புதன், 30 நவம்பர், 2022

கடைசியாக கடிதம் எழுதி போஸ்ட் செய்தது எப்போது? யாருக்கு?

 

 நெல்லைத்தமிழன்: 

1. கடைசியாக கடிதம் எழுதி போஸ்ட் செய்தது எப்போது? யாருக்கு? 

# நினைவில்லை.  ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சுமார் ஏழு ஆண்டுகள் முன்பு...

& 2006 ல் - பையன் கல்யாணப் பத்திரிக்கையை இணைத்து காஞ்சி சங்கர மடத்திற்கு காமாட்சி அம்மன் பிரசாதம் + ஆசீர்வாதம் வேண்டி எழுதிய கடிதம். 

2. மற்றவர்களிடமிருந்து வரும் கடிதங்களைப் பாதுகாத்து வைப்பது உண்டா? அப்படி யாருடைய கடித்த்தைப் பாதுகாத்துவைத்துள்ளீர்கள்? (கே ஜி எஸ் அவர்கள் பதில் சொல்லலாம்)

$ நிறைய கடிதங்கள் சேமித்து வைத்திருந்தேன். 2016 ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது சேமித்து வைத்த எல்லாவற்றையும் தண்ணீர் அடித்துப் புரட்டி எடுத்துச் சென்றுவிட்டது. ஏதாவது மிஞ்சி இருக்கா என்று பார்க்கவேண்டும்! 

# வைத்திருந்தது உண்டு. சுமார் 10 கிலோ இருக்கும். இப்போது எதுவும் இல்லை. 

& அப்பா , அம்மா எழுதிய சில கடிதங்கள் மனைவி கோவையிலிருந்து எழுதிய கடிதங்கள் என்று பல கடிதங்கள் இருக்கு - எல்லாம் சென்னையில் உள்ளன. 

3. 65+ கார்ர்கள் முக்கியமாக்க் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் என்னென்ன? 

# தடுக்கி விழாதீர்கள். அனாவசியமாக பேசாதீர்கள். ஆலோசனை கேட்டாலொழிய சொல்லாதீர்கள். மருத்துவச் செலவுகளுக்கு தேவையான அளவு பணம் ( தற்போது ஒருவருக்கு குறைந்தது 15 லட்சம்) எப்போதும் கைவசம் வைத்திருங்கள். 

& உங்கள் பெயரில் இருக்கும் அசையா சொத்துகள் எதையும் விற்காதீர்கள். இயன்றவரை active + alert ஆக இருங்கள். சமூக குழுக்களில் நிறைய பங்கெடுத்துக்கொள்ளுங்கள். பயனுள்ள பொழுதுபோக்குகளை செய்யப் பழகிக்கொள்ளுங்கள். 

4. இப்போதும் தினப்பத்திரிகைகளோ வாராந்திரிகைகளோ படிக்கிறீர்களா? புத்தக, பேப்பர் வடிவத்தில்.

#  இல்லை. கோவிட் வந்த பின் தினசரி செய்தித்தாள் வாங்குவது நின்று போனது.

& புத்தக பேப்பர் வடிவத்தில் : இல்லை. digital ஃபார்மட் : உண்டு.

 5. சுமாராக ஒவ்வொரு நாள் பதிவையும் எத்தனைபேர்கள் படிக்கின்றனர்?

# எனக்குத் தெரியாது. 

& ஒவ்வொரு பதிவையும் 200 to 250 பேர் படிக்கிறார்கள் என்று புள்ளிவிவரப் பலகை சொல்கிறது. 

 6. பெட்ரோல் விலையேற்றம் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், ஏன், பெங்களூரில் மசால் தோசை போன்ற உணவுப் பொருள்கள் 35-40 ரூபாய்க்குக் கிடைக்கின்றன, தமிழகத்தில் அதுவே 90-100 ரூபாய், கேபிள் டிவி கட்டணம் போன்றவற்றைப் பற்றிப் பேசுவதில்லை?

# செலவு விஷயத்தில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாக இருக்கும்.

= = = = =

எங்கள் கேள்விகள் : 

1) உங்கள் மொபைலில் எவ்வளவு apps வைத்துள்ளேர்கள்? 

    (& என்னுடைய மொபைலில் 137 apps உள்ளன !!)

2) தினமும் நீங்கள் பயன்படுத்தும் apps எவை ?

   ( & தினமும் நான் பயன்படுத்துபவை : whatsapp, amazon, freecell, Om Tamil calendar, Off-line diary) 

3) நீங்கள் பயன்படுத்தாத (ஆனால் உங்கள் மொபைலில் உள்ள app எது? 

    (& : FM Radio ) 

========

படம் பாருங்க : ஏதாச்சும் கருத்து எழுதுங்க. 

