பொழுதுபோக்கு! 

ஓய்வு பெற்றதும், கிராமத்தில் செட்டில் ஆவது நல்லதா இல்லை நகரத்திலா?

# நகரமா, கிராமமா என்பது ஒவ்வொருவரின் ஆர்வம் , வசதி இவற்றைப் பொருத்து தேர்வு செய்ய வேண்டிய விஷயம். 

& என்னுடைய வோட் நகரத்திற்கே. 

= = = = =

சு நா மீ கதை ஆசிரியர் slot கிடைக்காமல் ஏங்கி நிற்பதால் சு நா மீ கதையின் மூன்றாம் பகுதி இங்கே வெளியிட நாங்கள் அவருக்கு உதவியுள்ளோம் !

நேற்றைய பதிவின் தொடர்ச்சி 

திருவாரூர் தியாகராஜனைப் பார்க்கப் போகுமுன்பு சேகர், கடைத்தெருவிற்குச் சென்று, வேண்டிய சில பொருட்களை வாங்கிக்கொண்டு, பிறகு நாகை பஸ் நிலையத்திற்குப் போனான். 

திருவாரூர் செல்லும் பஸ்களில் எதில் உட்கார இடம் கிடைக்கிறதோ அதில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்துக்கொண்டு வந்தவனை தடுத்து நிறுத்தியது பின்னாடியிலிருந்து அழைத்த தேவாவின் குரல். 

" சேகர் அண்ணே - கொஞ்சம் நில்லுங்க. முக்கியமான விஷயம். "

சே : " என்ன விஷயம் சொல்லுடா தேவா "

தே : " சேகர் அண்ணே நேத்திக்கு நைட்டு போட்டோ ஸ்டுடியோ வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். சுசீலா அக்கா வீடு இருக்கும் தெரு வழியாக வந்துகொண்டிருந்தேன். அப்போ சுசீலா அக்கா வீட்டுக்கு ஒரு கார் வந்துச்சு. காரிலிருந்து ஒரு பொண்ணு இறங்கி, சுசீலா அக்கா வீட்டுக் கதவைத் தட்டினாங்க. அந்தப் பொண்ணு சுசீலாக்கா  வீட்டுக்கு உள்ளே போனதைப் பார்த்தேன். அவங்களை இதுக்கு முன்னே எங்கேயும் பார்த்ததில்லை. என்ன நடக்குது என்று பார்ப்பதற்காக சுசீலாக்கா வீட்டுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மணி நேரம் கழிச்சு அங்கே ஒரு போலீஸ் ஜீப் வந்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜீப்பை அனுப்பிவிட்டு, சுசீலா அக்கா வீட்டுக்குள் போனார். எனக்கு ஒரே குழப்பமாகப் போயிடுச்சு. என்ன ஆச்சு அந்த வீட்ல? அந்தப் பாட்டிக்கு ஏதாவது ஆகியிருக்குமோ ? சுசீலா அக்காவுக்கு ஏதாவது ஆபத்தா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில், காரை ஓட்டிக்கிட்டு வந்த பொண்ணு வந்து காரின் டிக்கியைத் திறந்து விட்டாங்க. அப்போ சுசீலா அக்கா இரண்டு பொட்டிகளைத் தூக்ககிக்கிட்டு வந்து காரின் டிக்கியில் வச்சாங்க. பிறகு எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த என்னை சைகை காட்டி கூப்பிட்டாங்க. நான் உடனே ஓடிப் போய், ' என்ன? ' என்று ஜாடையில் கேட்டேன். " இங்கே நடந்தது, நீ பார்த்தது எதையும் யாருகிட்டயும் சொல்லிடாதே. சேகரை உடனே பார்த்து, - 'எங்கும் போகவேண்டாம் - சில ஆபத்துகள் நேரலாம் என்று தோன்றுகிறது. அதனால் இந்த ஊரிலேயே இருக்கவேண்டும்' என்று சொல்லிவிடு. இந்தக் கடிதத்தை சேகரிடம் கொடுத்து விடு. அவசரம்' என்று சொல்லி இதோ இந்த கவரை என்னிடம் கொடுத்தாங்க. அதற்குள் வெளியே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் " நீங்க யாரிடமும் எதுவும் பேசவேண்டாம் என்று சொன்னேனே - " என்று அக்காவிடம் சொன்னார். அதற்கு சுசீலா அக்கா - " இல்லை சார் - இந்தப் பையனிடம், வீட்டை கொஞ்சநாளைக்குப் பார்த்துக்கொள்ளச் சொன்னேன்' என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் இரு என்று என்னிடம் ஜாடை காட்டி, பிறகு உள்ளே போய் பாட்டியை கூப்பிட்டுக்கொண்டு வந்தாங்க. பாட்டியைக் காரில் உட்காரவைத்துவிட்டு, வீட்டைப் பூட்டினாங்க. என்னிடம், " தேவா - அப்பப்போ வந்து வீட்டைப் பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு, இந்தக் கவரைக் கொடுத்துட்டு காரில் ஏறிக்கொண்டு போயிட்டாங்க. " 

