வியாழன், 5 ஜனவரி, 2023

பல்பயம் 

சென்ற வாரம் தொடர் பல்வலியால் அவதிப்பட்டு வந்து பல்வலி என்றே நம்பி ஓரல் கேன்சரில் ஒரு தோழி மாட்டிய விஷயம் பற்றி எழுதி இருந்தேன்.  அவர் விஷயம் கேள்விப்பட்டதுமே நாங்கள் இரண்டு மூன்று பேர் இதே போல பல்வலியை அலட்சியம் செய்து வந்தது பயத்துடன் நினைவுக்கு வர, மற்றவர்கள் என்ன செய்தார்களோ, நான் என் பழைய டென்டிஸ்ட்டை சரணடைந்தேன்.

சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக இருக்கும் விஜயகாந்த்தான் என் ஆஸ்தான பல்மருத்துவர்.  கொஞ்சம் காஸ்ட்லிதான்.  ஆனால் நம்பிச் செல்லலாம்.  முதல் நாள் மாலை மார்க்கெட்டில் வந்திருக்கக் கூடிய புதிய வகை தொழில் நுட்பம் இன்று அவரிடத்தில் இருக்கும்.  கிளினிக்கில் அவர் உதவியாளர்களாக இருக்கும் மருத்துவர்களும் திறமையானவர்கள்.  அவர் மனைவியும் பல் மருத்துவரே...

ஆறு வருடங்களாக பார்க்கவில்லை என்பதை அறிந்து அவரே ஆச்சர்யப்பட்டதோடு உரிமையோடு கோபித்தும் கொண்டார்.

"வருஷத்துக்கொரு முறையாவது க்ளீனிங், ஸ்கேலிங் செய்யணும் சார்.."

இப்போது வலிக்கும் பற்களில் விரல் வைத்து காட்டிக் கொடுத்தேன்.  நாற்காலியில் சாயவைத்து சோதித்தார்.  முன்பு செய்த இம்பிளான்ட், ஆர் சி டி எல்லாம் எப்படி இருக்கிறது என்று தட்டி கொட்டி சோதித்தார்.    வழக்கம்போல முதலில் ஒரு எக்ஸ்ரே எடுத்துக் கொண்டார்கள்.  அதை வைத்துக் கொண்டு என்னிடம் படம் காட்டினார்கள்!  

சில சமயங்களில் என்ன தோன்றும் என்றால், நாம் சாதாரணமாக கவலைப்படாமல் வைத்திருக்கும் பற்களைக் கூட ஓரமாக டீகே ஆக ஆரம்பித்திருக்கிறது, தேய்ந்திருக்கிறது என்றெல்லாம் சொல்லி ஒவ்வொன்றாக சாகடித்து செயற்கைப் பல் வைக்க சிபாரிசு செய்வார்களோ என்று.  ஆனால் ஹம் மஜ்பூர் ஹை!  அவர்கள் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும்!  என் மருத்துவ நண்பர் ஒருவரே கூட முடிந்த வரை டென்டிஸ்ட்டிடம் செல்லாதீர்கள்.  பணம் கறந்து விடுவார்கள் என்று சொல்வார்!  அவருக்கு சில பல் பிரச்னைகள் இருந்தும் அவர் டென்டிஸ்ட்டிடம் செல்லவில்லை.  சரியோ, தப்போ...

சற்று காசு கூடுதலாகிறதே என்று கேட்டால் எங்கள் டாக்டர் முதலிலேயே சொல்லி விடுவார்..  "ஆமாம்..   கொஞ்சம் கூடதான்.  நீங்கள் இங்கு செய்து கொள்வதும் செய்து கொள்ளாததும் உங்கள் விருப்பம்.  ஆனால் பாருங்க;..  எங்களிடம் தரமான பொருட்கள் மட்டும்தான் இருக்கும்.  L A கொடுக்க நாங்கள் பயன்படுத்தும் ஊசி கூட வித்தியாசமானது, லேட்டஸ்ட்.  உங்களுக்கு வலி தெரியாது..  இமேஜ் எடுக்க நீங்கள் சென்ற முறை வந்தபோது கூட பேஸ்ட் ஒட்டி எடுத்தோம்.  இப்போது ஸ்கேனர் வைத்திருக்கிறோம்..."

அவரிடம் L A கொடுக்க நைட்ரஸ் ஆக்சைட் கூட வைத்திருக்கிறார்.  இவர் மூலம் இன்னொரு சர்ஜனிடம் சொல்லிதான் என் மகனுக்கு அதே 2016 ல் மாக்சிலோ பேசியல் அறுவை சிகிச்சை செய்தோம்.  மகன் இப்போது நலம்,

நான்தான் சற்று தூரம் சென்றும் கூட அவரிடம் சென்றிருப்பதாய் பெருமை அடித்துக் கொள்ள நினைத்தேன்.  என் அருகில் காத்திருந்தவர்கள் வேலூர் மற்றும் ஆரணியிலிருந்து வந்திருந்தார்கள். 

ட்ரீட்மெண்ட் முடிந்து இவர்கள் தரும் ஹிஸ்டரி ஃபைல் மற்றும் C D வைத்து நாம் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம்தான்.  சிலர் அப்படியும் பார்ப்பார்கள். நான் இவரிடமே சென்று விட்டேன்.  முடி திருத்துபவர், மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப், ஆட்டோக்காரர்  என்று எல்லாவற்றுக்குமே எனக்கு ஆஸ்தான பழக்கம் இருக்கிறது.

