வெள்ளி, 25 நவம்பர், 2022

வெள்ளி வீடியோ : வெத்தில போட்ட உன் வாய் செவக்கும் கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும்

 கே. வீரமணி.  இந்தப் பெயரில் இரண்டு பிரபலங்கள் உள்ளனர்.  நேர்மாறான இயல்புடையவர்கள்.  ஒருவர் பக்திப் பாடல் புகழ்.  அடுத்தவர் (இந்து) கடவுள் மறுப்பாளர்.

பக்தி பாடல் புகழ் கே வீரமணி அய்யப்பன் பாடல்களுக்கு பிரபலம். கார்த்திகை மாதம் வந்துவிட்டால் அடிக்கடியும், மற்ற சமயங்களில் அவ்வப்போதும் இவர் குரலில் ஐயப்பன் பாடல்கள் வானொலியில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  அதில் முதலிடத்தில் இருப்பது இந்தப் பாடல்.

பாடலை எழுதியவர் சிவமணி, இசை சோமு கஜா என்கிறது காணொளி விவரம்.

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!

நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!

அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!

கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!

சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார் மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

==========================================================================================

1960 ல் வெளியான திரைப்படம் 'பாதை தெரியுது  பார்'.  இசை அமைப்பாளர் எம் பி ஸ்ரீனிவாசனும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷும் இணைந்து ஒரு படக் கம்பெனி ஆரம்பித்து தயாரித்த படம்.  ஜீவா தலைமையிலான 'கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா'வின் கொள்கைகளை விளக்கும்படியாக உருவான இந்தப் படத்தில் கே விஜயன், எஸ் வி சுப்பையா, முத்துராமன், சுந்தரிபாய், எல் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர்.  படத்தை எடுப்பதில் ஜீவாவும் உறுதுணையாயிருந்தார்.  வணிக ரீதியாக படம் ஜெயிக்கவில்லை என்றாலும், மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது.

படத்தின் தோல்விக்கு சிலர் எல் விஜயலக்ஷ்மி டான்ஸ் ஆடாததுதான் காரணம் என்றார்களாம்.  அதற்கு நிமாய் கோஷ் "எல் விஜயலக்ஷ்மிக்கு நடனமாட தெரியும்.  ஆனால் அவர் ஏற்ற கேரக்டருக்கு தெரியாது" என்றாராம்.

இன்று பகிரப்படும் பாடல் கே சி ஏ அருணாச்சலம் எழுதி எம் பி ஸ்ரீநிவாசன் இசையில் டி எம் சௌவுந்தர்ராஜன் பாடிய பாடல்.  ஏற்கெனவே சொன்னபடி இரண்டு வாரங்களுக்கு முன் பகிரப்பட்ட 'சின்னச் சின்ன ஊரணியாம்' பாடலின் தாக்கத்தில், என் நினைவிலிருந்து  வரும் அடுத்த பாடல்!

இந்தப் படத்தில் ஜெயகாந்தன் எழுதிய பாடல் ஒன்றும் இருக்கிறது.  பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் 'தென்னங்கீற்று சோலையிலே ' எனும் அந்தப் பாடலும் நன்றாயிருக்கும்.  வலஜி ராகத்தில் அமைந்த பாடலாம் அது.

இந்தப் படத்துக்காக வாலி ஒரு பாடல் எழுதினாராம். 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...'..  நிமாய் கோஷ் அந்தப் பாடலை நிராகரித்துவிட, அந்தப் பாடல் பின்னர் எம் ஜி ஆரின் 'படகோட்டி' படத்தில் இடம் பெற்றது.

பட்டுக்கோட்டையார் பாடல் ஒன்று கூட படத்தில் உண்டு.

