என்ன வாங்கலாம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்ன வாங்கலாம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.1.13

புத்தகக் கண்காட்சி முன்னோட்டம்.

             
நாளை முதல் 36 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடக்கம். 11-1-2013 முதல் 23 -1-2013 வரை.
                 
இந்தமுறை நந்தனம் YMCA மைதானத்தில். 
 
                                      

1 கோடி புத்தகங்களுடன் என்கிறது செய்தி. வாசகர்கள் தாங்கள் வாங்க விரும்பும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று அறிய, புத்தகத்தின் தலைப்போ, பதிப்பகமோ ஏதாவது ஒன்று தெரிந்தாலும் தேடுவதற்கு வசதியாக தொடுதிரைக் கணினி வாயிலிலேயே ஏற்பாடு செய்திருக்கிறார்களாம் இந்தமுறை.

                                           

750 அரங்குகள். தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் வட மாநிலங்கள், ஜப்பான் போன்ற இடங்களிலிருந்தும் 250 தமிழ் பதிப்பாளர்கள், 127 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 37 ஊடகப் பதிப்பாளர்கள், 36 புரவலர் அரங்குகள் என 450 பங்கேற்பாளர்கள் விறபனைக்கு வைக்கின்றனராம்.
                                                  

மாற்றுத் திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக பபாசித் தலைவர் சொல்கிறார். நடக்க முடியாத வயாதனவர்களுக்கும் இந்த வசதி வழங்கப் பட்டால் நல்லது. சென்றமுறை போதுமான அளவு இல்லையென்று நினைவு. இந்த முறை எப்படியிருக்கிறதோ, பார்க்கலாம்.

அகில இந்திய வானொலி அரங்கும், பொதிகைத் தொலைக் காட்சி அரங்கும் அருகருகே இந்த முறை அமைந்திருப்பதாக பொதிகைத் தொலைக்காட்சியில் திரு திருப்பூர்க் கிருஷ்ணனுக்கு அளித்த பேட்டியில் திரு வைரவன் (செயலாளர்), திரு வெங்கடாசலம் ஆகியோர் தெரிவித்தனர்.


அரங்குகள் 100 ச. அடி, 200 ச.அடி, 300 ச. அடி அளவில் பதிப்பகங்களின் புத்தகத் தேவைக்கேற்ப வழங்கப் பட்டிருக்கிறதாம்.

                                        

சங்க உறுப்பினர்கள் 480 பேருக்கு சுற்றறிக்க அனுப்பப்பட்டு, முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கிறதாகவும், விரிவாக செய்தித் தாள்களில் விளம்பரம் செய்தால் அனைவருக்கும் அரங்குகள் வழங்க முடியாது என்றும் சொன்னார்கள்.

இம்முறை புத்தகத் திருவிழா இன்னும் கூடத் தள்ளித் திறக்க ஆலோசிக்கப் பட்டாலும் டிசம்பரில் நடைபெறும் சங்கீத சீசனுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு எப்படி வெளியூர், மற்றும் முக்கியமாக வெளிநாட்டு ரசிகர்கள் வருகின்றனரோ அதே போல இந்தக் கண்காட்சிக்காகவும் வரத் திட்டமிட்டிருக்கும் வெளிநாட்டு ரசிகர்களை - பொங்கல் விடுமுறையை உபயோகித்து வருபவர்கள் - ஏமாற்றாமல் அந்தத் தேதிகள் கவர் செய்து தொடங்கி விட்டனராம்.


வேலை நாட்களில் பகல் 2.30 முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும். 
                                          
                                                        
                                             

வழக்கமாக 5 வழங்கப்படும்  விருதுகளுடன் குழந்தைகளுக்காக அறிவியல் புனைவுகள் எழுதும் நெல்லை சு முத்து வழங்கிய 1,00,000 ரூபாய் நன்கொடையை வைத்து சிறுவர் அறிவியல் இலக்கிய விருது ஒன்றும் இந்தமுறை வழங்கப் படுகிறதாம். இம்முறை அந்த விருது வழங்கப்படும் நூல் மேரி கியூரி பற்றிய சித்திரக் கதைக்கு என்றார் திரு வைரவன்.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பதிப்பகங்கள் வரிசைக்கு இடம் கொடுக்க நினைத்தால் சென்னையிலேயே இடமிருக்காது என்றார். முந்திக் கொள்பவர்களுக்குத்தான் வாய்ப்பு என்றார்.

                                         

'மின்னல் வரிகள்' கணேஷ் எழுதிய 'சரிதாயணம்' புத்தகம் 'டிஸ்கவரி புக் பாலஸ்' அரங்கில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். என்ன விலை கணேஷ்?

மேலும் கணேஷ் சொல்லியுள்ள படி பதிவர்கள் கவியாழி கண்ணதாசன் அவர்கள் புத்தகமும், கோவை மு. சரளா அவர்கள் புத்தகமும் வெளியாகி, இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கலாம் என்று தெரிகிறது. அருணா செல்வம் எழுதியுள்ள 6 கவிதைத் தொகுப்புகள் மணிமேகலைப் பிரசுரத்தில் கிடைக்கும் என்று அவர் கணேஷ் பக்கத்தில் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதயம் பேத்துகிறது கே ஜி ஜவர்லால் மொழிபெயர்த்து எழுதியுள்ள இரண்டு புத்தகங்கள் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. மௌனத்தின் அலறல், தன்னாட்சி. இடம் கிழக்குப் பதிப்பகம். 

     

புத்தகக் கண்காட்சிக்குப் போக நினைப்பவர்கள் கையைத் தூக்கலாம். வாங்க விரும்பும் புத்தக லிஸ்ட் இங்கும் கொடுத்தால் இங்கு படிப்பவர்களுக்கும் தாங்கள் என்ன புத்தகம் வாங்கலாம் என்பதற்கு டிப்ஸ் கிடைக்கலாம்.

விகடன் இயர் புத்தகத்துக்கு ஏக விளம்பரம்... எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 'ஸ்ரீ
வைஷ்ணவம்', மௌனியின் மறுபக்கம், 'அறம்'  ஜெமோ சிறுகதைத் தொகுப்பு, ஸுஜாதா விஜயராகவன் எழுதிய சங்கீதம் பற்றிய நாவல் ஆடியோ சிடியில்(பெயர் என்ன?) போன்றவை மனதில் இருக்கின்றன. அதிகம் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டும். இம்முறை ரொம்ப வாங்கக் கூடாது என்று எண்ணம். 'சுகா' ஏதாவது புதிய புத்தகம் எழுதியிருக்கிறாரோ?