ஒன்று:
ஒரு பெண், ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். வந்துகொண்டிருந்தாள்.
வழியில் ஒரு பெரியவர், அவர்களைப் பார்த்தார். அவர் ஊருக்குப் புதியவர்.
அந்தப் பெரியவர், அவளிடம், " இந்தப் பையன் யாரம்மா?" என்று கேட்டார்.
அந்தப் பெண் கூறியதாவது: " இவனுடைய அப்பா யாருக்கு மாமனாரோ, அவருடைய அப்பா எனக்கு மாமனார்."
பெரியவருக்கு சட்டென்று புரியவில்லை. உங்களுக்கு யாருக்காவது புரிந்தால், பெரியவருக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
இரண்டு:
இந்தப் படத்தைப் பாருங்கள்.
பச்சை நிறத்தில் இருப்பது ஒரு காடு. மரங்களும், சிறு / பெரு கற்கள் அந்தக் காட்டில் நிறைய இருக்கின்றன.
மஞ்சள் நிறத்தில் இருப்பது, மணல் பிரதேசம்.
எஃப் உயரமான முள் வேலி.
நீல வண்ணத்தில் இருப்பது, சதுரமான கிணறு. எட்டடி X எட்டடி உள்ள ஆழமான கிணறு.
U என்ற மனிதன், காட்டில் தட்டுத் தடுமாறி, படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு வந்துவிட்டார்.
அங்கே P1 , P2 என்று இரண்டு மரக்கட்டைகள் கிடக்கின்றன. பெரிய மரக்கட்டை, ஏழடி நீளம், அரை அடி அகலம், ஓரங்குல தடிமன். சிறிய மரக்கட்டை, மூன்றடி நீளம், அரை அடி அகலம், ஓரங்குல தடிமன். மேலும் ஒரே ஒரு ஒன்றரை அங்குல நீள ஆணி. இவை தவிர வேறு எந்த பொருட்களும் இல்லை. அந்த இரண்டு மரக்கட்டைகள், ஒரு ஆணி இவற்றைப் பயன்படுத்தி, மிஸ்டர் யூ, கிணற்றைக் கடந்து, மணல் வெளிக்குச் செல்ல வேண்டும். How? What can U do?
மூன்று:
What number comes at X?
1) அந்தப் பையன் அவள் கணவரின் தங்கை மகன் 2)கட்டைகளும் ஆணிகளும் எதற்காக? சதுரமான கிணற்றை நடந்தே சுற்றி வந்து தாண்டி விடலாமே மிஸ்டர் யூ? 3)தெர்ல.
பதிலளிநீக்குலேட்டா வந்ததுக்கு 5 தோப்புக்கரணம் கொடுங்க மொதல்ல..
பதிலளிநீக்கு(1)
பதிலளிநீக்குThe small boy is (younger) brother(A) of the Lady (B).
Let 'C' be Father of 'A' (the subject).
Supposing 'A' is father-in-law of 'D' and 'E' be father of 'D'.
Now the relations go like this.
E ---> D (Father - Son relation, in the same order)
'C' is FIL of D and E is FIL of 'B' hence 'B' is the wife of 'D'
Hence 'C' is the father of 'B' too and hence 'B' and 'A' have same Father (C).
Thus 'A' is brother of 'B' ('younger' brother as he is termed/referred as 'பையன், சிறுவனை' etc.
(3) 65
பதிலளிநீக்கு1st number in each column defines other numbers in that column.
Let this be 'x' then, each column is written as x; x*(x+1); x*(x+1)+x+2.
1st column starts with 2, hence it is 2, 6, 10
2nd column starts with 4, hence it is 4, 20, 26
3rd column starts with 7, hence it is 7, 56, 65
This is written in matrix form as
(2 4 7)
(6 20 56)
(10 26 65)
(2)
பதிலளிநீக்குIf 'Periodic boundary condition' is not applicable(not mentioned) to the left and right side boundaries, then the soln. is simple. Just go around the ends to cross over.. ha ha ha....
'periodic boundary contion PBC' is shown in this animation :
For this problem, please watch out left and right side only. The circle(molecule) crossing the boundary (left/right) gets a re-entry at the other boundary (right/left respectively)
https://www.youtube.com/watch?v=5qdNafdyaG0
1. அக்கா-தம்பி
பதிலளிநீக்கு(2)
பதிலளிநீக்குIf Time, Energy, stones are not limited, He can fill the well with stones and eventually crossover.
You may wonder, "what's the purpose of wooden sticks, then ?".
Well, as it would take huge time, he would become old. though he has energy, he may need physical support to walk over. He would use wooden stick, as 'ஊன்றுகோல்'. Still wonder regd. the purpose of 'Nail'. No need to use it, as it would have rusted by then.
இரண்டாவது - கிணற்றில் தண்ணீர் இருப்பதாகச் சொல்லவில்லை. கிணற்றில் இறங்கி மேலே ஏறவேண்டியதுதான். உயரமான முள்வேலி இருப்பதால் கிணற்றைச் சுற்றிச் செல்ல முடியாது.
பதிலளிநீக்குமுதல். அக்கா, தம்பி. இவர்களின் அப்பா, தன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த தன் அக்காவின் மகனுக்கு மாமனார். அந்த அத்தையின் இன்னொரு பையனை இவள் கண்ணாலம் செய்துக்குறா.
