Whose birthday is today லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Whose birthday is today லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.5.11

இன்று பிறந்தவர்!


இந்த நாள்! பிறந்த நாள்!        

இன்று, இவருக்குப் பிறந்த நாள்.

இவர் இவ்வளவு பிரபலமாவார் என்று இவரே எதிர்பார்த்திருக்கமாட்டார்.
அந்த அளவுக்கு இவருடைய படங்களும் பாடல்களும் உலக அளவில் மிகவும் பிரபலம்.

இவருக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பெரும் இரசிகர் கூட்டம் உள்ளது.

இவருக்கு ஒல்லியான உருவம். ஸ்லிம் என்ற ஒற்றைச் சொல் இவரைத்தான் குறிக்கும் என்றால் அது மிகையாகாது!

இவருடைய பிறந்த ஆண்டில் உள்ள நான்கு எண்களின் கூட்டுத் தொகை இருபத்து ஒன்று. இருபத்து ஒன்று என்ற எண்ணே எவ்வளவு கவர்ச்சியானது! இவருடைய வாழ்க்கையில் இருபத்தொரு வருட சாதனை ஒன்று உள்ளது.

இவருடைய படங்களை எங்கள் வாசகர்கள் நிறைய பேர் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.

இவர் பெயர் ஆங்கில எழுத்து T என்ற எழுத்தில் தொடங்கி, A என்ற எழுத்தில் முடியும்.

இவர் யார் என்ற சரியான பதிலை பதிபவர்களுக்கு பாயிண்டுகள் அளிக்க நாங்கள் தயார். பாயிண்டுகள் பெற நீங்க தயாரா?