செவ்வாய், 17 ஜனவரி, 2023

சிறுகதை - யாகம் - துரை செல்வராஜூ

 யாகம்

துரை செல்வராஜூ 
** ** **​​
மாலை மூன்று மணி.. 

கடைத்தெரு தான்..​ 

புதிதாக உருவாகி இருக்கின்றது.. 

முன்பெல்லாம் மாலை நேரத்தில் மட்டும் காய்களும் கீரைகளும் விற்பனையாகின.. ​  ​இப்போது விடியற் காலையிலேயே வியாபாரம்...

தலைவலிக்கு மட்டும் மாத்திரை தைலம் விற்ற கடைகள் ஒழிந்து போய் உயர் நிலை வியாதிகளுக்கான பட்டியல் மருந்தகங்கள்..

பன்னீர் ரோஜாவும் மரிக்கொழுந்தும் மல்லிகையும் மறைந்து போய் ஏழு நாள் ஆனாலும் இதழ் உலராத பொக்கே விற்கும் கடைகள்..

இப்படியானதனால் வணிக வளாகங்கள் என்று நவீனமான பெயர்..

சாலையில் நெரிசல் சற்றே குறைந்திருந்தது.. பள்ளிகள் விட்டதும் ஆறு மணி வரைக்கும் ஜேஜே.. என்று இருக்கும்..

' அதைப் பற்றி நமக்கென்ன கவலை!.. ' - என்று நினைத்துக் கொண்டு சைக்கிளை அந்தக் கடைக்கு முன்னால் நிறுத்திய​ சுந்தரேஸ்வர குருக்கள் - சைக்கிளைப் பூட்டினார்.. சாவியைக் கையில் எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டார்..

அகத்தியர் மூலிகை மருந்துக் கடை...  பளபளப்பான வண்ணங்களுடன் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகையில்​ ஹோம பரிகார பூஜா திரவியங்கள் கிடைக்கும் - என்றும் குறிக்கப்பட்டிருந்தது..


" ஸ்வாமி.. வாங்க.. வாங்க!.. " - என்றபடி எழுந்து நின்று வரவேற்றான் கார்த்திக்..

" என்ன முருகா.. சௌக்கியமா!.. "

புன்னகையுடன் கேட்டார் குருக்கள்.. அவரிடம் சின்னவர் பெரியவர் என்ற பேதமில்லை.. எல்லா ஆண்களும் முருகன் தான்... பெண்களை சக்தி என்பார்.. 

நவீனமான வணிக வளாகங்களும் வங்கிகளும் நாலு ரோடு சந்திப்பும் ஆடம்பரமான வீடுகளும்  நகர்களுமாக இருப்பது இந்த இருபது வருடங்களாகத் தான்.. அதற்கு முன்பு இந்த வட்டாரம் முந்திரிக்காடு.. நடுவில் மெடிகல் காலேஜ்க்குப் போகும் ஒற்றைச் சாலை.. ஆறேழு மணிக்கு மேல் நடமாட்டம் இருக்காது.. எங்கும் இருட்டு தான்.. 

இப்போது இருபத்து நாலு மணி நேரமும் விழித்துக் கொண்டு கிடக்கின்றது சாலை.. முந்திரிக் காடு அழிந்து போயிற்று..

பார்க்கும் இடம் எங்கிலும் இரண்டடுக்கு மூன்றடுக்கு வீடுகள்..
இலகு ரக சொகுசு வாகனங்களுடன் வீட்டுக்கு இரண்டு ஸ்கூட்டிகள்..

சாமியாவது பூதமாவது என்று வறட்டு வாதம் பேசிக் கொண்டு கிடந்தவர்கள் மெல்ல மெல்ல மாமியார் பெயரிலும் மைத்துனி பெயரிலும் யாகம் பரிகாரம் பூஜை என்று புகுந்து கொள்ள ஆரம்பித்து இருக்கின்றார்கள்..

