வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

வெள்ளி வீடியோ : உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம் உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ

கண்ணகி கிருஷ்ணன் எழுதிய பாடல்.  குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஒரு பாடல்.  அனைவராலும் விரும்பப்படும், ரசிக்கப்படும் ஒரு பாடல்.

வரவர பாடலை இங்கு ஒலிக்கவிடும் காணொளியைத் தெரிவு செய்வதே சிரமமாக இருக்கிறது!  எம்பெட் என்று செலெக்ட் செய்த உடன் வீடியோ அன்அவைலபில் என்கிறது.  மாற்று தேட வேண்டியிருக்கிறது.    அதனாலேயே சில பாடல்களை பகிர முடியவில்லை.

அழகெல்லாம் முருகனே 

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ... பழநிக்கு வந்தவன் (x2)
பழமுதிர்ச்சோலையிலே ... பசியாறி நின்றவன் (x2)
... பசியாறி நின்றவன்

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ... குகனாக வாழ்பவன் (x2)
குறவள்ளிக் காந்தனவன் ... குறிஞ்சிக்கு வேந்தனவன் (x2)

பூவாறு முகங்களிலே ... பேரருள் ஒளிவீசும் (x2)
நாவாறப் பாடுகையில் ... நலம்பாடும் வேலனவன் (x2)

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே.


===========================================================

1979 ல் வெளியான அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தை ஸ்ரீதர் ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் எடுத்தார்.  தமிழ், தெலுங்கு கன்னடம்.  இளமை பொங்கும்படமாகவும் இல்லாமல், நடுத்தர வயதுக்கு காதலாகவும் இல்லாமல் இரண்டு டிராக்குகள் படத்தில்.  அதனாலோ என்னவோ படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

எனினும் படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.  வாலியின் பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.  பாரதி ராஜா பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இந்த இரண்டு பாடல்களிலுமே, குறிப்பாக இரண்டாவது பாடலில் இன்னும் அதிகமாக இளையராஜா ஒரு இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார்.

இந்தப் படத்தில் வாணி ஜெயராம் இரண்டு பாடல்கள் (தனியாக) பாடியிருந்தார்.

முதல் பாடல் நானே நானா யாரோதானா பாடல் 

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா

தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா

ஒருவன் நினைவிலே
உருகும் இதயமே இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள்
தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க
மதுவின் மயக்கமே
உனது மடியில் இனிமேல்
இவள்தான் சரணம் சரணம்

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மாறினேனா

பிறையில் வளர்வதும்
பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும்
பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே
இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா

தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா


===================================

இரண்டாவது பாடல் மத்தியமாவதி ராகத்தில் அமைத்திருக்கிறாராம் இளையராஜா.  இது மிக மிக அருமையான பாடல்.  அந்த ஆரம்ப சையிலிருந்து வாணியின் குரல் வரை.  அதுவும் சரணங்களில் மயக்கி எடுத்து விடுவார்.

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் 

என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்

நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்

என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்
மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்

மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர் கூட்டம் எதிர்பார்க்கும்
இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம்
அதை நான் சொல்லவோ

என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்


உறங்காமல் நெஞ்சம்
உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ
மாட்டாயோ

சுகம் கொண்ட சிறு வீணை
விரல் கொண்டு மீட்ட
மாலையும் அதிகாலையும்
நல்ல சங்கீதம் தான்

என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்

நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்

என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

45 கருத்துகள்:

  1. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்கவே..

    பதிலளிநீக்கு
  2. இன்றைக்கு முத்துக்கள் மூன்று என்பதைப் போல பாடல்கள் தேர்வு..

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. அழகெல்லாம் முருகனே...

    80 களில் இந்தப் பாடல் வானொலியில் திருவிழாக்களில் ஒலிக்கும் போதெல்லாம் மனம் மயங்கி நின்ற நாட்கள் நினைவுக்கு வருகின்றன..

    சூலமங்கலம் சகோதரிகளின் மகுடத்தின் ரத்தினங்களில் இந்தப் பாடலும் ஒன்று..

    அவர்களுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகின்றோம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் பகிர கிடைக்காத சோகத்தைச் சொல்லப்போன வேளையில் 'அழகெல்லாம் முருகனே' பாடலின் (ஒரிஜினல்) ஆரம்ப இசையைச்சப்பி பற்றிச் சொல்ல மறந்தேன்.  மிகவும் ரசிக்க வைக்கும் (ஒரிஜினல்) ஆரம்ப இசை.

