[ ஸ்ரீராமின் முன்குறிப்பு : "ஹய்யா... இன்னிக்கி எனக்கு லீவு... ஜாலி.. ஜாலி..." ]
வழுதுணங்காய் வதக்கல்.. வறுவல்…
பொரியல்...மெழுகு புரட்டி.
வழுதுணங்காய்– தெரியாத பெயர் – தெரிந்த
காய். கீழே படத்தைப் பாருங்க.
வரகரிசிச் சோறும்
வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே
புல்வேளுர்ப் பூதன்
புரிந்துவிருந் திட்டான்ஈ(து)
எல்லா வுலகும் பெறும்.
இது பசியுடன் வந்த அவ்வையாருக்கு பூதன்
அளித்த விருந்தாகும். இதில்
வழுதுணங்காய் (கத்தரிக்காய்)
எண்ணெய் சேர்த்து வதக்கப்பட்டிருந்தது.
மத்திய கேரளத்தில் ஒரு நாலம்பல க்ஷேத்ராடனம் என்று கர்கிடக (ஆடி மாதம்) மாதத்தில் ஒரே நாள் பயணமாக . திருப்பிரயார் ராமர் கோயில், இரிஞ்சாலக்குடா கூடல்மாணிக்கம் பரதர் கோயில், மூழிக்குளம் லக்ஷ்மணன் கோயில், பாயம்மல் சத்ருக்கனன் கோயில் என்று நான்கு கோயில்களுக்குச் சென்று வழிபடுவர். அதில் இரண்டாவதாக கூறப்பட்ட பரதன் கோயில் தமிழ் மன்னர்களுடன் தொடர்புடையது. சேர மன்னர் குலசேகர பெருமாள் பல நிவந்தங்கள் ஏற்படுத்தி ஆதரித்தமைக்குச் சான்றாகக் கல்வெட்டுகள் உள்ளன. இந்தக்கோயிலில் வழிபாடாக வழுதுணங்காய் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. நெய்வேத்தியத்திற்கு வழுதுணங்காய் திருத்தும் புகைப்படம் கீழே.
இதுவும் வருடத்தில் ஒரு முறை
செய்யப்படும் முக்குடி நெய்வேத்தியமும் வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு மருந்தாகக்
கருதப்படுகிறது.
சரி நம்முடைய வதக்கல்
செய்முறை பார்ப்போம்.
வேண்டிய பொருட்கள்:
வழுதுணங்காய் ஒன்று
வெங்காயம் சின்னது 4.
சில்லி பிளேக்ஸ் கொஞ்சம்
உப்பு தேவையான அளவு.
வாசனைக்கு விரும்பினால் பூண்டு 2 பல் சேர்க்கலாம். சுவை கூட தேங்காய் துருவல் சேர்க்கலாம்.
எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு உட்கார்ந்தபோது பாஸ் ‘நான் செய்கிறேன், நீங்க
கம்ப்யூட்டரை நோண்டுங்க’ என்று வெளியாக்கினார். அதனால் நறுக்கிய காய் படம் எடுக்க முடியவில்லை.
வழுதுணங்காயை 5x1x 0.5 cm பரிமாணத்தில் அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாண் அல்லது வாணலியில்
கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம்
வதங்கியவுடன் கழுவி எடுத்த வழுதுணங்காயை போட்டு சிறிது நேரம் வதக்கவும். வற்றல் மிளகாய் பொடித்து (flakes) தூவி உப்பு, கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
பாஸுக்கு தக்காளி, கறிவேப்பிலை,
கொத்தமல்லி, பூண்டு என்பவை இல்லாமல் சமையல் செய்ய வராது, தக்காளி
ஒன்றை நறுக்கி சேர்த்திருக்கிறார்.
கத்தரிக்காய்கள் ஒரு தனி
டைப். உருண்டை,
நீளம், கலர், வரி, முள், சுவை என்று வடிவத்திலும் குணத்திலும், சுவையிலும் மாறுபடும் சுமார் 20 வகைகளைப் பார்க்க முடியும்.
கூடுதல் வகைகளை பின்வரும்
லிங்கில் காணலாம்.
https://knowledge.desikheti.com/12-popular-brinjal-types-in-india/
பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும் கத்தரிக்காயையே வழுதுணங்காய் என்று கேரள மக்கள் கூறுவர். திருநெல்வேலி அல்வா போல் வழுக்கும் texture தான் வழுதுணங்காயின் சிறப்பு.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குஅட இன்றைக்கு JKC அவர்களின் சமையல் குறிப்பா? ஆஹா.....
வழுதுணங்காய் - நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வார்த்தையைக் கேட்கிறேன். இங்கே சில சமயங்களில் கிடைக்கும். சட்னி செய்வதுண்டு. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
வாங்க வெங்கட்.. வணக்கம். நான் இந்தப் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!