நான் இந்த முறை முதலில் அவரிடம் (பயத்துடன்) தெரிந்து கொள்ள விரும்பியது ஓரல் கேன்ஸர் சமாச்சாரம்.  "சேச்சே..   அப்படி எல்லாம் ஏன் சார் நினைக்கறீங்க..   பயப்பட ஒன்றுமில்லை.." என்றார்.

அப்புறம் ஒரு மாதமாய் ட்ரீட்மெண்ட் சென்று கொண்டிருக்கிறது.  பாஸையும் நைஸாய் சேர்த்து விட்டேன்.  அவருக்கும் பல பிரச்னைகள் பற்களில் இருந்தாலும் மருத்துவரிடம் காட்ட மறுத்துக் கொண்டிருந்தார்.  அங்கு உள்ளூரில் இருந்த என் தங்கை கிளினிக்கில் என்னைப் பார்க்க வந்து அவரும் பற்களை சீர் படுத்தும் லிஸ்ட்டில் இணைந்தார்.   இப்படி ஆட்களை சேர்த்து விட்டும் பீஸை குறைத்தாரா என்றால், ஊ..ஹூம்.

யார் முதலில் வந்தாலும் சுழலும் எக்ஸ் ரே மெஷினில் பற்களை அரைவட்டமாக சுழற்றி எக்ஸ்ரே எடுத்து விடுவார்கள்.  ட்ரீட்மெண்ட் சமயத்தில் சில சிறு அல்லது ஆழ் நிலை படம் வேண்டுமென்றால் அதே சேரிலேயே உட்கார்த்தி எக்ஸ்ரே எடுத்து விடுவார்கள்.

RCT அல்லது Filling என்று எந்த ட்ரீட்மெண்ட் செய்தாலும் வீட்டுக்கு வந்ததும் அன்று இரவே அல்லது மறுநாளோ இரண்டு மூன்று முறை அலைபேசி நிலவரம் விசாரித்துக் கொள்வார்கள்.

இப்போது என்ன பிரச்னை என்றால் இந்த மீள் சிகிச்சை தொடக்கத்தில்  வலித்துக் கொண்டிருந்த பல்லில் RCT செய்தபோதும் அதற்குப் பின்னும் கூட வலிக்கவில்லை.  அதிகம் வலிக்காத இடதுபக்க பல்லில் அதே RCT செய்ததும் இப்போது வலிப்பது சற்றே கவலையைத் தருகிறது.    மருத்துவர் பாரதியின் கவலை தோய்ந்த விசாரிப்பும் இன்னும் கவலையைக் கூட்டுகிறது.  பார்ப்போம்.

இந்த ட்ரீட்மெண்ட் முடித்து வீடு திரும்பும் வழியில்தான் ஆங்காங்கே வெவ்வேறு உணவகங்களில் நிறுத்தி டிஃபன் சாப்பிட்டு விட்டு வந்து விடுவது!

அடுத்த இரண்டு விசிட்டுகளில் அந்தக் கவலை மறைந்ததது.  பயப்பட்டது போல இல்லை என்றானது.  நிம்மதி.  ஆனால் இடது கடைவாய்ப் பல்லை எடுப்பதற்கு நாள் குறித்தார்கள்.

===========================================================================================================

சோ தர்மனின் பேஸ்புக் பதிவு:
“நேற்று சாயங்காலம் இலேசான பல்வலி. டாக்டருக்கு போன்பண்ணினேன். க்ளினிக் திறப்பதில்லை என்றும் மாத்திரை மெசேஜ் பண்ணுகிறேன் வாங்கி சாப்பிடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் வேதனை குறையும் என்றார்.

சரியாக இரவு ஏழு மணிக்கு முகமூடி ஹெல்மெட் சகிதம் மெடிக்கலுக்குப் புறப்பட்டேன். காவல்துறை விசாரணையில் நான் சொன்ன காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. டாக்டரின் மெசேஜ் காட்டினேன். கண்டு கொள்ளாததோடு என் டூ வீலரைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதோடு வீட்டுக்கு நடந்து போ காலையில் போலீஸ்டேஷனில் வந்து வண்டியைப் பெற்றுக்கொள் என்று ஒருமையில் தான் பேச்சு. அவ்வளவு பேரும்‌ சின்னப்பையன்கள்.

ஹோம்கார்டுகள் நாலைந்து பேர்.

கொஞ்சநேரம் நின்றேன் அறிமுகமான உயர் போலீஸ் ஆபிசருக்கு போன்பண்ணினேன். போனை போலீஸ்காரரிடம்‌ கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன்.அடுத்த நிமிஷமே போனை என்னிடம் கொடுத்தவர் ரைட்டர்னு‌ முதல்லயே சொல்ல வேண்டியதுதானே சார் என்றார்.

அதெல்லாம் வெளியிலே சொல்ல வேண்டிய விஷயமில்லையே‌ என்றேன்.

அடுத்து கேட்டாரே பார்க்கலாம் ஒரு கேள்வி வெட்கப்பட்டுப் போனேன்.

