Advt. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Advt. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.9.09

INDIA vs. & ADVT., ஒரு புலம்பல்

முதல் Match -இல் ஷோயப் மாலிக் சொல்லி சொல்லி Point திசையில் Four Four ஆக விளாசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் ஒரு Fielder நிறுத்திவைக்க தோன்றாதது ஏன்? 'கம்மேன்டி'க் கொண்டிருந்த வாசிம் அக்ரம் கூட கேட்ட கேள்வி இது. Cool கேப்டன் அல்லது....
நீண்ட நாட்களாய் Form இன்றி தவித்துக் கொண்டிருக்கும் ஆட்டக் காரர்களை Form -க்குக் கொண்டுவருவது நம் வாடிக்கை. அதையேதான் அன்று ஷோயப், யுஸுப் விஷயத்திலும் நடந்தது.
நம்மவர்கள் Batting செய்ய வந்தபோது நடந்த கூத்து வழக்கமானது.
அடுத்த ஆட்டத்தில் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்த யுஸுப் பதானை மாற்றினார்கள், சரி. ரன்கள் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த இஷாந்த் ஷர்மாவை ஏன் மாற்றவில்லை? எட்டாவது ஓவர் வரை கட்ட்டுப்பாட்டுடன் இருந்த ரன் சேகரிப்பை மூன்று ஓவர் முப்பது ரன்கள் என்று வாரிக் கொடுத்து போக்கையே மாற்றிய புண்ணியவான்.
விராத் கொஹ்லி என்று ஒரு புண்ணியவான்...கைக்கு வந்த காட்சைக்கூட ஏன் பிடிக்கலை என்று கேட்டால், 'என்னை ரொம்ப நல்லவன்னு பாண்டிங் சொல்லிட்டார்' என்று அழுதுடுவார் போல..பந்து தாண்டி சென்றதும் விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுகிறார்...
ஒரு காட்சை Fielder பிடிக்கப் போகும் தருணம்...பிடித்தாரா என்று கூட சரியாகப் பார்க்க முடியாது. உடனே விளம்பரத்துக்கு ஓடி விடுவார்கள் சானல் மகராசன்கள். வருமானமாம்...எனக்கொரு சந்தேகம்...தொலைக் காட்சி விளம்பரத்தைப் பார்த்து யார் பொருட்கள் வாங்குகிறார்கள்? சில சமயம் திரும்ப திரும்ப வரும் விளம்பரத் தொல்லையால் அந்தப் பொருள் கட்டாயம் வாங்கக் கூடாது என்று வைராக்கியம் கூட வருகிறது. மேலும் பல விளம்பரங்களில் சம்பந்தம் இல்லாத காட்சிகளால் புரிவதே இல்லை. நொடிகளுக்கு காசு கொடுத்துப் பேசுவதற்கும் இரண்டு பெண்களுக்கு நடுவில் அமர்வதற்கும் என்ன சம்பந்தமோ? ஷூ விளம்பரத்தில் சிக்கன ஆடை அணிந்த பெண் எதற்கோ? குறிப்பிட்ட பற்பசையை உபயோகித்தால் கௌரவமான (?) போலீஸ் பெண்மணி உங்கள் பின்னாடியே ஜொள்ளுடன் வந்து விடுவாராம்.என்னங்க இது?