திங்கள், 14 நவம்பர், 2022

"திங்க"க்கிழமை :  வாழைக்காய் பொடி - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

 

வாழைக்காய் பொடி. 

வணக்கம் அனைவருக்கும். 

நாம் தினமும் எப்போதும் செய்வது போல் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு அவியல் என செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? உடனே மாறுதலாக மோர் குழம்பு, மோர் தாளிப்பு துவையல் என செய்வோம். இல்லை அதுவும் செய்ய சோம்பலாக இருக்கும் போது வித்தியாசமாக இருக்கட்டுமென ஏதாவது பொடி வகைகளை செய்து சாதத்துடன் கலந்து சாப்பிடுவோம். 

அப்படிப்பட்ட பொடி வகைதான் இது. இதற்கு முதலில் க. பருப்பு, உ. பருப்பு ஒரு பெரிய ஸ்பூன் அளவும், கடுகு ஒரு சிறு ஸ்பூன் அளவும் எடுத்துக் கொள்ளவும். , மிளகாய் வத்தல் அவரவர் காரத்திற்கு ஏற்ப எடுத்துக் கொண்டு அனைத்தையும் எண்ணெய விட்டு கடாயில் வறுத்துகொள்ளவும். 


வாழைக்காயை  அலம்பி தோல் சீவி விட்டு நறுக்கி வைத்தபடம். என்னிடம் அன்று இருந்தது ஒரு வாழைக்காய். அதனுடன் கூட்டாக  வீட்டுக்கு வந்திருந்த நான்கைந்தை பொரியல், அவியல் என செய்து காலியாக்கி விட்டேன். மீதியிருக்கும் ஒன்றை வைத்து பொரியலோ கூட்டோ, சாஸ்திரப் பிரகாரம்  செய்யக் கூடாதென்பதற்காக இந்த பொடி.  வேறு எதிலாவது இந்த ஒன்றை  கலந்து பயன்படுத்தலாம். ஆனால் முதல் நாள்தான் அதனுடன் இருந்த ஒன்று அவியலுடன் கலந்து விட்டது. நீங்கள் வீட்டில் நிறைய பேர்கள் இருந்தால், நிறைய வா. காய்களும் இருந்தால் இரண்டாக எடுத்துக் கொள்ளலாம். 


அதை சிறு துண்டுகளாக வறுவலுக்கு நறுக்குவது போல நறுக்கிக் கொள்ளவும்


அதே கடாயில் கொஞ்சமாக எண்ணை வைத்து அத்தனை துண்டுகளையும் வறுத்துக் கொள்ளவும். 


இப்படி வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். கொஞ்சம் புளியையும் அதே கடாயில் வதக்கிக் கொள்ளவும். 



மிக்ஸியில் முதலில் வறுத்த பருப்பு வகைகள், மி. வத்தல் போன்றவற்றை வதக்கி வைத்த புளியுடன்  கொஞ்சம் உப்பும் சேர்த்து நைசாக பொடித்துக் கொள்ளவும்.

பிறகு அதனுடன்  வறுத்து ஆற வைத்தத வா. துண்டுகளையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இறுதியில் நம்மிடம் இப்படி அகப்பட்ட எதுவும் "பெருங்காயமின்றி" தப்பிக்க இயலாது என்பதினால், அதையும் அதன் மனங்குளிர கொஞ்சம்  (முதலிலேயே வறுத்தோ , இல்லை பொடியாகவோ) தந்து விடுங்கள். 


ஒரு வழியாக அனைத்திற்கும் ஒத்துழைத்தவாறு வந்த வா. பொடி. இதை  ந. எண்ணெய் பூசி கரி அடுப்பில் சுட்டு அம்மியில் இதே மாதிரி பொடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் அதன் ருசி சற்று வேறு. காஸ் அடுப்பிலும் சுடலாம். ஆனால் இப்படி செய்ததும் இரண்டு நாட்களாயினும் கெடாமல் அப்படியே நன்றாக இருந்தது.                                                         
இதோ... சூடான சாதத்தில் நெய்யின்  துணையுடன்  நானும்  ஜம்மென்று அமர்ந்து விட்டேன். நான் எப்படி இருக்கிறேன் என இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறதோ இந்த வா. பொடி. 

