சிக்கனம் பற்றிப் பேசுபவர்கள் எல்லோரும் பெரும்பாலும் 'சிறு துளி - பெரு வெள்ளம்' என்ற தலைப்பில் நிறைய பேசக் கூடியவர்கள்.
இங்கே விவரிக்கப்பட்டுள்ள குடும்ப நிகழ்வை ஊன்றிப் படியுங்கள். இங்கே கூறப்பட்டுள்ளது பிசாத்து சமாச்சாரம் என்று தோன்றினாலும் - இது போல பலப்பல பிசாத்து சமாச்சாரங்கள் (சினிமாவுக்குப் போதல் / கடற்கரை - கண்காட்சி - என்று பல) நம் குடும்பங்களில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.
*** *** ***
ராகவன் வழக்கம் போல் பேப்பர் படிப்பதாய் பாவனை செய்து கொண்டு ,'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற மனப்பான்மையுடன் எல்லாமும் கேட்டுக் கொண்டிருந்தும் கேட்காதவன் மாதிரி [அது தான் உங்களுக்கு நன்றாகத் தெரியுமே, நான் வேறு விளக்க வேண்டுமா என்ன !] தடித்துக் கொண்டிருந்தான் [பின்னே வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் பேப்பர் மட்டும் படித்துக் கொண்டிருந்தால் தடிக்காமல் ?]
தங்கை வத்சலா காலையிலிருந்து அம்மாவை அரித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தான். "அம்மா - போன மாதம் நாம எல்லோரும் பீட்சா பார்லர் போய் பீட்சா சாப்பிட்டோமே! அந்த மாதிரி இன்றைக்கும் போகலாம் அம்மா. ப்ளீஸ் அம்மா!" அம்மா என்ன பதில் சொல்கிறாள், 'முடியாது' என்பதற்கு எப்படிப்பட்ட சமாதானங்கள் சொல்ல முயற்சி செய்கிறாள் என்று தெரிந்து கொள்வதில் ஓர் ஆர்வம்.
ராகவனுக்கு ஒரு வகையில் இன்று ஏமாற்றம்தான் காத்திருந்தது. அம்மா, "நாம எல்லோரும் அன்னைக்கி அசோக் பில்லர் கிட்ட ஒரு இடத்துல பீட்சா சாப்பிட்டோமே பில் எவ்வளவு என்று நினைவிருக்கா?" என்று கேட்க, தங்கை, "அறுநூறுக்கும் மேலே" என்றாள். அம்மா, "நீ போய் ராகவனிடம் கேளு. மாட்டேன் என்று சொல்ல மாட்டான். அப்படி அவன் இல்லை என்று சொன்னால் நான் வந்து அவனிடம் எடுத்து சொல்கிறேன்"என்றாள். அதைக் கேட்ட ராகவன், வத்சலா வந்து கேட்டவுடனேயே "சரி" என்று சொல்லி விட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் [அல்லது பேப்பரில் மூழ்கினான்]

சிக்கனம் என்பது உணவுப் பொருள்களில் கூடாது. 'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று வாதாடுவோரும் உள்ளனர். ஆனால், ஜன்க் ஃபுட் (junk food) வகையறாக்களுக்குப் பணத்தை வாரி இறைப்பது வீண் செலவு என்று கூறுவோரும் உள்ளனர்.
உங்கள் அனுபவம் எப்படி ?