ஒற்றுமை
பெத்த பொண்ணுக்கும் பரீட்சை பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை. கட்டிக் கொடுக்கும் வரையில் தலைவலிதான்.
============================== =
புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை
அம்மா : "என் கையை கெட்டியா பிடிச்சிக்கோ என்ன?"
சிறுவன் : "இல்லைம்மா... நீ என் கையைப் பிடிச்சிக்கோ..."
அம்மா : " என்ன வித்த்யாசம் செல்லம்?"
சிறுவன் : "நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒரு நேரம் கையை விட்டுடுவேன். ஆனால் நீ என் கையைப் பிடிச்சிகிட்டா எந்தச் சூழ்நிலையிலும் என் கையை விடமாட்டேன்னு எனக்குத் தெரியும்"
============================== =========
எது தெரியுமா அதிக வலி...
நீங்கள் நம்பும் ஒருவர் உங்களைப் புண்படுத்தினால் வலி. அதைவிட அதிக வலி தருவது நீங்கள் புண்படுத்திய ந(ண்)பர் உங்களை இன்னும் நம்புவது!
============================== ====
"கவித கவித..."!
வாழ்க்கை
ஒரு நதியைப் போல
ஓடிக் கொண்டிருக்கிறது..
எதிர்பாராத் திருப்பங்களுடனும்
வளைவுகளுடனும்..
சில நல்லவையாய் இருக்கலாம்
சில கெடுதலாயும்.
எல்லாத் திருப்பங்களையும்
அனுபவியுங்கள்.
ஏனெனில்,
இந்த வளைவுகள்
நம் வாழ்வில்
திரும்புவதில்லை!
--------
மண்ணில் விழும்
மழைத் துளியிடம்
பூமி கேட்டது...
"இன்னும் எத்தனை முறை விழுவாய்?"
மழைத் துளி
சொன்னது..
"தாங்கிக் கொள்ள
நீ
இருக்கும் வரை..."
------------------------------ ---
தன்னை விரும்பாமல் கறுப்புக் (கொடி) குடை காட்டுவதைத் தாங்காத மழை உன்னைத் தொடும் முயற்சியில் தோற்று மண்ணில் விழுந்து அழுகிறது.
ஸாரி... பிரிச்சிப் போடணுமோ...
தன்னை விரும்பாமல்
கறுப்புக் (கொடி) குடை
காட்டுவதைத் தாங்காத மழை
உன்னைத் தொடும் முயற்சியில்
தோற்று
அழுகிறது
-------------
கண்ணீருக்குக் கூட
எவ்வளவு வெட்கம்...
அது கூட
அவள்
சென்ற பிறகுதான்
வருகிறது!
===========================
தத்துபித்துவம்
நீங்கள் அழகாயிருப்பது உங்கள் பெற்றோரின் கொடை. உங்கள் வாழ்வை அழகாக்கி வாழ்ந்து காட்டுவது உங்கள் பெற்றோருக்கு நீங்கள் கொடுக்கும் கொடை!
நீங்கள் கோபப் படும் சோகப் படும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையின் சந்தோஷமான அறுபது விநாடிகளை இழக்கிறீர்கள்.
நேற்றைய சண்டை இன்றைய பேச்சை நிறுத்தாததே நல்ல நட்பு.
நீங்கள் நேராக நிற்கும்போது நிழல் வளைந்திருந்தால் கவலைப் படாதீர்கள்.
நம்மைப் பற்றிக் கவலைப் படாதவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டிருக்கிறோமே, ஏன் ஒரு நிமிடம் நின்று திரும்பி நம் பின்னால் ஓடி வந்து கொண்டிருப்பவர்களைப் பார்க்கக் கூடாது?
நம்மைச் சிரிக்க வைத்தவர்களை மறந்து விடுகிறோமே, அழ வைத்தவர்களை ஏன் மன்னித்து விடக் கூடாது?
எண்ணங்களை நீங்கள் ஆளுங்கள்... உங்களை அது ஆள விடாதீர்கள்!
நீங்கள் ஆளும் மனம் உங்கள் நண்பன். உங்களை ஆளும் மனம் உங்கள் எதிரி!
ஒருவரிடம் உண்மை அன்பு என்பது அவரைப் பற்றிப் பேசும்போது அல்ல, அவரைப் பற்றி நினைக்கும்போதே வர வேண்டும்!
மின் செலவில்லாத புன்னகை அதிக வெளிச்சத்தைத் தருகிறது. எல்லோருக்கும் புரிகின்ற மொழியாகவும் இருக்கிறது.
இன்று பட்டம் பெற்றதாய் நாளை கற்றுக் கொள்வதை நிறுத்துபவன் நாளை மறுநாள் படிக்காதவனாகி விடுகிறான்!
கோபம் நேசிப்பவர்களையும் யோசிக்க வைத்தால், அன்பு வெறுப்பவர்களையும் நெருங்க வைக்கும்!
அபாயமானது என் விளையாட்டு.
என்னுடன் ஆடுங்கள். ஏனென்றால்
வெற்றி என் பெயர்!
அடுத்தவங்க வாழ்க்கை நம்ம வாழ்க்கையை விட நல்லதா இருக்குன்னு அடிக்கடி நினைக்கிறோமே, நாம கூட சில பேருக்கு அடுத்தவங்கதான் என்பதை மறந்துடறோமே...
தீய கனியை சுவைத்துக் கொண்டிருக்கும் வரையில் தீங்கனியின் சுவையை அறிய முடிவதில்லை. கஷ்டங்களையும் சந்தோஷங்களையும் உணர்ந்தால்தான் வாழ்வை அனுபவிக்க முடியும்.
============================== ============
இது எனக்குத் தெரியாதா....!
அடுத்தவர் நம்முடன் இருக்கும்போது விட்டுக் கொடுததும், நாம் அடுத்தவர்களுடன் இருக்கும் போது அனுசரித்தும் போக வேண்டும்.
===========================
அப்பாடி....இது பெட்டர் / யார் சொல்வதோ யார் சொல்வதோ...
வாழ்க்கையில் ஏதும் சாதனை படைத்தேனோ இல்லையோ யாரையும் வேதனைப் படுத்தவில்லை...
=========================