"கடைசியாக எந்த ஸ்டேஷன்ல சார் வேலை பாத்தீக"

"விளாத்தி குளத்தில் வேலைபார்த்து‌ ரிடையர்டு" என்றேன்.

பவ்யமாக வண்டிச் சாவியை கொடுத்த போலீசிடம் என்
செல்போன் படங்களை காட்டினேன். தமிழக முதல்வர்கள் கலைஞர், அம்மா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர், நெல்லை மாவட்ட கலெக்டர், கோயம்புத்தூர் காவல்துறை உதவி ஆணையாளர் ஆகியோர் எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிற புகைப்படங்களைப் பார்த்தவர் அசந்து விட்டார்.

"எல்லாமே வீரதீரச்செயலுக்குத்தான்" என்றேன்.

"அப்படியா சார்" என்று வாயைப் பிளந்தவர்,

"உங்கள் பேர் என்னசார்"

"என் கவுண்டர் எமதர்மன்" என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி வந்துவிட்டேன்.

தமிழ்நாட்டில் ரைட்டர் என்றால் ஒன்று பத்திரம் எழுதுபவர் இல்லையென்றால் போலீஸ் ரைட்டர். எழுத்தாளன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

கேரளாவில் புகழ்பெற்ற திருடன் மணியன் பிள்ளை. இவனுடைய சுய சரிதை புத்தகமாக வந்திருக்கிறது. அதில் ஒரு இடம். மணியன்பிள்ளை கொள்ளையடித்து விட்டு நடுராத்திரியில் வருகிறான். காவல்துறை விசாரிக்கிறது. அவன்சொல்கிறான்.

"எழுத்தாளர் பஷீர் ஐயாவைப் பார்த்துவிட்டு வருகிறேன். பேசிக்கொண்டிருந்தேன் நேரமாகிவிட்டது"

‌அடுத்த நொடி காவலர்கள் அவனிடம் பஷீரின் நலன் விசாரித்துவிட்டு அவனை போகச் சொல்கிறார்கள்"

தமிழ்நாட்டில் இவ்வளவு கேவலத்துக்கு காரணம் தமிழ்நாட்டை எழுத்தாளர்களும் நடிகர்களும் ஆண்டதுதான். வேறென்ன காரணம் இருக்க முடியும்.”

இணையத்தில் இருந்து எடுத்தது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடியாததை எல்லாம்
முத்து முத்தான வார்த்தைகளில்
சொல்வதுதான்
வாழ்க்கை தத்துவம்!

===============================================================================================================

நான் சுவாசிக்கும் சிவாஜி - ஒய்.ஜி. மகேந்திரா :