1) 

2) 


3) 


= = = = =


115 கருத்துகள்:

  1. கேள்விக்களுக்கு பதில் அளிப்பது யார் என்று தெரியவில்லை. (நெல்லை திடீரென்று கேஜிஎஸ்ஸை விளித்த குழப்பத்தில்)

    பதிலளிநீக்கு
  2. #
    &
    -- ரெட்டை ரெட்டையாய் இந்த இரண்டு பதில்கள் அளிக்கும் வழ வழா வழக்கத்தை எப்பொழுது தான் விட்டு விட்டு கறாரான ஒற்றை பதிலை தீர்மானமாக அளிக்க உத்தேசம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வாரங்களுக்கு முன்னர் புதன் கேள்வி/பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு 2,3 ஆசிரியர்களைப் பதிலளிக்க வைக்கலாம் என ஆலோசனை சொன்ன நினைவு. நானும் அதற்கு ஏற்கெனவே அப்படித்தானே இருக்குனு சொல்லி அதைக் கேஜிஜியும் ஆமோதித்திருந்தார். இப்போ? மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தால்! எ.பி. ஆசிரியர் குழு பாவம்! :(

      நீக்கு
    2. # KGY & KGG $ KGS * Sriram புதன் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பவர்கள். இதில் கேஜிஎஸ் எப்போவானும் பதில் கொடுப்பார். ஸ்ரீராமும் அப்படியே. திரு கேஜி ஒய் அவர்களும் கேஜிஜி அவர்களும் தான் தொடர்ந்து பதில் அளித்து வருகின்றனர்.

      நீக்கு
  3. சமூக குழுக்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று 65+ காரர்களுக்கு ஆலோசனை சொல்லி விட்டு இன்னொரு பக்கம்
    அனாவசியமாய் பேசாதீர்கள் -- கேட்டாலொழிய சொல்லாதீர்கள் என்று உபதேசிப்பது முரண்பாடாக இல்லையா?
    (இது 65+ காரர் சொன்ன ஆலோசனையா என்று சந்தேகம் வேறு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூக குழுக்களில் வாயை மூடிக்கொண்டு விரல்களால் மட்டும் விளையாடிக்கொண்டு இருக்கலாமே!

      நீக்கு
    2. ஜீவி அண்ணா, குழுக்களில் பங்கெடுப்ப்பது என்பதற்கும், அந்த உபதேசங்களுக்கும் வித்தியாசம் உண்டு. சபை நாகரிகம் முக்கியம் இல்லையா?

      25, 30 வயதில் பேசிய ஒரு சிலதை அதாவது வாய் வார்த்தைகளை 50 வயதில் பேசக் கூடாது, 50ல் பேசுவதை 60க்கு மேல் பேசக் கூடாது என்பதோடு பேச முடியாது....அதன் பின் இன்னும் வயதாகும் போது...வாய் கப்சிப் என்று இருப்பதே நல்லது நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும்....அதுவும் நாம் சார்ந்த்திருக்கும் நிலை முன்னரெ வந்துவிட்டால் அந்த வயதிலிருந்தே எங்கும் தேவையானதை மட்டும் பேசி அமைதி காப்பது நல்லது.

      25, 30 வயதில் பேசிய வசனங்களை (வேண்டாத) வயதாகும் போதும் பேசிக் கொண்டிருந்தால், நமக்கு வயதானாலும் மனம் பக்குவமடையவில்லைன்னுதானே அர்த்தம்!!! இல்லையா

      கீதா

      நீக்கு
    3. வயதாகி விட்டால் எல்லாத்துக்கும் வாயை/கண்ணை/காதை மூடிக் கொள்வது நல்லது. எனக்கெல்லாம் பெண் வீட்டில்/பையர் வீட்டில் கண், காது, வாய் எதுவும் வேலை செய்யாது. அதோடு அவங்களோடஎந்த விஷயத்திலும் கருத்துச் சொல்லுவதும் இல்லை. சும்மாக் கேட்டுப்பேன். அவ்வளவு தான். இதைக்கடைப்பிடித்தாலே போதும். வயதானகாலத்தில் ஓரளவு மன நிம்மதியுடன் இருக்கலாம். இல்லையா?

      அது சரி! ஸ்ரீராம் எங்கே? இன்னமும் உடம்பு சரியாகாமல் படுத்திருக்காரா? இப்போல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லை! :(((((

      நீக்கு
    4. கீதாக்கா அதே அதே!!!

      இனி அப்புறம்.....வேலைகள் இழுக்கின்றன.

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம் பதில் சொல்லவும்.

      நீக்கு
    6. கீதாக்கா அதே அதே....

      காலையில் கொடுத்த கருத்து எங்கே...??? !!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. பொதுவாக எபி பதிவுகளில் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்குப் பிறகு வரும் பின்னூட்டங்களுக்கு யாருமே பதிலளிப்பதில்லையே ஏன்? (சென்ற திங்கள் பல்வேறு சொந்த வேலைகளுக்கிடையேயும் சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் எந்த பின்னூட்டையும் ஒதுக்கி விடாமல் எல்லாவற்றிற்கும் பதிலளித்த பொறுப்புணர்வைப் பார்த்து இக் கேள்வியைக் கேட்கத் தோன்றியது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்களுக்குப் பதிலளிக்காமல் இருப்பது எனக்குப் பிடிக்காது. நான் அப்படி இருந்ததில்லை.

