வெள்ளி, 4 நவம்பர், 2022

வெள்ளி வீடியோ : கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

சூலமங்கலம் சகோதரிகள், T M  சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் என்று பக்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அதே பாடல்களே மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருக்க, ஒருநாள் திடீரென எனக்குத் தெரிந்து மூன்று பாடல்கள் புதிதாக ஒலித்தன.

அதில் ஒன்று இன்றைய இந்தப் பாடல்.  P சுசீலா பாடியுள்ள இந்தப் பாடல் கேட்ட உடனேயே மனதுக்குள் சென்று அமர்ந்து விட்டது.

வழக்கம்போல யார் எழுதியது என்று தெரியாது, யார் இசை என்று தெரியாது.  

எவ்வளவு சிறிய பாடல் பாருங்கள்.  இரண்டிரண்டு வரிகளில் இரண்டு சரணங்கள்...  ஆனால் இனிமை.  சோமசுந்தரேஸ்வரர் அருள்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

ஆலவாய் அழகனே ஓம் ஐந்தெழுத்தின் அரசனே
மாமதுரை தெய்வமே மாமதுரை தெய்வமே
என் மனம் நிறைந்த செல்வமே
ஆலவாய் அழகனே

நமச்சிவாய மந்த்ரம் என்றும் நடக்கும் வெள்ளி அம்பலம்
நமச்சிவாய மந்த்ரம் என்றும் நடக்கும் வெள்ளி அம்பலம்
விளங்கும் இந்தக் கூடலில் உன் விளையாடல் கொஞ்சமா

மீனாட்சி துணைவனே மணி மிழறு கொண்ட இறைவனே
சொக்கலிங்க சுந்தரா எங்கள் சோம சுந்தரேஸ்வரா

====================================================================================================

புதிய பறவை..  சிவாஜியை கணேசன் சொந்தத் தயாரிப்பில் 1964 ல் வெளிவந்த திரைப்படம்.  தயாரிப்பு சிவாஜி கணேசன் என்றே இருக்கும்.  இதுதான் அவரது சொந்தத் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம்.  பின்னரே அது சிவாஜி புரொடக்ஷன்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது.

ஹிந்தியில் அமர்தீப் (1958) மற்றும் ராக்கி (1962) ஆகிய படங்களையும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது என்பது எனக்கு(ம்) செய்தி! 

1964 ல் வெளியாகி எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல மறுபடி இதே படம் 2010 ல் சாந்தி தியேட்டரில் வெளியாகி மறுபடி வெற்றி பெற்றதாம்.  

ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவலில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தாதா மிராசி இயக்கத்தில் உருவானது.  கண்ணதாசன் பாடல்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை.  சிவாஜி சரோஜா தேவி, சௌகார் ஜானகி எம் ஆர் ராதா நடித்திருக்கும் இந்தப் படத்திலிருந்து பி சுசீலா பாடிய ஒரு மகா இனிமையான பாடல்...  இந்தப் பாடல் ஹரிகாம்போதி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதாம்...  விக்கி சொல்கிறது.

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும் 
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் 
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை (2)
தாலாட்டு பாட தாயாகவில்லை

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் 
பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

தனிமையில் கானம் சபையிலே மௌனம் 
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை 
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

35 கருத்துகள்:

 1. அன்பின் வணக்கம்.. அனைவருக்கும்..

  வாழிய நலம்..

  பதிலளிநீக்கு
 2. நினைதால் ஆச்சரியமாக இருக்கிறது. பத்து நிமிஷத்திற்கு முன்பு தான் மாலை நடைப்பயித்சியிலிருந்து
  திரும்பினேன். எப்படி அந்த ஒத்த நிகழ்வு தெரியவில்லை. நடந்து கொண்டிருக்கும் பொழுது புதிய பறவையின் இந்த 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடல் தான் மனசு பூராவும் ஆக்கிரமித்து ஹம்மிங்காக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே..  ஆச்சர்யம்தான் ஜீவி ஸார்.  சமயங்களில் கமலா அக்கா கூட இப்படி சொல்வார்.

   நீக்கு
  2. சமயங்களில் நம் மனதிற்குள் இந்த ஒற்றுமைகள் தானாகவே தோன்றி விடுகிறது. என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

   நீக்கு
 3. பதிவின் முதல் பாடல் இனிமை.. 80 களில் வெளியான இசைத் தொகுப்பு..

  டி. எம். எஸ் ஒரு பாடல் சுசிலா ஒரு பாடல் என்று பாடியிருப்பார்கள்.