இதற்கு துணையாக ஒரு மோர் தாளிப்போ, மோர் குழம்போ, வெறும் தயிர் தாளித்த பச்சடியோ, இல்லை வெங்காயம், தக்காளி இணைந்த பருப்பில்லா வெறும் குழம்போ நன்றாக இருக்கும். அன்றைய தினம் காய் ஏதும் செய்யவில்லை என்றாலும், (நாமே தினமும் செய்வது போல் இல்லாமல் ஒரு வித்தியாசம் விரும்பித்தானே இப்படி பொடி சமையலுக்கு  மெனகிட்டிருக்கிறோம்.) அப்பளத்தை (அதுவும் விருப்பமிருந்தால்) அடுப்பில் சுட்டும் இதற்கு தொட்டுக் கொள்ளலாம். எங்களுக்கு அன்று காலையில் செய்த மோர்குழம்பே இருந்தது. (அப்பளத்தை அநாவசியமாக சுடுவதற்கு அன்று எனக்கு மனது வரவில்லை. பாவம்... அதனால் தப்பிப் போனால் போகட்டுமென விட்டு விட்டேன்.:)) ) 

இதை ப(பொ)டித்து ரசிக்கும் உங்கள் அனைவருக்கும், இதை இப்படி ப(பொ)டிக்க உதவிய எ. பிக்கும், அன்புடன் வெளியிட்ட எ. பி ஆசிரிய பெருமக்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. 

61 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய தினம் என் ரெசிபி பதிவை வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றி. எதிர்பார்த்து கொண்டேதான் இருந்தேன். இந்தப் பதிவுக்கு வருகை தந்து பல கருத்துக்களை தரப்போகும் நம் குடும்ப சகோதர சகோதரி களுக்கு என் மளமார்ந்த நன்றி களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு (என் மகன் குழந்தைகளும் இன்று இங்கிருக்கிறார்கள்.) டிபன், சமையல் என செய்து தந்து விட்டு பிறகு கொஞ்சம் நிதானமாக வருகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஊர்களில் மழை காரணமாக (தமிழகத்தில்) பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. உங்கள் ஊரில் அப்படி இல்லையா?!!

      நீக்கு
    2. "பெண்"களூரில் லீவு இல்லை போல!

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே
      வணக்கம் சகோதரி

      இங்கு இன்று மழையும் இல்லை. சென்ற வார இறுதியில் இரண்டு, மூன்று நாட்களாக சூழ்ந்திருந்த வானம் நேற்றைக்கு முன்தினம் மாலை கொட்டித் தீர்த்து விட்டது. குழந்தைகளுக்கு ஏதோ விருப்பப்பட்டு அருகில் இருந்த ஷாப்பிங் மாலுக்கு சென்ற நாங்கள் (அதிசயமாக நானும் உடன் சென்றிருந்தேன்.) மழையில் நனைந்து எப்படியோ ஆட்டோவில் வந்து சேர்ந்தோம்.

      இன்று குழந்தைகளுக்கு விடுமுறையும் இல்லை. சென்ற வார வெள்ளியன்று ஸ்ரீ கனகதாசர் ஜெயந்தியென இங்கு பெங்களூர் மாநில அரசால் அவர்களுக்கு விடுமுறை விட்டாகி விட்டது. அதனால் இன்று மழையாக இருந்தாலும் விடுமுறை கிடையாது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியாகி விட்டது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. வாழைக்காய் பொடி வித்தியாசமாக உள்ளது. பொடிமாஸைத்தான் பொடி என்று சொன்னீர்கள் என்று நினைத்தேன்.

    இதே போன்று உருளை சிப்ஸையும் பருப்புடன் சேர்த்து பொடி செய்தால் எப்படி இருக்கும்? 

    வாழைக்காய், உருளைக்கிழங்கு இவை இரண்டும் அவசர சமையலுக்கு உதவுபவை. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து, சாப்பிட்டு பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.  ஆனால் உருளைக்கிழங்கு பொடிவகைக்கு ஏற்றதல்ல என்பது என் கருத்து!

      நீக்கு
    2. உருளைக்கிழங்கு பொடிமாஸ் பண்ணலாம். ஆனால் இம்மாதிரிச் சாப்பிடும் பொடி பண்ணுவது சரியாய் இருக்காது என்றே தோன்றுகிறது. உதிராக வராது. உ.கி. குழைந்துவிட்டால் ஈஷிக்கும்.