      நீக்கு
  5. முதல் பாடல் எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடித்த பாடல். அவர்கள் நோட்டில் எழுதி வைத்து இருந்தார்கள். அவர்களுக்கு பிடித்த சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், மற்றும் அவர்கள் வரைந்த சீதாமாமி அப்புசாமி மாமா ஓவியங்கள் அந்த நோட்டில் இருந்தது. பக்கத்து வீட்டு அன்பர் அந்த நோட்டை வாங்கி போய் தரவில்லை. கேட்டால் மகள் ஊரில் விட்டு வந்து விட்டேன், மகள் ஊருக்கு போகும் போது வாங்கி வருவதாக சொல்லி பின் தரவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு எதற்கு அந்த நோட்டு?  சிலர் இப்படி மற்றவர்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள்.

      நீக்கு
    2. ,,,சிலர் இப்படி மற்றவர்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள்//

      இல்லை. மற்றவர்களின் மென் உணர்வைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குக் கொஞ்சமாவது கஷ்டம் கொடுப்பதில் இன்பம் காணும் பெருமக்கள் இவர்கள்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. // மற்றவர்களின் மென் உணர்வைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குக் கொஞ்சமாவது கஷ்டம் கொடுப்பதில் இன்பம் காணும் பெருமக்கள் இவர்கள். //

      ஆம்.  இப்படி ஒரு அனுபவத்தை இப்போது சமீப காலமாய் நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.  எழுதலாமா என்று கூட யோசிப்பேன்.  எதை எழுத, எதை விட என்று இருந்து விடுகிறேன்!

      நீக்கு
    5. நீங்கள் சொல்லும் அந்த கொடூர மனதை காமெடியாய் ஒரு படத்தில் செந்தில் கவுண்ட்டமணியிடம் காட்டுவார்.  நகைச்சுவைக் காட்சியாய் மிளிரும்.

      நீக்கு
  6. வாணி ஜெயராம் பாடிய இந்த பாடலும் பிடிக்கும்.
    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாணிஜெயராம் பாடிய இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள் தான். அவர் மறைவுக்கு பின் அவர் பாடிய பாடல்களை , பேட்டிகளை படித்து வருவதால் மனது மிகவும் சங்கடப்படுகிறது.

      நீக்கு
  7. // அதனாலோ என்னவோ படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை..//

    தாறுமாறான காதல் கதை.. எல்லாரையும் திரும்பவும் பார்க்க வைத்த காட்சி அமைப்புகள்.. நின்று கேட்க வைத்த இசை.. ஆனாலும் படம் வெற்றி பெற வில்லை என்பது இன்றைய ஆச்சர்யம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாநாயகன் அன்றைய கமல் போல சில காட்சிகளில் தெரிவார்.

      நீக்கு
  8. தாபத்தினை புதியதோர் பரிமாணத்தில் காட்டி -

    அன்றைய வாலிப நெஞ்சங்களை ( என்னையும் சேர்த்து தான்) வசீகரித்த பாடல்கள்..

    அழகே உன்னை ஆராதிக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  படத்தையும் பாடல்களையும்  ஒருங்கே ரசிக்க வைத்த படம்தான்.

      நீக்கு
  9. அழகெல்லாம் முருகனே.... இது மாதிரி பாடல்களெல்லாம் இந்தத் தலைமுறைக்கு வருமா?

    மணியான பாடல், சேர்ந்திசைக் குரலில். பாடல் மனப்பாடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  மிக அருமையான பாடல்.  இதை ஏற்கெனவே பகிர்ந்ததாய் நினைத்துக் கொண்டிருந்தேன்.  செக் செய்து விட்டு பகிர்ந்தேன்.

      நீக்கு
  10. நானே நானா...எத்தனைமுறை ஹாஸ்டலில் கேட்டிருக்கிறேன்.

    அப்போல்லாம் ஹாஸ்டல் மாணவர்களில் பலர், சேர்ந்து அல்லது ஓரிரண்டுபேர் அல்லது ஒருவனே, தங்களுக்குப் பிடித்த இசைத்தட்டு வாங்கிப் பரிசளிக்கும் வழக்கம் இருந்தது. இவர்கள் அளித்த என்று சொல்லி பாடல்கள் போடுவார்கள். பிளாஸ்டிக் ஷீட் போன்ற இசைத்தட்டையும் பார்த்திருக்கிறேன் (மெல்லிய, காற்றில் பறந்துவிடும்பொல)

    அப்போல்லாம் சாயிறு மதியம் இரண்டு மணிக்கு திரைக்கதை இசைத்தட்டும் கோடுவாங்க. 16 வயதினிலே அடிக்கடி போடுவாங்க. அதெல்லாம் பசுமையான காலம். இனி வராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவில் தங்கி விட்ட இனிமையான நாட்கள். அப்போதைய பாடல்களின் இனிமை நம் வயதினாலா, மனதினாலா,...

