செவ்வாய், 22 நவம்பர், 2022

சு நா மீ : சுசீலாவின் சந்தேகம்

 

 இதன் முந்திய பகுதியை வாசிக்க :  சு நா மீ முதல் பகுதி 

*******************************


கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில்தான் சேகரும் சுசீலாவும் வழக்கமாக சந்திக்கும் பார்க். 

அன்று கோவிலிலிருந்து திரும்பி வந்த சுசீலாவை, பார்க் வாசலிலேயே பார்த்துவிட்டான் சேகர். 

" சுசீ - இன்னும் நான்கைந்து நாட்களுக்கு நாம் சந்திக்கமுடியாது. நான் திருவாரூருக்குப் போய்விட்டு பிறகுதான் வருவேன் " என்றான். 

" ஏன் ? "

" நான் அநாதை இல்லை - என்னுடைய அப்பா திருவாரூரில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அவரைப் போய்ப் பார்த்து, நான்தான் உங்க பையன் என்று சொல்லவேண்டும்." 

சு : " அப்பா திருவாரூரில் இருக்கிறாரா! இவ்வளவு நாட்களும் நீ யாருமே இல்லாத அநாதை என்று நினைத்திருந்தோமே! விவரமாகச் சொல்லு "

சேகர், போட்டோ ஸ்டுடியோவிலிருந்து தான் கொண்டுவந்த படத்தைக் காட்டி, தான் கேள்விப்பட்டிருந்த எல்லா விவரங்களையும் சொன்னான். எல்லாம் ஏற்கெனவே தேவா சொன்ன அதே விவரங்கள்தான். 

சு : " உன்னுடைய பெயர் நாகராஜ் இல்லையே - சேகர்தானே!" 

சே : " சேகர் என்பது என்னை எடுத்து வளர்த்தவர் வைத்த பெயர். என்னை வளர்த்தவர் என்னிடம் சொன்னார். அவர் என்னை சுனாமிக்குப் பிறகு - நாகூரில் ரயில் பெட்டியில், தலையில் அடிபட்டு மயங்கிக் கிடந்ததை பார்த்தாராம். என்னைப் பற்றிய விவரங்கள் எதுவுமே அப்போது நினைவு இல்லையாம். அவர்தான் எனக்கு சேகர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்தப் படத்தில் உள்ள இரண்டு பேரில் இருக்கும் பையன் நானாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய அப்பா என்னைப் பார்த்தால் அடையாளம் தெரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். அதனால்தான் திருவாரூருக்குப் போய் அவரைப் பார்த்து, அவருக்கு என்னை அடையாளம் தெரிகிறதா என்று பார்க்கவேண்டும். " 

சு : " அது சரி - உன்னுடைய தங்கை எங்கே? "

சே : " எனக்கே நான் யார் என்று தெரியவில்லை. என்னுடைய தங்கை எங்கே என்று கேட்டால் எனக்கு என்ன தெரியும்? ஒருவேளை என்னை மாதிரியே அவளும் எங்காவது வளர்ந்து வருகிறாளோ - பிறகு வந்து சேர்வாளோ எனக்குத் தெரியவில்லை." 

சுசீலா அதற்குப் பிறகு தனக்கு வந்த சந்தேகத்தைக் கேட்டாள். 

" சேகர் - இதெல்லாம் நெசமா - அல்லது நீ பணக்காரன் ஆவதற்கு  ஏதேனும் குறுக்கு வழி திட்டம் போட்டிருக்கிறாயா ? " 

" சேச்சே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை - நான்தான் நாகராஜோ என்று எனக்கு சந்தேகம் இருக்கு. நான் என் அப்பாவைப் போய்ப் பார்த்து  அவர் என்னை அடையாளம் கண்டு, நான்தான் அவருடைய பையன் என்று நிரூபித்து வரும் வரை நீ என்னை சேகர் என்றே கூப்பிடு. அவர் என்னை நாகராஜ் என்று அடையாளம் கண்டார் என்றால் அப்புறம் எல்லோருக்கும் நான் நாகராஜ் ஆகிவிடுவேன்.  அப்படியானால், என்னுடைய அப்பாவிடம் உன்னைப் பற்றிச் சொல்லி, அவருடைய சம்மதத்துடன் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வேன். " 