.... பாட்டு இல்லாமல், படங்கள் எடுப்பது பற்றி, இப்போது, பெருமையாக பேசுகின்றனர். ஆனால், கிட்டத்தட்ட, 59 ஆண்டுகளுக்கு முன்பே, வீணை எஸ்.பாலசந்தர் - சிவாஜி இருவரும் இணைந்து, பாடலே இல்லாத, அந்த நாள் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து, புரட்சி செய்திருக்கின்றனர்.
எஸ்.பாலசந்தரின் மகன் ராமன், என் சகோதரர் ராஜேந்திராவுடன் ஒன்றாக படித்தவர். எஸ்.பாலசந்தர் எங்கள் குடும்ப நண்பர். ஒரு முறை, அவர் வீட்டில், நாங்கள் டின்னர் சாப்பிட்டு கொண்டிருந்த போது, 'சிவாஜி போன்ற, திறமை உள்ள நடிகரால் தான், அந்த நாள் மாதிரியான, படத்தில் நடிக்க முடியும்.
ஒரு காட்சியில், வீட்டின் சொந்தக்காரரின் மனைவியை, பூங்காவில் சந்தித்து, காதலிப்பது மாதிரி நடித்து, ஏமாற்றுவார். தெரு விளக்கு வெளிச்சத்தில் தெரியும் முகத்தில், ஒரு கண்ணில் காதல், வெளிச்சம் படாத கண்ணில் ஏமாற்றுகிற வஞ்சம்... அவருடைய கேரக்டர் புரிவதற்காக வைக்கப்பட்ட அமர்க்களமான, 'ஷாட்' இது. இன்றைக்கும், அந்த நாள் படம் பாருங்க, நான் சொல்வதை நீங்களும், ரசித்து, உணர முடியும். நல்ல திறமையான இயக்குனர்களால், நன்கு கையாளப் பட்டால், 'சிவாஜி ஹாலிவுட் நடிகர்களுக்கு சவாலாக இருப்பார்...' என்று கூறினார்.
....அந்த நாள் படத்தில் தேசத்துரோகி, திரும்பிபார் படத்தில் வெறுக்கக்கூடிய காமுகன், ரங்கோன் ராதாவில் தகாத உறவுக்காக, மனைவியை பைத்தியமாக்கும் கெட்டவன், கூண்டுக்கிளி படத்தில், ஸ்டைலிஷ் வில்லன், பெண்ணின் பெருமை படத்தில், கொடூர வில்லனாக நடித்திருப்பார் சிவாஜி......
..........*சிவாஜி நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூல் பெற்று, சாதனை படைத்த படம், சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்த திரிசூலம். திரிசூலம் படத்தின் சாதனையை, எம்.ஜி.ஆர்., மனதார பாராட்டியதோடு, 'இந்தப்படத்தின் அதிக வசூல் மூலம், அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி, அரசின், மதிய உணவு திட்டத்திற்கு, பெரும் அளவில் உதவியிருக்கிறது...' என்று, சிவாஜிக்கு நன்றி கூறினார்.
நடிகனாக, திரை உலகில், முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் ஹீரோ அந்தஸ்து பெற்று, எதிர்மறை பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கும், தைரியம், மனப்பக்குவம் எத்தனை நடிகர்களுக்கு வரும்! சிவாஜி முழுமையான நடிகர். தன்னுடைய, 'இமேஜ்' என்ன ஆகுமோ என்று அவர் பார்க்கவில்லை, கொடுக்கப்படும் பாத்திரங்களுக்கு, பொருத்தமாக நடித்தார். தொழில் மேல் விருப்பம் உள்ள நடிகர்கள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
...................நெகடிவ் ரோல் பற்றி பேசும் போது, சிவாஜி பிலிம்சின் சொந்தப் படமான புதிய பறவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன் சொந்த படத்தில், கொலைகாரனாக, வில்லனாக தயங்காமல் நடித்தார் சிவாஜி.
ஒரு முக்கியமான ரகசியத்தை மனதிற்குள் அடக்கிக் கொண்டு, குற்ற உணர்வோடு கூடிய சோகத்தை யும், கண்களில் மிரட்சியையும், முதல் சீனிலிருந்து காண்பித்து, நடித்திருப் பார். படத்தின் பிரபல இயக்குனர் தாதா மிராசி, (சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் மற்றும் ரத்த திலகம் படங்களை இயக்கியவர்.) 'என்னுடைய ஹீரோ, மிகச் சிறந்த நடிகர்...' என்று சிவாஜியை பெருமையோடு குறிப்பிடுவார். அந்தப்படத்தில், 'ப்ளாஷ்பேக்' காட்சியில், சிவாஜிக்கு அப்பாவாக நடித்திருப்பார் தாதா மிராசி.
அமெரிக்காவில் இருந்து, மார்த்தா கிரஹாமின், 'மாடர்ன் அமெரிக்கா' நடனக்குழு சென்னைக்கு வந்து, நிகழ்ச்சிகள் நடத்தினர். அந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்த சிவாஜி, 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...' பாடல் காட்சியில், மாடர்ன் அமெரிக்கா நடனத்தை, நினைவில் கொண்டு, சில புதுமையான, நளினமான மூவ்மென்ட்ஸ் களை செய்திருப்பார். அந்த பாடல் காட்சிக்கு, தியேட்டர்களில் பலத்த கரகோஷம் எழும்.
[ தினமலர் - வாரமலர் ]
==============================================================================================

பொக்கிஷம் :


ச்சோ ச்வீட்...

தப்பான லாஜிக்கா இருக்கோ...

சும்மா... ஒரு சுவாரஸ்யத்துக்கு...







90 கருத்துகள்:

  1. பல் புராணம் OK. என்னுடைய கவலை பற்கள் உடைவது. சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். திடீரென்று கல் தட்டுப்படும். பார்த்தால் பல். டாக்டரிடம் செல்லவில்லை. இது வரை 10 பல்லாவது உடைந்திருக்கும்.
    சிவாஜி ஒருமுறை ஓவர் ஆக்ட் என்ற குற்றச்சாட்டுக்கு "ஓவர் ஆக்ட்  தான் செய்தேன் என்பதெல்லாம் இல்லை. பெரும்பான்மை மக்கள் விரும்பியதைத் தான் நான் செய்தேன்." என்று சொன்னதாக அறிவு.

    முடியாததைச் சொல்வது தத்துவம் என்றால் முடிந்ததை சொல்வது எது? 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி பல் உடைந்து வயிற்றுக்குள் செல்வது ஆபத்தில்லையோ...   கேல்சியம் குறைபாடு?  அலலது மருத்துவரிடம் சென்று எடுத்து விடுவதே நல்லது.  சிவாஜி டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட். 
       
      //முடியாததைச் சொல்வது தத்துவம் என்றால் முடிந்ததை சொல்வது எது? //

      இயல்பு!

      நீக்கு
    2. முடிந்ததைச் சொல்வது அறிவுரை.

      நீக்கு
    3. அறிவுரை சொல்வது எல்லோர்க்கும் இயல்பு!

      நீக்கு
  2. நலம் பல நல்கும் நன்னாளாய் அமையட்டும் இந்நாள்..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் நல்ல நாளாக பிறந்து சிறப்பிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  5. நடிகர் திலகம் பற்றிய செய்திகள் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  6. நலம் நாடும் நன்னெஞ்சங்களின் அன்புக்காக இந்தக் குறிப்பு..

    செவ்வாய் சிறுகதைக்கான தீர்ப்பு அன்றைய கருத்துரையில் வெளியாகி இருக்கின்றது..

    எதற்கும் இருக்கட்டும் என்று கதையின் நிறைவைச் சொல்லாமல் இருந்தேன்..

    எனக்கும் இப்போது நிம்மதியாயிற்று..

    ஆனாலும் அது ஓடி ஒளிந்து கொண்டது..


