அண்மையில் இரு பதிவர்களை சந்தித்து அளவளாவியது மகிழ்ச்சியான விஷயம். சிறந்த உபசரிப்பு, மனம் திறந்த பேச்சு நெகிழ வைத்தது.
இருவரும் தாம் பதிப்பித்த தம். நூல்களை அன்பளித்தனர். ஓசியில் பெறுகிறோமே என்ற குற்ற உணர்வு இருப்பினும் புத்தகம் படிக்கும் ஆசை மேலோங்கிடப் பெற்றுக் கொண்டோம்.
கடமை உணர்வோடு இரண்டு புத்தகங்களையும் ஒரே மூச்சில் படித்து ரசித்தேன். நண்பர்கள் எழுதியது,என்பதால் அவை டாப்பாக இருப்பதாய்த் தோன்றுகிறது.
நாம் அறிந்தவர், நமது நட்பு வட்டத்தில் இருப்பவர் எழுதிய நூல்களை நாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும். நூலாசிரியர்களும் நூல் விலையை (பெற்றுக்கொண்டவர் தர முன் வந்தால்) பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிரபலம் இல்லாத ஒரு பெயரை ஆசிரியர் என்று குறிப்பிடப் பட்டுள்ள, ஒரு நூலை சாதாரணர் வாங்க எந்த மாதிரியான தூண்டுகோல் உதவும் ?
விளம்பரம் இல்லாத ஒருவரை புத்தகம் வெளியிட தைரியம் தருவது எது ?
சிந்திக்கத் தூண்டும் விஷயம்.