ஒன்று:
ஒரு பெண், ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். வந்துகொண்டிருந்தாள்.
வழியில் ஒரு பெரியவர், அவர்களைப் பார்த்தார். அவர் ஊருக்குப் புதியவர்.
அந்தப் பெரியவர், அவளிடம், " இந்தப் பையன் யாரம்மா?" என்று கேட்டார்.
அந்தப் பெண் கூறியதாவது: " இவனுடைய அப்பா யாருக்கு மாமனாரோ, அவருடைய அப்பா எனக்கு மாமனார்."
பெரியவருக்கு சட்டென்று புரியவில்லை. உங்களுக்கு யாருக்காவது புரிந்தால், பெரியவருக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
இரண்டு:
இந்தப் படத்தைப் பாருங்கள்.
பச்சை நிறத்தில் இருப்பது ஒரு காடு. மரங்களும், சிறு / பெரு கற்கள் அந்தக் காட்டில் நிறைய இருக்கின்றன.
மஞ்சள் நிறத்தில் இருப்பது, மணல் பிரதேசம்.
எஃப் உயரமான முள் வேலி.
நீல வண்ணத்தில் இருப்பது, சதுரமான கிணறு. எட்டடி X எட்டடி உள்ள ஆழமான கிணறு.
U என்ற மனிதன், காட்டில் தட்டுத் தடுமாறி, படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு வந்துவிட்டார்.
அங்கே P1 , P2 என்று இரண்டு மரக்கட்டைகள் கிடக்கின்றன. பெரிய மரக்கட்டை, ஏழடி நீளம், அரை அடி அகலம், ஓரங்குல தடிமன். சிறிய மரக்கட்டை, மூன்றடி நீளம், அரை அடி அகலம், ஓரங்குல தடிமன். மேலும் ஒரே ஒரு ஒன்றரை அங்குல நீள ஆணி. இவை தவிர வேறு எந்த பொருட்களும் இல்லை. அந்த இரண்டு மரக்கட்டைகள், ஒரு ஆணி இவற்றைப் பயன்படுத்தி, மிஸ்டர் யூ, கிணற்றைக் கடந்து, மணல் வெளிக்குச் செல்ல வேண்டும். How? What can U do?
மூன்று:
What number comes at X?