பதிலளிநீக்குமூன்றாவது- முதல் வரிசையைப் பெருக்கினால் 56. இரண்டாவது வரிசையைப் பெருக்கினால் 6720. இதுதான் மூன்றாவது வரிசையின் கடைசி எண். இன்னொருவிடை (Logical and must be correct) - 2 + 6 = 8. இத்துடன் 2 கூட்டி 10 கடைசி வரிசை எண். அடுத்தது 4 + 20 = 24. இத்துடன் 2 கூட்டினால் 26 கடைசி எண். 7 + 56 = 63. இத்துடன் 2 ஐக்கூட்டினால் 65 மூன்றாவது எண். இரண்டு பதிலில் எதுவுமே சரிதான்.
பதிலளிநீக்குஇரண்டாவதில், மரக்கட்டையை ஒரு supportஆ பிடித்து இறங்கி ஏற வேண்டியதுதான்.
பதிலளிநீக்கு3. 65 மாதவன் சொன்னதுதான்.
பதிலளிநீக்குகிணறு எட்டடி நீளம். இதில் சரிபாதியில் வேலி இருப்பதாகப் படம் சொல்கிறது. கிணற்றின் சுவர் தரைக்குமேலே எத்தனை அடி உயரம் என்று சொல்லவில்லை. அதேபோல் கிணற்றின் சுவர் அகலமும் சொல்லப்படவில்லை. எனவே, கிணறு தரையை ஒட்டியோ அல்லது அந்தச் சுவரில் ஏறும் அளவிற்கோ உயரம் என்று நானாகக் கற்பனை செய்துகொள்கிறேன். இப்போது ஒரு பாதி கிணற்றை மட்டும் எடுத்துக் கொண்டால் இரு பக்கமும் நான்கு அடிகள் கொண்ட ஒரு செங்கோண முக்கோணம் கிடைக்கும். அதன் கர்ணத்தின் ஒரு முனை காட்டிலும், இன்னொரு முனை மணல்வெளியிலும் இருக்கும். இந்தக் கர்ணத்தின் நீளம் 4 v2 (அதாவது 4 x sqroot (2). அது 6 அடியை விடக் குறைவே. ஆனால், நம்மிடம் ஏழரை அடி நீளக் கட்டை இருக்கிறது. அதன் நடுவில் அமையுமாறு அந்தச் சின்னக் கட்டையை ஆணி கொண்டு அடித்துவிடலாம். தற்போது அதன் பருமன் 2 அங்குலமாக ஆகிவிடும் (நடுவில் மட்டும்) தற்போது அந்தக் கட்டைத் தொகுப்பை குறுக்காகப் போட்டுவிட்டால் அதில் ஏறி நடந்து கடந்துவிடலாம்.(மொத்த தூரமான 5 1/2 அடியை மூன்று தப்படிகளில் கடக்குமாறு தாவ வேண்டும்)
பதிலளிநீக்குபதிவைப் படிக்கையிலே
பதிலளிநீக்குதலை வெடிக்கும் போல...
பதிலளிநீக்குமுதல் கேள்விக்கான பதில், அக்கா & தம்பி. சரியாக பதில் சொன்ன மாதவன், பெசொவி, நெல்லைத் தமிழன் எல்லோருக்கும் பாராட்டுகள்! வெல் டன்.
மூன்றாவது கேள்விக்கான விடை : 65. சரியான பதில் எழுதிய, இதே மூவருக்கு, மீண்டும் பாராட்டுகள்.
நெல்லைத் தமிழன் கூறியுள்ள மற்றொரு விடையை ஆழமாக ஆராய்ந்து பிறகு என் கருத்தைக் கூறுகிறேன்.
இரண்டாவது கேள்விக்கு, பதில், ஒரு படம் மூலமாக விளக்க முடியும். நாளைய வீடியோ பதிவுடன் இணைக்கப் பார்க்கிறேன்.
சில சிறிய விளக்கங்கள்:
ஆழமான கிணறு. ஒரு கிணறு என்றால் குறைந்தபட்சம் பத்தடி ஆழமாவது இருக்கும். ஆழமான கிணறு என்றால், அதற்கும் அதிகமான ஆழம் இருக்கும். அதில் இறங்கிக் கடப்பது இயலாத காரியம்.
முள் வேலி உயரமானது என்று சொல்லியிருக்கேன். எனவே, அதைக் கடந்து, அந்தப்பக்கம் செல்ல இயலாது என்பது அதன் அர்த்தம். கிணற்றின் கைப்பிடிச் சுவர் மீது ஏறி, வேலி இருக்கின்ற இடத்தில் மட்டும் வேலியைப் பிடித்துக்கொண்டு அந்தப்பக்கம் போகலாம் என்கிற எண்ணம் எல்லாம் வேண்டாம்! அது கொடிய, விஷம் பூசப்பட்ட, மின்சார வேலி. டச் பண்ணினா ஆள் காலி!
சரியான விடை காண, நாளை வரைக் காத்திருக்கவும்!
எட்டடி X எட்டடி என்பதை, சதுரம் என்பதால், பக்கங்களின் அளவு 8 அடி என்றும், ஆழம் 8 அடி என்றும் புரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குவிடையைப் பார்த்துட்டுத்தான் இங்கு வந்தேன்... :)
பதிலளிநீக்கு