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்
சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்

வெத்தில போட்ட உன் வாய் செவக்கும்
கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும்
வெத்தில போட்ட உன் வாய் செவக்கும்
கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும்

முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்
ஹோய்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்
உன் முகத்தில் தாமரை பூத்திருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்

அள்ளிச் சொருகிய கொண்டையிலே
எந்தன் ஆவி சிறையுண்டிருக்குதடி
அள்ளிச் சொருகிய கொண்டையிலே
எந்தன் ஆவி சிறையுண்டிருக்குதடி

துள்ளித் திரிகிற ரெண்டு கண்ணு
அதச் சொல்லி சிரிக்குது ஒண்ணுக்கொண்ணு

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்

உழைக்கும் மேனி கருத்திருக்கும்
ஹோய்
உழைக்கும் மேனி கருத்திருக்கும்
பேச்சு ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்

நெத்தியில் பொட்டு பளபளக்கும்
கண்ணு நெஞ்சை இழுத்து என்னை மயக்கும்
நெத்தியில் பொட்டு பளபளக்கும்
கண்ணு நெஞ்சை இழுத்து என்னை மயக்கும்

பித்து பிடிச்சவன் என்று சொல்லி
என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
பொண்ணே கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்

64 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் பகிர்வில் முதல் தனிப்பாடல் அருமையான பாடல். நல்ல பிரபலமான பாடலும் கூட. இதை அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். திரு. கே. வீரமணி அவர்களின் கச்சேரிக்கு ஒருதடவை தி. லியில் இருக்கும் போது குடும்பத்துடன் சென்றிருக்கிறோம். நல்ல, நல்ல பக்திப் பாடல்களை பாடினார். அவரின் கச்சேரியில் இந்தப் பாடலையும் தவறாது பாடினார்.

  சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை கண்டு தரிசித்து வந்த உணர்வு இந்தப்பாடலை கேட்கும் போது வரும். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா..  கார்த்திகை மாதம், ஐயப்ப சீஸன்..   அதுதான் இந்தப் பாடல்.  அவர் பாடல்களில் இது ஆரம்ப காலப் பாடல் என்று நினைவு.

   நீக்கு
 3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்று இரண்டாவதாக பகிர்ந்த திரைப்பட பாடலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பாடல் இடம் பெற்ற படம் என்னவென்று சரியாக தெரியாது. ஆனால் இந்தப் படத்தின் பெயரும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பாடல் இதில்தான் என இப்போதுதான் அறிந்து கொண்டேன். பழைய படங்களை குறித்து நிறைய தகவல்களை சேகரித்து தருகிறீர்கள். உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

  நீங்கள் முதலில் பகிர்ந்த "சின்ன சின்ன ஊருணியாம்" பாடல் வெளியிட்ட உடனேயே எனக்கு இந்தப்பாடலும் நினைவுக்கு வந்தது. ஆனால் நான்தான் அதை குறிப்பிடவில்லை. தொடர்ந்து வரும் பாடல்கள் குழந்தை இல்லாத தாய் பாடும் பாடலாக இருக்குமென ஊகித்து விட்டேன்.

  இந்தப் பாடலின் ராகமும் இசையும் நன்றாக இருக்கும். பிறகு கொஞ்சம் காலை வேலைகள் முடிந்தவுடன் இரு பாடல்களும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /நீங்கள் முதலில் பகிர்ந்த "சின்ன சின்ன ஊருணியாம்" பாடல் வெளியிட்ட உடனேயே எனக்கு இந்தப்பாடலும் நினைவுக்கு வந்தது. ஆனால் நான்தான் அதை குறிப்பிடவில்லை//

   அடடே...   நினைவு வந்திருக்கு பாருங்க...   அடுத்த பாடல் பற்றி எனி கெஸ்?

   //வேலைகள் முடிந்தவுடன் இரு பாடல்களும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன்.//

   ஸூப்பர்.

   நீக்கு
 5. நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே..
  கற்பூர தீபம் ஸ்வாமிக்கே..

  ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!..

  பதிலளிநீக்கு
 6. நெத்தியில் பொட்டு பளபளக்கும்
  கண்ணு நெஞ்சை இழுத்து என்னை மயக்கும்

  பித்து பிடிச்சவன் என்று சொல்லி
  என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும்!..

  அழகு.. அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் இந்தக் கவிஞர் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?  நான் இப்போதுதான் கேள்விப்பப்படுகிறேன்!

   நீக்கு
  2. ஆனால்
   அப்போதே பாட்டுப் புத்தகத்தில் பார்த்து இருக்கின்றேன்...

   நினைவில் தான் இல்லை..

   முழுப் பாடலும் மனப்பாடம்..