வீட்டுக்கு வீடு வாசலும் வாசல் நிறையப் பிரச்னைகளும் என்றாகிப் போன நிலையில்​ ஆங்காங்கே இல்லங்களில் பூஜைகள், ஹோமங்கள் என்று மீண்டும் சக்கரம் சுழல ஆரம்பித்தது..

இதனால் சுந்தரேஸ்வர குருக்கள் போன்றவர்கள் பக்கமாக ஒளி வட்டம் திரும்பியது.. 

தொட்டது தொண்ணூறுக்கும் அது, இது - என்றாகி இருக்கும் இன்றைய சூழலில் இவருக்கு கைராசிக்காரர் என்று நல்ல பெயர்..

ஒத்தாசைக்கு இருவரை வைத்துக் கொண்டு யாக பூஜைகள் செய்கின்றார்.. சூரியன் நெற்றி மட்டத்திற்கு வருவதற்குள் ஹோமங்களை முடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்.. ​ ​யாகத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்கு அர்த்தம் என்றும் யாகத்திற்கான பலன் என்றும் விவரித்து சொல்லும் போதே அனைவரையும் கவர்ந்து விடுவார்..  

தேவாரம் திருவாசகம் திவ்யப் பிரபந்தம் என இறையருட் பாக்களும் ஏராளமாகக் கைவசம்.. ஹோமத்தில் பூர்ணாஹூதி கொடுத்து மங்கலம் சொல்லும் போது அங்கிருப்பவர்களின் முகமும் மனமும் சந்தோஷத்தால் நிறைந்திருக்கும்..

இங்கே இந்த மருந்துக் கடை  திறப்பதற்கு முன்பு வரை இவர் பொறுப்பேற்று செய்யும் ஹோமங்களுக்கான திரவியங்கள் வாங்குவது என்றால் கீழவாசல் கடைத் தெருவுக்குத் தான் போக வேண்டும்.. சைக்கிள் தான் எல்லாவற்றுக்கும்.. இப்போது அருகிலேயே கடை.. அலைச்சல் மிச்சமாகி விட்டது.. வயது வேறு கூடுகின்றது.. உடம்பும் சொல் பேச்சு கேட்பதில்லை..

கடைக்கு முன்பாக இருந்த பந்தலின் நிழலில் அமர்வதற்குள் ' அமுதம் காஃபீஸ் ' - ல் இருந்து நல்ல அழுத்தமான பேப்பர் கப்பில் காஃபி வந்தது.. இப்போது எல்லாம்  ஊருக்குள் காஃபிக்கு என்றே தனித்துவமான கடைகள் நிறைய வந்து விட்டன...

காஃபியை வாங்கிக் கொண்ட குருக்கள் மறு கையால் அந்தப் பேப்பரை நீட்டினார்.. புன்னகையுடன் வாங்கிக் கொண்ட கார்த்திக் அதை வாசித்தான்..

" குங்கிலியப் பொடி,  உலர்ந்த மகிழம்பூ, அத்திப்பழம் - இது மூன்றும் கீழவாசல் கடையில இருந்து கொண்டாந்திடறேன்.. இந்த வாழைக்கன்று, இலைக் கட்டு, தோரணம் - இதெல்லாம்?.. "

குருக்கள் சொன்னார்... 

" இதுகளையும் இந்தப் பேப்பர்லயே எழுதிட்டானா அவன்!.. அதெல்லாம் தனி.. திருவையாத்துல இருந்து கலியன் கொண்டு வந்திடுவான்... முருகா.. நீ மற்ற திரவியங்களை தயார் பண்ணி வை!.. எட்டு மணிக்கு  சந்தோஷ் வந்து எடுத்துக்குவான்.. இப்போ நான் கிளம்பறேன்.. "

குருக்கள் மஞ்சள் நிறப் பையில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து யாக சமித்துகளுக்காகக்​ கொடுத்தார்..

அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்ட கார்த்திக்,​ " ஒரு நிமிஷம் இருங்க ஸ்வாமிகளே!.. " - என்றான்..

" எதற்கு?.. " - என்று யோசித்த் குருக்கள் மீண்டும் அமர்ந்தார்..

கார்த்திக் மெல்லப் பேசினான்..

" கீழவாசல் கடைத் தெருவுல பல வருசமா எங்க கடை.. உங்களுக்குத் தெரியும்.. அப்பா காலத்துக்குப் பிறகு நான் இங்கே தனியா  ஆரம்பித்து நல்லா நடக்குது.. இந்த ஒரு மாசத்துல மட்டும் நீங்க - ஆறேழு தடவை கடைக்கு ஆதரவு பண்ணியிருக்கீங்க.. அதனால.. "

" அதனால?.. " - புருவங்கள் உயர்ந்தன..

" அதனால எனக்கு ஆதாயம்.. அதுல இருந்து உங்களுக்கு சின்னதா ஒரு சன்மானம்.. " - என்றபடி சிறிய கடித உறை ஒன்றை நீட்டினான்..

" ஓ..  இந்த இரும்புக் கடை, எலக்ட்ரிக் கடை.. ல கொடுக்கற மாதிரி கமிஷனா!.. "
குருக்கள் முகத்தில் வியப்பு..

கார்த்திக் புன்னகைத்தான்..

" இது உனக்குக் கிடச்ச லாபத்துல பங்கு.. அப்படியா!.. "

கார்த்திக் அமைதியாய் இருந்தான்..

" அப்படி இல்லே.. ன்னா திரவிய சாமான்கள் மேல கூடுதலா ஒரு தொகைய வச்சு அதிலே இருந்து எனக்கு ஒரு பங்கு!.. சரியா?.. "

கார்த்திக் எதுவும் பேசவில்லை..

" முருகா... உனக்கு ஆசீர்வாதம்.. ஒரு சில விஷயங்கள் சொல்றேன்..​  கேட்டுக்கறயா!.. "

" சொல்லுங்க!.. "

" இந்த மாதிரி  ஏதாவது எனக்கு செய்யணும்.. ன்னு உம் மனஸ்.. ல தோணித்து.. ன்னா அந்த ப்ரயோஜனத்தை யஜமானனுக்குக் கொடுத்துடு!.. "

" யஜமானனா!?.. "   -  கார்த்திக்கின் விழிகளில் ஆச்சர்யம்..

" ஆமாம்... யாக கைங்கர்யம்  செய்றதுக்கு ஆதாரமா யார் தனம் தர்றாளோ அவா தான் யஜமானன்!.. "

" இன்னைக்கு அர்த்தம் வேற மாதிரி இருக்கே!... "

அது இருந்துட்டுப் போகட்டும் முருகா...​  நீ இதக் கேளு.. யாக பூஜை செஞ்சு வைக்கறதுக்கு இவ்வளவு கொடுங்கோ எனக்கு.. ன்னு யாரும் கேட்டு வாங்கப்படாது.. இது பெரியவா வாக்கு..  இது வரைக்கும் நான் அதை மீறினது இல்லை..​  தெரியுமோ!.. "

" அப்புறம்.. உங்க வாழ்க்கைக்கு?... "

" போதும்.. ன்ற மனசு தான்.. யாகம் பூர்த்தியானதுக்கு அப்புறம் அவா தர்றாளே தட்க்ஷணை.. அது தான்.. அதுல தான் திருப்தி அடைஞ்சுக்கணும்.. பக்தி பூர்வமா நாம செஞ்ச ஹோமத்தால  அவங்க பிரச்னை நிவர்த்தியாகி அந்த சந்தோஷத்தோட நம்மளத் தேடி வந்து சம்பாவனை தர்றாளே.. அது தான் உசத்தி!.. அப்படி  அவா தரலே.. ன்னாலும் கூட, அது வேறொரு ரூபத்துல நம்ம கைக்கு வந்து சேர்ந்துடும்.. அப்படித் தான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க!.."

