புதன், 22 டிசம்பர், 2010

உள் பெட்டியிலிருந்து...1210

வந்ததை ரசித்து, ரசித்ததை எடுத்து, எடுத்ததை (மொழி) மாற்றி, கொடுத்துள்ளோம் உங்களுக்கும், ரசிக்க...




சில உண்மைகள்...

எல்லா "சும்மா சொன்னேன்" பின்னாலும் ஒரு சிறு பொய் இருக்கிறது.

எல்லா "எனக்குத் தெரியாது" பின்னாலும் சிறிது அறிவு இருக்கிறது.

எல்லா "எனக்குக் கவலை இல்லை"யின் பின்னும் ஒரு அக்கறை இருக்கிறது.

எல்லா வெறுப்பின் பின்னும் சிறிய விருப்பு இருக்கிறது.

எல்லா "ஒண்ணுமில்லை, பரவாயில்லை"யின் பின்னும் சிறிய வலி இருக்கிறது.

எல்லா பொய்களின் பின்னும் ஒரு சிறிய உண்மை இருக்கிறது.

------------------------------------------------------


எல்லா சந்திப்புக்கும்
ஒரு காரணம் இருக்கிறது.

சிலர் நம்மைச் சோதிக்க,
சிலர் நம்மை உபயோகிக்க,
சிலர் உணர்த்த,
சிலரை உணர,
சிலர் நம்மை அடையாளம் காட்ட,
சிலர் வழியேற்படுத்த,
சிலர் வலி ஏற்படுத்த,
சிலர் வழி நடத்த,
வாழ்க்கையின் எல்லா
மூலைகளிலும்
சந்திப்புகளிலும்
ஆச்சர்யமும் சலிப்பும்....
எல்லா சந்திப்புக்கும்
ஒரு காரணம் இருக்கிறது..

17 கருத்துகள்:

  1. ரசித்து படிக்க முடிந்தது.

    எல்லா "விளையாட்டுக்கு" பின்னாலும் ஒரு வினை இருக்கிறது எனலாமா.

    பதிலளிநீக்கு
  2. //சிலர் வழியேற்படுத்த,
    சிலர் வலி ஏற்படுத்த,
    சிலர் வழி நடத்த//
    nice one.--geetha

    பதிலளிநீக்கு
  3. //தமிழ் உதயம் said...
    எல்லா "விளையாட்டுக்கு" பின்னாலும் ஒரு வினை இருக்கிறது எனலாமா.//

    இதையும் அந்தக் கவிதை(தானா?)யின் வரிகளில் சேர்த்துக் கொள்ளலாம்!!

    என் பங்கு: எல்லா இல்லைக்குப் பின்னும் ஒரு ”இருக்கு” இருக்கு!!

    பதிலளிநீக்கு
  4. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் நடப்பதாக இல்லை !

    பதிலளிநீக்கு
  5. சிலர் வலி ஏற்படுத்த - நான் இதில் முதலாமவன்

    பதிலளிநீக்கு
  6. வாங்க தமிழ் உதயம்...தாராளமா சேர்க்கலாம்...இன்னும் சில வரிகள் கூட சேர்க்கலாம்...ஹுஸைனம்மா கூட ஒன்று சேர்த்திருக்கிறார்கள்...!

    நன்றி வானம்பாடிகள்,

    நன்றி ராமலக்ஷ்மி,

    ரசித்ததற்கு நன்றி geetha santhanam,

    வாங்க ஹுஸைனம்மா, நீங்கள் சொன்னதைப் பார்த்ததும் அதையே திருப்பிப் போட்டால் கூட நன்றாக இருக்கும் என்று தோன்றியது...அதாவது எல்லா 'இருக்கு'க்குப் பின்னாலும் ஒரு இல்லை...!

    வாங்க ஹேமா...உண்மை.

    முதல் வருகைக்கு நன்றி samudra, தொடர்ந்து வாங்க...

    சாய்,
    "சிலர் வலி ஏற்படுத்த - நான் இதில் முதலாமவன்"
    எனக்குத் தெரியாது. ஆனால் படித்த பழைய பள்ளிக்கு உதவுகிறீர்கள், ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு உதவுகிறீர்கள்.... எனவே
    "வழி ஏற்படுத்த...." OK?

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அருமை! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  8. சில உண்மைகள்...யோசிக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  9. 100% Genuine & Guarantee Money Making System.(WithOut Investment Online Jobs).

    Visit Here For More Details :

    http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/read-articles-to-earn-money.html

    பதிலளிநீக்கு
  10. அருமை.. நல்லா எழுதியிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  11. நீங்க போடுற ஒவ்வொரு பதிவுலையும், ஏதாவது 'மேட்டர்' இருக்கும்..
    (அது உபயோகமா இருக்குமா இல்லையா ? அது அநேக்குத் தெரியாது)
    ஹி. ஹி.. ஏதாவது கமெண்டு போடணும்னு நெனைச்சேன்.. இதான் சொல்ல முடிஞ்சுது..

    பதிலளிநீக்கு
  12. அருமையாக எழுதி இருக்கிங்க... காரணம் இன்றி எதுவுமில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!