செவ்வாய், 8 நவம்பர், 2022

சு நா மீ :: சேகரின் கணக்கு

 

நாகப்பட்டினம். 

" பாட்டீ - நான் கோவிலுக்குப் போய்விட்டு வர்றேன் " என்று சொல்லியவாறு வீட்டிற்கு வெளியே வந்தாள் சுசீலா. கதவை மூடி, தெருவில் இறங்கும்போது, அங்கே தயங்கித் தயங்கி நின்ற தேவாவைப் பார்த்தாள். 

" என்னடா தேவா ? " 

தேவா, சுசீலாவை விட ஐந்து வயது சிறியவன். சேகரின் தெருவில் வசிப்பவன். 'சேகர் & சுசீலா லவ்' விவரம் தேவாவுக்குத் தெரியும். 

 " ஒன்றும் இல்லை அக்கா - கோயிலுக்குப் போறியா ? நான் அப்புறம் வர்றேன் " 

" பரவாயில்லை தேவா - இப்படி உட்காரு. நீ சொல்ல வந்ததை சொல்லு. " என்றபடி வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டாள் சுசீலா. 

" அக்கா - சேகர் அண்ணன் போக்கு கொஞ்சம் நாளா சரியாயில்லை. " 

சுசீலாவுக்கும் அந்த சந்தேகம் சில நாட்களாக இருக்கிறது. (இரண்டு நாட்கள் முன்பு பார்க்கில் சேகர் அவளிடம் கேட்ட சில கேள்விகள் ஞாபகம் வந்தது. ' நீ உன்னுடைய பாட்டியை விட்டுவிட்டு என்னோடு வருவாயா - நான் உன்னை ராணி மாதிரி வைத்து காப்பாற்றுகிறேன்.' நீ நினைக்கிறது போல் நான் சோத்துக்கே வழியில்லாதவன் இல்லை - பெரிய சொத்து எனக்காகக் காத்திருக்கிறது.) 

" ஏன் அப்படி சொல்கிறாய்? " 

" சேகர் என்னவோ ரகசிய திட்டம் போடுறார்னு எனக்குத் தோணுது. " 

" என்ன ரகசிய திட்டம்? " 

" எனக்கு சரியாத் தெரியலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் வேலை பார்க்கிற சக்தி போட்டோ ஸ்டுடியோவுக்கு திருவாரூர்லேர்ந்து இரண்டு பேருங்க வந்தாங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி எடுத்த ஒரு போட்டோவக்காட்டி, 'அதுல இருக்கறவங்கள இந்த ஊர்ல யாருக்காச்சும் தெரியுமா, அதே போல ஜாடை இருக்கிற யாராவது எங்க போட்டோ ஸ்டுடியோல எப்பவாவது போட்டோ எடுத்துக்க வந்திருந்தாங்களா'ன்னு கேட்டாங்க. அப்படி யாராவது இருப்பதாக அல்லது யாரையாவது பார்த்திருப்பதாக தகவல் தந்தால், பத்தாயிரம் ரூபாய் பரிசு தருவதாக சொன்னார்கள். எங்க கடை முதலாளி அந்தப் படத்தை வாங்கி அதை பக்கத்துக் கடையில் ஒரு ஜெராக்ஸ் போட்டு வைத்துக்கொண்டார்.  எங்க போட்டோ ஸ்டுடியோல இருக்கற பழைய போட்டோ ஆல்பங்களைப் பார்த்து பிறகு விவரம் சொல்வதாக சொல்லி, அவர்களுடைய ஃபோன் நம்பர் வாங்கி வைத்துக்கொண்டார். 

அப்போது சேகர் அண்ணன் எங்க கடையில அவர் எடுத்துக்கொண்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை வாங்கிக் கொள்வதற்காக வந்திருந்தார். அவரும் அவர்கள் கொடுத்த போட்டோவைப் பார்த்தார். அப்போது ஒன்றும் சொல்லவில்லை. பிறகு, முதலாளி சாப்பிடுவதற்குச் சென்றிருந்தபோது என்னிடம் வந்து அந்த போட்டோவை எடுத்துக் கொடுக்கச்சொன்னார். பக்கத்துக் கடையில் அதிலிருந்து ஒரு ஜெராக்ஸ் அவரும் எடுத்து வைத்துக்கொண்டார். 'இது பற்றி யாரிடமும் ஒன்றும் சொல்லாதே' என்று என்னிடம் சொன்னார். " 

