குடியிருப்புகள் நிறைந்த பகுதி. அங்கு ஒருவர் நாய் வளர்த்து வந்தார்.
அவர்கள் தினமும் இரவில் நாய் குரைப்பதால் தங்கள் தூக்கம் கெட்டுப் போவதாகப் புகார் செய்த வண்ணம் இருந்தனர்.
இரவு தூக்க மாத்திரை கொடுக்கலாமா என்று கூட யோசனை செய்து கொண்டிருந்த போது நண்பர் அறிவு ஜீவி வந்தார்.
இவரையும் ஒரு தடவை கலந்து ஆலோசிக்கலாம் என்று அவரிடம் நடந்த விவரங்களை சொல்லி, அதற்குத் தீர்வு கேட்டார்.
அறிவுஜீவி சிரித்து விட்டார். "என்னய்யா..! இவ்வளவு சுலபமான விஷயத்துக்கு
இவ்வளவு சிரமப்படுகிறீர்?" என்று சொல்லியவர், மறுநாள் வரும்போது ஒரு
கழுத்துப்பட்டையுடன் வந்தார்.
அதில் நாய் சொந்தக்காரர் பற்றிய விவரம் நாயின் பெயர் போன்ற விவரஙகள் வைக்க ஒரு பை இருந்தது. அதில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு பட்டையை நாயின் கழுத்தில் சுபயோக சுப தருணத்தில் அணிவித்தார்.
நாய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து, ஆனால் குரைக்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. காத்திருந்து காத்திருந்து அதிசயத்தில் ஆழ்ந்துபோன நண்பர்,
"அறிவு.. என்ன ஆச்சரியம்?" என வினவ ..
"எங்க பாட்டி சொல்லிக் கேட்டிருந்தேனே தவிர இதுவரை சோதித்துப்
பார்த்ததில்லை. இப்போதுதான் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது" என்றார் அ. ஜீ.
"உங்கள் பாட்டியும் எங்க பாட்டியும் ஒரே ஊர்க்காரர்கள் தானே..
பின்னே ...?" என்று நண்பர் இழுக்க...
பின்னே ...?" என்று நண்பர் இழுக்க...
"ஏன்யா நாய் with a காசு குரைக்காது என்று கேள்விப்பட்டதில்லை?" என்றதும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க..
ஜிம்மியும் "ஊஃப்..... ஊஃப்" என்று சிரிப்பில் கலந்து கொண்டது.