சேகர், தேவா கொடுத்த கவரை வாங்கிப் பிரித்தான். 

அதில் ஒரு டைரியிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதத்தில், 

சுசீலா சில வரிகள் எழுதியிருந்தாள். 

(தொடரும் )

கதையின் அடுத்த பகுதி அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகும் " நன்றி : " ஜெயக்குமார் சந்திரசேகரன்" 

= = = = =

85 கருத்துகள்:

 1. சுநாமீ கதையின் தொடர்ச்சியைப் பார்த்ததில் சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 2. கையெழுத்தில் எழுதிய கடித உத்தி பிரமாதம்.
  அன்பு
  சுசீ
  - என்று கச்சிதமாக பாசம் வழிய முடித்த திறமையில் கதாசிரியர்
  மனத்தில் நிற்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதாசிரியர் கவனிக்கவும்.

   நீக்கு
  2. கதாசிரியர் கவனிக்கவும்.

   நீக்கு
  3. ஹாஹாஹாஹா கௌ அண்ணா இது நல்லாருக்கே!!!!! உங்களுக்கே உங்கள் பதில்!!!!!!!!

   கீதா

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. சிந்திக்க வைப்பவை.

  சுவாரஸ்யமான புதிர்கள் நிறைந்த தொடர் கதையையும் இன்று எதிர்பாராமல் வெளியிட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. இதை சுவைபட அருமையாக எழுதி வரும் கதாசிரியர் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. ரசனைகள் வாழ்க. சமயோஜிதமும் வாழ்க.

   நீக்கு
  2. // அருமையாக எழுதி வரும் கதாசிரியர் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.//
   இது என்ன புதுக்கரடி!
   Jayakumar

   நீக்கு
  3. /இது என்ன புதுக்கரடி!/

   ஹா ஹா ஹா. இந்தக் கதை எழுதியவரை கண்டு பிடிக்க பதிவின் கடைசியிலிருக்கும் வரிகளைக் கொண்டு நூல் பிடித்து Wall ஏறிடலாம்"னு நினைத்தேன். அவசரமாகவோ, அத்தியாவசியமாகவோ உண்மை ஆசிரியரும் (சகோதரர் கௌதமன்) இன்று எங்காவது எட்டிப் பார்ப்பார் இல்லையா? :)))) பார்க்கலாம்... நன்றி.

   நீக்கு
  4. கமலாக்கா என்ன சந்தேகம்? கதாசிரியர் கௌ அண்ணாவேதான்...

   கீதா

   நீக்கு
  5. /கமலாக்கா என்ன சந்தேகம்? கதாசிரியர் கௌ அண்ணாவேதான்/

   அதானே...! என்னோடு ஒரு பக்க பலமாக கை கோர்த்து கொண்டு விட்டீர்கள். நன்றி சகோதரி.

   நீக்கு
 5. அன்பின் வணக்கம்.. அனைவருக்கும்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 6. நல்ல உத்தி..

  இதைப் போன்ற கடிதத்தைப் பார்த்தே பல வருடங்கள் ஆகின்றன..

