எங்கள் வீடு அமைந்திருப்பது நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம். அதில் ஒரு பக்கம் ஒரு காலி மனை. பத்து நிமிடங்களுக்கு ஒருவராக அங்கு ஒன் பாத்ரூம் போன வண்ணம் இருப்பதை எப்போதும் பார்க்கலாம். ஒரு கல் அல்லது இன்னும் அவலமாக எதையாவது எடுத்து வீசி நறுக் என்று நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்கலாமா என்று ஒரு உந்துதல் அவ்வப் போது வரும். பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொள்வேன். எழுத்தாளர் சிவ சங்கரி கூட ஒரு நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டும் இந்த மாதிரி பிளாடர் கண்ட்ரோல் இல்லாமல் அசிங்கப் படுத்துவதைக் குறிப்பிட்டு வருத்தப் பட்டார். இதுவும், போக்கு வரத்தில் ஒரு ஒழுங்கு இல்லாமல் குறுக்கே பாய்ந்து ஓடுவதும் இந்த நாட்டின் அடையாளங்களாகப் போய் விட்டன.
இதே இந்தியர்கள் மலேசியா அல்லது அமெரிக்கா போனால் இப்படி எதுவும் செய்யாமல் மிகச் சரியாக நடந்து கொள்கிறார்களே என்று ஒரு பிரபல பேச்சாளர் ஆச்சரியப் பட்டார். அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று உரத்த சிந்தனை செய்தார்.
அதற்குக் காரணம் எனக்குத் தெரியும். நம் ஊரில் பையில் காசு இருந்தால் நீங்கள் கொலை செய்துவிட்டுக் கூடத் தப்பித்து விடலாம். அதற்கு யாரைப் பார்க்க வேண்டும், ரேட் பேச யாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் வரை முறை படுத்தப் பட்டு இருக்கிறது. இந்த வசதி மலேசியாவிலோ அமெரிக்காவிலோ இருக்காது என்றோ, அல்லது யாரைப் பார்க்க வேண்டும் எவ்வளவு வெட்ட வேண்டும் என்று தெரியாததோ தான் நம் நாட்டவர் காட்டும் ஒழுங்கு முறைக்குக் காரணமாக இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் நம்மவர்கள் அங்கும் பூந்து புறப்படுவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.
அக்கிரமமான சட்டங்களை எதிர்த்து காந்தி சாத்வீகப் போராட்டம் செய்தார். நாம் சாத்வீகத்தைக் கற்கவில்லை சட்டத்துக்கு மரியாதை தராமலிருக்கக் கற்றுக் கொ்ண்டு விட்டோம். சட்டத்தை மீறுதல் ஒரு வீரச் செயலாகப் பார்க்கப் படுகிறது. நம் பாராளுமன்ற செல்வங்கள் துணை சபாநாயகர் மீது காரித்துப்பாத குறையாக நடந்து கொள்வதற்கு வேறு என்ன சமாதானம் சொல்ல முடியும்?
கூட்டணி கர்மங்கள், சாரி, கூட்டணி தர்மங்கள் வேறு நடவடிக்கை எடுப்பதற்குப் பெரும் தடையாக இருக்கின்றன. இடைத் தேர்தல்களில் கூட மதிப்பு மிக்க நம் வாக்குகள் இப்படி வக்கில்லாதவர்களுக்கு போய் விழும் கொடுமையை நினைந்தால் நெஞ்சு பொறுக்குதிலையே என்று பெருங்குரலெடுத்துப் பாடத் தோன்றுகிறது.
ஐம்பது வருட காலத்துக்கு முந்தைய ஜோக் ஒன்று இதோ:
நேருவை நேரில் சந்தித்துப் பேச கென்னெடி டெல்லி வந்திருந்தார். இருவரும் பேசியபடி, டெல்லி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அங்கே சாலையோரத்தில் ஒரு நபர் மும்முரமாக 'மூ' போய்க் கொண்டிருந்தார். அதைப் பார்த்த கென்னெடி, "நேரு அவர்களே - அணு ஆயுத பரிசோதனைத் தடை ஒப்பந்தம் குறித்தெல்லாம் நீங்க பேச ஆரம்பிக்கு முன்பாக - உங்க நாட்டுல சாலையோர சிறுநீர் கழிப்போரை தடை செய்யும் ஒப்பந்தம் குறித்து சிந்திப்பது நல்லது" என்றார். நேருவின் முகம் சிவந்து போனது.
ஆறு மாதங்கள் கழித்து, நேரு அமெரிக்காவுக்கு, கென்னெடியை சந்தித்து விவாதம் செய்யச் செல்கிறார். இருவரும் பேசியபடியே நடந்து செல்கிறார்கள். என்ன ஆச்சரியம்! இங்கேயும் ஒரு ஆள் சாலையோரத்தில் மு, மூ! விடுவாரா சந்தர்ப்பத்தை நேரு? அவர் கென்னெடியைப் பார்த்து சொன்னார், " ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!"
மிகவும் அவமானப் பட்டுப் போன கென்னெடி - தன உதவியாளரிடம் சொன்னார். " முதலில் அந்த ஆளை அரெஸ்ட் பண்ணி உள்ளே போடுங்க. பப்ளிக் நியூசன்ஸ் கேஸ் புக் பண்ணுங்க. "
உதவியாளர் அந்த மு மூவிடம் போய் சற்று நேரம் பேசிவிட்டு, திரும்பி வந்தார். கென்னெடி கேட்டார், "ஏன்? அவரை அரெஸ்ட் செய்யலையா? " உதவியாளர் கூறினார் - "அவரை முன் அனுமதி இன்றி அரெஸ்ட் செய்ய முடியாது. அவர் இந்திய தூதரக உயர் அதிகாரி."