   நீக்கு
  3. அட... அருமை. ஆடி அசைந்து செல்லும் இனிமையான பாடல்.

   நீக்கு
 7. டி எம் சௌவுந்தர்ராஜன்

  டி. எம்.
  சௌந்தர்ராஜன் √

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். இன்னிக்காவது என்னோட கருத்துரைகள் எல்லாம் ஓடி ஒளியாமல் இருக்கவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா.. ஹா.. ஒளிந்து கொண்டாலும் இழுத்து வந்து விடுவோம்.

   நீக்கு
  2. துரை/கமலா ஆகியோரின் பதிவுகளில் என்னோட கருத்துகள் காணாமல் போய்விடுகின்றன. நல்லவேளையாக நினைவாப் பின் தொடரும் கருத்துக்கான பெட்டியில் க்ளிக் செய்து விடுவதால் மெயில் பாக்சில் இருந்து இழுத்துட்டு வரேன் தினமும். இதே வேலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. எங்கள் பிளாக்கில் கமெண்ட்ஸ் காணாமல் போனால் கவலைபபடவேண்டாம்.  சற்று நேரமானாலும் நாங்கள் இழுத்து விட்டு விடுவோம்.

   நீக்கு
 9. முதல் பாடல் கரதலப்பாடம். அதோடு எங்க வீட்டுக் கல்யாணங்களில் கச்சேரி வைத்தால் வீரமணியின் கச்சேரி தான் வைப்பார்கள். ஆகவே நேரேயும் கேட்டிருக்கேன். கச்சேரிகளில் இந்தப் பாடலும் சின்னஞ்சிறு பெண் போல பாடலும் பாடாமல் விட்டதில்லை. இப்போதும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீரமணி, சின்னஞ்சிறு பெண் போல பாடுவாரா? எப்படி இருக்கும்!

   நீக்கு
  2. சீர்காழி அளவுக்கு அவர் பிள்ளையால் கூடப் பாட முடியாது. ஆகவே வீரமணி பாடினால் ரசிக்கலாம். மோசமாக எல்லாம் இருக்காது. இருந்தாலும் முதல் இடம் ஐயப்பன் பாடலுக்குத் தான்.

   நீக்கு
  3. ஆமாம்.  வீரமணி என்றாலே அய்யப்பன் பாடல்கள்தான்.

   நீக்கு
 10. இரண்டாவது பாடலும் படமும் பார்த்துக் கேட்டிருக்கேன். பாடல் அடிக்கடி கேட்பது/கேட்டுக்கொண்டிருப்பதும் கூட. அதிலும் தென்னங்கீற்றுச் சோலையிலே பாடல் ரொம்பப் பிடித்த பாடல். அதையும் பகிர்ந்திருக்கலாமோ? ஆனால் அதை எழுதியது ஜெயகாந்தன் என்பது இன்னிக்குத் தான் தெரியும். அருமையான பாடல்கள் தேர்வுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படமும் பார்த்து, பாடலும் கேட்டிருப்பது வியக்கத்தக்கது! தென்னங்கீற்று பாடல் இன்னொரு நாள் பகிர்வோம்.

   நீக்கு
  2. அப்போ ரொம்பச் சின்ன வயசு என்றாலும் மூக்குத்திப்பாடல் அப்போவெல்லாம் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும். பெண்களின் பூப்பு நீராட்டு விழா, திருமணம் போன்ற சமயங்களில் ஒலிபெருக்கி அலறாத மதுரையைப் பார்க்க முடியாது. தென்னங்கீற்றுச் சோலையிலே வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். இப்போக் கூடக் கொஞ்ச நாட்கள் முன்னர் கேட்டேன்.

   நீக்கு
  3. சில நேரங்களில் இதுதான் நாம் அறிந்த கீசா மேடமா இல்லை புதிய வாசகரா என்று யோசிக்க வைத்துவிடுகிறார் கீசா மேடம்.