  பதிலளிநீக்கு
 7. நெல்லை,
  அத்வைதிகளின் இறை வழிபாடே குடும்பப் பாங்கானது.
  தெய்வங்களை கூட்டுக் குடும்ப உறவுகளில் கட்டி வைத்து தெய்வக் குடும்ப வழிபாட்டில் சந்தோஷிக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 8. உலகப் பொதுமுறை எனலாம்... அதுவே என்றும் தேவை...

  பதிலளிநீக்கு
 9. கிராமத்தில் இருப்பதே எனக்கு பிடித்தமான விசயம்.

  கதை சுவாரஸ்யமாக போகிறது....

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள சேகருக்கு,

  என்று கடிதத்தை ஆரம்பித்த சுசீலா,
  நான் சில என்று எழுதிய முதல் வரியை அடித்து விளக்கமாக விவரமாகச் சொல்ல நேரமில்லை என்று அவசர கதியை எழுத்தில் வெளிப்படுத்திய பாங்கு --
  எல்லாம் தத்ரூபம்.

  பதிலளிநீக்கு
 11. 1. கடைசியாக கடிதம் எழுதி போஸ்ட் செய்தது எப்போது? யாருக்கு? 2. மற்றவர்களிடமிருந்து வரும் கடிதங்களைப் பாதுகாத்து வைப்பது உண்டா? அப்படி யாருடைய கடித்த்தைப் பாதுகாத்துவைத்துள்ளீர்கள்? (கே ஜி எஸ் அவர்கள் பதில் சொல்லலாம்)

  பதிலளிநீக்கு
 12. ஒய்வு பெற்றதும் அடுத்துள்ளவர், உடல் ஒத்துழைப்பால் சின்ன காரியங்களில் உதவி செய்யும் மனப்பான்மை உள்ள, மருத்துவ வசதிகள் கொஞ்சம் மேம்பட்ட,  ஹரிபரி இல்லாத, உணவு மற்றும் தண்ணீர் சுலபமாகக் கிடைக்கும் சிறு நகரங்களில் வாழ்வது மேல். அப்படி பார்க்கும்போது ஸ்ரீரங்கம் போன்ற ஊர்கள் முன்னிலையில் நிற்கின்றன. பொருளாதார ரீதியாகவும் பார்க்கும்போது செலவுகள் சுருக்கமாக முடியும்.  

  பெங்களூரு, மற்றும் சென்னை ஒய்வு பெற்றவர்களுக்கு சுவர்க்கம் ஆக இருந்த காலம் மாறி விட்டது.

     Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீரெல்லாம் பிரச்னை இல்லை தான். மற்றபடி ஏப்ரல் 20 ஆம் தேதியிலிருந்து ஜூன் 20 தேதி வரை சூடு அதிகம். ஆனால் ஒரு மழை பெய்தால் குளிர்ந்து விடும். எல்லாம் சரியே! விலைவாசி இங்கே ஒண்ணும் குறைச்சல் இல்லை. சென்னை/பெண்களூரை ஒப்பிட்டால் திருச்சி/ஸ்ரீரங்கம் ரொம்பவே விலைவாசி அதிகம். நாங்க வந்தப்போ 5 ரூபாய்க்குக் கிடைத்த வாழைப்பூ இப்போ 15/20 ரூபாய்க்கும் அல்லது அதற்கும் மேலும் விற்கிறது. பூக்கள் வாங்கவே முடியலை.காடரிங் சேவை இங்கே விலை அதிகம். சென்னையில் 100ரூபாய்க்கு வாங்கும் சாப்பாடு (சாம்பார், ரசம், கறி, கூட்டு) இங்கே 120 ரூபாய். அதோடு ஒருத்தர் மட்டும் சாப்பிடும் அளவு தான் இருக்கும். அதுவும் நன்றாகச் சாப்பிடுபவர்கள் எனில் ஒருத்தருக்கே போதாது. அதே சென்னையில் தஞ்சாவூர் மெஸ், காமாட்சி மெஸ் போன்றவற்றில் ஒருத்தருக்குக் கொடுப்பதை இருவர் தாராளமாகச் சாப்பிடலாம். உணவின் ருசி, பக்குவமும் சென்னை தான் முதலிடம். கல்யாணங்களிலேயே பார்க்கிறேன். இங்கே சாப்பாடு ஓட்டல்கள் உள்பட ரொம்ப/ரொம்ப/ரொம்ப சுமார். விலையும் சென்னைக்குக் குறைந்தது இல்லை.

