திங்கள், 21 டிசம்பர், 2015

"திங்க"க்கிழமை 151221 :: அப்பள சமோசா.
வீட்டில் மைதா மாவு கோதுமை மாவு இல்லை.  மளிகைக் கடைக்குச் சொல்லி அனுப்பியும், இதோ, அதோ என்று அவர் கொண்டு வரவில்லை.


ஏதாவது செய்ய வேண்டுமே...  என்ன செய்யலாம்?  நாளை 'திங்கக்'கிழமைக்கும் உதவ வேண்டும்!


எடு அப்பளத்தை!  அப்பளத்தை எடுத்துக் கொண்டு அதை நல்ல தண்ணீரில் லேசாக நனைத்துக் கொண்டோம்!  (ஹுஸைனம்மா...  ஒரு ரகசியம் சொல்றோம் (சொல்றேன்!!!) ... வந்தோம் போனோம்னு எழுதினாலும் இதில் என் - ஸ்ரீராமின் - கைவண்ணம்தான் அதிகம்!  பாஸுக்குக் கஷ்டம் தருவதில்லை!)


மதிய உணவிற்குச்  செய்திருந்த உருளைக்கிழங்குக் கறியை எடுத்துக் கொண்டோம்!அதை, அந்த நனைந்த அப்பளத்தின் நடுவே வைத்து மூடினோம்.


அதை அப்படியே எண்ணெயில் பொரித்து எடுத்தோம்.சாப்பிட்டோம்!   (கிண்ணத்தில் இருப்பது முதல் ஈடு!  சற்றே கருகியிருந்தது.  அடுத்த ஈட்டை எடுத்த புகைப்படம் ஏனோ வரவில்லை.  அது சரியாக எடுக்கப்பட்டிருந்தது!)


எனக்கு இதில் தெரிந்த குறை, உளுத்த மாவு வாசனை!  சமோஸாவுக்கு இந்த வாசனை எனக்கு ஒத்து வரவில்லை.  இதை சமோஸா என்று எடுத்துக் கொள்ளக் கூடாது, அவ்வளவுதான்!  ஆனால் மற்றவர்கள், வித்தியாசமாகவும் இருக்கிறது, நன்றாகவும் இருக்கிறது என்றார்கள்.


செய்து சாப்பிட்டபின் வந்த ஒரு ஐடியா.   இதில் உருளைக்கிழங்கு-வெங்காய மசாலாவுடன் கேரட், குடைமிளகாய் போன்றும் சேர்த்து கூடச் செய்யலாம்.   அதே போல தண்ணீரில் நனைக்கும் சமயம், அந்தத் தண்ணீரைக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு அதில் காரப்பொடி, மசாலாப்பொடி, சேர்த்து அதில் நனைத்து எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது!  கொஞ்சம் காரமோ, மசாலா / பெருங்காய வாசனையோ சேர்ந்திருக்"கலாம்"!  "கலாம்" தான்!  சரியாக வராமல் போனாலும் போகலாம்!


42 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  இலகுவான செய்முறை விளக்கம்... த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே
  முயற்சித்துப் பார்க்கிறோம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 3. எல்லாமே சரிதான்.
  ஆனாலும் தண்ணீரில் நனைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போது தான்
  இந்த பாழாப்போர மனசு திக் திக் என்கிறது.

  எங்கன பார்த்தாலும் சாக்க்கடை நீரும் குடி நீருடன் கலந்து வரும் அபாயம் இருக்கையில், இப்படி ஒரு சமையல் குறிப்பா !!

  இருந்தாலும் செய்முறை நன்றாக இருப்பதால்,

  ஒரு முன் எச்சரிக்கையாக,

  நனைக்கும் தண்ணீரில் க்ளோரின் டாப்லெட் 1 அல்லது இரண்டு
  போடவும்.

  அதில் அப்பளத்தை நனைத்து உருளைக்கிழங்கு வெங்காய பொடிமாஸ் வைத்து பூரணம் மாதிரி அதை மூடிய பின்,

  டெட்டால் ஒரு ஸ்பூன் எடுத்து நாளா பக்கமும் தடவ வும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 4. அப்பளமும் உருளைக்கிழங்கும் சேர்த்து- அடடா!! செய்துபார்க்கவேண்டும்.. நன்றி ஶ்ரீராம்

  பதிலளிநீக்கு
 5. புதுமையான சமோசா. செய்து பார்க்கி'றோம்’ :)!