   நீக்கு
  4. ஹா!ஹா!ஹா! எனக்குள்ளே இருப்பவள் எப்போதேனும் எட்டிப் பார்ப்பாள். எப்போவும் பார்க்க மாட்டாள். பலரும் என்னை ஒண்ணுமே தெரியாதவள்னு நினைப்பது உண்டு. மருத்துவமனைகளில் பெரும்பாலும் மருத்துவர்கள் அப்படித்தான் நடத்துவார்கள். அதிலும் சிலவற்றை செல்லில்/கணினியில் பார்க்கணும். உங்களுக்கு அதெல்லாம் முடியாதுனு சொல்லுவாங்க/ குரலில் இரக்கம் வழியும். ஆமாம்னு தலையாட்டிட்டுச் சும்மா இருந்துடுவேன். :)))))) புக்ககம் வந்தப்போவும் ஒண்ணுமே தெரியாதுனு தான் நினைச்சாங்க. ஆனால் பின்னாட்களில் கூட அவங்களுக்குள் அந்தக் கருத்து மாறினாலும் வெளியே சொல்கையில் "அவளுக்கு என்ன தெரியும்?" என்பார்கள். ஆமாம்னு இருந்துடுவேன். :))))))

   நீக்கு
 11. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 12. முதல் பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல்! பட்டி தொட்டி எங்கு பார்த்தாலும் கேட்பது!
  இரண்டாவது பாடல் இனிமையை விட பாடல் வரிகளுக்காக மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்! எழுதியவர் யாரென்பதை இன்று தான் அறிகிறேன். மறந்து போன பாடலை மீண்டும் நினைவுக்குகொண்டு வந்ததற்கு அன்பு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. முதல் பாடல் கேட்காதவர்களும் உண்டா ?
  அடுத்த பாடலும் நன்று.

  பதிலளிநீக்கு
 14. பள்ளிக்கட்டு எத்தனை முறை கேட்டிருப்பேன் சின்ன வயதில் ஊரில் இருந்த வரை கார்த்திகை மாதம் வந்ததும் ஐயப்பன் பாடல்கள்தான் பெரும்பாலும். மார்கழி என்றால் முதலில் திருப்பாவை கண்டிப்பாக இருக்கும்...இப்படிக் கேட்டவைதான்.

  ரசிக்கும் பாடல்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அந்நாளில் எல்லோரும் கேட்டு ரசித்த பாடல். அப்புறம் வீரமணி குரலியிலேயே பாடும் வீரமணிதாசன் என்று ஒருவர் வந்து பாடினார்.

   நீக்கு
 15. சின்ன சின்ன மூக்குத்தியாம் பாடலும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். அருமையான பாடல். இப்ப ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டு ரசித்தேன். பாடலாசிரியர் பற்றிக் கேட்டதே இல்லை...கே சி ஏ அருணாச்சலம்.

  //வெத்தில போட்ட உன் வாய் செவக்கும்
  கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும்//

  ஸ்ரீராம், இந்த இடம் சற்று மாறி வருகிறது கவனிச்சிருப்பீங்க அழகா இருக்கு இந்த இடம் அது போல கீழேயும்....

  கீதா

  பதிலளிநீக்கு
 16. சின்ன சின்ன மூக்குத்தி பாடல் கேட்டு ரசித்திருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் பாடலாசிரியர் பெயர் இப்போதுதான் அறிகிறேன்...இசையமைப்பாளர் படம் பெயர் எல்லாம் செய்தி! படம் பெயர் கேட்ட நினைவில்லை.

  //வெத்தில போட்ட உன் வாய் செவக்கும்
  கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும்//

  இந்த வரிகளும் அது போல இதன் பின்னர் கீழேயும் கொஞ்சம் அப்படி மாறிச் செல்வது கவனித்தீங்களா? செமையா இருக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டிரண்டு முறை பாடுகிறார்.  டியூனும் வளைந்து நெளிந்து அழகாய் போகும்.

   நீக்கு
 17. ஆனா பல வருஷங்களுக்கு அப்புறம் இப்பதான் கேட்கிறேன். வரிகள் பார்த்ததும் ஓரளவு ட்யூன் நினைவுக்கு வந்தது!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 18. நம்ம பக்கம் வந்து பீச்ல காத்து வாங்காதவங்க வந்து காத்து வாங்கிட்டுப் போங்க!!!! முடிஞ்சா...ஆனா பாருங்க சுண்டல் எல்லாம் கிடையாதாக்கும்!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வர்றேன்...வர்றேன்... இப்போ முன்னுரிமை வேறு ஒன்றுக்குக் கொடுத்திருக்கிறேன் (ஓடிடி யில்.... ஹா ஹா)

   நீக்கு
  2. நான் வந்துட்டு வந்துட்டேனே கீதா..