      நீக்கு
    2. சில சமயங்களில் மறுநாள் கூடப் பதில் கொடுத்திருக்கேன். ஆனால் கணினி ஒத்துழைக்கணும். திடீர் திடீர்னு குதிக்க ஆரம்பிக்கும். :))))))

      நீக்கு
    3. அதோடு நீங்கல்லாம் இரவு தாமதமாய்க் கண் விழித்து இணையத்தில் உலா வரும் ரகம். நம்மால் எல்லாம் ஆகாது. சரியா சாயங்காலம் ஆறு/ஆறரை ஆச்சுன்னா நோ கணினி. எப்போவானும் ஞாயிற்றுக்கிழமைகளில் குஞ்சுலுவுக்காகக் காத்திருந்தால் அப்போ உட்கார்ந்திருப்பேன்.

      நீக்கு
    4. கீசா மேடம் ராகு காலம், குளிகை, கணிணி காலம்லாம் ரொம்பவே பார்ப்பாங்க போலிருக்கு

      நீக்கு
    5. கீதாக்கா ஹைஃபைவ் நானும் தாமதமாகப் பதில் கொடுப்பதுண்டு....பின்னே வீட்டு வேலைகள் நம்மைக்கட்டிப் போடும் போது...எப்படியோ பதில் கொடுக்கிறோமா இல்லையா!!!! ஹாஹாஹா கீதாக்கா ஹைஃபைவ் சொல்லுங்க!!!

      கீதா

      நீக்கு
    6. ஹலோ நெல்லை ரெண்டு கீதாக்களையும் வம்புக்கிழுக்கலைனா உங்களுக்கு .....ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  6. @ ஜீவி அண்ணா..

    //சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் எந்த பின்னூட்டையும் ஒதுக்கி விடாமல் எல்லாவற்றிற்கும் பதிலளித்த பொறுப்புணர்வைப் பார்த்து.. //

    வணக்கத்துக்குரிய பண்பு..

    வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே மாதிரி மாதேவிக்கும் நன்றி சொல்ல வேண்டும். பெரும்பாலும் கடைசி பின்னூட்டம் அவருடையதாகத்தான் இருக்கும். எப்பவாவது தான் (வியாயக்கிழமை) அவர் பின்னூட்டத்திற்கு பதில் கிடைக்கும்
      ஆனால் அவரோ தவறாமல் தன் பின்னூட்டத்தைப் போட்டு விடுவார்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் இருவரின் அன்பான பின்னூட்டத்திற்கும் என் பணிவான நன்றி. என்னை விட நம் எ. பி குடும்ப சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் எ. பி யில் வெளிவரும் தங்கள் பதிவுகளுக்கும் சரி,!! தங்கள் வலைப்பூக்களில் வெளியிடும் பதிவுகளுக்கும் சரி...! உடனுக்குடன் அனைவருக்கும் பதில்கள் இட்டு வரவேற்கும் இயல்பை பெற்றவர்கள் என்பது உண்மை. அவர்களின் முன் நான் மிகவும் சாதாரணமானவள். என் பகுதியில் நான் பதில் தர எத்தனையோ முறை தாமதமாக்கி இருக்கிறேன். என என் மனசாட்சி உறுத்தியிருக்கிறது. கைப்பேசியில் பதில் கருத்துக்கள் இடும் போது, எத்தனையோ இடைஞ்சல்கள் நடுவில் வந்து விடுவதால், எல்லோரிடமும் மன்னிக்கும்படியும் கேட்டுள்ளேன். தங்களின் அன்புக்கு மீண்டும் என் பணிவான நன்றிகள்.

      தாங்கள் சகோதரி மாதேவி அவர்களைப்பற்றி கூறியது உண்மை.. இப்போதுதான் திங்களுக்கு வந்த சகோதரியின் பின்னூட்டத்தைப் பார்த்தேன். நன்றி சகோதரி.. இதோ.. பதில் கருத்து தருகிறேன்.

      அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. முதல் படத்தில் நிற்கும் பொம்மையைப் பார்த்துட்டு அந்தப் பூனை நிஜம்னு நினைக்குதோ?

    இரண்டாவது படத்தில் சாப்பிட அத்தனை விதங்கள் இருக்கையில் அந்தப் பெண் பிய்ஞ்சு போன ரவாதோசையோ என்னமோ சாப்பிடறாரே? ஏன்?

    மூன்றாவதில் கணவன் வர தாமதம் ஆவதால் கவலையுடன் உட்கார்ந்திருக்கும் பெண்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடும்போதும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பவளுக்கு, அது பழைய பூரியாக இருந்தால் என்ன இல்லை பிஞ்ச ரவா தோசையாக இருந்தாலென்ன?

