சும்மா இப்படி யோசித்துக் கொண்டு இருந்த போது சும்மா ஒரு Article எழுதலாம் என்று தோன்றியது. ஒன்றுமில்லை, சும்மா சும்மா பல வலைத் தளங்களை மேய்வதால் வரும் ஆபத்து இது. ஏன் அப்படிப் பார்க்கணும் என்கிறீர்களா? சும்மா பொழுது போகத்தான்.
"ஏய்...சும்மா அறுக்காம சும்மா இரப்பா" என்கிறீர்களா? சும்மா படிச்சுதான் பாருங்களேன்.
"எங்கே இந்தப் பக்கம்?" - "சும்மா இப்படி வந்தேன்". "என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?" - "சும்மா படிச்சுகிட்டு இருந்தேன்"
சும்மா சொல்லக் கூடாது. இந்த சும்மா என்கிற வார்த்தை நமக்கு எப்படி எல்லாம் உதவுகிறது பார்த்தீர்களா? பேசும்போது சும்மாவைப் போட்டு சும்மா புகுந்து விளையாடறோம்.
சும்மா சும்மா எப்படி இந்த ஒரு வார்த்தையையே பல Context களிலும் போட்டு உபயோகிக்கிறோம். சும்மா சும்மா ஒரே வார்த்தையையே உபயோகிக்கும்போதும் படிக்கும்போதும் அந்த வார்த்தையின் அர்த்தமே மறந்து போகும்.எந்த ஒரு வார்த்தையையும் திரும்பத் திரும்ப சொல்லிப் பாருங்கள்.அதற்கான பொருளே மறந்து போவதோடு குறிப்பிட்ட வார்த்தையை தவறாக உச்சரிக்கிறோமோ என்று சந்தேகமே கூட வந்து விடும்!
ஆமாம், சும்மா என்றால் என்ன அர்த்தம்? ஒன்றும் இல்லாமல் என்று அர்த்தமா? சுகமா என்று அர்த்தமா? சும்மா அழுத்தி அதையே ச்சும்மா என்று சொன்னால் ஹிந்தியில் முத்தம் என்று அர்த்தமாம். சும்மா அதையும் சொல்லிடலாம்னு சொன்னேன்.
சும்மா ஏதோ தோன்றியது. சும்மா நானும் எழுதி விட்டேன். சும்மா படிச்சுட்டுப் போனாலும் சரி, போனாப் போகுதுன்னு சும்மா ஒரு Comment தட்டி விட்டாலும் சரி... சும்மா மட்டும் போய்டாதீங்க.
சும்மா இருக்கறது தப்புன்னு சொல்வாங்க. சும்மா இருக்கறது ரொம்பக் கஷ்டம்னும் சொல்வாங்க..