      நீக்கு
    3. ஆனால் திரு ஜேகே சிப்ஸுனு இல்லையோ சொல்லி இருக்கார். சிப்ஸைப் பொடி செய்துக்கலாமே!

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      இன்றைய ரெசிபியை ரசித்து படித்து கருத்து தெரிவித்திருப்பதற்கு என் மன மகிழ்வான நன்றி.

      வாழைக்காய் பொடிமாஸ்.... அதன் பெயரை நாம் அப்படித்தானே சொல்வோம். அதனால்தான் இதை வாழைக்காய் பொடி என குறிப்பிட்டேன். அதுவும் (வாழைக்காய் பொடி மாஸ்) நன்றாக இருக்கும்.

      நீங்கள் சொல்வது போல் உருளைக்கிழங்கை வறுத்து இதைப்போலவே பொடித்து செய்துக் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. புதிதான ஒரு பக்குவத்திற்கு ஆலோசனை தந்ததற்கு நன்றி.

      /வாழைக்காய், உருளைக்கிழங்கு இவை இரண்டும் அவசர சமையலுக்கு உதவுபவை./

      ஆம்.. இரண்டையுமே வைத்து ஒரு அவசரத்திற்கு வித்தியாசமாக ஏதாவது ஒரு ரெசியி செய்து விடலாம்.

      தங்களுடைய அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் சொல்வது போல உருளைக்கிழங்கையும் இம்மாதிரி வறுத்துப் பொடி செய்தால் நன்றாகத்தான் இருக்குமென்று எனக்கும் தோன்றுகிறது. எப்படியோ காய்கறிகள் உடம்பில் சேர வேண்டும். தினசரி செய்யும் சமையலில் இருந்து ஒரு வித்தியாசத்திற்குதானே இப்படியெல்லாம் செய்கிறோம்.

      அன்றைய தினம் வீட்டில் இந்த வா. பொடியை செய்யும் போது ஏதோ இந்தப் பக்குவத்தை புகைப்படமெடுக்க வேண்டுமென எனக்குத் தோன்றியது. ஆனால், அதைவைத்து எந்தவொரு பதிவும் எழுதப்படாத நிலையில், பின்னர் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் திங்கள் பதிவுக்கான ரெசிபி ஸ்டாக் இல்லையென ஒரு தினம் கூறியதில், இதை வைத்து அவசரமாக ஒரு பதிவு எழுதி அனுப்பினேன். இதைப்போய் ஒரு சமையல் பதிவாக அனுப்புகிறோமே என அனுப்புவற்கும் எனக்கும் முதலில் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. எப்படியோ எழுதி அனுப்பியாகி விட்டது. இதையும் பகிர்ந்து இன்று நம் அனைவரின் முன்னிலையிலும் "திங்கப்பதிவாக" நிற்க வைத்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /வாழிய நலம்.../

      ஆம். அனைவரும் நலமுடன் இருக்கத்தான் நானும் எப்போதும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. வாழைக்காய் பொடி எனக்கும் பிடித்த ஒரு அயிட்டம். அதுவும் இன்னிக்கு சகோ கமலா ஹரிஹரன் விவரிப்பில் படித்து பண்ணிச் சாப்பிட்ட மாதிரியே பிடித்துப் போனது.

    எதையும் டீடெயிலாக சொல்வது அவர் வழக்கம்.
    ஆச்சா போச்சா என்று பறக்கிற எழுத்தல்ல அவரது. அந்த பாணி எல்லாவற்றையும் கவரப் செய்கிற மாதிரி அமைந்து விடுகிறது.. இதை அவரது பல பின்னூட்டங்களில் படித்து ரசித்திருக்கிறேன். இந்த செய்முறை விளக்கத்தில் கூட பாருங்கள், யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடிக்கு அவரே யோசித்து எழுதியிருப்பது தான் சிறப்பு. இதற்கெல்லாம் மிகவும் பொறுமை வேண்டும். இறைவன் அவருக்கு அந்தப் பொறுமையைத் தந்திருக்கிறான். சகோதரிக்கு நம் நன்றியைச் சொல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சகோதரரே.

      இன்றைய ரெசிபி பதிவை படித்து ரசித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.