      நீக்கு
  9. என்னோட மொபைலில் என்னென்ன ஆப்ஸ் இருக்கு என்பது குறித்து எனக்குச் சரியாத் தெரியாது. அறிஞ்சுக்க முயற்சியும் பண்ணலை. ஆனால் ஓலா, உபேர் ஆப்ஸ்களைப் பயன்படுத்துவதே இல்லை. எங்கே போனாலும் உள்ளூர்ப் பயணம் முதற்கொண்டு ரெட் டாக்சி தான். அதுக்கும் ஆப் இருக்குன்னாலும் டவுன்லோட் செய்துக்கலை. நான் பயன்படுத்துவது வாட்சப் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. சரி செய்துவிட்டேன். நேற்று இரவு இந்தப் பதிவைத் தயார் செய்துகொண்டிருக்கும்போது - எங்கள் கேள்விகள் எழுத ஆரம்பிக்கும்போது - எங்கள் அபார்ட்மெண்டு பவர் ஃபெய்லியர். Bescom பவர் இல்லை ; டீசல் ஜெனரேட்டரும் பழுதடைந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருட்டிலேயே தடவ வேண்டியதாகி விட்டது. அதனால் பல தட்டச்சு பிழைகள்!

      நீக்கு
  11. ஏன் அசையாச் சொத்துக்களை விற்கக்கூடாது என்று சொல்லியிருக்கீங்க?

    குறைந்தபட்சம் 15 லட்சம்... இதி இன்ஷ்யூரன்ஸ் -மெடிக்ளெய்ம் லிமிட்டா? ஒருவருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசையாச்சொத்துக்களை விற்று விட்டு வேறே இடத்தில் அசையாச் சொத்தாவே வாங்கிக்கலாமே! அதோடு பதினைந்து லட்சம் எல்லாம் மருத்துவச் செலவுக்குப் போதுமா? இப்போல்லாம் ரொம்பவே அதிகம் ஆகின்றது. உடம்புக்கு வந்தாலே பயமாக இருக்கு.

      நீக்கு
    2. அடுத்த புதன் கேள்விகளாக எடுத்துக் கொள்வோம்!

      நீக்கு
  12. 65+ கார்ர்கள் முக்கியமாக்க் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் என்னென்ன?

    -அவர்கள் 65+ காரர்கள் என்பது முதலாவது.
    -இத்தனை நாள் உணவருந்தவும் உளறிக்கொட்டவும் சகட்டுக்கு திறந்திருந்த வாயை இனி இரண்டுக்குமே சற்று யோசித்து திறந்தால் நல்லது என்பது அடுத்தது.
    -சேர்த்து வைக்க நினைப்பதை கைவிடுவது மூன்றாவது.
    -சிரித்த முகத்துடன் இருக்கப் பழகுவது அடுத்தது.
    -இது போகிற வழி என்பதை புரிந்து கொள்வது ஐந்தாவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கௌ அண்ணா பார்த்தாலே நெல்லைன்னு புரிஞ்சுருமே ஹாஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    2. இத்தனை நாள் உணவருந்தவும் உளறிக்கொட்டவும் சகட்டுக்கு திறந்திருந்த வாயை இனி இரண்டுக்குமே சற்று யோசித்து திறந்தால் நல்லது என்பது அடுத்தது.//

      ஹைஃபைவ் நெல்லை! இதையேதான் மேலே சொல்லிருக்கிறேன்...

      கீதா

      நீக்கு
    3. வயதாகி விட்டால் எல்லாத்துக்கும் வாயை/கண்ணை/காதை மூடிக் கொள்வது நல்லது. எனக்கெல்லாம் பெண் வீட்டில்/பையர் வீட்டில் கண், காது, வாய் எதுவும் வேலை செய்யாது. அதோடு அவங்களோடஎந்த விஷயத்திலும் கருத்துச் சொல்லுவதும் இல்லை. சும்மாக் கேட்டுப்பேன். அவ்வளவு தான். இதைக்கடைப்பிடித்தாலே போதும். வயதானகாலத்தில் ஓரளவு மன நிம்மதியுடன் இருக்கலாம். இல்லையா?