" இதில் எதுவும் திட்டம் இருப்பதாக எனக்குத் தெரியலையே தேவா " 

" அக்கா - எங்கள் போட்டோ ஸ்டுடியோவிற்கு வந்த இரண்டு பேரும் நம்ம ஊர்ல இருக்கற எல்லா போட்டோ ஸ்டுடியோவுக்கும் போய் இதே போல கேட்டிருக்கிறார்கள். பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றவுடன், சிலர் எங்க முதலாளி போலேயே அந்த போட்டோவை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு, பிறகு பார்த்துச் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள். "

" பத்தாயிரமா !! அந்த போட்டோவுக்கு நீ ஏதேனும் காப்பி எடுத்தாயா ? " 

" ஆமாம் அக்கா - முதலாளி கிட்ட கேட்டு நானும் அந்தப் படத்திற்கு ஒரு காப்பி எடுத்துவச்சிக்கிட்டேன். " 

" எங்கே அந்த போட்டோ ? " என்று சுசீலா கேட்கும்போது, கதவைத் திறந்துகொண்டு சுசீலாவின் பாட்டி மீனாக்ஷி வெளியே வந்தாள். 

தேவா தன்னுடைய சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த போட்டோவை வெளியே எடுத்துப் பிரித்தான். 

" இது என்ன போட்டோ ?" என்று கேட்டவாறு அந்தப் படத்தை வாங்கி உற்றுப் பார்த்தாள் பாட்டி. பிறகு ஒன்றும் சொல்லாமல் அந்தப் படத்தை சுசீலாவிடம் கொடுத்தாள். " நீ இன்னும் கோயிலுக்குப் போகவில்லையா?" என்று சுசீலாவிடம் கேட்டுவிட்டு , " சீக்கிரமா போய்விட்டு வா " என்று சொல்லி உள்ளே சென்றாள் பாட்டி. 

அந்தப் படத்தில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி இருந்தனர். சிறுவனுக்கு ஐந்து வயது இருக்கலாம் - சிறுமிக்கு இரண்டு அல்லது மூன்று வயது இருக்கலாம்.  இருவரையும்  பார்த்தால் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மாதிரி தெரிந்தது. 

" யார் இவர்கள்? இவர்களைக் கண்டுபிடித்தால் அல்லது தகவல் சொன்னால் ஏன் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்? " 

" அக்கா - நான் அது பற்றி என் ஃபிரண்ட்ஸ் கிட்ட சொன்னேன். அப்போ என் ஃப்ரெண்ட் மணி சொன்னான். இந்தப் படத்தில் இருப்பவர்கள் அண்ணனும் தங்கையும். திருவாரூர் ஜமீன்தார் பரம்பரையாம். அண்ணன் பெயர் நாகராஜ், தங்கச்சி பேரு சுந்தரி. இவங்களைப் பெத்த அம்மா செத்துப் போயிட்டதால அவங்க அப்பா தியாகராஜன், இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டாராம். அந்த சித்தி இந்த இரண்டு பேரையும் ரொம்பக் கொடுமைப் படுத்தி இருக்கிறாள். விதை நெல் வாங்க தஞ்சாவூருக்கு தியாகராஜன் சென்றிருந்தபோது, சித்தி கொடுமை தாங்காமல் இவர்கள் இருவரும் சமையல்காரரின் உதவியோடு, இருபது வருஷங்களுக்கு முன்பு திருவாரூரிலிருந்து நாகூர் பாசஞ்சர் ரயில் ஏறி இந்தப் பக்கம் எங்கோ வந்துவிட்டார்களாம். தஞ்சாவூரிலிருந்து திரும்பிய தியாகராஜன் போலீசில் தன் குழந்தைகளைக் காணோம் என்று புகார் கொடுத்தார். ஆனால் குழந்தைகள் கிடைக்கவில்லை. போலீஸ்காரர்கள் கேஸ் முடிப்பதற்காக இந்தக் குழந்தைகள் நாகை சுனாமியில் சிக்கி இறந்துவிட்டார்கள் என்று சொல்லி கேஸ் முடித்துவிட்டார்கள். 