நீக்கு//நான் இந்தப் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!// ஸ்ரீராம் என்ன அக்கிரமம்? கீதா வழுதுணங்காய் வைத்து ஒரு சமையல் குறிப்பு எழுதியிருக்கிறார்.
நீக்குமறந்து போச்சு அக்கா. மறதி! என்ன செய்ய! அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை இல்லையே...
நீக்குகீழே கீதாவின் கமெண்ட் இப்படி வரும்...
"என்ன ஸ்ரீராம்.. நான் முன்பே இது பற்றி எழுதி உங்களுக்கு அனுப்பி இருக்கிறேனே..".
அப்புறம் இந்த பதிலின் கீழே...
"ஓ.. இங்கே ஏற்கனவே வந்திருக்கா? எஸ்... இதைதான் நானும் சொல்லி இருக்கிறேன். நன்றி பானு அக்கா..."
நன்றி. ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குJayakumar
எனக்கு இந்த பச்சை வெண்ணெய் கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும். செய்முறை எளிதாக இருக்கிறது. பொரியலை விட நீங்கள் கொடுத்திருக்கும் மேல் தகவல்கள் சுவை.
பதிலளிநீக்குJKC சார்பில் நன்றி மட்டும் நான் சொல்கிறேன். இதில் அரட்டை, கருத்துக்கு இடமிருந்தால் அவர் சொல்வார்!
நீக்குசிம்பிள் நல்ல செய்முறை, ஜெ கே அண்ணா.
பதிலளிநீக்குஎங்க ஊர்ல இது வழுதுணங்காய். சிலர் பேச்சு வாக்கில் வழுதலைங்கான்னும் சொல்வாங்க.
கீதா
ஜெ கே அண்ணா இலக்கியத்தையும் இதோடு இணைத்துச் சொல்லியிருப்பது சூப்பர். தகவல்கள் நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குகீதா
பதிவில் ஒரு கேட்ட கெட்ட தகவல் வெட்டப்பட்டது நன்று.
நீக்குJayakumar
நம்ம எபி ல இதை வைத்து ஒரு ஆந்திரா செய்முறை மிக எளிய செய்முறை போட்ட நினைவு.
பதிலளிநீக்குசப்பாத்தி, தோசை எல்லாத்துக்கும் கூடவே சாதத்தில் பிசைந்தும் சாப்பிட அருமையா இருக்கும் ஒரு ரெசிப்பி.
ஸ்ரீராம் நினைவிருக்கா? நீங்களும் சுவைத்திருக்கீங்க நல்லாருக்குன்னு. நம்ம வர்ஷினிக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. கத்தரி பக்கவே வராத பாஸ் கூட விரும்பிச் சாப்பிட்டாங்க.....
கீதா
நம்ம வீட்டுல பொரியல், வதக்கல் (அதான் மெழுக்குப்புரட்டி) அப்புறம் அந்த ஆந்திரா துவையல் எல்லாம் அப்பப்ப செய்துவிடுவதுண்டு.
பதிலளிநீக்குகீதா
வழுதுணங்காய் வதக்கல் அருமை. பொதுவா வழுதுணங்காய்னா கத்தரிக்காய்தான், அதில் இந்த வெரைட்டி என்று கிடையாது.
பதிலளிநீக்குநான் இந்த நாலம்பலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பிரசாதம் செய்தி புதிது. பொதுவாக எல்லா கேரள கோயில்களிலும் அரவணைப் பாயசம், கடுசர்க்கரை எனப்படும் சர்க்கரைப் கொங்கல், சில கோயில்களில் பால் பாயசம், உன்னியப்பம் கிடைக்கும். ஒரு சில கோயில்களில் வெல்லம் தேங்காய்.... போன்றவை சேர்ந்த கலவையும். பிரசாதம் எப்போதும் வாங்குவேன்.
கண்டருளச் செய்யப்படும் நெய்வேத்தியங்கள் பிரசாதம் என்ற நாமத்தில் விற்பது கேரளக் கோயில்களில் அரிது. உதாரணமாக பத்மநாப சுவாமிக்கு ஒரு கண் ஓட்டையான தான கொட்டாங்கச்சியில் மாங்காய் நெய்வேத்தியம் கண்டருளப்பண்ணுவார்கள்.
நீக்குகத்தரியில் S3, S7 மற்றும் வரி பிரிஞ்சால் எனச் சொல்லப்படும் வயலட் கத்தரியும் நம்பி வாங்கலாம். பச்சை நிறக் கத்தரியில் தோல் உரியும். மற்ற கத்தரிகளை நம்பி வாங்கமுடியாது. கைக்கும். பிடி கத்தரி எனச் சொல்லப்படும் பெரிய கத்தரி கைக்காது. துவையலுக்கு மாத்திரமே வெளிநாட்டில் உபயோகித்திருக்கிறோம்.
பதிலளிநீக்கு