" ஒருவேளை நீ அவருடைய பையன் இல்லை - வேறு யாரோ என்று ஆகிவிட்டால் என்ன செய்வாய்? "

" அப்போ நான் சேகராகவே தொடர்ந்து இருந்து இதே மாதிரி வேலை தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான். எப்படி இருந்தாலும் உன்னை மறக்கமாட்டேன். " 

" சரி நான் போய் வருகிறேன் சேகர். பாட்டி தேடிக்கொண்டிருப்பாள்" என்று சொல்லி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் சுசீலா. 

" சரி போய்ட்டு வா - டா .. .. டா - மீண்டும் விரைவில் சந்திப்போம் " 

 மீண்டும் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய சுசீலா மனதில் மீண்டும் ஒரு குழப்பம் - 'இந்த விவரங்கள் எல்லாம் பாட்டியிடம் சொல்வதா வேண்டாமா?' 

= = = = = 

அன்று இரவு. 

சாப்பிட்டுவிட்டு படுத்ததும், சுசீலா, தன் அருகே வந்து படுத்த பாட்டியிடம் கேட்டாள். " பாட்டீ - என்னுடைய அப்பா, அம்மா இருவருமே சுனாமியில் மாட்டி செத்துப் போயிட்டாங்கன்னு சொன்னியே அது உண்மைதானா ? "

பா : " உனக்கு என்ன திடீரென்று சந்தேகம் ? ஏன் அப்படிக் கேட்கிறாய் ? "

சு : " அப்படி செத்துப் போயிட்டாங்கன்னு உனக்கு யார் சொன்னது? " 

பா : " போலீஸ்காரர்கள் சொன்னார்கள்" 

சு: " அடிக்கடி நம்முடைய வீட்டிற்கு ரொம்ப வருஷமா, ' மீகாம் ' கம்பெனியிலிருந்து யாராவது வந்து, உன் கிட்ட என் படிப்பு செலவுக்குப் பணம், எனக்கு வேண்டிய, நான் கேட்கும் உடை, நகை எல்லாம் வாங்க பணம் கொடுக்கிறார்களே - அது ஏன்? " 

பா:  " அதெல்லாம் விவரமாக உனக்கு சொல்லவேண்டிய நேரம் வந்துடுச்சு. சொல்கிறேன் கேள்.  இருபது வருஷங்களுக்கு முன்பு நான் இருந்தது இந்த வீடு இல்லை. பெரிய கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன இட்லிக் கடை வைத்து,  இட்லி கொத்சு, பொங்கல் வடை சட்டினி செய்து விற்று வந்தேன். என்னுடைய கடைக்கு மீகாம் கம்பெனியிலிருந்தும் ஆட்கள் வந்து டிஃபன் சாப்பாடு எல்லாம் வாடிக்கையாக சாப்பிடுவார்கள். பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு ஒருநாள். அது கிறிஸ்துமஸ் தினம். அப்போது என்ன நடந்தது தெரியுமா .. " 

அப்போது அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டு வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது. 

(தொடரும்) 

= = = = = 

அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேறு கதைகள் பிரசுரம் ஆக வரிசையில் நிற்பதால், இந்தக் கதையின் தொடர்ச்சி டிசம்பர் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து - 2022 க்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் !

தொடர்ந்து அடுத்த மூன்று வாரங்களுக்கு வெளியிடவேண்டும் என்றால், துரை செல்வராஜு சார் மற்றும் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார் இருவரும் இந்தக் கதை தொடர்ந்து வெளியாவதற்கும் அவர்கள் அனுப்பியுள்ள கதைகளை இந்தக் கதைக்குப் பிறகு வெளியிடுவதற்கு  தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று பின்னூட்டத்தில் தெரிவித்தால், கதையை அடுத்த மூன்று வாரங்களுக்குள் முடித்துவிடலாம். 

= = = = = =


68 கருத்துகள்:

 1. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்..

