ஓட்ஸ் பாயசம்.
நூறு கிராம் ஒயிட் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, ஓட்ஸை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
வறுத்தாச்சா?
வெரி குட். இப்போ இரண்டு கப் தண்ணீர் விட்டு, ஓட்ஸ் நன்றாகக் கரையும் வரை வேக விடவும்
விட்டாச்சா?
இந்தக் கலவையில் நூறு கிராம் சீனியைப் போட்டுக் கரையவிடவும். (இதுதான் காகத்திற்கும் சீனிக்கும் உள்ள ஒற்றுமை. இரண்டுமே கரையும்!)
கரைச்சாச்சா?
இப்போ கால் லிட்டர் பாலை ஓட்சில் சேர்த்து, கொதிக்க வைக்கவேண்டும்.
கொதிச்சுடுச்சா?
கீழே இறக்கி வைக்கவும்.
இருங்க அவசரப்படாதீங்க!
ஐந்து கிராம் பிஸ்தாப் பருப்பு, மூன்று நான்கு முந்திரிப் பருப்புகள் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்து, பாயசத்தில் போடுங்கள்.
ஜாதிக்காய் அரை மட்டும் எடுத்து, நெய்யில் வறுத்துப் பொடி செய்து, பாயசத்தில் போடவும். கலக்கவும்.
இருபது நிமிடங்கள் ஆற விடுங்கள்.
ஓட்ஸ் பாயசம் ரெடி. அனைவரும் பகிர்ந்து அருந்துங்கள்.






