இயல்பு நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயல்பு நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.9.13

மனவரிகள் - இன்றேனும் ஒருநாள்..

  
யதார்த்தங்கள்
மறந்த வாழ்வில்
சதா இருக்கும்
கவலைகளை மறந்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!


இன்னும் இருக்கின்றன
நாட்கள்...
இன்னும் இருக்கின்றன
கவலைகள்.....
என்றும் கிடைக்காது
சாபவிமோசனம்..
அவை கிடக்கட்டும்..

இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!

  


சாபம் தர முனிவர்களும் இல்லை
சாப விமோசனம் தர
தேவர்களும் இல்லை
பாண்டவர்களும் கௌரவர்களும்
பாதிப்பாதியாய்க்
கலந்துவிட்ட உலகில்
யார், எவர் என்று
பிரித்துணர முடியாப்
பதட்டம் தணிந்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!

 

காதலியைக் கவர
கண்ட வழிகளையும்
கடைப்பிடித்து
உள்முகம்  மறைத்து
பொய்முகம் காட்டும் 



போலித்தனங்கள் தவிர்த்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!


இனி
இனிதாகலாம் 

உலகம் உனக்கும்!