மாதவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி - ஒரே ஒரு அலைபேசி படம் வரைந்து பாகங்களைக் குறித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முயற்சி செய்து பார்த்தார் ஓர் ஆசிரியர்.
படமும் எண்களும் தரவிறக்கம்.
விவரம் மட்டும் நம் கைங்கரியம்.
1. ஒலி கேட்கும் பகுதி. குயிலோ வீணையோ - குழைந்தால் காதருகே வைத்து கேட்டு ஆனந்தப்படுங்கள். சிங்கம் கர்ஜித்தால் - கொஞ்சம் தூரத்தில் வைத்துக் கேளுங்கள். கடன் கொடுத்தவர் கூப்பிட்டால் - வேறு யாரையாவது விட்டு பேசச் சொல்லுங்கள், கேட்டுச் சொல்லச் சொல்லுங்கள்.
2. ஃபிலிம் பார்க்கும் பகுதி. உங்கள் கற்பனை திறனுக்கேற்றாற்போல் உபயோகம். நாங்க அதிகமா இது பற்றி சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறோம்.
3. விரும்பியவற்றைத் தேர்ந்தெடுக்கும் விசைகள்.
4. கூப்பிடு தூரத்தில் இருப்பவரைக் கூட - இதைத் தட்டி அழைத்து - பேசி மகிழலாம், (உங்கள் கணக்கில் நிறைய பைசா இருந்தால்.)
5. குறுக்குச் சந்துகள் எவை என்று தட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
6. எடுப்பது, தொடுப்பது - எல்லாத்துக்கும் இது.
7. (வழி) நடத்தும் விசை
8. விசைகளைப் பூட்டி வைக்கும் விசை. (விசை எண் மூன்றுடன் கூட்டணி அமைத்து செயல்படும்)
9. பெரிதாக்கும் விசைகள் - சத்தத்தையும், திரைக் காட்சிகளையும்.
10. (ஃபிலிம்) படமெடு / நிறுத்து. (Start Camera - Action - Cut)
11. முடி விசை / மேலும், திற / அணை (ஐயோ! ஆன் / ஆஃப் தான் வேற எதுவும் இல்லை)
12. பிடித்த காட்சிகளை / நபர்களை பிடித்து வை.
13. சுத்தமா துடைத்தெறி
14. இதுதாண்டா படமெடுக்கும் கண்ணாடி - படமெடுப்பவர் இதுக்குப் பின்னாடி.
15. இதுல நீங்க எந்த கேபிள் சொருகுகிறீர்களோ அதற்குத் தகுந்தாற்போல் - அலை பேசி விவரங்களை அனுப்பும் / பெறும் அல்லது சக்தி பெறும் !