" மன்னிச்சிடுங்க ஸ்வாமி!.. "

" முருகா.. நீ கொழந்தேடா.. இது மூத்தவங்களுக்கே தெரியாத விஷயம்.. சரி.. இருக்கட்டும்.. நீ என்ன செய்றே... எனக்கு உதவி செய்றதா நெனச்சு ஹோம திரவியங்கள் மேல வைக்கிற ஆதாயத்தைக் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ.. அது என்னண்ட வர்ற ஜனங்களுக்கு ப்ரயோஜனமா இருக்கும்.. உனக்கான விருத்தியை பகவான் கண்டிப்பா தருவான்.. எல்லாத் தொழிலுக்கும் இது தான் நியதி.. தர்மம்..  வாழ்க்கையே ஒரு யாகம்!.. வள்ளுவரும் இதத் தானே சொல்லி இருக்கார்!.. சரி.. முருகா.. நான் நாளைக்கு வர்றேன்!.. "

சுந்தரேஸ்வர குருக்கள் சைக்கிளின் பூட்டைத் திறந்தார்..

கார்த்தியின் மனமும் திறந்து கொண்டது..

***

49 கருத்துகள்:

  1. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதத்திலேயே இந்தக் கதை பதிவிடப்பட்டு விட்டதா!..

      ம்.. சரி.. சரி..

      நீக்கு
    2. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

      இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரத்தால் செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
    3. வாழ்க.. வாழ்க..

      //இந்த மாதத்திலேயே இந்தக் கதை பதிவிடப்பட்டு விட்டதா!..//

      உங்கள் மனம் விரும்பியபடி...

      //அனைவருக்கும் அன்பின் நல்வரவு..//

      அதே... அதே...

      நீக்கு
    4. நன்றி..
      அவ்விடத்தில் காத்திருப்பவை எத்தனையோ!..

      தகவல் அளிக்கவும்..

      நீக்கு
  2. இந்த நாள் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.
    இந்த நாளை நல்லதொரு நாளாக இறைவன் அமைத்து தருவார். அதற்காக இறைவனுக்கு நன்றிகளை தெரிவிப்போம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. இந்த நாளை நல்லதொரு நாளாக இறைவன் அமைத்து தருவார். அதற்காக இறைவனுக்கு நன்றி..

      நீக்கு
  4. துரை அண்ணாவின் பாணியில் கதை. கதை அருமை. கதையின் நடுவில் இன்றைய யதார்த்த விவரணம்!!! . முடிவும் மிக நன்று.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கதையின் நடுவில் இன்றைய யதார்த்த விவரணம்!.. முடிவும் மிக நன்று..//

      ஆகா.. அருமை.. அருமை..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இப்போது வியாபாரமாகிவிட்ட ஹோமங்கள், யாகங்கள் நடுவில், அதிலும் காசு பார்க்கும் குருக்களின் நடுவில் நல்ல எண்ணம் கொண்ட குருக்கள். நேர்மறையாக நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கீங்க துரை அண்ணா. வாழ்த்துகள், பாராட்டுகள்.

    ஆனால் எனக்குள் பல கேள்விகள் எழுகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா)... எங்களுக்கு மைன்ட் ரீடிங் பவர் கிடையாது

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை, அந்த வரியோடு சேர்த்து கேள்விகளும் குறிப்பிட்டிருந்தேன். அப்புறம் வேண்டாமேன்னு தவிர்த்து பாராட்டுகள் வரை தான் காப்பி செய்தேன் கூடவே //ஆனால் எனக்குள் பல கேள்விகள் எழுகின்றன// இந்த வரியும் சேர்ந்து வந்துவிட்டது போல. கருத்து வரும் முன் ஓடிட்டேன்!

      கீதா

      நீக்கு
    3. @ கீதா..