  தமிழ் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 3. நிசசயமாக எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. இது உங்களுடைய தளம். நீங்கள் தான் ஆசிரியர்கள். எதை எப்போது பிரசுரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள். நான் இந்தத் தளத்திற்கு உரிமை கொண்டாட முடியாது. ஆகவே என்னுடைய மொழிபெயர்ப்பு கதையை தேதி மாற்றி பிரசுரிக்கலாம். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. அந்த காலத்து சரோஜா தேவியின் தவிப்பு மாதிரி இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ எஸ் வி ரெங்காராவின் ஆட்கள்தான் கதவைத் தட்டுகிறார்கள் என்று சொல்லுங்கள்!

   நீக்கு
  2. ஏன்!..
   பி.எஸ். வீரப்பாவின் ஆட்களாக இருக்கக் கூடாதா?..

   டே.. ஜம்பு விடாதே பிடி!..

   நீக்கு
  3. ஏன் நம்பியார்/அசோகன் ஆட்கள் தட்டக் கூடாதா?

   நீக்கு
 5. தொடராக பிரசுரிக்கும்போது அந்த வார பகுதியை தொடங்கும் முன் ஒரு முன் கதை சுருக்கமோ, அல்லது இதுவரை என்ற ஒரு சுருக்கமோ, முன்னர் பிரசுரித்த பகுதிகளின் சுட்டிகளையோ கொடுத்தால் நலமாக இருக்கும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் குறிப்பிடும் முன்னரே சேர்த்து விட்டேன்.  மேலே பாருங்கள்!

   நீக்கு
 6. இந்த ஆண்டின் துவக்கத்தில் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்ட கதைகள் வருகின்ற 2023 / மே வரைக்கும் முன்னமே பட்டியல் இடப்பட்டு காத்திருப்பில் இருக்கின்றன...

  அடுத்தடுத்து வெளியாகும் போது எனக்குள்ளும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது..

  இப்போதும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றது..

  தமிழுக்குத் தானே வழி விடுகின்றோம் என்று..

  அப்புறம் ஒன்று..

  தமிழ் வருடப் பிறப்பிற்கான கண்ணாத்தா கதைக்கான தேதியை மட்டும் மாற்றி விட வேண்டாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ... அடுத்த ஆங்கில வருட முதல் வாரத்திற்கும், தமிழ்வருடப் பிறப்புக்கும் சிறப்புப் பதிவுகளை நோசித்து அனுப்ப முயல்கிறேன்.

   என்னா ஸ்பீடுப்பா இந்த துரை செல்வராஜு சாரு

   நீக்கு
  2. ஆனாலும் து செ சார் உறுதியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. அவருடைய கதையை பிரசுரிக்க ஓரிரு வாரங்கள் தள்ளிப் போட!!

   நீக்கு
  3. இடையில் து.செ. சார் கதையைப் பிரசுரியுங்கள். இது என் ஆலோசனை. மூன்று வாரங்களுக்குத் தொடரே தொடரணுமா?

   நீக்கு
 7. கதையின் முடிவை யூகிப்போருக்கு கதாசிரியர் பரிசளிப்பதாகச் சொல்லியிருக்கும் தகவலை இந்தப் பகுதியிலும் வெளியிட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு முன்னால் கொடுக்கிறேன் என்று சொன்ன பரிசைப் பற்றித் தகவலே இல்லை. இதில் புதுப் பரிசா?

   நீக்கு
  2. முதல் வாரம் வெளியிட்ட பகுதிக்குத்தான் அந்தப் போட்டி. இனிமேல் கிடையாது.

   நீக்கு
 8. தந்திரத்திலே சிறந்த குள்ள நரி
  மந்திரத்தால மயக்கிய கைக்காரன்....

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் நெடுநாள் ஆசை இன்றுதான் நிறைவேறியது. என் மகள் சென்னையிலிருந்து உ வெ சாவின் என் சரித்திரம், கிவாஜவின் என் ஆசிரியர், உ வெ சாவின் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கதை, புத்தகங்கள் வாங்கிக் கொண்டுவந்து இப்போதான் கொடுத்தாள். என்னிடம் பிடிஎஃப் வெர்ஷனாக என் சரித்திரம் இருந்தது.