    அன்பின் ஸ்ரீராம் தான் அதை விடுவித்திருக்கின்றார்.. நன்றி....

    இரண்டு நாட்களாக
    உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..

    அனைவருக்கும் நன்றி..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      உங்கள் கதைக்கான தீர்ப்பை கண்டு மகிழ்ந்து அதற்கு ஒரு பதில் கருத்துரை நேற்றைய பதிவில் தந்துள்ளேன். கவனித்தீர்களா? அது உங்கள் கதை பகுதியில் தந்திருக்க வேண்டும். அவசரத்தில் இடம் மாற்றி தந்து விட்டேன். மன்னிக்கவும். நன்றி.

      உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும். தங்களுக்கு விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அந்த உடல் வேதனைக்கு அலோபதி மாத்திரைகள் எதுவுமே எடுப்பதில்லையா?

      நீக்கு
  7. கடந்த ஆண்டுகளில் வெளியானது போல -

    வருடாந்திரத் திறனாய்வு - என்ற ஒன்று எப்போது வெளியாகும்?..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    முதல் பதிவாக பல் பதிவு படித்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். எனக்குள்ள பல பிரச்சனைகளில் இந்த பல் பிரச்சனையும் ஒன்று. அதுவும் பத்து வருடமாக உயிரை எடுக்காமல் எடுத்து வருகிறது. பல் மருத்துவரிடம் செல்ல பயம். (இல்லாவிட்டால் எந்த ஒரு மருத்துவரிடமும் சென்று உடல்நிலையை காட்டி வியாதி இன்னதென்று தெரிந்து கொண்டு விரைவாக குணப்படுத்தி விடுவாயாக்கும்... என மனசாட்சி இடித்துரைக்கிறது.) உண்மை.. எதற்குமே மருத்துவரிடம் செல்ல பயம்.. நாராயணா முருகா என கடவுளை துணைக்கு அழைத்தே காலத்தை தள்ளுகிறேன். என்ன செய்வது? காலம் என்ன பதிலை வைத்திருக்கிறதோ ?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் எல்லோருக்குமே பல் மருத்துவரிடம் செல்ல அந்த ஆரம்ப கால பயம் இருக்கிறது.  இப்போதுதான் ஒவ்வொருவராக அந்த பயங்களிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார்கள்.  

      நீக்கு
  9. இன்றைய பதிவின் தலைப்பு கவிநயம்..

    பல்பயத்தோடு
    பல்லின் பயமும்!..

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த ரைட்டர் குழறுபடிகளைத் தவிர்க்க
    என் அப்பார்ட்மெண்ட் வாசல் பக்கம் 'Jeevee,
    Journalist' என்று பெயர் பலகை வைத்திருக்கிறேன்.
    ரைட்டரை விட ஜர்னலிஸ்ட் உசத்தி போலிருக்கு. பத்திரிகையாளன் என்ற தற்கால மதிப்பீட்டில் அந்த பிர்மாண்ட குடியிருப்பில்
    மரியாதையும் கூட.
    (பெயர் பலகையை ஸ்ரீராம் பார்த்திருக்கலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜர்னலிஸ்ட் என்றால் பாதி மக்கள் பார்வையில் கோ பட ஹீரோ போலவும், ஜூவி, நக்கீரன் நிருபர்கள் போலவும்தான் மனதில் பதிவர்கள்!

      நீக்கு
  12. அது என்ன பெரிய கையெழுத்து! (குமுதமோ?). பெரியவங்க
    கையெழுத்து என்று போட்டிருக்கலாம்.

    நெல்லை லெவலுக்கு நேருஜிலாம் பெரியவங்களாய்
    இல்லாமல் இருக்கலாம்.
    இவ்வளவு காலம் கழித்து ஸ்ரீராம் இப்படிலாம் கையெழுத்து வேட்டை நடத்துவார் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையெழுத்தை வைத்து அவரவர் குணாதிசயங்களை சொல்வார்களாம்.  இப்போது இந்த கையெழுத்துகளுக்கு காலம் கடந்து விட்டது!

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. ஒய்ஜி அனுபவித்துப் பாராடியிருக்கிறார்.
    ஏதோ கிள்ளுக்கீரை போல ஜிவாஜி, ஜிவாஜி
    என்று கிண்டலடிப்பவர்களுக்குப் புரிந்தால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அவர் கட்சி. பாராட்டுவது நம் கட்சி!

      நீக்கு
    2. ஹாஹா,. நான் ஒருத்தி சொன்னதால்/சொல்வதால் ஜிவாஜியின் மதிப்புக் குறைந்து விடுமா என்ன? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து, அபிப்பிராயம், ரசனை.

      நீக்கு
    3. ஸ்ரீராம், ஒய்.ஜி. சொன்னது ஜிவாஜி இருக்கும்போதே வந்துவிட்ட நினைவு. படிச்சிருக்கேன் ஏற்கெனவே.

      நீக்கு
  15. 'ச்சோ ச்வீட்'
    'தப்பான லாஜிக்கா இருக்கோ'

    ---- தலைப்புகளை இண்டர்
    சேன்ஜ் பண்ணிப் பாருங்கோ.. நம்ம ரசனையே சேன்ஜ் ஆகலாம்.
    அப்பவும் வேலைக்காகலேனா
    ஒண்ணும் செய்யறத்திக்கில்லை தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்..    ஒன்றும் ப்ரமாதமில்லை. எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போடலாம்!

