Car parking லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Car parking லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.3.12

எப்படி சமாளிப்பது?


சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் அடிக்கடி நிகழும் பிரச்னை இது. 

'எப்பொழுது வந்து நின்றது, யார் நிறுத்தினார்கள்' என்று தெரியாது. ஆனால், நம் வீட்டு வாசலில், கேட்டுக்கு மிக அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஸ்கூட்டர் / பைக் போன்று இருந்தால் கூட அப்புறப்படுத்திவிடலாம். ஆனால், இது கார். கண்ணாடிகள் ஏற்றப்பட்டு, (அதுவும் உள்ளே பார்க்க முடியாதபடி கறுப்புக் கண்ணாடிகள்!) அழகாக நிறுத்தி இருப்பார்கள். 

தொடர்ந்து இரண்டு நாட்கள் முதல், ஒரு வாரம் பத்து நாட்கள் கூட இவ்வாறு நிறுத்தி வைத்து விடுவார்கள். 

நம் வீட்டு நாலு சக்கர வாகனத்தை வெளியில் எடுக்க முடியாது. நாம் நினைத்தபடி வெளியில் எங்கும் சென்று வர இயலாது. கிட்டத் தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட கைதிகள் போல நாம் இருக்கவேண்டிய நிலைமை! 

கார் சொந்தக்காரர் யார் என்று தெரியாது. கொண்டு வந்து நிறுத்தியவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ('ஓஹோ - அப்படீன்னா அது உங்க கார் இல்லையா?' என்று கேட்பார் பக்கத்து வீட்டு ஓ சி பேப்பர் படிப்பாளி!) 

இந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு அல்லது இப்படி நேராமல் தடுக்க என்ன வழி? வாசகர்கள் வழிகள் சொல்லுங்கள். 
=================

கீழே காணும் பார்க்கிங் எப்படி செய்வது? நீங்கள் யாராவது முயன்றது உண்டா? 
    
இந்த சப்ஜெக்டில் இருக்கும் பொழுதே ஓரிரு கார் (டிரைவிங்) ஜோக்குகளும் சொல்லி முடிக்கின்றேன். 
    
வேகமாக வந்த கார், வீட்டுக் காம்பவுண்டு சுவரை இடித்துக் கொண்டு உள்ளே வந்து நின்றது. கோபமாக ஸ்தலத்திற்கு விரைந்து வந்த வீட்டு சொந்தக்காரரிடம், காரை ஓட்டி வந்தவர் கேட்டார்: "எக்ஸ்கியூஸ் மீ. திருநீர்மலை கோவிலுக்கு எப்படி போவது? வழி சொல்வீர்களா?"
  
வீட்டு சொந்தக்காரர்: " இப்படியே நேரா போனீங்கன்னா எங்க வீட்டு ஹால் வரும். அதை இடித்துவிட்டு போனீங்கன்னா சமையலறை. அதையும் இடிச்சுகிட்டு கொல்லைபுறம் போனா கொஞ்ச தூரத்துல திருநீர்மலை ஏரி வரும். அதுல விழுந்து அக்கரைக்குப் போயிட்டா, மெயின் ரோடு. அதுல போனா திருநீர்மலைக் கோவில் வந்துடும்."  
    
****

படு வேகமாக வந்த கார், ஒரு பாதசாரியை இடிக்காத குறையாக அருகே பெரிய ஹாரன் சத்தத்துடன், சடன் பிரேக் போட்டு நின்றது. கார்க்கண்ணாடிக் கதவை சற்றுக் கீழே இறக்கிய ஓட்டுனர், பதற்றத்துடன், "சார்! ஷேக்ஸ்பியர் வீட்டுக்கு எப்படிப் போகவேண்டும்?" என்று கேட்டார். 
  
பாதசாரி, விவரமாக வழியைக் கூறிவிட்டு, "நீங்க நிதானமாகவே போகலாம். ஷேக்ஸ்பியர் செத்துப் போய் ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு" என்றார்!