கால் கிலோ பச்சை மிளகாயை அலசி எடுத்துக் கொண்டோம்.
கொஞ்சம் புளி எடுத்து கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொண்டோம்.
பற்ற
வைத்த அடுப்பில் வாணலியை ஏற்றி, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம்,
ரெண்டு உ.ப, ரெண்டு க.ப வுடன் பெருங்காயம் தாளித்து, கீறிய பச்சை மிளகாயை வாணலியில் போட்டு வதக்கினோம்.
ரெண்டு
சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, புளித் தண்ணீரை
அதில் ஊற்றி கொதிக்க வைத்தோம். கொஞ்சூ......ண்டு வெல்லம் போட்டோம்.
கெட்டியாக வந்ததும் இறக்கி விட்டோம்.
அவ்ளோதான்...
மோர் சாதமா, தோசையா.. என்ன இருக்கு? கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்.
ஆனால்....
வயிறு
பத்திரம். அளவாய்ச் சாப்பிட வேண்டும். தைரியமிருப்பவர்கள் செய்து
சாப்பிடலாம்! முதல் மூன்று நாட்கள் இருக்கும் காரம் அப்புறம் குறைந்து
விடும்!
மேலே பாத்திரத்தில் இருப்பது பத்து நாட்களில் பாதிக்கும் மேல் காலியான
நிலையில் எடுத்த படம். தினமும் சாப்பிடும்போது மட்டும் வெளியே எடுத்து,
பின்னர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடுவோம்.
ஆலோசனை சொன்ன கீதா மேடத்துக்கு நன்றிகள்.
ஆலோசனை சொன்ன கீதா மேடத்துக்கு நன்றிகள்.
என் அம்மா கெட்டியான புளித் தண்ணீரில் பச்சையாகவே மிளகாயை ஊறப் போட்டு வெயிலில் வைத்து விடுவார். அது காயக் காய டேஸ்ட். அப்புறம் அதை எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுவோம்.