  மதுரை, சிதம்பரம், திரு அண்ணா மலை, தஞ்சை, கும்பகோணம், திருக்கடவூர் என்று ஊருக்கு ஒரு பாட்டு பாடியிருப்பார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். இந்தத் தொகுப்பின் அடுத்த பாடல் அடுத்த வாரம்!

   நீக்கு
 4. உன்னை ஒன்று கேட்பேன்..
  உண்மை சொல்ல
  வேண்டும்..

  மெல்லிசை மன்னர்கள் அளித்த முத்தான பாடல்கள் பலவற்றுள் இந்தப் பாடலும் ஒன்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பாடலின் முதல் நான்கு வரியை வைத்தும் நான்கு கதைகள் எழுதினார் மணியன்!

   நீக்கு
 5. முதல் பாடல் இன்றுதான் கேட்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 6. முதல் பாடல் திருஞானசம்பந்தரின் திருநீற்றுப்பதிகத்தில் உள்ளது யாருக்கானும் உடல் நலம் ரொம்ப சரியில்லை எனில் இந்தப் பாடலைப் போட்டுக் கேட்கச் சொல்லுவேன். பலன் இருந்ததாகச் சொல்லுவார்கள். இப்போதும் பலன் அளிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாவது முதல் பாடலின் முதலில் வரும் மந்திரமாவது  நீரு வரிகள்...  இல்லையா?

   நீக்கு
  2. மந்திரமாவது நீறு! நீரு என்றால் அர்த்தமே மாறிடுமே!

   நீக்கு
 7. நான் பள்ளியில் படிக்கையில் நிறையப் பெண்கள் இந்த "உன்னை ஒன்று கேட்பேன்" பாடலைப் பாடுவார்கள். அனைவரும் மிகவும் ரசித்த பாடல் இது. ஆனால் படத்தைப் பல வருஷங்கள் கழித்துச் சென்னை தூர்தர்ஷன் போட்டப்போத் தான் பார்த்திருக்கேன். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் படத்தை எப்போது பார்த்தேன் என்று ஞாபகமில்லை.  ஆனால் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்!

   நீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. உன்னை ஒன்று கேட்பேன் பாடல் மட்டுமல்ல, புதிய பறவையின் அனைத்துப் பாடல்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். சிவாஜி அந்தப் படத்தை அனுபவித்து எடுத்திருக்கிறார்.

   நீக்கு
 10. முதல் பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன். '
  'உன்னை ஒன்று கேட்பேன்....' பிரபலமான பாடல் பலதடவை கேட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. முதலில் உள்ள தேவாரப்பாடல் டி.எம்.செளந்திரராஜன் அவர்களது குரலில் இன்னும் கம்பீரமாக இருக்கும்!
  இரண்டாவது பாடலின் இனிமை இன்றளவும் நிறைய பேரின் மனதில் உறைந்திருக்கிறது. ஆரவாரமுடனும் பின்பு தனிமையின் அமைதியிலும் இரண்டு முறை சுசீலா பாடியிருப்பார். இரண்டுமே அத்தனை இனிமை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // முதலில் உள்ள தேவாரப்பாடல் டி.எம்.செளந்திரராஜன் அவர்களது குரலில் இன்னும் கம்பீரமாக இருக்கும்! //

   நான் கேட்டதில்லையே.


   ஆம், உன்னை ஒன்று கேட்பேன் பாடலை இரண்டு முறை பாடி இருப்பார் சுசீலா...

   நீக்கு
 12. இரண்டு பாடல்களும் அருமையான பாடல்.
  புதியபறவை பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும். இந்த பாடல்
  அடிக்கடி கேட்ட பாடல். இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. தனிமையில் கானம் சபையிலே மௌனம்
  உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்..

  - கவியரசர்..

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் பகிர்வு இரண்டுமே அருமையாக உள்ளது. முதல் தெய்வீகப் பாடல் பி. சுசீலா அவர்கள் பாடியது நன்றாக இனிமையாக இருக்கிறது. எப்போதோ கேட்ட நினைவு உள்ளது. ஆனால் சரியாகவும் நினைவில் இல்லை.

  இரண்டாவது அடிக்கடி கேட்டு ரசித்தப்பாடல். அதில் அபிநய சரஸ்வதியின் நடிப்பும் அந்த பாடலும் மனதை விட்டு அகலாதது. படம் தொலைக்காட்சியில் இரண்டு முறைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இனிமையான இரண்டு பாடல்களையும் இப்போது கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி .

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!