   நீக்கு
  2. இங்கே ஒரு தோசை என்பது ரொம்பச் சின்னதாகத் தான் இருக்கு. அப்படியே பெரிசாக இருந்தால் ஒரு தோசை 50 ரூ. தொட்டுக்கக் கொடுப்பது ஒரு மேஜைக்கரண்டி கூட இருக்காது/தேக்கரண்டி சட்னியில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றிக் கரைத்துக் கொடுப்பாங்க. சாம்பார் என்றால் கேட்கவே வேண்டாம். மஞ்சள் நிறமுள்ள நீர்/காரம் மட்டும் நாக்கைப் பொசுக்கும். இன்னிக்கு அமாவாசைக்கு மடியாகச் சாப்பாடு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு மாமி கொடுத்த வாழைக்காய்க் கறியில் மருந்துக்குக் கூட உப்பு என்னும் பெயரே இல்லை. பருப்பைக் கொட்டித் தான்களோடு கூட்டு மாதிரி சாம்பார்! ரசத்தை நான் கொஞ்சம் சரி பண்ணிப் பெருங்காயம் உப்பு, மிளகு பொடி எல்லாம் போட்டுச் சாப்பிடும்படி பண்ணிக்கிறேன். ஏனெனில் என் ஜீவனே ரசத்தில் தானே இருக்கு! :))))) அடுத்த முறை மருத்துவரிடம் போனால் வழக்கமாக வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கலாமானு கேட்டுடணும். நின்றால் காலில் குறிப்பாய் முழங்காலில் வலி பொறுக்க முடியாமல் இருக்கு. நாற்காலியில் உட்கார்ந்து தான் தோசை வார்ப்பது வறுப்பது எல்லாம்.

   நீக்கு
  3. ஒரு விஷயத்தில் திருச்சியைப் பாராட்டத் தான் செய்யணும். எங்கே போவதானாலும் உதாரணமாக விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்குப் போவதானாலும் சரி வீட்டை விட்டுக்கிளம்பி அரை மணி/முக்கால் மணியில் போயிடலாம். நான் சொல்வது சொந்தமாய் வண்டி வைத்திருப்பவர்களுக்கும், வாடகைக்காரில் செல்பவர்களுக்கும் பொருந்தும். 2 மணி நேரத்தில் தெப்பக்குளம் பக்கம் போய்ப் பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பிடலாம்.

   நீக்கு
  4. //  ஏப்ரல் 20 ஆம் தேதியிலிருந்து ஜூன் 20 தேதி வரை சூடு அதிகம்.//

   மொட்டை மாடிக்கு நேர் கீழே இருந்தால் அப்படித்தான். உங்கள் வீட்டுக்கு நேர்மேல் இருக்கும் மாடி பகுதியில் தரை  பெயிண்ட் (reflective) அடித்து விட்டால் சூட்டின் தாக்கம் குறையும். 

   நீக்கு
  5. ஜெயக்குமார் சார்.... என்னைப் பொறுத்த வரையில், பெங்களூருக்கு ஒரு குறையும் இல்லை. தண்ணீர், மின்சாரம் என்று எந்தக் கவலையும் இல்லை. "உதவி செய்யும் மனப்பான்மை உள்ள" கிராமங்களை அட்லஸ் புக்கில் தேடித்தான் கண்டுபிடிக்கணும். இப்போ அனேகமாக எல்லோரும் அவரவர் வேலையில் பிஸி. என் ஒருத்தனுக்குத்தான் பெங்களூர் உணவு, தமிழக உணவை ஒப்பிடும்போது பிடிக்கலை. இங்க பெங்களூர்ல திரும்பின இடங்களில் எல்லாம் சுத்தமான விலை குறைவான உணவு கிடைக்கும், கவலையில்லை. பூண்டு வெங்காயம் அடிச்சு விடாமலும் கிடைக்கும். கால நிலையும் நன்றாகவே இருக்கு.