      அது சரி! ஸ்ரீராம் எங்கே? இன்னமும் உடம்பு சரியாகாமல் படுத்திருக்காரா? இப்போல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லை! :(((((

      நீக்கு
    4. //எனக்கெல்லாம் பெண் வீட்டில்/பையர் வீட்டில் கண், காது, வாய் எதுவும் வேலை செய்யாது. அதோடு அவங்களோடஎந்த விஷயத்திலும் கருத்துச் சொல்லுவதும் இல்லை.// - இதை மாதிரி பிரில்லியண்ட் குணம் இருக்க முடிந்தால் வாழ்வே நிம்மதிதான். எப்படி உங்களால் அப்படி இருக்க முடிகிறது? ஆச்சர்யம்தான்

      நீக்கு
    5. அப்படியும் சில சமயங்கள் எங்களை "இதைச் சாப்பிடாதே! அதைச் சாப்பிடாதே!" என்பார்கள். அப்போக் கொஞ்சம் போல் வாய் திறப்போம். ஆனால் அது சரியாக வராது என்பதைப் புரிஞ்சுண்டு உடனே பேசாமடந்தை ஆயிடுவோம். அதே போல் பண்டிகைகள் சமயங்களில் அவங்களால் இருக்க முடியாது. ஊருக்குத் திரும்பும்படி இருக்கும். அப்போவும் எல்லோரும் சொல்லுவார்கள். லீவை எக்ஸ்டென்ட் பண்ணிட்டுப் பண்டிகையை முடிச்சுட்டுப்போகச் சொல்லுங்க என்பார்கள். நான் வாயே திறக்க மாட்டேன். அப்போத்தான் பெரிய ப்ளாஸ்டராகப் போட்டுக்கொள்வேன்.

      நீக்கு
    6. எல்லாமே ஆட்கள் மூலம் செய்து கொள்ளணும் என்பார்கள். சிலவற்றிற்குச் சரியா வராது. அது புரிஞ்சுக்க மாட்டாங்க. மேலும் நாங்க எல்லோரிடமும் ஏமாந்து போகிறோம் என்றும் சொல்லுவாங்க. சரி, சரினு தலையை ஆட்டிக்கேட்டுப்போம். எந்த ஆட்களும் வைச்சுக்கறதே இல்லை. யாரிடமும் ஏமாந்து போவதும் இல்லை. இப்போ இருக்கும் இந்தக் குணத்தோடும் இந்தப் பழக்கங்களோடும் தான் அவங்களை வளர்த்தப்போவும் இருந்தோம். இப்போவும் இருக்கோம். இதை அவங்க தான் புரிஞ்சுக்கணும் என்பதால் பேசாமல் இருந்துடுவோம். வீட்டு வேலை செய்யும் பெண்ணைத் தவிர்த்து ஆறு மாசம்/மூணு மாசத்துக்கு ஒரு முறை வீடு சுத்தம் செய்யும் இரு இளைஞர்கள்/இவங்க ஐந்தாறு வருஷங்களுக்கும் மேல் வராங்க என்பதால் நம்பிக்கைக்கு உரியவர்கள். மற்றபடி வெளி ஆட்கள் யாரும் வருவதில்லை. எலக்ட்ரீஷியன்,ப்ளம்பர் இருவரும் ஒரே நபர். அவரும் சில வருடங்களாக வரார்.

      நீக்கு
    7. Geetha Sambasivam "கடைசியாக கடிதம் எழுதி போஸ்ட் செய்தது எப்போது? யாருக்கு? ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      எல்லாமே ஆட்கள் மூலம் செய்து கொள்ளணும் என்பார்கள். சிலவற்றிற்குச் சரியா வராது. அது புரிஞ்சுக்க மாட்டாங்க. மேலும் நாங்க எல்லோரிடமும் ஏமாந்து போகிறோம் என்றும் சொல்லுவாங்க. சரி, சரினு தலையை ஆட்டிக்கேட்டுப்போம். எந்த ஆட்களும் வைச்சுக்கறதே இல்லை. யாரிடமும் ஏமாந்து போவதும் இல்லை. இப்போ இருக்கும் இந்தக் குணத்தோடும் இந்தப் பழக்கங்களோடும் தான் அவங்களை வளர்த்தப்போவும் இருந்தோம். இப்போவும் இருக்கோம். இதை அவங்க தான் புரிஞ்சுக்கணும் என்பதால் பேசாமல் இருந்துடுவோம். வீட்டு வேலை செய்யும் பெண்ணைத் தவிர்த்து ஆறு மாசம்/மூணு மாசத்துக்கு ஒரு முறை வீடு சுத்தம் செய்யும் இரு இளைஞர்கள்/இவங்க ஐந்தாறு வருஷங்களுக்கும் மேல் வராங்க என்பதால் நம்பிக்கைக்கு உரியவர்கள். மற்றபடி வெளி ஆட்கள் யாரும் வருவதில்லை. எலக்ட்ரீஷியன்,ப்ளம்பர் இருவரும் ஒரே நபர். அவரும் சில வருடங்களாக வரார்.

