சாப்பிட்டோம்! (கிண்ணத்தில் இருப்பது முதல் ஈடு! சற்றே கருகியிருந்தது. அடுத்த ஈட்டை
எடுத்த புகைப்படம் ஏனோ வரவில்லை. அது சரியாக எடுக்கப்பட்டிருந்தது!)
எனக்கு
இதில் தெரிந்த குறை, உளுத்த மாவு வாசனை! சமோஸாவுக்கு இந்த வாசனை எனக்கு
ஒத்து வரவில்லை. இதை சமோஸா என்று எடுத்துக் கொள்ளக் கூடாது, அவ்வளவுதான்! ஆனால் மற்றவர்கள், வித்தியாசமாகவும் இருக்கிறது, நன்றாகவும் இருக்கிறது என்றார்கள்.செய்து சாப்பிட்டபின் வந்த ஒரு ஐடியா. இதில் உருளைக்கிழங்கு-வெங்காய மசாலாவுடன் கேரட், குடைமிளகாய் போன்றும் சேர்த்து கூடச் செய்யலாம். அதே போல தண்ணீரில் நனைக்கும் சமயம், அந்தத் தண்ணீரைக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு அதில் காரப்பொடி, மசாலாப்பொடி, சேர்த்து அதில் நனைத்து எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது! கொஞ்சம் காரமோ, மசாலா / பெருங்காய வாசனையோ சேர்ந்திருக்"கலாம்"! "கலாம்" தான்! சரியாக வராமல் போனாலும் போகலாம்!