   நீக்கு
  6. திரு ஜேகே சொல்றாப்போல் மொட்டை மாடி தான் காரணமென்றால் திருச்சி மக்கள் பூராவும் மொட்டைமாடிக்குக் கீழேயேவா வசிக்கிறாங்க? திருச்சியிலேயே சூடும் அதிகம்! அது போல் குளிரும் அதிகம் தெரியும். எல்லோருக்கும் பொதுவானது. மற்றபடி அவர் சொன்னதை எல்லாம் எங்க பில்டர் பனிரண்டு வருஷங்கள் முன்னர் வீட்டைக்கட்டும்போதே பண்ணி வைச்சிருக்கார். அதோடு உள்ளே ஃபால்ஸ் ரூஃப் எனப்படும் உள்கூரையும் உண்டு. மொட்டை மாடி தான் காரணம்னால் வருஷம் பூராவும் சூடு இருக்கணுமே!

   நீக்கு
  7. நாங்களும் "பெண்"களூர் வாசியாகவே ஆகி இருக்கணும். சுமார் 20 வருஷங்கள் முன்னர் சர் சிவிராமன் நகரில் வீடெல்லாம் பார்த்தாச்சு. ஆனால் அம்பத்தூர் வீட்டை விற்றால் தான் வாங்க முடியும் என்னும் நிலைமை. ஆகவே வேண்டாம்னு விட்டுட்டோம். அதோடு எனக்கு இந்தக் காவிரிப் பிரச்னையினால் கர்நாடகா ஓரவஞ்சனை பண்ணுதேனு வருத்தம் வேறே! மற்றபடி மக்கள் நல்லவர்களாகவே இருந்தனர்/இருப்பார்கள்/இருக்கின்றார்கள்.

   நீக்கு
  8. சுவாரஸ்யமான கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 13. 3. 65+ கார்ர்கள் முக்கியமாக்க் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் என்னென்ன? 4. இப்போதும் தினப்பத்திரிகைகளோ வாராந்திரிகைகளோ படிக்கிறீர்களா? புத்தக, பேப்பர் வடிவத்தில். 4. சுமாராக ஒவ்வொரு நாள் பதிவையும் எத்தனைபேர்கள் படிக்கின்றனர்?

  பதிலளிநீக்கு
 14. 5. பெட்ரோல் விலையேற்றம் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், ஏன், பெங்களூரில் மசால் தோசை போன்ற உணவுப் பொருள்கள் 35-40 ரூபாய்க்குக் கிடைக்கின்றன, தமிழகத்தில் அதுவே 90-100 ரூபாய், கேபிள் டிவி கட்டணம் போன்றவற்றைப் பற்றிப் பேசுவதில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆந்திரா ஓட்டல்களிலும் விலை குறைவு தான். முக்கியமாய்த் திருப்பதி பீம விலாஸில்.

   நீக்கு
 15. பொன்னியின் செல்வன் பார்த்ததால் நெல்லை சாருக்கு ஆழ்வார்க்கு அடியான் பாதிப்பு வந்து விட்டதா? கேள்வி அப்படி இருக்கிறது. 

  பதிலளிநீக்கு
 16. @ திண்டுக்கல் தனபாலன்..

  //உலகப் பொதுமுறை எனலாம்...//

  பொதுமுறையா
  பொதுமறையா!?..

  பதிலளிநீக்கு
 17. ரொம்ப வசதிகளற்ற கிராமமும் இல்லாமல், தலைக்கு மேல் வெள்ளம் போகும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹி விலைவாசி உள்ள பகுதியும் இல்லாத மருத்துவ வசதிகள் கொண்ட இடம் நல்லது ஆனால் இப்படி எல்லாரும் நினைத்து அங்கே செட்டில் ஆனால் அந்த ஊரும் பாழாகிவிடும் அபாயம். இப்ப பங்களூர் போல!!!