      நீக்கு
  13. 80+ காரர் இதையெல்லாம் பார்த்து ஏன் இவர்கள் இப்படி தப்பு தப்பாய் சொல்கிறார்கள் என்று திகைக்கிறார். அவர்களும் 65-யைத் தாண்டி வரும் பொழுது இந்தத் தப்புகளை அனுபவ பூர்வமாகப் புரிந்து கொள்வார்கள் என்று தனக்குள் புன்னகைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கே 75+னா என்ன என்ன செய்யணும், நடந்துக்கணும்னு எழுதலாமே. எனக்கென்னவோ 75+ கார்ர்கள் முதலில் விடுவது கோபத்தை, ஆரம்பிப்பது பிறர் மீதான அன்பை என்று தோன்றுகிறது. நெல்லை

      நீக்கு
    2. எனக்கென்னவோ 75+ கார்ர்கள் முதலில் விடுவது கோபத்தை, ஆரம்பிப்பது பிறர் மீதான அன்பை என்று தோன்றுகிறது. நெல்லை//

      நோ நோ நோ....எல்லாரும் அப்படி இல்லை.....சார்ந்திருந்தாலும் கூட அதிகாரம் செய்யும் பெரியவங்க இருக்காங்க!!!!! உட்கார்ந்த இடத்திலிருந்தே அல்லது படுத்த இடத்திலிருந்தே!!!!

      கீதா

      நீக்கு
    3. //அதிகாரம் செய்யும் பெரியவங்க// - ஆனால் அவங்களுடைய உள் மனசு அவங்கள்ட சொல்லும்.... நீ பீஸ் போன பல்பு என்று... அதாவது அவங்களோட ராஜ்ஜியம் கை நழுவி அடுத்த தலைமுறைக்கு எப்போதோ போயாச்சு என்று

      நீக்கு
  14. வெளியூருக்கு வேலை விஷயமா சில மாதங்கள் போகப்போறேன்னு சொல்றாரு. நானே அதை நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன். நீ வேற இந்தச் சமயத்துல கய்யாமுய்யானு எதையோ சொல்லிக்கிட்டிருக்க. இந்தா இதை வாயில் வச்சுக்கிட்டு சும்மா இரு என்று சொல்லிவிட்டுத் தன் யோசனையைத் தொடருகிறாளோ?

    பதிலளிநீக்கு
  15. முதல் படம் - ஹாஹாஹா பூஸார் ஏமாந்துவிட்டாரே!!

    இரண்டாவது படம் - பெண்ணே சாப்பிடறப்ப மொபைல் பேசக் கூடாதுன்னு தெரியாதா...தட்டுல்ல என்ன இருக்குன்னு தெரியாம பல்லி, பாச்சா முட்டை ஏதாச்சும் வாயில போயிடப் போகுது!!!

    மூன்றாவது படம் - ஹூம் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்கும் போது நல்ல கதைகள் சொல்லி, நல்ல விஷயங்கள் சொல்லி வெளியில் இயற்கையைக் காட்டி ஊட்டி குழந்தைகளோடு ஒரு பெர்ச்னால் பான்ட் உருவாக்குவைதை விட்டு அப்பத்தான் அம்மாக்கள் சிலர் எதையோ யோசித்துக் கொண்டு...மனதில் என்ன கவலைகள் இருந்தாலும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது என்பதை அந்தப் பொண்ணுக்கு யாராச்சும் சொல்லிக் கொடுக்கணும் போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இரவு படுத்த உடனே தூங்கும் ரகமா நீங்கள்?

    நல்ல தூக்கம் வர என்ன செய்யணும்?

    நடு இரவில் திடீரெனக் கண் விழித்தால் சிறிது நேரத்தில் தூக்கம் தொடருமா உங்களுக்கு? எனக்குச் சுத்தமாத் தூக்கம் போயிடும்.

    தூக்கம் வராதவங்களுக்கெல்லாம் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது!" என எடுத்துக்கலாம் தானே? :)))))))

    பகல் தூக்கம் தூங்கும் வழக்கம் உண்டா? அது நல்லதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உறங்காது!"// - அர்த்தத்தையே மாற்றுவது இந்த கீசா மேடத்தினால் மட்டுமே முடியும்.

      நீக்கு
    2. //உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா// யாரு அர்த்தத்தை மாத்தினாங்க? என்னோடது நல்ல உள்ளம். அதான் உறங்குவதில்லை சரியாத்தானே இருக்கு! :))))))))

      நீக்கு
    3. உறங்காது - இறக்காது, சாகாது... இதுதான் அந்தப் பாடல் வரியில் அந்த இடத்துக்கான அர்த்தம். நீங்க சும்மா உங்களை திருவள்ளுவர்னு நினைச்சுக்கிட்டு, 'உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி' வரியில் உள்ள உறங்குவதற்கான அர்த்தத்தை எடுத்துக்கிட்டீங்க

      நீக்கு
    4. அதனால் என்ன தப்பில்லை! இதுவரைக்கும் இதைப் பல முறை சொல்லி இருக்கேன். எல்லோரும் சிரிச்சு ரசிப்பாங்க. நீங்க தான், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரசனையே இல்லை. :(

      நீக்கு
  17. இரவில் எப்படிப் படுத்தாலும் அசௌகரியமாக உணருகிறேன். அதே காலங்கார்த்தாலே ரொம்பவே சௌகரியமாகவும் தூங்க வசதியாகவும் தோன்றுவது ஏன்?

