கம்பு மாவு சேவை
இந்த ரெசிப்பி பார்த்து பிடிச்சவங்க செஞ்சும் பார்க்கலாம். வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிட நினைப்பவர்களுக்கு.
பிடிக்கலைனா கடந்திடலாம்!
கோமதிக்கா அவங்க கருத்தில் சொன்னபடி, சேவை
/ இடியாப்பம் மெஷின் பயன்படுத்துவதை காணொளி எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
கம்பு மாவு உங்களுக்குத் தேவையான அளவை எடுத்துக்கோங்க.
நான் இங்கு 1 கப் மாவு தூக்கலாக - heaped - ஆக எடுத்துக் கொண்டேன். கம்பு மாவில் க்ளூட்டன்
இல்லாததால் கொஞ்சம் உலர் தன்மை கொண்ட மாவு எனவே தேவைப்பட்டால் கூடவே 2 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவோ அல்லது 1/4 கப் கேழ்வரகு மாவோ எடுத்துக் கம்பு மாவோடு கலந்து கொள்ளலாம்.
நான் இம்முறை 2 டேபிள் ஸ்பூன் சம்பா கோதுமை மாவு (சம்பா கோதுமை மாவுதான் பயன்படுத்துகிறேன்)
கலந்து கொண்டேன்.
சேவை என்றால் மாவை லைட்டாக வறுத்துக்கோங்க.
அதாவது சூடு ஆனால் போதும். இப்படிச் செய்யாமலும் செய்யலாம்தான்.
ஒரு கப் மாவு + 2 மேசைக்கரண்டி கோதுமை மாவுக்கு
1 1/2 கப் தண்ணீர். என்ற அளவில், வாணலியில் விட்டு, தேவையான உப்பு போட்டு, இரண்டு ஸ்பூன்
தேங்காய் எண்ணையோ நல்லெண்ணையோ விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்
முன் 1 ஸ்பூன் அளவு மாவை அதில் கலந்து விடவும். இது கொதிக்கும் போது மொத்த மாவைப் போடும்
போது கட்டி தட்டாமல் இருக்க உதவும். (காணொளியில் இருக்கும் பார்த்துக் கொள்ளலாம்)
அடுப்பை ஆஃப் செய்துவிட்டு, மாவை ஒரு மூடி
போட்டு வைத்துவிட்டு கை பொறுக்கும் சூடு ஆனதும் மாவை நன்றாகப் பிசைய வேண்டும்.
அதிலிருந்து கொழுக்கட்டை
செய்து ஆவியில் வேக வைத்து சேவை நாழியில் பிழிய வேண்டும். இதோ வலப்பக்கம் இருக்கும் படத்தில் உள்ள மெஷின் பயன்படுத்திதான் நான்
தற்போது பிழிந்தேன்.
சேவை ரெடி.
=========================================================================
இடியாப்பம்
இடியாப்பத்திற்கு - மாவை சற்று வாசனை வரும்
வரை வறுத்துக்கோங்க. (சிவந்துவிட வேண்டாம்).
மேலே சொன்னபடி மாவைக் கிளறி மூடி போட்டு வைத்துவிடுங்கள். (இரண்டிற்கும் இது பொதுதான். மேலே முதல் பகுதியில் கொடுத்திருக்கும் படங்கள்தான்)
கைப்பொறுக்கும் சூட்டில் மாவைப் பிசைந்து பிசைந்த மாவிலிருந்து உருண்டைகளாக அதாவது கொழுக்கட்டையாகச் செய்யவும்.
இடியாப்ப அச்சில் போட்டு முன்பெல்லாம் சேவை நாழியில் இடியாப்பத்திற்கும் பிழிவதுண்டு. இல்லைனா இடியாப்ப அச்சில் - சிலோனில் என் பாட்டி காலத்தில் வாங்கிய அச்சு என் வரை வந்திருக்கிறது. தற்போது சேவை நாழியின் கால்கள் உடைந்து போனதால் நான் விரும்பியபடி நாழி கிடைக்காததால் இந்த மெஷின் ஏதேச்சையாக அமைந்ததைச் சொல்லியிருந்தேன் இல்லையா....அதில்தான் இடியாப்ப தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
இடியாப்பம் ஆவியில் வெந்தது வலப்புறம்
தேங்காய் சாதம் செய்வது போல் செய்த தேங்காய் இடியாப்பம் வலப்புறம்
இப்படி இடியாப்பம் பிழியும்
போது ஒரு சுற்று பிழிந்துவிட்டு இடையில் தேங்காய்த் துருவல் தூவி அடுத்து இன்னொரு சுற்றும்
பிழியலாம். நான் அன்று தேங்காய் போடவில்லை. காரணம் இடியாப்பம் பிழிந்து அதை தேங்காய்
சாதம் செய்வது போல், தேங்காய் இடியாப்பம் செய்ததால்.
இரு செய்முறைகளையும் ஒரே காணொளியாகக் கொடுத்திருக்கிறேன். காணொளி கீழே.
வித விதமா சேவைல கலக்கறீங்க. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஎனக்கென்னவோ வெள்ளை நிறத்தில் சேவை இல்லைனா அவை இனிப்பு சேவைக்குத்தான் நல்லாருக்கும்னு தோணும். (ரஞ்சனி நாராயணன்ன் மேடம் வீட்டிற்கு ராகி சேவை ஒரு காலத்தில் கொண்டு வந்தது நினைவில் இருக்கு)
சேவைக்கும் இடியாப்பத்திற்கும் என்ன வேறுபாடு? இது கட்டாத நூல் கண்டு. அது பரத்திய நூல் கண்டு என்பது தவிர?
பதிலளிநீக்குநீங்க காண்பித்திருப்பது ஸ்பூன் மாதிரின்னா இருக்கு. கப் அளவு பெரிசு இல்லையா? படத்திற்காக அப்படிச் செய்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குகம்பு சேமியா, ராகி சேமியா என்று ஆச்சி காரன் விக்குறான், வேணும் எண்டால் நம்பள் வாங்குறான்.
பதிலளிநீக்குஇந்த சேமியா எல்லாம் half cooked. தண்ணீரில் 1 நிமிடம் ஊறவைத்து நீரை வடிகட்டி ஆவியில் வேகவைத்து தாளிக்க வேண்டும். நீரில் கழுவினால் கூடப்போதும். ஊறினால் தோசை மாவாகிவிடும்.
பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கு அடியான் கம்பால் மற்றவரை அடிப்பான், அது தான் கம்பு சேவை என்று சொல்லலாம். ஹா ஹா.
Jayakumar