வெள்ளி, 6 ஜனவரி, 2023

வெள்ளி வீடியோ : தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்..

 உளுந்தூர்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு டி ஆர் பாப்பா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடல். 'தேனினும் இனியவள் சிந்தையில் மலர்பவள்' பாடல் இன்று தனிப்பாடலாய்...

தேனினும் இனியவள் சிந்தையில் உறைபவள் 
செந்தாமரை மலராள் 
வளர் செல்வம் எல்லாம் தருவாள் - தேவி 

யானைகள் புடைசூழ அன்னநடை பயில்வாள் 
அழகின் உயர் எல்லை 
அவள் அருள்பெறின் எதிர் இல்லை 

வானமும் வையமும் வந்திடும் ஒன்றிடும் 
வாய்மலர் மலர்ந்து விட்டால் 
கானமும் கவிதையும் கலைகளும் பொங்கிடும் 
கண்மலர் திறந்துவிட்டால் -கடை 

கூனலும் நிமிர்ந்திடும் கோனென உயர்ந்திடும் 
மானவள் நினைத்துவிட்டால் 
தானமும் மானமும் தழைத்திடும் நிலைத்திடும் 
தாயவள்  சிரித்து விட்டால் 

மகிழ்ச்சியைத் தருபவள் தனலஷ்மி 
அயர்ச்சியைக் களைபவள் ஜெயலஷ்மி
வளர்ச்சியை அருள்பவள் வரலஷ்மி   
வான்புகழ் வளர்ப்பவள் கெஜலஷ்மி
வெற்றி விளைப்பவள் வீர லஷ்மி   
பற்றி நிற்பவள் விஜயலஷ்மி
சக்தி கொடுப்பவள் தான்ய லஷ்மி   
சாந்தி தருபவள் சந்தானலஷ்மி

===============================================================================================

1964 ல் வெளிவந்த கருப்பு பணம் படத்துக்கான கதை கண்ணதாசனுடையது.  பாடல்களும் அவர்தான்.  கதை வசனம் வலம்புரி சோமநாதன்.  இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.

இந்தப் படத்தில் டி எஸ் பாலையா, கண்ணதாசன் ஆகியோர் நடித்திருக்க, இன்றைய பாடல் காட்சியில் கண்ணதாசனே தோன்றி வாயசைத்திருக்கிறார்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

இருட்டில் மறைந்து கொள்ள
விளக்கணைப்பார் சிலர்
கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள
விளக்கணைப்பார் சிலர்
கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார்

நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்
அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்
அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம்
பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம்
பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம்

தாயகம் காப்போரின் தாள் பணிவோம்
யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம்
யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

36 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. முதல் பக்திப் பாடல் சீர்காழி அவர்களின் கம்பீரமான குரலில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இன்றும் பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன். படம் இதுவரை பார்த்ததில்லை என நினைக்கிறேன். இந்தப்படத்தின் விபரமும், அதைப்பற்றிய தகவலுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டும் பிரமாதம். முன்னதில் சீர்காழியின் dedication, பின்னதில் பாடலின் பொருட்செறிவு என்று பரவசப்படுத்துபவை.

    'வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை
    நீங்கி, வரவேண்டும் திரு நாட்டில் பொதுவுடமை' என்ற வரிகள் என் இளமை காலத்து இலட்சியமாக இருந்தது.
    அதற்காக சொந்த வாழ்க்கையின் அர்ப்பணிப்பு எக்கச்சக்கம். பிற்காலத்தில் தனியுடமை என்பது அரசியல்வாதிகளின் பொருள் குவிப்பு சூட்ல்சுமம் என்று மாறிய சூழ்நி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறிய சூழ் நிலையில் இலட்சியங்கள் நீர்த்துப் போயின. ஆனாலும் சொந்த வாழ்க்கையின் அறிவு தீட்சண்யத்திற்கு இக்கோட்பாடுகள் பெரும் பங்காற்றியதை மறக்கவே முடியாது.
      திராவிட புதைகுழிச் சேற்றில் விழுந்து விடாமலும் தடுத்தாட்கொண்டது.

      நீக்கு
  4. இரண்டு பாடல்களுமே அருமை. முதலாவது பக்தி என்றால் இரண்டாவது தத்துவம் .

    .'இங்கு இல்லாமை நிலை வேண்டும் ' பாடல் வந்து பல வருடங்கள் ஆகியும் நமது நாடுகள் இதை அடையவில்லையே .

    பதிலளிநீக்கு
  5. இரண்டும் கேட்டு இரசித்த பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  6. இந்த நாள் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. பதிவில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களுமே முத்தானவை..

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  8. // எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.. //

    அரசியல் வாதிகளின் பிள்ளைகள் - எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //,பிள்ளைகள்//--- கர்ர்ர்ர்ர்.... அரசியல்வாதிகளின் தலைமுறைகள். னு உடனே மாற்றுங்க. ஓசி டிக்கெட்டுகளின் கொள்ளுப்பேரன்களே 20,000 கோடிகளுக்குச் சொந்தக்காரங்க

      நீக்கு
    2. நெல்லை.. நேற்று ஆளைக் காணோம். இன்றும்...

      நீக்கு
    3. இங்கே வந்திருந்தார்.

      நீக்கு
  9. // இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.. //

    அப்படி ஒரு நிலை அமைந்து விடாதபடிக்கு நல்லபடியாக பார்த்துக் கொள்கின்றார்கள்..

    வாழ்க ஜனநாயகம்..
    வளர்க
    பணநாயகம்..

    பதிலளிநீக்கு
  10. // தாயகம் காப்போரின் தாள் பணிவோம்!.. //

    எப்படியெல்லாம் ஆசைப்பட்டிருக்கின்றார் கவியரசர்!..

    பதிலளிநீக்கு
  11. நல்ல பாடல்கள்!
    இரண்டாவது பாடல் எப்போதுமே லக்ஷ்மண் சுருதி குழுவினரால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாடப்பெறுகிறது! சீர்காழியின் இனிமையான குரலில் ஒரு அருமையான‌ பாடல்!!

    பதிலளிநீக்கு
  12. இரண்டுமே மிகவும் இனிமையான பாடல்கள். இரண்டாவது பாடலை எழிதியிருப்பது பாரதிதாசன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. 'தேனினும் இனியவள் சிந்தையில் மலர்பவள்' மலர்பவள் என்பது உறைபவள் என்று வர வேண்டுமோ, ஸ்ரீராம்

    அருமையான பாடல். கேட்டிருக்கிறேன் ஆனால் அதிகம் இல்லை. தொடக்கம் தோடி ராகம்? ஓ ராகமாலிகை.. அடுத்து காம்போதி, மூன்றாவது சட்டெனப் பிடிபடவில்லை, ஸ்ரீராம்.,..

    கீதா

    பதிலளிநீக்கு
  14. எல்லாரும் எல்லாமும் - பாடல் அருமையான வரிகள் மட்டுமல்ல இசையும்....வரிகள் இசையை ஓவர்டேக் செய்வது போன்று!!!

    ரசித்த பாடல்...ஸ்ரீராம் மீண்டும் இங்கு ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி.
    கண்ணதாசன் நடித்து பாடிய பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும். சூரியகாந்தி படத்தில் "பரமசிவன் கழுத்தில்" பாடல், இரத்ததிலகம் படத்தில் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு"
    "எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்" பாடல் நானும் பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!