      நீக்கு
  16. பல் மகாத்மியம்லாம்
    ரொம்ப பெருமை வாய்ந்தது.

    ராத்திரி படுக்கப் போகறச்சே கொஞ்சலா எடுத்து அலம்பி நீரில் மூழ்கிற மாதிரி ஒரு கிண்ணத்தில் இட்டு வைப்பதும் ---

    காலையில் எழுந்ததும்
    குழந்தைக்கு பல் தேய்த்து விடுவது போல செல்லமாக டூத் பிரஷ்ஷில் பேஸ்ட் இட்டு
    விரல்கள் இடுக்ல் லாவகமாகப் பிடித்து
    தேய்த்து விட்டு அலம்பி வாயில் பொருத்திக் கொண்டு அன்றைய வேலைகளைத் துவங்க ஆயத்தமாவதும் --

    பல் செட் அணிந்தவர்களிடம் கேட்டால் தெரியும்..

    பல் வரிசை மகாத்மியம் ரொம்ப ரொம்ப புகழ் வாய்ந்ததுங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..   அது ரொம்ப சிரமம் ஜீவி ஸார்..   பல்செட் போட்டுக்கொண்டு மெல்ல முடியுமோ?  பயனுண்டோ?

      நீக்கு
  17. இன்றைய பதிவின் தலைப்பு கவிநயம்..

    பல்பயத்தோடு
    பல்லின் பயமும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி... மறுபடி கவனித்திருப்பதற்கு நன்றி.

      நீக்கு
  18. வெகு நாட்களாக தள்ளிப் போட்ட பல் வைத்தியத்தை பார்த்து விட்டது நல்லது. வாழ்க்கைதுணை, மற்றும் ,தங்கை பார்த்து கொண்டது நல்லது.
    //இப்படி ஆட்களை சேர்த்து விட்டும் பீஸை குறைத்தாரா என்றால், ஊ..ஹூம்.//
    நல்லா நினைத்தீர்கள் போங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்கள் தள்ளிப் போட்டதற்கு காரணம் கொஞ்சம் இடைவெளி விழுந்தால் மறுபடி பயம் வந்து விடுகிறது!  அதுதான்.  கொரோனா காலங்கள் வேறு!

      நீக்கு
  19. இணையத்தில் இருந்து எடுத்ததும் பல் சம்பந்தமாக இருக்கே!
    வாழ்க்கை தத்துவம் நன்றாக இருக்கிறது.

    சிவாஜி பகிர்வு, பொக்கிஷபகிர்வு எல்லாம் புதுசு இப்போதுதான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்து வைத்திருந்தது பொருந்திப் போகவும் போட்டு விட்டேன்!

      நீக்கு
  20. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  21. ஒவ்வொருத்தருக்கும் இந்த பல் வைத்தியப்புராணம் மிகப்பெரியது. என் சினேகிதியின் கணவருக்கு நடு இர்வில் மிக அதிகமான பல் வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வலி என்பதால் ஏதாவது மருத்துவ உதவி பெற நினைத்து பழகிய மருத்துவரின் வீடு சென்றால், அங்கே மருத்துவர் பார்த்து இது ' ஹார் அட்டாக் ' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் சரிந்து விழுந்து இறந்து விட்டார். இதயத்தாக்குதலுக்கு பல் வலியும் முன்னோடியாக இருக்குமென்பது அப்போது தான் தெரிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ....   இன்னும் பயமுறுத்துகிறீர்களே....  பல்வலி வந்தால் ஹார்ட் அட்டாக்கா...  அம்மாடி..

      நீக்கு
    2. மனோ அக்கா ஆஆஆஆஆஅ இப்படியும் இருக்கா....நிஜமாகவே பயமா இருக்கே

      கீதா

      நீக்கு
  22. சிவாஜி பற்றிய பதிவு மிக அருமை! பாச மலர், பார்த்தால் பசி தீரும், வீர பாண்டிய கட்டபொம்மன், உயர்ந்த மனிதன், போன்ற கருப்பு வெள்ளைப்படங்களை மறக்க முடியுமா? பின்னாட்களில் எழுபதுகளில் ஓவர் ஆக்டிங் செய்து நடித்த சிவாஜியைத்தான் ரசிக்க முடிந்ததில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரபாண்டிய கட்டபொம்மன் கலர்ப்படம் அல்லவோ!

      நீக்கு
    2. ​பின்னாட்களில் ஓரிரு நல்ல படங்கள் வந்ததுண்டு. முதல் மரியாதை, தேவர் மகன்,

      நீக்கு
  23. 'பல்'லாண்டு வாழ்க...

    தத்துவத்தில் தத்துவம்...!