  அதனால இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலோர் கிராமங்களுக்குத் திரும்புவதும் நடக்கத்தான் செய்கிறது. உதாரணமாகக் கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கிராமத்து அக்ரஹாரம் பிஎஸ் என் எல்லில் பணி ஓய்வு பெற்ற பலரால் நிறைந்துள்ளது. கும்பகோணம் பக்கத்திலேயே இருப்பதால் கிராமத்துக்குக் கிராமம்/நகரத்துக்கு நகரம். அதே எங்க மாமனாரின் பூர்விகமான பரவாக்கரை எனில் கும்பகோணம் 25 மைல். அங்கே வசித்தால் கொஞ்சம் கஷ்டம் தான். நகரத்துக்கு அடிக்கடி போக முடியாது. எங்க உறவினர் ஒருவர் அங்கே சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலே வசித்து வந்தார். இப்போது வயதாகிவிட்டதாலும் அடிக்கடி மருத்துவ உதவி தேவைப்படுவதாலும் கும்பகோணம் போய் விட்டார்.

   நீக்கு
  2. திருச்சி மத்திய பாகத்தில் இருப்பதால் எங்கே போவதென்றாலும் பிரச்னை இல்லை. தென் மாவட்டங்கள், கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம், குருவாயூர், கர்நாடக நகரங்கள், ஆந்திர நகரங்கள், நேரடியாக மும்பை, தில்லி, கல்கத்தா போன்ற வடமாநில நகரங்கள் என எங்கும் செல்ல ரயில் வசதி உண்டு/.

   நீக்கு
  3. கிராமங்களில் வாழ ஆசை இருக்கிறது என்று பலர் எழுதுவதால் உடனே படு ரிமோட்டான கிராமத்தில் இருக்க ஆசைனு தவறா நினைக்காதீங்க. 1-1 1/2 கி.மீ தொலைவில் ஒரு ஹாஸ்பிடல், மருந்தகம் இருக்கணும், அதிலும் எப்படா கிராக்கி வருது, இருக்கற எல்லா டெஸ்டையும் எடுக்கச் சொல்லிடலாம் என்று காத்திருக்கும் ஹாஸ்பிடல் அல்ல, ஓரளவு நம் உடல் நிலைக்கான நல்ல ஹாஸ்பிடல்.

   அதுக்காக எங்களை பரவாக்கரைக்குப் போய் வசிக்கச் சொல்லாதீங்க. உங்களை மாதிரி, காவிரியைத் தாண்ட ஒற்றை அடி கொண்ட பாலத்தில் குச்சிப்புடி நடனமாடி அந்தக் கிராமத்தை அடையமுடியாது (திருமணமானபின் உங்க அனுபவத்தை எழுதியிருந்தீங்களே அதைச் சொன்னேன்)

   நீக்கு
  4. திருச்சி, ஸ்ரீரங்கம் இரண்டும் அருமையான இடங்கள், ஓய்வுக்காலத்தைக் கழிக்க. என்ன ஒண்ணு.... கரண்டை மாத்திரம் சென்னை/பெங்களூரிலிருந்து பிடிச்சுக்கிட்டு வந்துடணும்.

   நீக்கு
  5. அப்படி எல்லாம் மின்சார விநியோகம் மோசமில்லை! என்ன! அணிலார் அவ்வப்போது வந்து தன் விளையாட்டைக் காட்டுவார்!:) இது தமிழகமெங்கும். நம்ம சகோதரர் பாலாஜி வாசு அவர்களுக்குத் தினமும் காலம்பர அணில் விளையாட்டுத் தான்! சென்னை பெரம்பூரில் இருக்கார்! ரயில்வே அதிகாரி!

   நீக்கு
 18. கதையில் அடுத்த சஸ்பென்ஸ்.....கடைசியில் கதாசிரியர் ஏக்கம்...ஹாஹாஹா சிரித்துவிட்டேன், கௌ அண்ணா தான் கதாசிரியர்!!!!

  கடிதத்தை இப்படிப் போட்டது சூப்பர். இந்த உத்தியை ரசித்தேன்.