      உங்கள் புகழுரைக்கு முற்றிலும் நான் தகுதியானவளா எனத் தெரியவில்லை. ஆனால் அனுபவம் நிறைந்த சிறப்பான எழுத்தாளரான உங்களின் ஊக்கம் மிகுந்த கருத்துரை ஏதோ எழுதும் ஒரு ஆர்வத்துடன் மட்டும் எழுதி வரும் என் எழுத்துக்கு ஆணி வேராக நிச்சயம் அமையுமென நம்பிக்கை வருகிறது. மேலும், அனைத்துப் பதிவுகளுக்கு தரும் என் பின்னூட்டங்களையும் தாங்கள் படித்து ரசித்திருப்பது கண்டு என் மனம் மிக மகிழ்ச்சி கொள்கிறது. உங்களின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு என் பணிவான வணக்கத்துடன் கூடிய மகிழ்வான நன்றி.🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. என்னவொரு சாமார்த்தியமான எழுத்தும் கை வண்ணமும்..

    ஆகா.. ஆகா...
    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

      /என்னவொரு சாமார்த்தியமான எழுத்தும் கை வண்ணமும்../

      மிகவும் அதிகமாக பாராட்டுகிறீர்களோ என எனக்குத் தோன்றுகிறது. உங்களையெல்லாம் விடவா? நீங்கள் அனைவருந்தானே எனக்கு முன்னோடிகள். உங்களிமிருந்தானே நான் இன்னமும் கற்று கொண்டேயிருக்கிறேன்.

      உங்கள் அபாரமான எழுத்துக்களையும், ஒரு பொருளை, படத்தைப் பார்த்ததும் மடை திறந்த வெள்ளமாக வரும் கவிதைகளையும் பார்த்து நான் அசந்துப் போயிருக்கிறேன். உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரரே. எனினும் உங்களது அன்பான ஊக்கம் நிறைந்த பாராட்டிற்கு என் மனமுவப்புடன் கூடிய பணிவான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. //அப்பளத்தை (அதுவும் விருப்ப ம் இருந்தால்) அடுப்பில் சுட்டும்.. //

    அதுவும்,

    அப்பளத்துக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே
    அப்பளத்தைச்
    சுடவும்..

    அடடா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /அதுவும்,

      அப்பளத்துக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே
      அப்பளத்தைச்
      சுடவும்../

      ஹா ஹா ஹா. இப்படியும் சொல்லலாமோ..!! . ஆம். சுடுவதற்கு முன் அதனின் விருப்பத்தை கேட்பதும் முறைதானே ..! நான் நம்முடைய விருப்பத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. வாழைக்காயைச் சுட்டுப் பொடி பண்ணித்தான் பழக்கம் என்றாலும் கரியோ குமுட்டி அடுப்போ இல்லாத காரணத்தால் நான் வாழைக்காயைப் பொடிமாஸுக்குக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோல் நிறம் மாறும்வரை வேக வைப்பது போல் வேக வைத்துப் பின் காரட் துருவும் சீவியில் துருவி எடுத்துக் கொண்டு தாளிதங்களை மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து கொண்டு இந்தத் துருவலோடு போட்டு நன்கு கலந்துவிடுவேன். இப்படி வாழைக்காயை வதக்கிச் செய்தது இல்லை. மைக்ரோவேவில் வைத்தும் சுடலாம். ஆனால் என்னிடம் க்ரில் உள்ள மைக்ரோவேவ் இல்லை. ஆதலால் மேலே சொன்ன மாதிரி வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துத் துருவிக் கொண்டே பண்ணுகிறேன். ஒரு முறை இம்மாதிரி வதக்கியும் பண்ணிப் பார்க்கிறேன். புதிய முறையை அறிமுகம் செய்த சகோதரி கமலாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும், இன்றைய ரெசிபி குறித்த கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      /வாழைக்காயைச் சுட்டுப் பொடி பண்ணித்தான் பழக்கம் என்றாலும் கரியோ குமுட்டி அடுப்போ இல்லாத காரணத்தால் நான் வாழைக்காயைப் பொடிமாஸுக்குக் கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோல் நிறம் மாறும்வரை வேக வைப்பது போல் வேக வைத்துப் பின் காரட் துருவும் சீவியில் துருவி எடுத்துக் கொண்டு தாளிதங்களை மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து கொண்டு இந்தத் துருவலோடு போட்டு நன்கு கலந்துவிடுவேன்./

      தங்கள் செய்முறையும் வெகு நேர்த்தியாக உள்ளது. இப்படியும் பண்ணலாம். நான் அன்று வீட்டில் ஒரு வாழைக்காய் மட்டும் இருந்ததால் இப்படிச் செய்தேன். காஸில் கூட எண்ணெய் தடவி வாழைக்காயை சுட்டெடுத்து இப்படி பொடி செய்கிறார்கள். எனக்கு அது சரியாக வரவில்லை. இனி தங்கள் பாணிப்படியும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு உங்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. வாழைக்காய் பொடி செய்முறை நன்று. இதனை நான் திருமணம் வரை சாப்பிட்டதில்லை.