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் எங்க வீட்டிலும் ஒருவர் அப்பப்ப பல் மருத்துவரிடம் போய் அதை ஏன் கேக்கறீங்க.ஸ்வீட் சாப்பிட்டு சாப்பிடு பல்லில் ஒட்டும் ஸ்வீட் எல்லாம் ....அப்பப்ப பல்லு வலி, பல்லு உடைஞ்சுருச்ஹ்கு, பல்லுல என்னவோ பண்ணுது அதனால தலை வரை நெர்வ் எல்லாம் வலிக்குது, ட்ரப்ளிங்க் நு ...வீட்டுல டென்ஷன் சிச்சுவேஷன் வரும்......பல் டாக்டருக்கு ஒரே கோளுதான்....சென்ற சில வருடங்களில் ஏகப்பட்ட செலவு..(அது பத்தி இங்க நான் சொல்ல முடியாது!!!!!!)..இதோ போன வாரம் கூட சென்னைக்குப் போய் வந்து..அதுவரை ஸ்வீட் சாப்பிட வேண்டாம்னு சொன்னாலும் பிரச்சனை வரும்....

    .இப்பத்தான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன்னு ஹிஹிஹி பார்ப்போம் எத்தனை நாளுக்குன்னு...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஆமாம் ஸ்ரீராம் பல் வைத்தியம் ரொம்ப காஸ்ட்லி...

    எங்கள் வீட்டில் இரு பல் மருத்துவர்கள் இருக்காங்க....வளர்ந்து வரும் மருத்துவர்கள். தனியாகச் செய்யவில்லை. க்ளினிக்கில் மருத்துவம் பார்க்கிறாங்க. அதில் ஒருவர் குழந்தைகள் பல் வைத்தியம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் எம்பிபிஎஸ் எம்பிபிஎஸ்னுட்டு எம்பாம பல்மருத்துவம் பார்த்தா பல்கி வளமா வாழலாம் போல..

      நீக்கு
  26. நாம் சாதாரணமாக கவலைப்படாமல் வைத்திருக்கும் பற்களைக் கூட ஓரமாக டீகே ஆக ஆரம்பித்திருக்கிறது, தேய்ந்திருக்கிறது என்றெல்லாம் சொல்லி ஒவ்வொன்றாக சாகடித்து செயற்கைப் பல் வைக்க சிபாரிசு செய்வார்களோ என்று. //

    இது பாதி உண்மைதான் ஸ்ரீராம். செயற்கைப் பல் வைக்கச் சொல்லுதல். எனவே தெரிந்த மருத்துவரிடம் செல்லுதல் நலல்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா பாருங்க..   அவரும் அவங்கள்ல ஒருத்தர்தானே!

      நீக்கு
  27. நான்தான் சற்று தூரம் சென்றும் கூட அவரிடம் சென்றிருப்பதாய் பெருமை அடித்துக் கொள்ள நினைத்தேன். //

    ஹாஹாஹாஹா..

    என் அருகில் காத்திருந்தவர்கள் வேலூர் மற்றும் ஆரணியிலிருந்து வந்திருந்தார்கள். //

    அப்ப நல்ல தரமான 'பல்' மருத்துவர்னு சொல்லுங்க!!!!

    ஸ்‌ரீராம் ஆஸ்தான மருத்துவர் நல்ல விஷயம் . இல்லைனா ஒவ்வொருத்தர்கிட்டயும் நம்ம வரலாற்றை என்னதான் ஃபைல் இருந்தாலும் சொல்லித் தீர்க்கணும்!!!!!

    அதனாலேயேதான் நம்ம வீட்டாள் சென்னைக்குப் போய் போய் வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  ஆஸ்தான தான் எனக்கு பல விஷயங்களிலும்.  இப்போது கூட ஒரு ஆஸ்தான வரப்போகிறார்... டிகிடிகி....

      நீக்கு
  28. இப்படி ஆட்களை சேர்த்து விட்டும் பீஸை குறைத்தாரா என்றால், ஊ..ஹூம்.//

    ஹாஹாஹா

    ஸ்ரீராம் குடும்பமே போயாச்சு போல!!!! ம்ம்ம்ம் மருத்துவர்கள் மட்டும் ஃபீசை குறைப்பதில்லை ஸ்ரீராம்...அனுபவம் எனக்கும் உண்டு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு லட்சம் வரை பீஸ் வந்த பிறகு ஐநூறு ரூபாய் குறைத்துக் கொள்வார்!

      நீக்கு
  29. RCT அல்லது Filling என்று எந்த ட்ரீட்மெண்ட் செய்தாலும் வீட்டுக்கு வந்ததும் அன்று இரவே அல்லது மறுநாளோ இரண்டு மூன்று முறை அலைபேசி நிலவரம் விசாரித்துக் கொள்வார்கள்.//

    ஃபீஸும் அதிகமாச்சே ஸ்ரீராம் அப்ப இந்த சேவை அதில் சேர்த்திதானே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி.. வாங்க ரா காசுக்கு வீடியோ காலிலேயே வரலாம். வசதியாய் இருக்கும்.

      நீக்கு
    2. ஆமாம் நல்ல ஐடியா!!! டாக்டர்கிட்ட சொல்லிப் பாருங்க!!! உங்க பல்லு பத்திரம்!!!!

      கீதா

      நீக்கு
    3. சிரிச்ச முகத்தை சீறும் முகமாய் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை!