   நீக்கு
  3. நெல்லை.. நீங்கள் காந்தாரா பார்க்கிறீர்களா? பொறுமை இருக்கா? நான் சர்தார். ஓ பேபி, Godfather, பூமிகா பார்த்தேன்.

   நீக்கு
  4. தியேட்டரில் காந்தாரா பார்த்து மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன். பிறகு ப்ரைமிலும் பார்த்தேன் (நேற்று)...முதல் 40 நிமிடம். கடைசி 40 நிமிடம். ரொம்பவே நல்ல படம், பல சிந்தனைகளைக் கிளப்பும் படம்.

   இப்போது ப்ரைமில் ஒன்றிர்க்கு சப்ஸ்க்ரைப் செய்து, கொடுத்த காசுக்காக நிறைய சீசன்களைப் பார்க்க இருக்கிறேன்.

   நீக்கு
  5. அதென்னவோ எனக்கு அதைப் பார்க்கும் தைரியம் இன்னும் கைகூடவில்லை!

   நீக்கு
 19. //'கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா'வின் கொள்கைகளை விளக்கும்படியாக உருவான இந்தப் படத்தில்// - //படத்தின் தோல்விக்கு எல் விஜயலக்ஷ்மி டான்ஸ் ஆடாததுதான் காரணம் என்றார்களாம்// - ஸ்ரீராமுக்கு ரொம்பத்தான் குறும்பு. தமிழ் மக்களின் முன்னுரிமையை இப்படியா பட்டென்று வெளிப்படுத்துவது?

  பதிலளிநீக்கு
 20. //இருமுடி தாங்கி// - பாடல் ஆரம்பித்த உடனேயே அங்கு ஆன்மீக உணர்வும், ஐயப்பன் சன்னிதியில் இருக்கும் bபாவமும் அனைவருக்கும் வந்துவிடும். சிலிர்க்கும்படியான பாடல். ஐயப்பன் சீசனுக்காகப் பகிர்ந்திருக்கிறீர்களோ?

  பதிலளிநீக்கு
 21. இரண்டு பாடல்களுமே பிரபலமான பாடல்கள் கேட்டிருக்கிறேன் முதலாவது பக்திரசம் சொட்டும் பாடல் கேட்கும் தோறும் மெய்சிலிர்க்கும்.

  பதிலளிநீக்கு
 22. இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்.
  அடிக்கடி கேட்ட பாடல் முதல் பாடல்.
  அடுத்த பாடலும் சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்ட பாடல்.
  இந்த பட பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.தென்னங்கீற்று சோலையிலே!, செய்யும் தொழிலே தெய்வம்!
  பாடல் எல்லாம் நன்றாக இருக்கும். சினிமாவும் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  தரமான படங்களில் ஒன்று.  நீங்கள் சொல்லும் பாடல்களும் நன்றாய் இருக்கும்.  இதில் ன் நடித்துள்ள கே விஜயன்தான் தற்போதைய கேரளா முதல்வர் பினராயி விஜயனோ!

   நீக்கு
  2. //இதில் ன் நடித்துள்ள கே விஜயன்தான் தற்போதைய கேரளா முதல்வர் பினராயி விஜயனோ!//

   இல்லை. இவர் நிறைய படங்களை இயக்கியவர் . இப்போது இல்லை. அவர் மகன் லெனின் விஜயன் இயக்குனராக இருக்கிறார்.கே விஜயன் நடிப்பார், படம் தயாரிப்பார்.

   நீக்கு
  3. கே விஜயன் என்றொரு இயக்குனர் பற்றி தெரியும்.  திரிசூலம் கூட அவர்தான் இயக்கம் என்று ஞாபகம்.  வேறெங்கோ பினராயி பற்றி இதுபோல ஒன்று படித்ததும் அப்படித் தோன்றியது.  அதுசரி, ஊர் திரும்பியாச்சா கோமதி அக்கா...  வாங்க...

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!