(தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பதிவு!)
எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !
இந்த ஸ்ரீ ஜெய வருடத்தில் நீங்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று, இன்புற வாழ வேண்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன்.
திங்க எதுவும் தோன்றாததால், குடிக்கப் புறப்பட்டுவிட்டேன்!
(முகநூலில் அரங்கேறியது)
நான் ஒரு இன்ஸ்டண்ட் காபி இரசிகன்.
கொஞ்ச நாட்களுக்கு ப்ரு காபி அருந்திப் பார்த்தேன். ஊஹூம் - சரியில்லை.
பிறகு சன் ரைஸ். ஏதோ பரவாயில்லை. இப்போதெல்லாம் கூட, சென்னையிலிருந்து கிளம்பி பிருந்தாவன் அல்லது டபிள் டெக்கர் ரயிலில் பெங்களூர் வரும்பொழுது, கையோடு குரோம்பேட்டை நாகப்பா நகர் பி என் ஆர் ஸ்டோரில் இரண்டு ரூபாய் சன் ரைஸ் காபிப் பொடி பொட்டலம் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பேன். சென்ட்ரல் இரயில் நிலையம் ஐந்தாவது பிளாட்ஃபாரம் அருகே உள்ள ஆவின் பூத்தில், ஏழு ரூபாய்க்கு ஒரு கப் ஆவின் பால் வாங்கி, அதில் இரண்டு ரூபாய் சன் ரைஸ் பாக்கட்டிலிருந்து, அரை அல்லது முக்கால் அளவுப் பொடியைக் கொட்டி, ஒரு சூப்பர் காபி தயார் செய்து குடித்துவிட்டு ரயில் ஏறுவேன்.
பிறகு என்னுடைய இரசனை நெஸ்கபே கிளாசிக் என்று ஆயிற்று.
இப்போ லேட்டஸ்ட் நரசுஸ் இன்ஸ்டண்ட் காபி - சுவைத்துப் பார்த்தேன். அடா டா டா - அருமையாக உள்ளது. (பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே!) இதை விட சுவையான காபி கிடைக்கும் வரை, இனி நரசுவை தொடரலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன்.

(நல்லா பாருங்கப்பா - நர்சு இல்லை; நரசு)