      நீக்கு
  30. ஹப்பா நல்ல காலம் சமாதானம்....ஆனால் இத்தனை நாள் உங்களோடு உள்ளுக்குள்ளே இருந்து உறவாடிய ஒன்று போகப் போகிறதே!!! எடுத்தாச்சோ? ஓ அது அப்புறம் தான் வருமோ அடுத்த வியாழனில்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. தமிழ்நாட்டில் ரைட்டர் என்றால் ஒன்று பத்திரம் எழுதுபவர் இல்லையென்றால் போலீஸ் ரைட்டர். எழுத்தாளன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது. //

    நினைத்தேன் வாசித்து வரும் போது ரைட்டர் என்றால் போலீஸ் ரைட்டர் என்பதாகத்தான் நினைச்சிருப்பாங்க என்று.

    கடைசில வரி நச்.

    சுவாரசியமான விஷயம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர்க்கு அவரவர் சம்பந்தப்பட்ட விஷயம்தான் நினைவுக்கு வரும் போல...!

      நீக்கு
  32. கவிதை - ஹாஹாஹா அதானே!!!!! மிகவும் ரசித்தேன் அதுவும் நடு வரியை முத்து முத்தான வார்த்தைகளில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாவே! தத்துவம் எல்லாம் சொல்றதுக்கு நல்லாருக்கு ஆனா நடைமுறைல பார்த்தாதானே தெரியும்!! அவங்கவங்க கஷ்டம் அந்த தத்துவம் சொல்றவங்களுக்கு!!

      இது தப்பா சரியா இங்க சொல்றதுன்னு தெரியலை ஸ்ரீராம்...ஆனால் இது என் தனிப்பட்ட கருத்து.

      சாமியார்கள் எல்லாம் நிறைய தத்துவம் சொல்றாங்கல்ல....அதை எல்லாம் என் தங்கைகள் ரெண்டு பேர் எங்கிட்ட சொல்வாங்க....ஃபாலோவர்ஸ் வேற...நான் சொல்வேன்...அடப் போங்கப்பா.....அவங்களுக்கு என்ன சம்சார சாகரமா குடும்பமா பிள்ளை குட்டிகளா....நினைச்சா கார் வருது...சேவை செய்ய எக்கச்சக்க ஆட்கள்....பணத்தை நிர்வகிக்க ஆட்கள்...சுகமான வாழ்க்கை...அவங்க உடைக்கு பெரிய அளவுல மரியாதை வேற...யாரும் அவங்க விஷயங்கள்ல கை வைக்க முடியாது!!

      .நம்மளை மாதிரி அடுத்த வேளைக்கு என்ன சமைக்கணும்னு கவலை இருக்கா என்ன? நாளைக்கு என்ன வாங்கணும்...பட்ஜெட் போடற பிரச்சனை இருக்கா என்ன? ன்னு !!!!!!!!!!!!!!!!!!!!!!!

      சொல்வது எளிது. சம்சாரத்தில் இருந்து வாழ்க்கையை எதிர்கொள்வது தான் பெரிய சாலஞ்ச்! நமக்குக் கிடைக்கும் அனுபவப் பாடம், தத்துவம் போதும்னு

      கீதா

      நீக்கு
    2. எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும் பொருந்தி விடுகிறதா என்ன..   அன்றாட வாழ்க்கையின் வழக்கமான நிகழ்வுகளுக்கு தத்துவம்தான் சரிப்பட்டு வருமா...   ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு அனுபவத்தில் சில ததத்துவங்கள் ஒத்து வரலாம்!

      நீக்கு
  33. சிவாஜி வில்லனாகவும் நடித்திருக்கிறார்ன்றது புதிய விஷயம் எனக்கு. ரொம்பவே சுவாரசியமான விஷயம் ஒய் ஜி மகேந்திரா சொல்லியிருக்கும் விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூண்டுக்கிளியில் எம் ஜி ஆருக்கு வில்லன்.  குலமகள் ராதை, ரங்கோன் ராதா போன்ற படங்களில் நெகட்டிவ் ரோல்.  புதிய பறவையே கூட அப்படித்தானே...

      நீக்கு
  34. ஜவஹர்லால் நேரு, கென்னடி கையெழுத்துகள் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது.

    தோட்டக்காரன் ஜோக்கிற்கு அதற்கு அடுத்த ஜோக் தலைப்பு பொருந்துமோ?

    பாதில எடுத்த கஸ்டமர் சண்டை போட மாட்டாரோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. கருத்து காணாமப் போச்சு...ஸ்ரீராம்...பிடிச்சு இட்டாந்துருங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. போலீஸ் ரைட்டர் ...
    ஹா...ஹா ..சிரித்துவிட்டேன்.

    ஜோக்ஸ் 'குப்பை மரங்கள் ' தபப்பியது :))

    பதிலளிநீக்கு
  37. பல்வலி, கேன்சர் - பயமுறுத்திவிட்டீர்கள். எனக்கும் பல்வலி இருக்கிறது. ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறேன். விரைவில் சென்று பெரிய மொய் எழுதிவிட்டு வந்துவிடவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  38. சிவாஜி மிகச்சிறந்த நடிகர். ஆனால் ஒரு கலைஞன் தன் உடலில் வெகுவாக அக்கறை செலுத்தவேண்டும். அதைச் செய்யாமல், பூசனிக்காய் சைசுக்கு உடம்பை ஆக்கிக்கொண்டு, பதின்ம வயதுப் பாத்திரங்களில் நடித்து நம்மை வேதனையுறச் செய்திருக்கவேண்டாம். மிகத் திறமையானவர் சிவாஜி, சந்தேகமில்லை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!