  பதிலளிநீக்கு
 6. 3, 4 முறை இந்த அப்பள சமோசா செய்ததுண்டு. (சும்மா செய்து பார்க்கலாமெ என்றுதான்) அதற்கென்றே ஸ்டஃப் செய்ய வேண்டிக் காய் கலவை தயாரித்து, ஸ்டஃப் செய்து சமோசாவுக்கு மடிப்பது போலவே மடித்துச் மடிக்கும் போது முக்கோணம் பிரியாமல் இருக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு...ம்ம்ம் ஏதோ நல்லாருந்துனு சொல்லலாம். பின்னர் இப்போ கிடைக்குதே ரெடிமேட் சப்பாத்தி (சுடாமல் பச்சையாக உள்ளது) உறவினர் ஒருவர் வீடு காலி செய்யும் முன் கொடுத்ததில், அதில் கூட செய்ததுண்டு. அதில் வட்டம் ரொம்ப பெரிசு ஸோ பாதியாக வெட்டிக் கொண்டு. அதுவும் ஓகேதான். அப்புறம் அவர்களே கொடுத்திருந்த ரெடிமேட் பரோட்டா (அதுவும் சுடுவதற்குத் தயாராய் உள்ள பக்குவம்...) அதிலும் முயற்சி செய்து அது கொஞ்சம் நன்றாக வந்தது போல் தோன்றியது. என்ன அந்தப் பரோட்டா பிரிகள் பிரியாமல் அட்ஜஸ்ட் செய்வது போராட்டம்..ஓ! "கலாம்" இனி அடுத்த முறை செய்ய நேர்ந்தால் முயற்சி செய்து பார்த்து"டலாம்"

  கீதா

  பதிலளிநீக்கு
 7. சுப்புத் தாத்தா இது கொஞ்சம் ஓவரா இல்ல ?!!!!!!!! யப்பா இந்த வயசுலயும் நகைச்சுவை...சூப்பர் தாத்தா...யு ஆர் ரியலி யங்க் அண்ட் எனர்ஜட்டிக்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. இது எப்படி சரியா வரும்? அப்பளம் வேகமாகப் பொரிந்துவிடும். உள்ள உள்ள மசாலா பொரிய சமயம் எடுக்கும். கொஞ்சம் சந்தேகம்தான். கீதா மாமி இன்னும் விமரிசனம் செய்யவில்லை. காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. //இது எப்படி சரியா வரும்? அப்பளம் வேகமாகப் பொரிந்துவிடும். உள்ள உள்ள மசாலா பொரிய சமயம் எடுக்கும். கொஞ்சம் சந்தேகம்தான்//

  யூ ஆர் ஒன் ஹண்ட்ரட் பர்சென்ட் கரெக்ட்

  அதுனாலே எண்ணைலே போரிக்கிரதுக்கு பதிலா, அதை மைக்ரோ ஒவன்லே வெச்சு 35 செகண்ட்ஸ் போட்டு பார்த்தேன்.

  ஒரு சின்ன மாற்றம். வெறும் உளுந்து மாவு அப்பளம் இல்லாம்,மிளகு அப்பளம் யூஸ் பண்ணுங்க.

  பார்த்தேன் மட்டும் இல்லை.
  சுவைத்தும் பார்த்தேன்.

  சூப்பரோ சூப்பர்.
  I am publishing a video shortly. pl. see.
  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 10. //பரோட்டா பிரிகள் பிரியாமல்//

  broche vaa evarura ...
  antha thyagarjarum parotta paththi thaan paadinaaro?

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 11. பார்க்கத்தான் படிக்கத்தான் முடியும் என்னால் நண்பரே....

  பதிலளிநீக்கு
 12. பப்படாம்,கொள்ளு அப்பளாம்,வட இந்திய அப்பளா வகைகளிலும் முயற்சி செய்யலாம். பயத்தம் பருப்பு அப்பளாம் கூட கிடைக்கிறது.
  என்ன ஒன்று செய்ய விடவேண்டும். நல்ல முயற்சி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 13. இன்ஸ்டண்ட் சமோசா போல! நன்றாகத்தான் இருக்கிறது பார்க்க! சுவைத்து பார்த்து சொல்கிறேன்!

