Creativity - என்பதை, படைப்பாற்றல் - னு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அது என்ன படைப்பாற்றல்?
படைப்பாற்றல் என்பது, நீங்க முன்னர் சிந்தித்து, தேர்ந்தெடுத்த இலக்கை அடைய, நீங்க பயன்படுத்துகின்ற யுக்திகள். Creativity is generation of ideas, to achieve a pre-determined goal.
எல்லா உயிரினங்களும், படைப்பாற்றல் பெற்றவைதான், மனித இனம், இதில் அதிக படைப்பாற்றல் உடையது. சில பயிற்சிகளால், இந்த படைப்பாற்றலை மென்மேலும் விருத்தி செய்துகொள்ளலாம். பயிற்சிகள் நிறைய வரும், காத்திருங்கள்.
நீங்க படைப்பாற்றல் மிக்கவர் என்று எப்படி சொல்கிறேன் தெரியுமா?
உங்க சிறு வயதில், நீங்க பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நாட்களில், ஏதோ ஒரு காரணத்திற்காக, ஒருநாள் உங்களுக்கு - பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை. அப்போ, மறுநாள் பள்ளிக்கு லீவு போடணும் - என்பது உங்க இலக்கு. அதை அடைய - நீங்க பின்பற்றிய யுக்திகள் எவ்வளவு உண்டோ, அவை அனைத்துமே, உங்க படைப்பாற்றலுக்கு உதாரணங்கள்.
அந்த திரிஷா விளம்பரம் பார்த்திருப்பீர்கள் --
உலகம் உங்க காலடியில்"
இதை நான் கொஞ்சம் மாற்றியமைத்து,
"அழுக்கு உங்க காலடியில்"
இது இரண்டாவது வரி, என்றால் - முதல் வரி என்ன என்று கேட்டேன்.
அதற்கு என் மனைவி கூறிய முதல் வரியைக் கேட்டு - நிஜமாகவே திகைத்துப் போனேன். நீங்க முதல் வரிக்கு முயற்சி செய்து, இங்கே இடுங்கள்.
உங்களால் முடியும்.