      // ஆனால் எனக்குள் பல கேள்விகள் எழுகின்றன.. //

      கேள்விகளைத் தரலாமே.. பொழுது போகும் அல்லவா!..

      நீக்கு
  6. எதைச் செய்தாலும் அதில் அறம் இருக்கவேண்டும் என்பதைத் தன் நடையில் துரை செல்வராஜு சார் எழுதியிருக்கிறார். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கௌ அண்ணா படம் நன்று. பொருத்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கடமையைச் செய், பலனை எதிர் பார்...

    ஏன்...?

    அதுதான் தெய்வத்தால் ஆகாது என்று தெரிந்து விட்டதே... ஆனால் முயற்சி மட்டும் கைவிடவில்லையே, அதற்கு ஏற்ப கூலி உறுதியாக உண்டு...

    அப்போ தெய்வம்...?

    எனது குடும்பத்தை உயர்த்துவேன் என்று முயன்றாலே போதும் :

    குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய குறளுடன் கருத்து.. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
    2. இனிய குறளுடன் கருத்து .. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  9. இந்தக் காலம் குருக்கள் பலரும் எங்கள் ரேட் இவ்வளவு என்று முன்பே கூறித்தான் வருகிறார்கள் . அப்படி இருக்கும் போது 'யாகம்' குருக்களின் நன்மனம் கதையில் முன் எழுந்து நிற்கிறது.

    நல்லதோர் கதையைத் தந்திருக்கிறார் வாழ்த்துகள்.

    கதைக்கு ஏற்ற படமும் அருமை. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. எனது கருத்து ஒன்று ஒளிந்து கொண்டு விட்டது.. விரட்டி விடவும்..

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. என்றுமே நம் வாழ்வில் நம் மனசாட்சிக்கு நியாயமாக நடந்து கொண்டால், நமக்கான நல்லதை இறைவன் உரிய நேரத்தில் கண்டிப்பாக தந்து விடுவார்.

    /பக்தி பூர்வமா நாம செஞ்ச ஹோமத்தால அவங்க பிரச்னை நிவர்த்தியாகி அந்த சந்தோஷத்தோட நம்மளத் தேடி வந்து சம்பாவனை தர்றாளே.. அது தான் உசத்தி!.. அப்படி அவா தரலே.. ன்னாலும் கூட, அது வேறொரு ரூபத்துல நம்ம கைக்கு வந்து சேர்ந்துடும்.. அப்படித் தான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க!.."/

    நல்ல வரிகள். இறைவன் மேலும், அவன் செய்கையின் மேலும் என்னவொரு நம்பிக்கை...! இப்படி பட்டவர்களைத்தான் இறைவன் உண்மையாக நேசிப்பான். ஆழ்ந்த கருத்துள்ள இக் கதையை தாங்கள் எழுதியதற்கும், பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி.

    கதைக்குப் பொருத்தமான ஓவியத்தை வரைந்திருக்கும் சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி..

      நீக்கு
  12. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து எனச் சொல்லாமல் சொல்கிறார் குருக்கள். கடை நல்ல பெரிதாக இருக்கு. அத்தனைக்குச் சாமான்கள் இல்லையோ? :) சுந்தரேச குருக்களுக்கும் பூணூலைக் காணோம். :))))) இஃகி,இஃகி,இஃகி, ஓடியே போயிடறேன்.

    பதிலளிநீக்கு
  13. // சுந்தரேச குருக்களுக்கும் பூணூலைக் காணோம்..//

    இதுக்குத்தான் அக்கா வரணும்.. ங்கறது..


    கடையும் ஜவுளிக் கடை மாதிரி பெரிசா.. ன்னா இருக்கு!..

    ஆனாலும் குறை சொல்லப்படாது..

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக இருக்கிறது.