    மனைவி, பையனின் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது செய்வதுண்டு. நானும் செய்துகொடுத்திருக்கிறேன். வாழைக்காயை எண்ணெய் தடவி, வேகவைத்துத் தோலுரித்துச் செய்வது வழக்கம்.

    எண்ணெயில் வறுத்துப் பொடி செய்வது புதிது. நன்றாக இருக்கும்னு மோணுது. செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் வாழைக்காயை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்வது புதிய முறை.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்களது அன்பான வருகைக்கும், இன்றைய ரெசிபி பற்றிய கருத்துக்கும் என் மகிழ்வான நன்றி.

      இது நம் அந்தக் கால பெரியவர்கள் கற்றுத் தந்த சமையல் பதார்த்தந்தானே....! அப்போது "அம்மியில்லாத அடுக்களை பாழ்" என்பது போல வீட்டுக்கு வீடு இருக்கும் அம்மியில் இதை இப்படி பொடி செய்வார்கள். இப்போது கரி அடுப்புபையும், அம்மியையும் நவீன சாதனங்கள் ஓரங்கட்டி விட்டன. எனவேதான் இப்படி புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், அவசரத்திற்கு அன்று செய்த இந்த வாழைக்காய் பொடியும் நன்றாக இருந்தது. தாங்களும் இவ்விதமே செய்து பார்ப்பதாக சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் செய்முறையாக வாழைக்காயை பாதியளவு வேக வைத்து துருவிக் செய்வதும் எனக்குப் புதிது. தங்களது அந்த செய்முறைக்கும் என் அன்பான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. நான் தந்த பதில் கருத்துக்கள் அனைத்தும் வந்திருக்கின்றன. ஆனால், இங்கு நான் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு தந்த ஒரு கருத்தும மட்டும் காணாமல் போயிருக்கிறது. நினைவில் வந்தால் அதை மீண்டும் அப்படியே பதிகிறேன்.

      நீக்கு
    5. அப்பாடா..! எங்கேயோ ஒளிந்திருந்த கருத்தை கொண்டு வந்து இங்கு சேர்த்ததற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
  11. நேற்றைய யானைப் பதிவுக்கு எழுதிய கருத்து காணாமல் போய் இருக்கின்றது..

    சனிக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் பதிவுக்கு வருவதில் தாமதம் ஆனாலும் தவறுவதில்லை...

    நெல்லை அவர்கள் தவறாக நினைக்காமல் இருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ளாகர் படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே! நீங்க உங்க மெயில் பாக்சில் இருக்கானு பாருங்க. பின் தொடரும் கருத்துக்களோடு சேர்ந்து வந்திருக்க வாய்ப்பு உண்டு. நான் அப்படித்தான் பெரும்பாலும் என்னோட தொலைந்த கருத்துக்களைக் கண்டெடுக்கிறேன்.

      நீக்கு
    2. துரை சார்.... நானும் பல கருத்துக்களை ஆவலுடன் எழுதுவேன். என் ஐபேடில் தெரியும். கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பின்னூட்டம் காணாமல் போயிருக்கும். பிறகு அதே கருத்தைக் கொண்டுவருவது கடினம். (உங்கள் தளத்துல எனக்கு நிறையதடவை நிகழ்ந்திருக்கிறது). அதனால அடுத்த கருத்தைப் பதிவிடும்போது ஓரிரண்டு வார்த்தைகளில் முடித்துவிடுவேன். (கடுப்பா இருக்கும்..என்ன பண்ணறது?)

