Don't smoke லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Don't smoke லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.7.13

வெறும் செய்திகள் அல்ல.

                    
இன்று செய்தித்தாளில் பார்த்த, படித்த இரண்டு விஷயங்கள், மனதை தைத்தன. 

ஒன்று, இருபத்து நான்கே வயதான (கன்னடப்பட) நடிகர் ஹேமந்த் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

டாக்டர்கள் கூறிய விவரம்: ஹேமந்த் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் (செயின் ஸ்மோக்கர்). அவருடைய மாரடைப்புக்கு இது ஒரு முக்கிய காரணம். 

அதே செய்திப் பக்கத்தில் உள்ள பெட்டிச் செய்தியில், காணப்படும் விவரம்: ஹேமந்த் தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கம்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்தார். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், உலகத்தோருக்கு ஒரு செய்தியை, இறுதியாக அளிக்கவேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே செய்தார். 
  
தன்னைக் காண வந்த உறவினர் ஒருவரிடமிருந்து பேப்பரும் பேனாவும் கேட்டுப் பெற்று, அதில் அவர், எழுதிய இரண்டே வார்த்தைகள்: "புகை பிடிக்காதீர்கள்" (Don't smoke) - இந்த விவரங்களைக் கூறியவர் அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் வி எஸ் பிரகாஷ். 

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஹேமந்தின்  மரண வாக்குமூலத்தை ஒவ்வொரு முறையும் புகை பிடிக்கும் முன்பு யோசிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். 
====================

இரண்டாவது செய்தி, மூன்று வயது பெண் குழந்தை பற்றியது. 
இந்தக் குழந்தை, ரிஷிகேஷ் பகுதியில், அண்மையில் நிகழ்ந்த பேரழிவுப் பகுதியில் கடுமையான காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாள். இந்தக் குழந்தைக்கு, 'தான் யார், தன்னுடைய ஊர் எது, பெற்றோர் யார்' என்ற விவரங்களை, சொல்லத் தெரியவில்லை. 

இவளைப் பற்றியோ, அல்லது இவளுடைய பெற்றோர் பற்றியோ விவரம் அறிந்தவர்கள், அவற்றை 0135 - 2726066 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கூறலாம். (இது டேராடூன் தாலுக்கா பேரழிவு கட்டுப்பாடு பிரிவின் தொலைபேசி எண் - District Disaster Control Room, Dehradun). 
   
நம்முடைய நண்பர்கள் எல்லோரும், இந்தப் பதிவினை, உங்கள் வலைப்பதிவு, முகநூல், ட்விட்டர் போன்ற எல்லா சமூகத் தளங்களிலும் நண்பர்களுக்கு இந்தப் பதிவின் லிங்க் கொடுத்தும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
   
இவை இரண்டுமே மிகவும் முக்கியமான செய்திகள். முதல் செய்தி புகை அரக்கனிடமிருந்து அந்தப் பழக்கம் உள்ளவரைக் காப்பாற்ற உதவும். இரண்டாவது செய்தி, ஒரு மழலையின் துயர் துடைக்க உதவும். 
  
நன்றி நண்பர்களே!