    எங்காவது வெளியே போகணும்னா காலை எழுந்திருக்க அலாரம் வைச்சுப்பீங்களா?

    எனக்கு அலாரமே தேவைப்படுவதில்லை. வைத்தாலும் அது அடிக்கப் பத்து நிமிஷங்கள் முன்னரே விழிப்பு வந்துடுது. அது ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வைத்தாலும் அது அடிக்கப் பத்து நிமிஷங்கள் முன்னரே விழிப்பு வந்துடுது. // - இவங்க போன ஜென்மத்துல அலாரம் கடிகாரமா, அதிலும் முந்திக்கொள்ளும் அலாரம் கடிகாரமாப் பொறந்திருப்பாங்களோ?

      நீக்கு
    2. கீதாக்கா அண்ட் நெல்லை நானும் அப்படித்தான் அலாரம் தேவையில்லை வைத்தாலும் முன்னரே எழுந்துவிடுவது வழக்கம்!!!! பயோ க்ளாக்!!!!

      கீதா

      நீக்கு
  18. வயதானவர்களுக்கு நல்ல யோசனை தந்துள்ளீர்கள் நன்கு பயன்படும் பலரும் கருத்துக்கள் கூறியுள்ளார்கள் . வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கடைசி பின்ஊட்டம் இடும் என்னையும் நினைவில் கொண்டுள்ள எ பி குடும்பத்தினர் களுக்கு நன்றி. சுட்டிக் காட்டிய திரு.ஜீவி அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. // 65+ கார்ர்கள் முக்கியமாக்க் //

    பிழைகளை சரி பார்க்க வேண்டும்...!

    பதிலளிநீக்கு
  20. 65+ காரர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் என்னென்ன ?

    இதற்கான பதில் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
  21. 65+ கார்ர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் என்னென்ன? //

    பதில்கள் சூப்பர். அதிலும் தடுக்கி விழாமல் பார்த்துக்கணும் என்று சொன்னது ரொம்பவே சரி!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. குக்கரிலேயே காய்களை வேக வைப்பது நல்லதா?{ நானெல்லாம் எந்தக் காய் என்பதைப் பொறுத்து அதைக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு பின்னர் ஜலம் ஊற்றிக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கும் ரகம். பாதி வெந்ததும் உப்புச் சேர்ப்பேன். அநேகமாக எல்லாக் காய்களும் (வதக்குவது தவிர்த்து) இப்படித்தான்.} ஆனால் பலரும் கீரையைக் கூடக் குக்கரில் வைக்கிறாங்க. இது உடலுக்கு நல்லதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீரையை மூடி வைத்து வேகவிடக்கூடாது என்பார்கள் அல்லவா? அதிலுள்ள சில கெட்ட வாயுக்கள் வெளியேறாது என்பார்கள். ஆனால்பலரும் கீரையைக்குக்கரில் வைத்தே வேக விடுகின்றனர். இது சரியா?

      நீக்கு
    2. நான் எக் காரணத்தை கொண்டும், கீரையை குக்கரில் வைப்பது கிடையாது. தனியாக ஒரு கடாயில் இட்டு திறந்து வைத்து வேக வைத்த பின் மத்தால்தான் கடைவேன். நன்றி.

      நீக்கு
  23. குக்கரிலேயே சாம்பார் வைத்தால் பிடிக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ரிட்ஜ்ல வைத்தால் என்ன இல்லை குக்கரில் வைத்திருந்தால் என்ன... கெட்டுப்போகாமல் இருந்தால் சரிதான். ஹி ஹி

      நீக்கு
    2. குளிர்சாதனப் பெட்டியில் சமைத்த சாப்பாடை வைக்கும் வழக்கமே இல்லை. நாங்கல்லாம் அதைப் "பத்து" என்போம். :)))))

      நீக்கு
  24. ம்ம்ம்ம் இந்த ஓபோஸோ, ஓபிஎஸ்ஸோ எதுவோ ஒண்ணு அந்த முறையில் நீங்க சமைச்சுப் பார்த்திருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  25. இத்தனை கேள்விகளானு யாரானும் கம்பைத் தூக்குறதுக்குள்ளே ஓடிடறேன்.

    பதிலளிநீக்கு
  26. /வயதாகி விட்டால் எல்லாத்துக்கும் வாயை/கண்ணை/காதை மூடிக் கொள்வது நல்லது. எனக்கெல்லாம் பெண் வீட்டில்/பையர் வீட்டில் கண், காது, வாய் எதுவும் வேலை செய்யாது. அதோடு அவங்களோடஎந்த விஷயத்திலும் கருத்துச் சொல்லுவதும் இல்லை. சும்மாக் கேட்டுப்பேன். அவ்வளவு தான். இதைக்கடைப்பிடித்தாலே போதும். வயதானகாலத்தில் ஓரளவு மன நிம்மதியுடன் இருக்கலாம். இல்லையா?//
    superb!!
    இனிய பாராட்டுக்கள் கீதா சாம்பசிவம்!!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது.