  பதிலளிநீக்கு
 14. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 15. நன்றி சுப்பு தாத்தா... நான் ஆர் ஓ தண்ணீரில்தான் நனைத்தேன். ஏற்கெனவே உளுந்து வாசனை ஆகலை! இதில க்ளோரின் வாசனையும் சேர்ந்தா....!! அப்புறம் டெட்டால் வேறயா... உவ்வே...! :))))

  பதிலளிநீக்கு
 16. நன்றி பகவான்ஜி. அப்பளம் நனையாவிட்டால்தான் ஓடியும். ஓடியாமல் மடங்குவதர்காகத்தான் நனைப்பது!

  பதிலளிநீக்கு
 17. நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.

  பதிலளிநீக்கு
 18. நன்றி சொல்கி"றோம்" ராமலக்ஷ்மி!!!

  பதிலளிநீக்கு
 19. நன்றி கீதா. சப்பாத்தியாவது ஓகே, பரோட்டா ரொம்ப தடிமனாய் இருக்குமே..

  பதிலளிநீக்கு
 20. நன்றி நெல்லைத் தமிழன். அப்பளம் வ்கமாய்ப் பொரிந்து விடாமலிருக்க அந்த ஈரம் உதவும். போலவே உருளைக் கிழங்கு மசாலா ஏற்கெனவே வெந்து ரெடியாய் இருப்பதுதானே!

  பதிலளிநீக்கு
 21. புத்தம்புது சமோசா. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 22. மேலும் நான்தான் படத்துடன் பகிர்ந்துள்ளேனே நண்பர் நெல்லைத் தமிழன்.. சரியாய் வந்ததே...

  பதிலளிநீக்கு
 23. சுப்பு தாத்தா.. வீடியோ இன்னும் வரலை!

  பதிலளிநீக்கு
 24. நன்றி வலிப்போக்கன். ஏன் நீங்கள் செய்து பார்க்க மாட்டீர்களா? ஒவ்வொரு முறையும் பார்க்கத்தான் முடியும் என்று சொல்வது பாவமாய் இருக்கே.. சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வாருங்கள் வலிப்போக்கன்.

  பதிலளிநீக்கு
 25. இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற விதிகளையெல்லாம் தூள் தூளாக்கும் உங்கள் முயற்சிக்கு ஒரு 'ஓஹோ!'
  அப்பள பஜ்ஜி செய்தது உண்டு. இந்த சமோசா செய்ததில்லை. அடுத்தமுறை செய்துவிட வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 26. ரஞ்சனிமா சொல்வது போல அப்பள பஜ்ஜி ஓகே. ஆனா சமோசா சம்திங் டிஃபரண்ட். :) செய்து பார்க்கிறேன். பேசாம அப்பளத்தைப் பொரிச்சு உருளை மேலே ஒடச்சுப் போட்டு சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்.:) !

  பதிலளிநீக்கு
 27. நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்திரலாம்.

  பதிலளிநீக்கு
 28. எளிமையாக இருக்கு,
  செய்து பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 29. நெல்லைத் தமிழன், என் வரவுக்குக் காத்திருப்பதற்கு நன்றி. இந்த அப்பள சமோசா முயற்சிக்கவில்லை. :) நம்ம வீட்டிலே அப்பளம் விரும்பி நான் மட்டுமே என்பதால்! :) ஆனால் இது செய்வதற்கு முன் ஓரங்களை ஒட்டுவதற்கு அந்த வேக வைத்த உருளைக்கிழங்கையே சிலர் பயன்படுத்துறாங்க. சிலர் மைதாமாவைப் பசை போல் குழைத்துக் கொண்டு ஒட்டுகிறார்கள். அவசரத்துக்குச் சரி. அல்லது உ.கி.கறி மிஞ்சினால் பண்ணிச் சாப்பிட்டுக்கலாம். ஒரிஜினல் சமோசா போல் வருமோ? வராது! வரவே வராது! என்ன சொல்றீங்க? :)

  பதிலளிநீக்கு
 30. அப்பளக்குழம்பு, அப்பள பஜ்ஜி எல்லாம் பண்ணறது உண்டு! :) சமோசா மட்டும் ஒரிஜினல் தான்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!