      நீக்கு
  11. மூன்றாவது பாடலை நினைவுக்குக் கொண்டுவர முடியலை. காணொளி போட்ட செகன்டுல நினைவுக்கு வந்துவிட்டது.

    பசுமையான நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  12. அழகெல்லாம் முருகனே...
    சூப்பர் மேலும் வாணி ஜெயராமின் இரண்டு பாடல்களும் சிறப்பானவை

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் ரசித்த - ரசிக்கும் பாடல்கள்..

    பதிலளிநீக்கு
  14. மூன்று பாடல்களுமே கேட்ட பாடல்கள் அதுவும் வாணிஜியின் இந்த இரு பாடல்களும் அதிகம் கேட்டவை. ரொம்பப் பிடித்த பாடல்கள். ரசித்துக் கேட்ட பாடல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. நானே நானா அது ஒரு மேற்கத்திய வகை கொஞ்சம் வித்தியாசமான பாடல் மெட்டு என்று எனக்குத் தோன்றும். மிக அழகான இசையமைப்பு,

    இரண்டாவது பாடல் கேட்கவே வேண்டாம் அசாத்தியமான பாடல்....ஆமாம் ஸ்ரீராம், நீங்கள் சொல்லியிருக்காப்ல சரணம் செமையா பாடியிருப்பாங்க! எப்படியான ஸ்தாயி இல்லையா?

    சமீபத்துல கூட அவங்க அதே ஸ்தாயி மெயின்டெய்ன் பண்ணிருக்கறது ஆச்சரியமான விஷயம்...அதெல்லாம் கிஃப்ட்!!!! வரம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லி சொல்லி ரசித்தால் இன்னும் சொல்லலாம், எழுதலாம்.  படிப்பவர்களுக்கு போரடித்து போகும்!!

      நீக்கு
  16. கல்லூரி சமயத்துல இந்த இரு பாடல்களும் ரொம்ப ஃபேமஸ். காரணம் தெரிஞ்சுருச்சா? வேற ஒண்ணுமில்லை அந்த பாடல் வரிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காரணம் தெரிஞ்சுருச்சா? //

      அச்சச்சோ... தெரியலையே... சொல்லுங்க...

      நீக்கு
  17. 'அழகெல்லாம் முருகனே' எங்கள் வீட்டில் ஒலித்தது என்று சொல்லத் தேவை இல்லை :) பக்திப் பாடல்கள் என்றால் தந்தைக்கு அப்படி ஒரு ஈடுபாடு.

    வாணி ஜெயராம் அவர்களின் இரு பாடல்களும் இலங்கை வானொலியில் கேட்டவை.

    இன்று மூன்று பாடல்கள் பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  உங்கள் தந்தையின் பக்தி பற்றி முன்னரும் சொல்லி இருக்கிறீர்கள் மாதேவி.

      நீக்கு
  18. 'அழகெல்லாம் முருகனே'
    நெஞ்சை கொள்ளை கொண்ட பாடல்.

    முருகன் என்றாலே அழகு தானே ---

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் என்ற சொல்லு வேறு பொருள்களும் உண்டு என்று கரந்தையார் தனது சமீபத்து பதிவில் சொல்லி இருந்தார்!

      நீக்கு
  19. நானே நானா யாரோ தானா? -- வாலியின் வார்த்தை விளையாட்டு பின்னிப் பின்னி நெளியும் அழகே அழகு...

    சும்மா சொல்லக் கூடாது - ஆரம்ப காலங்களில் எல்லாருமே அற்புதமாகத் தான் எழுதுகிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜீவி ஸார்..  இசையை ரசிப்பதோடு, டியூனை ரசிப்பதோடு, குரலை ரசிப்பதோடு அதன் வரிகளையும் நிறையவே ரசிக்க வைக்கும் பாடல்கள் நிறைய நிறைய உண்டு.

      நீக்கு
  20. இரண்டாவது பாடல் என்கிறீர்கள் -- இன்று மூன்று பாடல்கள் இல்லையோ?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். மூன்று பாடல்களில் மூன்றாவது பாடல். தனிப்பாடல் தவிர, திரைப்பாடல்களில், இரண்டு பாடல்களில் இரண்டாவது பாடல்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!