      நீக்கு
  12. நவராத்திரியில் முடியாமல் படுத்து மருத்துவர் வீட்டு வேலைகளைக் குறைத்துக் கொள்ளச் சொன்னதில் இருந்து காலைச் சாப்பாட்டுக்குக் குழம்பு, ரசம், கறி அல்லது கூட்டு முன்னர் கொடுத்த உஷா மாமியிடம் தான் போய் வாங்கி வருகிறார். இரவுக்கு நானே ஏதேனும் பண்ணிடுவேன். அதனால் மாற்றி மாற்றிப் பண்ண முடிகிறது. உஷா மாமி தினமும் சாம்பார்/பருப்பு ரசமே கொடுக்கிறார். எனக்கோ சாம்பாரே கிட்ட வந்தால் கோபம் வரும். என்ன செய்யறது? இன்னிக்கு மாமி லீவு கொடுத்திருப்பதால் என் இஷ்டப்படி முருங்கைக்காய் வெறும் குழம்பு பண்ணிக்கொத்தவரைக்காய்க் கறி பண்ணப் போறேன். :)))) பெரும்பாலான காடரர்கள் கொத்தவரைக்காய் சமைப்பதில்லை. வாடிக்கையாளர்களில் சிலர் காசியில் விட்டுட்டோம்னு சொல்றாங்க என்பார்கள். ஆக மொத்தம் இன்னிக்கு என்னோட ராஜ்யம். :))))))) கிட்டத்தட்ட 2 மாதங்களாக சாம்பாரின் மூஞ்சியிலேயே முழிக்க வேண்டியதாய்ப் போச்சு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருங்கைக்காய் தீயல் செய்யுங்களேன். தீயல் தெரியும் அல்லவா? 
      அதுக்கு துணை வாழைக்காய் புட்டு அல்லது பொடிமாஸ், அல்லது உருளை பொடிமாஸ். 

      Jayakumar

      நீக்கு
    2. கடைசிலே பாலைக் கண்டால் ஓடற தென்னாலி ராமன் பூனை போல சாம்பாரைக் கண்டால் ஓடி வேண்டியிருக்குதா? 

      நீக்கு
    3. கீசா மேடம்..."மடப்பள்ளி" உறையூர் - காலை டிஃபன், அசோகா அல்வா சூப்பரோ சூப்பர். இரு முறை அங்கு சென்றோம். ஸ்ரீரங்கம் 'மடப்பள்ளி' -உத்தரவீதி மதிய உணவு ஓகேதான். 2 மணிக்குச் சென்றல்தால் ஆறியிருந்ததாலும் அப்படித் தோன்றியிருக்கலாம், அல்லது காலை உணவு ஹெவி என்பதாலும்

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      தினமும் ஒரேடியாக சாம்பார், ரசம் என்றால் போரடித்துதான் போய் விடும். வித்தியாசமாக முறைகளில் செய்யம் போது சமைப்பவர்களுக்கும், சாப்பிடுவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வரும்.

      தங்களது ரெசிபியாக நம் எ. பியில் முருங்கைகாய் தீயல் எப்போது வருமென நானும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுடன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. என் மாமியார் வீட்டில் அலுக்காமல் 2,3 முறை சாம்பார் சாதம் சாப்பிடுவார்கள். தினமும் சாம்பார் தான் பண்ணணும். வேறே பண்ணினால் வீடே அமர்க்களப்படும். அங்கே போனாலே நான் நேரடியாக ரசம் சாதம் சாப்பிட்டுப்பேன். பின்னால் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் தினசரி சாம்பார் பண்ணலைனால் ஒரே ரகளை தான். மாமனார் கோபத்தில் சாப்பாடைத் தூக்கி எறிந்துவிடுவார். பின்னர் அக்கம்பக்கம் வீடுகளில் யாரேனும் சாம்பார் பண்ணி இருந்தால் வாங்கி வந்து கொடுப்போம். நம்மவருக்கும் நல்ல வேளையாக என்னைப் போல் சாம்பார் பிடிக்காது. ஆகவே அவர் சொல்லித் தான் வற்றல் குழம்பெல்லாம் பண்ணுவேன். மாமனாருக்கும் மைத்துனர்களுக்கும் தனியாக சாம்பார் வைப்போம். இல்லைனா அமர்க்களம் தான். அதே போல அவங்கல்லாம் துவையல்/பொடி இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க. வீட்டில் துவையல் மட்டும் பண்ணினால் அன்னிக்கு ஓட்டலுக்குப் போயிடுவாங்க சாப்பிட. :)))))) நான் தான் விசித்திரப் பிரகிருதி.