    //போதும்.. ன்ற மனசு தான்.. யாகம் பூர்த்தியானதுக்கு அப்புறம் அவா தர்றாளே தட்க்ஷணை.. அது தான்.. அதுல தான் திருப்தி அடைஞ்சுக்கணும்.. பக்தி பூர்வமா நாம செஞ்ச ஹோமத்தால அவங்க பிரச்னை நிவர்த்தியாகி அந்த சந்தோஷத்தோட நம்மளத் தேடி வந்து சம்பாவனை தர்றாளே.. அது தான் உசத்தி!.. அப்படி அவா தரலே.. ன்னாலும் கூட, அது வேறொரு ரூபத்துல நம்ம கைக்கு வந்து சேர்ந்துடும்.. அப்படித் தான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க!.."//

    குருக்கள் சொல்வது அருமை. எங்கள் வீட்டுக்கு ஒரு குருக்கள் வருவார், தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடி, அர்த்தம் சொல்லி நிறுத்தி நிதானமாக எல்லாம் செய்வார். அவரை எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் சந்திரசேகர குருக்கள்.


    சுந்திரேச குருக்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மை , உழைப்பு இருந்தால் உயர்வு தான் என்பதை கார்த்திக்கு சொல்லி விட்டார். இது போன்ற நல்ல உள்ளம் உள்ள பெரியோர்கள் இருக்கும் வரை சிறியவர்கள் வழி தவற மாட்டார்கள்.

    செய்யும் தொழிலே தெய்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எங்கள் வீட்டுக்கு ஒரு குருக்கள் வருவார், தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடி, அர்த்தம் சொல்லி நிறுத்தி நிதானமாக எல்லாம் செய்வார். //

      இப்படியான நல்லவர்கள் எங்கும் இருக்கின்றார்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு
      நன்றி..

      நீக்கு
  15. படம் நன்றாக இருக்கிறது கெளதம் சார். பூணூல் இருக்கே மெலிதாக தெரிகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..
      முன்பு நான் கவனிக்க வில்லை..
      துல்லியமாகத் தெரிகின்றது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. கைகளில் விபூதி பட்டையும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  17. ஆமாம்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இட்டிருக்கலாம்..

    நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  18. யாருடைய உபதேசமும் கதைகளல்ல. எழுத்தாளன் உட்பட.
    இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு கதை அம்சங்களை விரிவாக அலசினால் உங்கள் எழுத்து இன்னும் சிறப்பு பெறும் என்று நினைதேன். சொல்லி விட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் தம்பி. மேலும் உயர்வுகள் பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனத்தில் கொள்கின்றேன்..

      தங்கள் அன்பினுக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      நன்றி அண்ணா..

      நீக்கு
  19. இன்று தான் அயலகத்திலிருந்து சென்னை திரும்பி இருக்கிறேன். எவிமானப் பயண நேரத்தில் கதை வெளியாகியிருப்பதால்
    கருத்துச் சொல்ல தாமதம்.

    பதிலளிநீக்கு
  20. இன்று தான் அயலகத்திலிருந்து சென்னை திரும்பி இருக்கிறேன். எவிமானப் பயண நேரத்தில் கதை வெளியாகியிருப்பதால்
    கருத்துச் சொல்ல தாமதம்.

    பதிலளிநீக்கு
  21. என்னுடைய பின்னூட்டங்கள் பல பதுங்கி விடுகின்றன.
    அவற்றை விடுவிக்க ஆவன செய்ய
    வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  22. நான் கச்சேரிகள் கேட்டதெல்லாம் மதுரையோடு போய்விட்டது. சென்னை வந்தப்புறமா சபாக்கள் மூலம், நாடகம், மெல்லிசைக்கச்சேரிகள் எனக் கேட்டது தான். அதுவும் ஆரம்ப காலங்களில். பின்னாட்களில் குடும்பம் நடத்துவதே ஒரு கச்சேரி போல் இருந்ததால் தனியாகக் கச்சேரிக்குனு போகலை. :))))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!