   நீக்கு
 10. சுசீலா ஏன் சேகரிடம் தன் பெற்றோரும் சு.நா.மீ.யில் இறந்ததாகச் சொல்லவில்லை? சேகர் தான் உண்மையில் நாகராஜா? அப்போ இருவரின் காதல் எப்படிப் பொருந்தும்? நாளை புதன் கேள்வி பதிலில் சொன்னாலும் சரிதான்! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுசீலா ஏற்கெனவே சொல்லியிருக்கலாம். நமக்கு என்ன தெரியும்?

   நீக்கு
 11. இந்த வருடமே கதையை முடித்து விடலாம்...

  பதிலளிநீக்கு
 12. தொடர் கதைகளை, முடிந்தபின்புதான் படிக்க இயலும். படித்துவிட்டுக் கருத்திடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. பாட்டிக்கு வைத்த கோரிக்கையை அறிய தொடர்ந்து வருகிறேன்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. இன்று இல்லை எனச் சொன்ன இக்கதை இன்றே வெளியாகி உள்ளது. ("எப்போதுமே நாளை நடப்பதை யாரரிவார்.?"அடுத்த நொடியையே நம்மால் தீர்மானிக்க இயலாது. )

  ஒரு கதையை வெளியிட்டால் அடுத்தடுத்து வருகிற மாதிரி வெளியிட்டு விட்டால் உத்தமம். ஆனால் உங்களின் தர்ம சங்கடமான நிலையும், கதை எழுதி அனுப்பிய மற்ற சகோதரர்களின் நிலையும் புரிகிறது. அவர்களிடமே நீங்கள் முடிவை கேட்ட விதம் பாராட்டத்தக்கது.

  சுசீலாவின் வளர்ந்த கதையையும் அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /இன்று இல்லை எனச் சொன்ன இக்கதை இன்றே வெளியாகி உள்ளது./

   கதை முதல் பகுதி வெளியிடும் அன்றே மறுவாரம் இதன் தொடர்ச்சி இல்லை என்றதாக படித்த நினைவு. அதனால் இன்றைய பகுதி கதை சென்ற வாரத்தில் வந்த தொடர்ச்சி என நினைத்து விட்டேன். மனதில் ஏதோ பல குழப்பங்கள்.. ... அதனால் சரியாக தேதியை கவனிக்கவில்லை. மன்னிக்கவும். நன்றி.

   நீக்கு
  2. நேற்றைய பதிவில் நீங்கள் நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி.... கமலாக்கா. நலம்தான். வேலைப்பளு...கூடுதல் பொறுப்புகள்...அதனால் முடியும் போது வந்து செல்வேன்...

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
  3. வணக்கம் சகோதரி

   தாங்கள் நலமாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி என் பதிவுக்கு தாங்கள் வந்திருப்பதை யும் பார்த்தேன். இத்தனை வேலைகளின் பளுவிலும், தவறாது வந்து தாங்கள் தரும் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைத்தன. , தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 15. @ கௌதமன்

  // ஆனாலும் து செ சார் உறுதியாக சம்மதம் தெரிவிக்க வில்லை.. //

  நான் தான் சொல்லி விட்டேனே..

  தமிழ் வருடப் பிறப்பு செவ்வாய்க்கான கண்ணாத்தா கதையின் தேதியை மட்டும் மாற்ற வேண்டாம்.. என்று!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கதைகள் எல்லாமே தேதி மாற்றம் எதுவும் இன்றி வெளியிடப்படும். சு நா மீ மற்ற தேதிகளில் மட்டுமே வெளியாகும்.

   நீக்கு
 16. //அதெல்லாம் விவரமாக உனக்கு சொல்லவேண்டிய நேரம் வந்துடுச்சு. சொல்கிறேன் கேள்.//

  பாட்டி என்ன சொல்லபோகிறார் என்று ஆவலுடன் காத்து இருக்கும் போது "இது என்ன கரடி மாதிரி யாரோ குறுக்கிடுகிறார்கள்?"
  என்ன அவசரம் பலமாக கதவை தட்டுகிறார்கள் என்று அறிய காத்து இருக்க வேண்டுமே!