      நீக்கு
    6. மடப்பள்ளி ஸ்ரீரங்கத்தில் புளியோதரை/தயிர் சாதம் நன்றாக இருக்கும். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கப் புளி மிளகாய் கொடுப்பாங்க. சாப்பிட முடியாது. அவ்வளவு இருக்கும். இப்போ சமீப காலங்களில் பிள்ளை/மாட்டுப்பெண் வந்தப்போ வாங்கினால் முன்னால் கொடுத்ததில் பாதியளவு கூட இல்லை என்பதோடு தரமும் மோசம். அங்கே காய்ச்சும் புளிக்காய்ச்சலுக்கு முன்னாடி அமோக வரவேற்பும் இருந்தது. இப்போத் தெரியலை.

      நீக்கு
    7. நாங்கள் சாப்பிட்ட மதிய உணவு நல்ல இம்ப்ரெஷனைத் தரவில்லை. அதனால் மறுநாள் காலை அந்த வாசல் வரை சென்றும், நான் உறையூர் மடப்பள்ளிக்குப் போய்ச் சாப்பிடலாம் என்று சொன்னேன். உறையூர் மடப்பள்ளி டிஃபன் சூப்பரோ சூப்பர்

      நீக்கு
    8. வணக்கம் சகோதரி

      என் புகுந்த வீட்டிலும், நான் சென்ற பொழுதில் தினமும் சாம்பார் சாதம் 2 தடவை அனைவரும் சாப்பிடுவார்கள். இது எனக்கும் ஆச்சரியத்தை தந்தது. சரியென அவர்களுக்குப் பிடித்த மாதிரி நானும் ஒரளவு தினமும் ஒவ்வொரு தினுசாக சாம்பார் வைக்க கற்றுக் கொண்டேன். கொஞ்ச காலத்தில், மோர் குழம்பு, வற்றல் குழம்பு, பொரிச்ச கூட்டு, ரசம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக மாறுதலுக்கு வந்தோம்.

      அந்த உறையூர் மடப்பள்ளி என்பது ஒரு உணவகமா? நானும் என் மகனும் இப்போது ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்ற போது (ஸ்ரீ ரங்கா, ஸ்ரீ ரங்கா என்ற பிரதான கோபுர வாசலுக்கு அருகில் உத்திர வீதி எனப் பெயர் பலகையை பார்த்ததாக நினைவு. ) கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு உணவகத்தில் இலையில் வைத்து பொங்கல் தந்தார்கள் அதை சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. அந்த உணவகத்தின் பெயர் நினைவில்லை. ஆனால், பிராமணாள் ஹோட்டல் என எண்ணுகிறேன். ஸ்ரீ ரங்கத்திற்கு இரண்டொரு முறை சென்றால்தான் எல்லாம் மனதிலாகும். இது (உறையூர் மடப்பள்ளி) எங்கு உள்ளது? மீண்டும் ஸ்ரீ ரங்கம் செல்லும் அருளை இறைவன் தர வேண்டும்.பிரார்த்திக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    9. மடப்பள்ளி என்னும் பெயரில் ஒரு ஓட்டல் ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ளது. அதன் கிளை உறையூரில் இருக்குப் போல. நெல்லை சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஆரம்ப காலங்களில் எல்லா ஓட்டல்களும் நன்றாகவே உணவு கொடுக்கின்றனர். பின்னர் மாறி விடுகிறது. இதில் தனிப்பட்ட காடரிங் சேவைதாரர்களும் பொருந்துவார்கள். எல்லாம் ஒரு வாரம் பத்து நாட்களுக்குத் தான்.

      ஸ்ரீரங்கத்தில் நாங்க வந்த புதுசில் பிராமணாள் ஓட்டல் என்றே ஒன்று பாலக்காட்டு ஐயரால் நடத்தப்பட்டு வந்தது. தி.க. கட்சிக்காரங்களுக்கும் அவங்களுக்கும் அடிக்கடி நடந்த சண்டையில் அந்த ஓட்டலை நிரந்தரமாக மூடி விட்டார்கள். ஆகவே இப்போது அந்தப் பெயரில் எந்த ஓட்டலும் இல்லை.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் இன்றைய ரெசிபியை ரசித்துப் படித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இது உங்களுக்கும் பிடித்தமான ரெசிபி என்பதையறிந்து மிக்க மகிழ்வடைந்தேன்.தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. மிகவும் புகழ் பெற்ற வாழைக்காய் பொடியைப்பற்றிய குறிப்பை அழகாய் விரிவாய் தெளிவாய் எழுதியிருக்கிறீர்கள் கமலா ஹரிஹரன்! அன்பு நன்றி!! சுடுவதற்கு பதிலாக வதக்குவது புதியது. இந்த முறைப்படியையும் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் இன்றைய ரெசிபி குறித்த கருத்துக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

