என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே,
தன்னாலே வெளிவரும் தயங்காதே,
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
இது சமீபத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரால் பாடப் பெற்றப் பாட்டு.
இது தன்னைக் குறித்துத்தான் பாடினார் - எம்ஜியார் என்று 'நெஞ்சுக்கு நீதி' எழுதியவர் சொன்னார். அப்புறம் அது அண்ணா அவர்கள் குறித்துத்தான் பாடினார் எம்ஜியார் என்று பாடியவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.
இன்று ஜெயா டி வி இல், எம்ஜியார் - 'அம்மா' பற்றி ' ராமன் தேடிய சீதை' படத்தில் பாடிய பாட்டாக, "திருவளர் செல்வியோ? நான் தேடிய தலைவியோ?" என்ற பாட்டு, 'கோட்' செய்யப்பட்டது.
இதை எல்லாம் பார்க்கும் பொழுது, கேட்கும் பொழுது, புரட்சித் தலைவர் அவர்கள் 'எங்கள்' பற்றிப் பாடியவை - எங்கள் கவனத்திற்கு குரோம்பேட்டைக் குறும்பனால் கொண்டுவரப்பட்டது. நாங்க அதைப் பார்த்து மெய் சிலிர்த்தோம். அட 'எங்கள்' பற்றி, எம்ஜியார் அந்தக் காலத்திலேயே பாடி விட்டாரே!
" ஒரு தாய் மக்கள் நாம் என்போம்; ஒன்றே 'எங்கள்' குலம் என்போம்!"
" ஒன்று 'எங்கள்' ஜாதியே, ஒன்று 'எங்கள்' நீதியே !
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!"
இதே பாட்டில், 'ஆதிமனிதன்' பற்றி கூட வந்திருக்கு!
ஹி ஹி !!