    கடிதங்களில் நீங்கள் பதிலில் சொன்னது போல் எங்கள் அப்பா, அம்மா எழுதிய ஒரு சில கடிதங்களை இன்னமும் பத்திரமாக சேமித்து வைத்துள்ளேன். அவ்வப்போது மனம் சரியில்லாத போது எடுத்துப் படிக்கும் போது விழிகளில் நீர் திரளும்.

    வயது 65 க்கு மேல் உள்ளவர்கள் வாழும் நிலைப்பற்றி குறிப்பிட்டவைகளை ஏற்கிறேன். தடுக்கி விழாமல் இருக்க வேண்டும் என்ற பதில் உண்மை. ஆனால் இதுவும் நம் கையில் (காலில்) இல்லை. விதியின் பயனை யாரரிவார்? மற்றபடி அவர்களுக்கான யோசனைகள் சிறப்பு. எப்போதும் கடவுளை நினைத்தபடி இருக்கும் சிந்தனையை "அவரும்" அனைவருக்கும் வரமாக தந்து விட்டால் நல்லது.

    இன்று நான் எழுந்ததே மிகவும் தாமதம். அதனால் எப்போதும் போல் காலையில் வர இயலவில்லை.

    பதிவுகளின் பின்னூட்டங்களை குறித்த இன்றைய கருத்துரைகளில், பதிலளிக்கும் விதத்தில் என்னைப் பற்றி அன்புடன் குறிப்பிட்ட சகோதரர் ஜீவி, அவர்களுக்கும், சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.🙏.

    சகோதரி மாதேவி அவர்களை பற்றி குறிப்பிட்டது உண்மையே..! அவர்கள் எந்தப் பதிவுக்கும் வராமல் இருந்ததே கிடையாது. இன்று கூட திங்கள் பதிவுக்கு அவர் வந்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன். மிக்க நன்றி சகோதரி.

    நானும் என் பதிவுகளுக்கு வரும் கருத்துகளுக்கு, அன்று பார்த்து தவிர்க்க முடியாதபடிக்கு வந்து விடும் பல வேலைகள் காரணமாக எத்தனையோ முறைகள் மிகவும் தாமதமாகத்தான் பதில்கள் தந்துள்ளேன். அதற்காக அனைவரும் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்வேன். அதற்கு இப்போதும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கைப்பேசியிலேயே பதிவுகளை தந்து, அதற்காக வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போது சற்று தாமதமாகி விடுகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    படங்கள் அழகுடன் அருமை.

    "என் செல்லமே பாரடா..! எங்கள் திருமணம் முடிந்த புதிதில், இப்படி பூனையாட்டம் இருந்த உன் அப்பா, கொஞ்ச நாளில் நான் விதவிதமாக சமைத்து வைத்ததையும், சாப்பிட வராமல், ஏதோ வேலையுள்ளது என தட்டிக் கழித்ததோடு மட்டுமின்றி, இன்று உன்னையும் அவர் வரவுக்கு காக்க வைக்கிறார் பார்த்தாயா? என்கிறாரரோ இந்த அம்மா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. இந்த சிபில் ஸ்கோர் Cibil Score என்றால் என்ன? இப்போதைய இளம்பெண்கள் தங்களுக்குக் கணவனாகத் தேர்ந்தெடுக்கும் இளைஞனை இதை வைத்தே எடை போடுவதாகச் சொல்கின்றனரே? அது ஏன்?

    பதிலளிநீக்கு
  30. Geetha Sambasivam "கடைசியாக கடிதம் எழுதி போஸ்ட் செய்தது எப்போது? யாருக்கு? ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    இந்த சிபில் ஸ்கோர் Cibil Score என்றால் என்ன? இப்போதைய இளம்பெண்கள் தங்களுக்குக் கணவனாகத் தேர்ந்தெடுக்கும் இளைஞனை இதை வைத்தே எடை போடுவதாகச் சொல்கின்றனரே? அது ஏன்?

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    இப்போது கொஞ்ச நேரத்திற்கு முன் படங்களை குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தேன். அதை இப்போது காணவில்லையே..? அட..! ஆண்டவா.. . கீதா சாம்பசிவம் சகோதரியை படுத்தி வைப்பதோடு எனக்கும் இந்த சோதனையை தந்து விட்டாயே.. இது நியாயமா?.. :(((( ஹா ஹா ஹா. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. என்னப்பா நடக்குது,,,,,, சரி சரி தொடர்கிறேன்,

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரி

    நலமா? எப்படி இருக்கிறீர்கள்? இவ்வளவு நாட்கள் கழித்து உங்களை இங்கே பார்ப்பது எவ்வளவு மகிழ்வாக உள்ளது தெரியுமா? தொடர்ந்து பதிவுலகத்திறகு வாருங்கள். உங்கள் வரவை அன்புடன் எதிர்பார்க்கிறோம். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!