      ஆம் இது அனைவருமே அறிந்த ஒரு சமையல் ரெசிபிதான். வாழைக்காயை, இல்லை கத்திரிக்காயை இப்படி கரி அடுப்பில், இல்லை காஸ் தணலில் சுட்டு வறுத்த பருப்புக்கள் காரத்துடன் பொடி செய்வோம். அன்றைய தினம் எதுவும் சரிவராத பட்சத்தில் இதை செய்வது எனக்கு கொஞ்சம் சுலபமாக இருந்தது. அதன் ருசியும் மாறுபடாமல் அப்படியே கிடைத்தது.

      தாங்களும் இந்த முறைப்படி ஒரு நாள் செய்து பார்க்கிறேன் என்று சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி.

      தங்களது அன்பான பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களது வருகைக்கும், இன்றைய ரெசிபி குறித்த ஊக்கம் தரும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      இன்றைய ரெசிபியை ரசித்துப் படித்து தந்த தங்களது பாராட்டிற்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. @ கமலாஹரிஹரன்

    //மிகவும் அதிகமாக பாராட்டுகிறீர்களோ என எனக்குத் தோன்றுகிறது..//

    இல்லையில்லை.. உன்மையைத் தான் சொல்லியிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /இல்லையில்லை.. உன்மையைத் தான் சொல்லியிருக்கின்றேன்./
      தங்கள் வார்த்தைகளின் பலம் என் எழுத்துக்கு மிகுந்த நம்பிக்கை உரத்தை அளிக்கிறது. அந்த நம்பிக்கையை நல்லவிதமாக காப்பாற்ற இறைவன் எப்போதும் எனக்குத் துணையாக நிற்க வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      மீண்டும் வருகை தந்து நல்லதொரு கருத்து சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. எனக்கு வாழைக்காய் பொடி செய்வதை மாயவரத்தில் பக்கத்து வீட்டு அம்மா சொல்லி தந்தார்கள்.நானும் செய்து இருக்கிறேன்.

    அங்கு அடிக்கடி ஓவ்வொரு வீடுகளிலிருந்தும் வாழைக்காய் கொடுத்து விடுவார்கள்.

    நீங்கள் சொல்வது போல மாறுதலுக்கு செய்யலாம்.
    நீங்கள் செய்முறை சொன்ன விதம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் இன்றைய ரெசிபியை ரசித்துப் படித்து தந்த தங்களது அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      ஆம்...! வாழைக்காய் வைத்து விதவிதமாக சமையல் செய்வது போல் இந்த ரெசிபியும் ஒரு விதமாக நன்றாகத்தான் இருந்தது. தாங்கள் அறியாததில்லை. அனைவரும் இதைச் செய்வதுதான்.

      உண்மை... தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடும் போது, ஒரு மாறுதலுக்கு இப்படிச் செய்யலாம்.. தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க மன மகிழ்வுடன் கூடிய நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கோமதி அரசு வாழைக்காயில் அப்பளம் செய்திருக்கார். எ.பியில் வந்திருந்தது பல மாதங்கள் முன்னால்.

      நீக்கு
    3. வாழைக்காய் அப்பளத்தை நினைவாய் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா சாம்பசிவம்.

      நீக்கு
    4. ஆமாம். சகோதரி கோமதி அரசு அவர்களின் அந்த ரெசிபி எனக்கும் நினைவில் உள்ளது. நீங்களும் நினைவாக இப்போது பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா சாம்பசிவம் சகோதரி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், ரெசிபி குறித்த தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

      தங்கள் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ.தாமதமான என் பதில் கருத்துக்கு மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
  19. நன்றாக உள்ளது மாறுதலுக்கு ஒரு வாழைக்காய் பொடி அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும், ரெசிபி குறித்த தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி. என் தாமதமான பதில் கருத்துக்கு மன்னிக்கவும். அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!