  பதிலளிநீக்கு
 17. சென்ற பகுதியும் வாசித்துவிட்டேன் கௌ அண்ணா.

  இக்கதை நீங்கள் எழுதுவது என்பது தெரிகிறது.

  சு - சுசீலா நா - நாகராஜ் மீ - மீகாம். சுநாமி என்று கதையில் வரும் சம்பவத்திற்கும் பொருந்திப் போகிறது!!!! அதான் சுனாமியினால் ஏற்பட்ட இழப்புகள்.

  கடைசி பாரா - ஏன் மீ ? அது பாட்டிதானே சொல்கிறார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டியின் பெயர் மீனாட்சி. நீங்கள் சொல்வது போல " பா " என்றே குறிப்பிட்டிருக்கலாம். கதாசிரியர் அனுமதியோடு அதை 'பா' என்று மாற்றிவிட்டேன். நன்றி.

   நீக்கு
  2. ஓ அப்ப அந்த மீ பாட்டியா......தலைப்பில்!!

   கீதா

   நீக்கு
 18. கதை சில சஸ்பென்ஸுகளுடன் போகுது.

  அப்போது என்ன நடந்தது தெரியுமா .. " //

  பாட்டி தொடங்கும் முன்னரே அடுத்த சஸ்பென்ஸ்

  //அப்போது அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டு வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது. //

  யாராக இருக்கும்? பாட்டியோ சுசீலாவோ அடுத்த செவ்வாய் தானே கதவைத் திறப்பாங்க!! அதுவரை வெளில நிக்கறவங்க கதவைத் தட்டிக்கிட்டே இருப்பாங்களே!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! ஆனால் பாருங்க - அவர்கள் ஏற்கெனவே திறந்திருப்பார்கள். ஆனால் வந்தது யார் என்பது நமக்குத்தான் ஸஸ்பென்ஸ் !! மின்நிலா கடந்த மூன்று வாரங்களாக கடைசி பக்கம் (பின் அட்டை பக்கம் ) வாசித்து வருபவர்களுக்கு வந்தது யார் என்று தெரிந்திருக்கும்.

   நீக்கு
 19. அந்த ஃபோட்டோவில் சேகரும் சுசீலாவுமோ என்ற சந்தேகம் எழுகிறது. சுசீலாவுக்கு வேறு சந்தேகம்..!! சேகர்தான் நாகராஜ் என்றால் சுசீலா அவன் தங்கை ஆகிவிடுவாளே....கதை அப்படித்தான் முடியப் போகிறதோ?!

  சிற்றன்னையால் துரத்தப்பட்ட இருவரும் ரயிலில் பிரிந்து இப்படியானதோ?

  //இந்தப் படத்தில் உள்ள இரண்டு பேரில் இருக்கும் பையன் நானாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. //

  சேகருக்கு அந்தப் போட்டோவில் இருக்கும் சிறுமி சுசீலா ஜாடை என்றால் தெரிந்திருக்கும் இல்லையா? இல்லை கணிக்க முடியவில்லையோ...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேகருக்குத்தான் தலையில் அடிபட்டதில் எல்லாமே மறந்துபோய் விட்டதே! அப்புறம் எப்படி .. ?

   நீக்கு
  2. அது புரிந்தது....அது பழசுதானே மறந்து போச்சு...இப்போதைய சுசீலாவின் ஜாடை பார்த்தால் ஃபோட்டோவில் சிறுமியின் ஜாடை கொஞ்சமேனும் பொருத்தம் இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம் வந்துவிடுமே....அப்படிக் கேட்டேன்

   கீதா

   நீக்கு
 20. // உங்கள் கதைகள் எல்லாமே தேதி மாற்றம் எதுவும் இன்றி வெளியிடப்படும்.//

  நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 21. 1. ஒரு சிறுகதை தான். அதை எபி பிரசுர செளகரியத்திற்காக 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்து வெளியிடும் போது அதைப் புரிந்து கொள்ளாத எபி வாசகர்கள் தொடர் என்கின்றனர்.
  2. ஒரு நீண்ட கதை 2 அல்லது 3 பகுதிகளைக் கொண்டிருந்தாலும் தொடர்ச்சியாக வாராவாரம் வெளியிட்டால் தான் ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் இருக்கும் தொடர்பு குலையாமல் சுவாரஸ்யமாக இருக்கும்.
  இதற்கு உதாரணங்கள் எபியிலேயே வெளிவந்த மிக அதிகம் பேர் வாசித்த கண்ணகி காஞ்சனா மற்றும் மாய நோட்டு ஆகிய என் கதைகள்.
  இப்படி பகுதி பகுதியாக தொடர்ச்சியாக வெளிட்யிடாலே நெல்லை போன்றவர்கள் அந்த ஒரு வார இடைவெளிக்கு காத்திருக்க பொறுமை இல்லாமல் நான் தொடர் முடியட்டும், முழுசாக நான் வாசித்துக் கொள்கிறேன் என்பார்கள்.
  3. ஒரு கதை தான் ஒரு செவ்வாய்க்கு என்றால் தம்பி துரையின் சின்னச் சின்ன சிறுகதைகள் தாம் எபியில் வெளியட லாயக்கு.
  4. எழுத்துச் செழுமை கொள்ளும் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு, படிப்பவரை கதையின் முடிவை நோக்கி ஈர்க்கும் விறுவிறுப்புகள், காட்சி விவரிப்பு சுவாரஸ்யங்கள் இதெல்லாம் இருக்கும். எபியில் வெளிவரும் செவ்வாய்க் கதைகள் அந்த நாளோடு முடிந்து விட வேண்டும் என்றால்
  மேற்கூறிய எழுத்துச் சிறப்புகள் கொண்ட முத்திரைக் கதைகளை எபியில் எக்காலத்தும் வெளியிட முடியாமலேயே போகும்.
  5. இந்த நிலையில் சுநாமீ
  போன்ற வாசகர் ரசனையை சுவாரஸ்யப் படுத்தக் கூடிய கதைகளை இந்த வாரம் ஒரு பகுதி மூன்று வாரம் கழித்து இன்னொரு பகுதி என்று வெளியிடுவீர்கள் என்றால் இந்த மாதிரி கதைகள் எபி வெளியீட்டுக்கு லாயக்கில்லாமலேயே போகும் தவறைச் செய்தவர்களாவீர்கள்.
  அதனால் என் போன்ற
  படைப்பாளிகள் எபியில் இனி எழுத முடியாமலேயே போகும் நிலையும் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.
  6. தொடராக வெளியிட வேண்டிய சிறுகதைகளை வாராவாரம் தொடர்ச்சியாக வெளியிடுவதே இதற்கான தீர்வு.
  அதனால் இந்த விஷயத்தில் தீர்க்க யோசித்து முடிவெடுக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துகள் சரியே. என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு எடுப்போம்.

   நீக்கு
  2. முழுவதும் ஐந்து வாரங்கள் கிடைக்கும் வண்ணம் ஆரம்ப தேதியை முடிவு செய்திருக்கலாம் என்பது என் கருத்து.

   எனவே இந்த வழக்கம் உங்கள் கதைகளுக்கும் இப்படியே தொடரும் என்று சொல்ல முடியாது.  நீண்ட கதைகள் வரும்போது அதற்கான ஸ்லாட் ஒதுக்கியபின்தான் வெளியிட முடியும் - தொடர்ச்சியாக.

   நீக்கு
 22. பதிலுக்கு நன்றி, கேஜிஜி ஸார்.

  பதிலளிநீக்கு
 23. அது தானே வழி வழி வழக்கமாக நீண்ட கதைகளுக்கு இது வரை இருந்திருக்கிறது, ஸ்ரீராம்?

  நெடுங்கதைகள் வாரா வாரம் தொடர்ச்சியாக வெளிவரும் பொழுது இடையே குறுங்கதைகள் ( (இப்பொழுது குறுக்கிட்டாற் போல) குறுக்கிடாது என்பது ஒரு வகை அலாதியான நிம்மதி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!