சித்தி உயிரோடு இருந்த வரை இவர்களைத் தேட எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப் பிள்ளைகளைக் கொடுமைப் படுத்தியதாலோ என்னவோ - சித்திக்கு குழந்தையே பிறக்கவில்லை. உற்றார் உறவினர்கள் எல்லோரையும் தூற்றி ஒதுக்கியதால், யாருமே அந்த சித்தியை மதிக்கவில்லை. மூணு மாசம் முன்னாடி அந்தக் கொடுமைக்கார சித்தி செத்துப் போயிட்டா. செத்துப் போவதற்கு முன் இந்தக் குழந்தைகளின் அப்பாவிடம், தான் இந்தக் குழந்தைகளுக்கு செய்த கொடுமைகளை சொல்லி அழுது, அவர்களை, தான் சமையல்காரர் மூலம் இரயில் ஏற்றி அனுப்பியதையும் சொல்லியிருக்கிறாள். போலீசுக்கு கேஸ் முடிப்பதற்காக சுனாமியில் அவர்கள் இறந்துவிட்டதாக கூறச் செய்ததும் தான்தான் என்பதையும் சொன்னாராம். 

இப்போ அந்தப் பணக்காரர் தன்னுடைய வாரிசுகளைத் தேட ஆரம்பித்திருக்கிறார். போலீசில் புகார் பற்றிக் கேட்டதற்கு, அவர்கள் ' கேஸ் முடித்தாகிவிட்டது. இனி நாங்கள் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற ஆதாரம் இல்லாது ஒன்றும் செய்ய முடியாது' என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் அந்தப் பணக்காரர் குழந்தைகளின் இந்தப் பழைய போட்டோவை தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து, திருவாரூரிலிருந்து நாகூர் வரை உள்ள எல்லா ஊர்களிலும் தேடச் சொல்லியிருக்கிறார். சேகர் அண்ணன் - இந்த போட்டோவை வைத்துக்கொண்டு, அந்தப் பணக்காரர் வீட்டுக்குப் போய் 'நான்தான் நாகராஜ்' என்று சொல்லி பணக்காரரின் வாரிசு என்று உரிமை கொண்டாடப் போகிறார் என்று நினைக்கிறேன். " என்று சொல்லி முடித்தான் தேவா. 

" சரி தேவா - நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்." என்று சொல்லி புறப்பட்ட சுசீலா, 'சேகரிடம் இதைப் பற்றி ஏதேனும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதா அல்லது வேண்டாமா' என்று நினைத்தவாறு கோயிலை நோக்கி நடந்தாள். 

(தொடரும்) 

கதையின் அடுத்த பகுதி நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகும். 

(இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும்? உங்கள் யூகங்களை கருத்துரையாக எழுதுங்கள். கதாசிரியர் சரியாக (அதாவது அவர் நினைத்திருக்கும் முடிவை ) யூகம் செய்பவர்களுக்குப் பரிசு கொடுப்பதாக என்னிடம் தெரிவித்திருக்கிறார்) 

83 கருத்துகள்:

 1. ஓ இந்தக் கதைக்குத் தான் முன்னறிவிப்பாக மின் நிலா 129 இல் ஒரு கடைசி பக்கம் சேர்த்தீர்களா?  ஏன் ரொம்ப கேப்? 22 வரை ஏன் காத்திருக்கணும்? 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கு காரணம் ஏற்கெனவே தேதி கொடுக்கப்பட்டிருக்கும் கதைகள்..

   நீக்கு
  2. மின்நிலா 128 கடைசி பக்கமும் பார்க்கவும்.

   நீக்கு
 2. பின்னிய ஜடை மடித்து, காது ஜிமிகியும் கழுத்து நெக்லஸுமாய், லட்சணமாய் புடவை உடுத்திய தோற்றத்தில் கோயிலுக்குப் போகிற ஜோரில் அந்தப் பெண் சித்திரம் மிக அழகு. இடது காதுப் பக்கம் அந்த வெள்ளைத் திட்டு என்ன? பூச்சரமோ?....

  ஒரு வியாழனில் இந்தப் பெண் பிள்ளையின் படத்தை வெளியிட்டு அதற்கு கவிதை எழுதச் சொல்லி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எபிக்கு வியாழன் தான் கவிதை. அதனால் கவிதைக்குக் கவிதையாய் வியாழன் தான் பொறுத்தமாக இருக்கும்.

   நீக்கு
  2. நன்றி. ஆனால் இன்று அதற்கு கவிதை வருமாயின் கவிதையையே வியாழனில் வெளியிடலாம்...

   நீக்கு
  3. சு
   நா
   மி

   கதைத் தலைப்பே கதையம்சத்திற்கு தீர்க்கமாய் பொருந்துகிற மாதிரி கவிதையாகத் தானே
   இருக்கிறது, ஸ்ரீராம்?

