இந்தப் பதிவை ஊன்றிப் படியுங்கள். கீ ... ழே இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
முதல் கேள்விக்கு சரியான பதில் ஒன்றுதான் இருக்க முடியும்.
அந்த பதில் சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்.
சரியான பதிலைக் கூற - உங்களுக்குக் கொஞ்சம் படைப்பாற்றல் இருந்தால் போதும் (கவனமாக இருப்பதும் படைப்பாற்றல்தான் - ஆனால் அது மட்டுமே அல்ல)
தவறான பதிலைக் கூறிவிட்டு, அதை சரி என்று நிரூபிக்க உங்களால் முடியும் என்றால் - முதல் பதில் கூறியவரைவிட உங்கள் படைப்பாற்றல் இரண்டு மடங்கு அதிகம்.
இரண்டாவது கேள்விக்கு பதில் - நூற்றுக் கணக்கில் இருக்கிறது. எல்லாமே சரியான பதில்தான். உங்களுக்கு அதில் எவ்வளவு தெரிகிறது என்று பார்க்கலாம்; ஒவ்வொரு பதிலுக்கும் பத்து மதிப்பெண்கள். உங்க மொத்த மதிப்பெண் என்ன என்று உடனுக்குடன் பதிவோம்.
இதில் எதற்குமே பதில் தெரியவில்லை என்றால், என்னைப் போலவே - தமிழிஷ் சென்று அதில் ஒரு வோட்டு தட்டிவிட்டு - யார் சரியான பின்னூட்டம் இடுகிறார்கள் என்று - என்னோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்!
இதோ இரண்டு கேள்விகள் :
1) இதற்கு முந்தைய 'எங்கள்' கபில் தேவ் பதிவில் - கபில் தவிர, எவ்வளவு கிரிக்கட் வீரர்கள் பெயர்கள் உள்ளன?
2) நீங்க கேட்கின்ற கேள்வி(களு)க்கு - எங்கள் சரியான பதில் 'ஐந்து' என்றால், உங்க கேள்வி(கள்) என்ன/எவை ?
மறுபடியும் சொல்கிறோம் -உங்களால் முடியும்.
(சூப்பர் படைப்பாற்றல் உள்ளவர்களுக்கு, ஒரு கேள்வி - படைப்பாற்றல் பற்றிய எங்கள் அடுத்த பதிவில் - யாருடைய படம் இடம்பெறும், ஏன்?)
** சூப்பர் படைப்பாற்றல் சரியான பதிலுக்கு ஆயிரம் மதிப்பெண்கள் உண்டு.