  கதை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கவே இல்லை....இப்ப அந்த வந்த பெண் யார் ஏன் போலீஸ்? பாதுகாப்பிற்காகவோ என்று தோன்றுகிறது...கொஞ்சம் யூகம் இருக்கிறது...பார்ப்போம் கௌ அண்ணா எப்படிக் கதையைக் கொண்டு போகிறார் என்று

  கீதா

  பதிலளிநீக்கு
 19. "சார்! சார்! இந்த நெல்லையும், ஜேகேயும் என்பேனாவைப் பிடுங்கிக்கொண்டு விட்டாங்க சார்! என்னனு கேளுங்க. நான் பாட்டுக்குச் சமத்தா ஔவையாரின் பாடல்களை மனப்பாடம் பண்ணிட்டு இருந்தேன். வம்புக்கு வராங்க சார்! :)))))))

  பதிலளிநீக்கு
 20. கதாசிரியரின் ஏக்கத்தைப் போக்கியதற்கு நன்னியோ நன்னி. எங்களோட ஏக்கத்தை அதிகம் ஆக்கிட்டீங்களே! கதையின் அடுத்த பகுதியை ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறேன். நான் யார் எழுதறாங்கனு எல்லாம் மண்டையை உடைச்சுக்கப் போறதில்லை. கடைசியில் எப்படியும் தெரியத்தானே போகிறது. கதையின் முடிவு பற்றி மட்டும் யூகம் செய்யப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. கடிதம் எல்லாம் இப்பொழுது எங்கே? சூப்பர் ஐடியா. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் . நான் முன்பே கூறியதுபோல படம் கீறுபவரின் கதைதான் :) இன்று படம் இல்லை.

  பதிலளிநீக்கு
 22. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.

  மாயவரம்தான் பிடித்த ஊர். ஓய்வு காலத்தை அமைதியாக கழிக்கலாம். கோயில் குளம் என்று. மக்கள் எல்லோரும் அன்பானவர்கள். சொந்த, பந்தங்களுடன் இருக்க குழந்தைகள் வந்து போக வசதி என்று தான் மதுரை. கிராமம் போலதான் இருக்கும் நாங்கள் இருக்கும் இடம் அமைதியான நகர சந்தடி இல்லாமல்.

  கதை நன்றாக இருக்கிறது.
  திடீர் திருப்பம் எல்லாம் இருக்கிறது.
  கடிதம் நன்றாக இருக்கிறது.
  நல்ல செய்தியை அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாயவரம்.... எனக்கும் அங்கு இருக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. எது நடக்குமோ தெரியலை...

   நீக்கு
 23. //மாயவரம்தான் பிடித்த ஊர். ஓய்வு காலத்தை அமைதியாக கழிக்கலாம். கோயில் குளம் என்று. .//

  உண்மை உண்மை..

  பதிலளிநீக்கு
 24. //மக்கள் எல்லோரும் அன்பானவர்கள்//

  இப்போது அப்படிட் சொல்ல முடியாது..

  தெருவுக்கு நாலு ### க் கடை.. ரகளை தான்..

  பதிலளிநீக்கு
 25. எந்த ஊரை சொல்கிறீர்கள்? நான் சொல்வது மாயவரம் மக்கள் நல்லவர்கள் என்று. நான் இருந்த பகுதியில் இருந்தவர்கள். எல்லா இன மக்களும் அன்பாய் ஒற்றுமையாக இருந்தோம்.

  பதிலளிநீக்கு
 26. ஆண் குழந்தைகள் மட்டுமே வளர்த்த பெற்றோர்கள், பெண் பெற்றவர்களின் பிள்ளை வளர்ப்புப் பிரச்சினைகள் புரியாமல் பேசுவது ஏன் ?(மாற்றும் சரி)

  பிள்ளை வளர்ப்பில் எது கடினம்? ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா?

  மந

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லா கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது. கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிட்டால் மட்டுமே பதில் அளிப்போம்.

   நீக்கு
 27. பனி, தூறல் இவற்றை காலை சிற்றுண்டிகளுடன் ஒப்பிடுங்களேன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லா கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது. கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிட்டால் மட்டுமே பதில் அளிப்போம்.

   நீக்கு
  2. பெயர் மந

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!