   நீக்கு
  4. பெண்ணின் படத்துக்கே கவிதை எழுத ஆசைப்படுகிற ஜீவி சார்... எத்தனை கவிதைகளை எழுதி வைத்திருக்கிறாரோ

   நீக்கு
  5. பெண்களே இறைவன் படைப்பில் கவிதை தான்.
   அவர்களுக்கென்று
   தனியாக கவிதை என்ற பெயரில் உளறிக் கொட்ட வேண்டுமா, நெல்லை?

   நீக்கு
  6. சுந்தரியே - உன் பெயர் என்ன ?
   சுசீலாவா !
   சும்மா இருந்த கவிஞர்களை
   சுனாமியாய் எழ வைத்துவிட்டாயே !

   நீக்கு
 3. ஓவியர் படு ஸ்மார்ட். கறுப்பு வெள்ளைப் படமாய் அந்த சிறு குழந்தைகளை காட்டிய ஞானத்திற்கே தனியாக பரிசளிக்கலாம் என்று கதாசிரியருக்கு பரிந்துரைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதாசிரியர்தான் பரிசளிக்க வேண்டுமா?  வாசகர்கள் யாரும்.....?

   நீக்கு
  2. பரிசோடு பரிசாய் இருக்கட்டுமே என்பதற்காக கதாசிரியர்.

   நீக்கு
  3. கதை முடிவதற்குள் கதாசிரியர் நிறைய பரிசுகள் கொடுக்கவேண்டி வந்துவிடும் போல இருக்கே!!

   நீக்கு
 4. பாவம் சிறிசுகள்.

  அண்ணன் தங்கை அறியாமல் காதலிப்பதாக
  மட்டும் கதையின் முடிவு இருந்து விடாமலிருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்காது என்று நம்புவோம். மீறி நடந்தால் நாராயணன் செயல்!

   நீக்கு
  2. இந்தப் பின்னூட்டமும், சுநாமீக்கான விளக்கமும் ஜீவி சாரின் கதாசிரியர் என்ற திறமையைப் பளிச்சென்று வெளிவரச் செய்கிறது. பாராட்டுகள் ஜீவி சார்.

   நீக்கு
  3. நன்றி, முரளி.
   எந்தந்த நேரத்தில் முரளி
   எந்தந்த நேரத்தில் நெல்லை என்பது
   எனக்குத் தெரியுமாக்கும். :))

   நீக்கு
  4. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 6. புதிராய்ப் பூத்திருக்கும் புதுக் கதை அருமை..

  70 களின் எழுத்து நடை..

  திருவாரூர், தஞ்சை, நாகை, நாகூர் - என்று மண் வாசனை மனதுக்கு இதம்..

  இன்னொரு தரம் படிக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 7. //இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும்?..//

  அது சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதாக இருக்கும்..

  அது கருவின் முகம் மாற்றும் வித்தை!..

  பதிலளிநீக்கு
 8. கதை மாந்தர்களும் -

  தியாகராஜன், நாகராஜ், தேவா, சேகர், சுசீலா -

  என்று, எல்லாரும் என்னுடன் பழகியவர்களாக!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூப்பர்.. சூப்பர்.... அப்போ முடிவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே...!

   நீக்கு
  2. நானும் பார்வையாளன் தான்!..

   (போர்வையாளன் அல்ல!..)

   நீக்கு
  3. சந்தேகம் உறுதியாகிறது.

   நீக்கு
 9. நான் உன்னை- என்றொரு கதை அதிகம் பேர்களால் படிக்கப்பட்ட கதை என்று பட்டியல் இடப்பட்டிருக்கின்றது..

  இன்று வெளியாகியுள்ள இந்தக் கதை விரைவில் அதிகம் பேரால் படிக்கப்பட வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.. நல்ல ரசனை. மண்வாசனை, ஊர்ப்பாசம்.

   நீக்கு
  2. // நல்ல ரசனை. மண்வாசனை, ஊர்ப்பாசம்.//

   ஊர்ப்பாசம் இல்லாவிட்டால் எப்படி,?..

   நீக்கு
  3. இன்று இதை, அதிகம் பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் புள்ளி விவரம் சொல்கிறது. பார்ப்போம்.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. கதைத் தலைப்பின் முக்கூட்டின் ரகசியம் என்ன?

  சு --- சுசீலா
  நா -- நாகராஜ்
  மீ --- மீனாட்சி

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப நாளைக்குப் பிறகு அந்நாளைய
  எழுத்து நடையில் ---
  கதை எழுதத் தெரிந்த ஒரு எழுத்தாளரின்
  ----கதையைப் படித்ததில் மனதிற்கு இதமாக இருந்தது. கதாசிரியருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. கதை விறுவிறுப்பாய்ச் செல்கிறது. மின் நிலா கடைசிப்பக்கக் கடிதத்தில் இப்படி ஓர் புதிர் ஒளிஞ்சுண்டு இருக்கா? சேகருக்கு ஒரு வேளை உண்மையான நாகராஜ் இருக்குமிடம் தெரிஞ்சிருக்குமோ? சுசீலா என்ன செய்யப் போகிறாள்? பாட்டிக்கு இது குறித்த விபரங்கள் தெரிஞ்சிருக்குனு நினைக்கிறேன். அதான் ஃபோட்டோவை வாங்கிப் பார்த்துட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விட்டாரோ? ஒரு வேளை சுசீலா தான் அந்தப் பெண்ணா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய கேள்விகள். பதில்கள்தான் தெரியவில்லை.

   நீக்கு
 14. சுசீலாவின் படம் வெகு இயல்பாக அழகாய் வரையப் பட்டிருக்கிறது. வரைஞ்சவர் யார்?கதாசிரியரே தானா?

  பதிலளிநீக்கு
 15. கதை நடை நன்றாக இருக்கிறது (பிராக்கெட்டில் கொடுத்துள்ள உத்தி தவிர)

  பாட்டிக்கு சுசீலா பற்றித் தெரியும் போலிருக்கிறதே

  சைவக் கதையாகச் செல்லுமா? (மாந்தரின் குணநலன்கள்) இல்லை அசைவக் கதையாகச் சென்று (ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம், பழி) பல்லிளிக்குமா? தொடர் கதை என்பதால் நினைவில் கொள்வது கடினம்.

  பதிலளிநீக்கு
 16. புதன் கேள்வி.. நீங்கள் கடைசியாக (லேடஸ்டாக) தாவணி அணிந்த பெண்ணை எங்கு பார்த்திருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு

 17. ஸ்ரீராம் ..
  தங்கள் கவனத்துக்கு..

  // பெண்ணின் படத்துக்குக் கவிதை..//

  பின்னலிட்ட கூந்தலுக்குள்
  ஒரு பூவாய் ஒளிந்திருக்க..


  படத்திற்கான கவிதை கைவசம்!..

  எப்போது அனுப்பி வைக்க??..

  பதிலளிநீக்கு
 18. ஒரு வேண்டுகோள் தம்பி.
  அந்தப் பெண்ணை நான் வர்ணித்த விதத்தில் கவிதை அமையாமல் வித்தியாசமாய் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். ஏனென்றால் ---
  ரசனைகள் பலவிதம்
  அவற்றில்
  ஒவ்வொன்றும் ஒருவிதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை...."

   " உன் பார்வை போலே என் பார்வையில்லை... நான் கண்ட காட்சி நீ காணவில்லை..."

   நீக்கு
  2. @ ஜீவி அண்ணா..

   // வித்தியாசமாய் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.//

   அதெல்லாம் அப்போதே எழுதியாயிற்று..

   நீக்கு
 19. ஸ்ரீராம் ..

  மின்னஞ்சலைக் கவனிக்கவும்..

  பதிலளிநீக்கு
 20. @ கௌதம்...

  //நிறைய பரிசுகள் கொடுக்கவேண்டி வந்துவிடும் போல இருக்கே!..//

  ஓவியப்பாவை!..

  ( கெழவனுக்கு வந்த யோகத்தைப் பாரேன்!..)

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  கதை நன்றாக உள்ளது. முக்கியமாக கதை தலைப்பும், போட்டோக்களின் தேர்வும் நன்றாக உள்ளது. இந்தக் கதையயை எழுதியவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  இதில் சுசீலாவோ, அவள் விருப்பப்படுகிற சேகரோ அண்ணன் தங்கையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த உறவு இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்குள் இந்த மாதிரி ஒரு காதல் விருப்பம் இயற்கை உண்டாக்கி இருக்காது.

  இரண்டாவதாக அந்த சிறுவயதுடைய குழந்தைகளின் போட்டோவை பார்த்தவுடன் அவளிடமோ, அவள் பாட்டியிடம் எவ்வித உணர்ச்சி மாற்றமும் உண்டாகவில்லை.

  தேவாவின் பேச்சுக்கள் அவர் அந்த அண்ணனாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தை கொஞ்சம் வரவழைக்கிறது. அவரின் தங்கையாக அடுத்து வரும் பகுதியில் யாரேனும் இணைந்து வந்து விடலாம். சிறு வயதிலேயே சித்தியின் ஏற்பாட்டில் ரயிலில் சேர்ந்து வந்த போது சந்தர்ப்ப சூழ்நிலைகளால், தன்னை விட்டு பிரிந்து விட்ட தன் தங்கையை கண்டு பிடிப்பதற்காக அவர் சேகரின் திட்டத்தை சுசீலாவிடம் விளக்கமாக சொல்லிக் பார்க்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

  நம் கற்பனைகள் இப்படி பலவிதத்திலும் சிறகடித்தாலும், கதையைப் படைத்த பிரம்மா என்னச் சொல்லப் போகிறார் என்ற ஆவலில் நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நிறைய கிளைக் கதைகள் தோன்றும் போலிருக்கே!

   நீக்கு
 22. சில கருத்துகள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேடிப்பிடித்துக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம்.

   நீக்கு
 23. கதை நன்றாக இருக்கிறது. பழைய சினிமா பார்ப்பது போல இருக்கிறது.

  //வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டாள் சுசீலா. //

  " அக்கா - சேகர் அண்ணன் போக்கு கொஞ்சம் நாளா சரியில்லை//

  இந்த மாதிரி நிறைய பழைய சினிமாக்களில் கதை அமைந்து இருக்கும்,

  பதிலளிநீக்கு
 24. சுசீலாவை அந்தக் குழந்தையாக செட்டப் செய்யப் பார்க்கிறானோ ? நாகராஜ்

  பதிலளிநீக்கு
 25. வணக்கம்! சகோதரே

  நானும் இன்றைய செவ்வாய் கதை களம் வேறு யாரோ எழுதிய கதை என்றுதான் படித்து இயல்பாக கருத்திட்டேன். இப்போது கிடுகிடுவென உயர்ந்த கருத்துரைகளை காணும் போது" நம் குடும்பத்திலிருந்து" யாரேனும் எழுதியிருப்பார்களோ என்ற சந்தேகம் "டியூப் லைட்டாக" எனக்குள் இப்போதுதான் வருகிறது.

  ஒரு வேளை நம் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் தம் ஊரின் மண் வாசனையுடன் எழுதியிருப்பார் என கெளதமன் சகோதரரால் ஊர்ஜிதமாகி விட்டது.

  இந்த மாதிரி முன்பு ஒரு முறை எ. பி குடும்பத்தினர்களால் செவ்வாய் கதைப் பகுதி மறைந்திருந்து கதை எழுதிய கதாசிரியரால், சுவாரஸ்யமாக களை கட்டி கொடி பறந்தது நினைவுக்கு வருகிறது.

  நவம்பர் 22 என்பது அது பாட்டுக்கு நம்மிடம் ஏதும் கேட்காமல் ஓடி வந்து விடும் என்றாலும், அதற்கு அதிக நாட்கள் இருப்பது போன்ற பிரமையை தரும் வண்ணம் கதையை நகர்த்திய கதாசிரியருக்கு (துரை செல்வராஜ் சகோதரருக்கு) வாழ்த்துகள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பிரமையை தரும் வண்ணம் கதையை நகர்த்திய கதாசிரியருக்கு (துரை செல்வராஜ் சகோதரருக்கு)..//

   எழுதியவர் எங்கிருந்தோ சிரித்துக் கொண்டிருக்கின்றார்.

   நீக்கு
 26. நவம்பர் மாதம் வந்தாலே பண்டித நேரு அவர்கள் நினைவுக்கு வருவார். அதைத் தொடர்ந்து தமிழ் எழுத்துலகில் எனக்கு மிகவும் பிடித்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அவர்களின் நினைவும் வரும். தன் புதல்வருக்கு அவர் பெயரை சூட்டும் அளவுக்கு எஸ்.ஏ.பி. அவர்களுக்கும் நேருவின் மேல் பிரியம். இந்த மாதம் நவம்பர் என்பதால் தானோ என்னவோ இதைச் சொல்லத் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 27. இது படம் வரைபவர் கதைபோல் தோன்றுகிறதே . பார்ப்போம் .:)

  முடிவு கதாசிரியர் கையிலே :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!